Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு ஆவணப்படம்: உங்களுடன் சில எண்ணப் பகிர்வுகள்

Featured Replies

வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

Jaffnalibrary1-edit1.jpg

பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படியான அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

சிங்களக்காடையர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம் சிறீ லங்காவின் பொக்கிசங்களில் ஒன்று எனவும், இந்த எரிப்பு முழு நாட்டிற்குமே பேரிழப்பு என்றும், நூலக எரிப்பு தமிழ் கடும்போக்காளர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்றும் முன்னாள் சிறீ லங்கா அமைச்சர் மங்கள சமரவீர ஆவணப்படத்தில் கூறி இருக்கின்றார். அதேசமயம், பழைய துன்பியல் சம்பவங்களை மக்களின் மனங்களில் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டு இருப்பதை தவிர்க்கும்முகமாக யாழ் நூலகம் எரிக்கப்பட்டது சம்மந்தமான தடயங்களை மீண்டும் புனருத்தாரனம் செய்யப்பட்ட புதிய நூலகத்தில் காட்சிப்படுத்துவதை சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

ஆவணப்படத்தில் புத்தபெருமான் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு இருக்கின்றாரோ என்று தோன்றுகின்றது. பெளத்த பேரினவாதிகள் என்று நாங்கள் கூறுவது வழமை. ஆனால் ஆவணப்படத்தில் புத்தபெருமானையும், சிறீ லங்கா அரசியல்வாதிகளையும் சம்மந்தப்படுத்தி கூறப்படுகின்ற கவிதை பொருத்தமானதாக எனக்கு தெரியவில்லை.

அப்படிச் செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம்.. என்று ஒன்றை செய்துமுடித்தபின் குறைபிடிப்பதில் பயன் இல்லை. ஆனால்.. எதிர்காலத்தில் மீண்டும் இதே ஆவணத்தை திருத்தம் செய்து வெளியிடுவதாக இருந்தால்.. நூலகத்தில் அழிக்கப்பட்ட நூல்கள், ஓலைச்சுவடிகள், பொருட்கள் பற்றிய சற்று விரிவான உள்ளடக்கத்தை கொடுத்தால் நல்லது. over 97,000 books and rare, old manuscripts and papers over 97,000 books and rare, old manuscripts and papers என்று கூறுகின்றோம். ஆனால்.. அந்த 97,000இற்குள் இருக்கும் தகவல்களை சற்றுவிரிவாக ஆவணப்படுத்துவது இன்னமும் நல்லது.

ஏற்கனவே அழிக்கப்பட்டவைபோக மீதமுள்ள தமிழர் பற்றிய பழைய ஆவணங்களை, சான்றுகளை, கிடைத்தற்கு அரிய பொருட்களை, நூல்களை மீண்டும் யாழ் நூலகத்தில் காட்சிப்படுத்தும்போது அவற்றின் பல நகல்களை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பாவித்து பெறுவது, அவற்றை வலைத்தளத்திலும் காட்சிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

தற்போது மாணவ, மாணவிகளின், குழந்தைகளின் வாசிப்புதிறன் குறைந்து செல்கின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டுக்காரர் யாழ் நூலக எரிப்பு சம்மந்தமாக உருவாக்கிய இன்னுமோர் ஆவணப்படத்தில் கருத்துகூறுகின்ற யாழ் நூலகர் அங்கு வருகின்ற குழந்தைகளில் பெரும்பாலானோர் கணணியில் விளையாட்டுக்கள் விளையாடுவதற்கே வருவதாகவும், அவர்களிற்கு நூல்களைவிட கணணியில் விளையாட்டுக்கள் விளையாடுவதிலேயே அக்கறை அதிகம் இருப்பதாகவும் கூறி இருந்தார். இது தற்போதுள்ள யாழ் நூலகத்தில் மாத்திரம் அல்ல.. இங்கு கனடாவில் உள்ள நூலகங்களிலும் வழமையாக நடைபெறுகின்ற விடயம். நூலகம் எரிந்துவிட்டது என்று நாங்கள் கவலைப்படும் அதேநேரம்.. எதிர்காலத்தில் தமிழில் நூல்களை வாசிப்பதற்கு ஒருவரும் இல்லை என்கின்ற நிலை தோன்றாமல் இருப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும். இல்லாவிட்டால் தூசுபடிந்தே எஞ்சியுள்ள முக்கால்வாசி நூல்கள் அழிந்துவிடும்.

