Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனி ஜோதிடம் தெரியுமா.............

Featured Replies

கனி ஜோதிடம் தெரியுமா.............

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.

உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

பேரிக்காய்ப்பிரியர்களே! உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால் அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில் அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.

திராட்சை விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.

செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால் விளம்பரத்துறை ஓவியம் கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு? அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். ஆனால் அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும் மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உங்களுக்குப் பொருத்தமான பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால் உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.

இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!

படித்ததில் பிடித்தது

Edited by thamilmaran

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி.

உதைப்பற்றி ஏற்கனவே யாழ் மூலம் அறிவூட்டப்பட்டு இருக்கிறம். ஐச்பழம் பிடிக்கிற ஆக்களுக்கு என்னமாதிரியாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு முக்கனிகளும் பிடிக்கும்

ஓய் கனிசாத்திரி பண்ணியில் பண்ணிப்பாரும்

அந்த கனி வாற இடத்திலை ஒரு "ன்" அடிபடுதில்லை :wub:

  • தொடங்கியவர்

உதைப்பற்றி ஏற்கனவே யாழ் மூலம் அறிவூட்டப்பட்டு இருக்கிறம். ஐச்பழம் பிடிக்கிற ஆக்களுக்கு என்னமாதிரியாம்?

அது மச்சான் எப்புடி சொல்லுறது எண்டு தெரியேலை..................

அந்த அய்சுப்பழம் பிடிக்கிறவையும் செம கில்லாடியள் தான்!!!!!!!

அவை கூலாய் இருந்தே எல்லாத்தையும்????? அந்த மாதிரி முடிச்சுப் போடுவினம்!!!!!!!

என்ன கு ம அண்ணை சாத்திரம் சொல்லியே அசத்துறியள் போல!!!!!!!

உதோட சேத்து எனக்கு இரண்டாம் கலியாணம் செய்ய பலன் இருக்கோ எண்டும் ஒருக்கால் பாத்து சொல்லுங்கோவன்!!!!!!

தர்ச்சணையாய் 3 கனிகளையும் (கன்னிகளையும்) தாறன்!!!!!!!

Edited by thamilmaran

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புளியம்பழம் தானுங்கோ பிடிக்கும் தமிழ் மாறன் அதுக்கும் கணிச்சு சொல்லுங்கோ :wub::)

  • தொடங்கியவர்

எனக்கு புளியம்பழம் தானுங்கோ பிடிக்கும் தமிழ் மாறன் அதுக்கும் கணிச்சு சொல்லுங்கோ

வாயை சுழிச்சுக் கொண்டிருப்பீர்....................

வாயின் அசைவுகள் அதிகமாக இருப்பதால் அழகிய இதழ்களிற்கு சொந்தக்காரன் நீரே தான்

அதனால் உமது துணைவியார் அடிக்....................கடி முத்தம் தரச் சொல்லி கெஞ்சுவா.....................

இரக்ககுணம் இல்லை அரக்க குணம் நிறைய இருக்கும்....................

புளியின் கொடுமையால் வார்த்தைகளை கண்டபடி அவுட்டு விட்டிடுவியள்...............

எதுக் கெடுத்தாலும் எல்லாமே புளிக்கும் எண்டு விட்டு விலகிற தன்மை நிறைய உமக்கு உண்டு

உம்முடைய தவக்காலத்தை தவிர...................................

மற்ர விடயங்கள் பற்றி சொல்ல பணம் அறவிடப்படல் வேண்டும்!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி அதுக்கும் கணிச்சாச்சா ச்ச

74930417.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு கனியை தனியாக ருசித்து சாப்பிட்டு பழக்கமில்லை. ஒண்டா போட்டு கிறைண்டரில் அடித்து சுமூத்திதான் பிடிக்கும். அப்ப எனக்கு எல்லா கனிகளின் குணங்களும் கொஞசம் கொஞசம் இருக்குமோ?

  • தொடங்கியவர்

நீங்கள் எல்லா பழங்களையும் சேர்த்து ஒரே நேரத்தில சாப்பிடுகிறதாலையும் குடிக்கிறதாலையும்

உங்களுக்கு எல்லா குணமும் இருக்கும் எண்டு ஆராய்ச்சி சொல்லுது!!!!!!!!!!!

அதால நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் உத்தம புருசர்!!!!!!!

குறிப்பு:

உங்களுக்கு என்ன குணம் அதிகம் வர வேண்டுமோ அந்த குணத்துக்குரிய பழத்தை அதிகம் சாப்பிடுங்கள்...............

பக்க விளைவுகளிற்கு நான் பொறுப்பு அல்ல!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஞானப்பழம் என்றால் அந்த மாதிரி பிடிக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஞானப்பழம் என்றால் அந்த மாதிரி பிடிக்கும். :(

இதுக்கு சகிவன் கணிக்க முடியாதே தமிழ்மாறன் உதுக்கும் கணி[னி]ங்கோவன் ஞானப்பழமாம் :D:D

  • தொடங்கியவர்

சகீவன் ஞானப்பழத்தை விரும்பி உண்பவர்கள்..................

பல அதிசயங்களை செய்யும் சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.......அதாவது

திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பார்களாம்!!!!!

பிள்ளை பெறு பேறு எல்லாம் குடுப்பார்களாம்........................

அதாவது சாமியார் முனிவர் றேஞ்சில இருப்பார்களாம்.......................

அறிவுரையும் சொல்லுவார்களாம்.............அதாவது எப்படி றேப் பண்ணுகிறது எண்டு

எனவே சகீவன் இனி உங்களுக்கு வேலை அதிகமாகி பணம் கூரையை பிச்சுக் கொண்டு வரப் போகுது!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.