இந்த ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களும். மேற்கண்ட ஆவணப்படத்தை நீங்களும் பெற்று எதிர்காலத்தில் தொடர்ந்து படைப்புக்கள் உருவாக்கப்படுவதற்கு ஊக்கமும், ஆதரவும் கொடுங்கள். நன்றி! வணக்கம்!

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய Dateline ஊடகத்தினால் உருவாக்கப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆவணப்படம்:

மூலம்: Dateline

யூரியூப் இணைப்பு: தமிழ்மகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான்

பயனுள்ள தகவல்கள்.

எனது கருத்துகளையும் சொல்ல விரும்புகிறேன்..

அதே இடத்தில் மீளக்கட்டியது பற்றி, இது ஒரு மக்களின், உணர்வு, உளவியல் சம்பந்தப்பட்ட விடயம், இன்னும் விரிவாக மக்களின் கருத்துக்களையும் கேட்டிருக்கலாம். நான் நினைக்கிறேன் , அந்த நேரத்தில் சிலர் 1999 /2001 காலத்தில் இதுபற்றி " யாழ்பாண உயர் அறிவாளிகள் " சிலர் இந்த விடையத்தில் ஈடுபட்டிருந்தார்கள், விவாதித்தார்கள் என்று தெரியும். ஆனால், விவாதத்தின் முடிவுதான் கருத்தில் கொள்ளப்பட்டதோ என்று தெரியாது. அரசில் அழுத்தம் எந்தளவு இருந்தது , எந்தளவு இருந்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப கூட மங்கள சொல்லுகிறார் சந்திரிக்கா மிளக்கட்டியதாம், ஆனால் ஆர் எரித்தது என்று சொல்ல தயக்கம்/ விருப்பமில்லை.

என்னுடைய கருத்து அது சம்பந்தமாக ஒரு கருத்து கணிப்பு நடத்தியிருக்கல்லம், கூடுதலன பேர் ஈடுபட்டு முடிவு எடுத்திருக்கல்லாம்.

நுலகரின் கருத்து ஏற்கமுடியாது. சிறு பிள்ளைகள் கம்ப்யூட்டர் இல் கேம் விளையாடுவது...just leave it as such. they are not living in UK, Canada, to play games in Cars, buses, homes and school or even in side walk. புத்தகம் அழுகுது இவர்களை பார்த்து..தேவையில்லாத குற்றச்சாட்டு எதிர்பார்ப்பு

அவர்கள் நுலகத்துக்கு வரதே பெரிய புண்ணியம், நுலகம் என்பது புத்தகம் சேமித்து வைத்து, படிக்கிறது என்பது மலை ஏறி போச்சு, so let them to do whatever they want. Don't force them to read in addition to school, tuitions and home.

எழுத்து பிழைகள் என்குற்றம் அல்ல, கூகிள் இன் குற்றமே

  • தொடங்கியவர்

குழந்தைகள் கணணியுடன் மினக்கடுவது தனியான திரியில் சற்று ஆழமாக ஆராயப்படவேண்டிய விசயம். யாழ் நூலகம் தற்போது அங்குள்ள மக்களினால் எவ்வாறு பயனுள்ள முறையில் உபயோகிக்கப்படுகின்றது என்பது அங்கு உள்ளவர்களுக்குத்தான் தெரிந்து இருக்கும்.

கருத்துக்கணிப்பு நடாத்தி இருந்தால் மாவீரர் கல்லறைகளையும் பாதுகாக்கவேண்டும் என்றே பெருமளவான தமிழ் மக்கள் விரும்பி இருப்பார்கள். உந்த கருத்துகணிப்பு எல்லாம் நடக்கிற விசயமா? தம்மை காலங்காலமாக குற்றவாளிகளாக இனம்காட்டும் ஓர் தடயத்தை ஓர் அடக்குமுறை செய்கின்ற இனம் அழிக்க நினைத்தது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான்,

உங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.

கருத்துகணிப்பது சாத்தியமற்றது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்

அதே நேரத்தில் எல்லா போர் நினைவுகளும் / அழிவுகளும் போணப்பட வேண்டும் என்று சொல்ல முடியாது..மாவீரர் கல்லறை ஒரு முடிவு (End) என்றால் , வீதியோர தடை இன்னொரு முடிவு..இல்லாவிட்டால் வேறு ஒன்று, நுலகம் இடையில் வரும், (like a spectrum) மாவீரர் கல்லறை போல் எல்லாவற்றையும் பேண முடியாது, அதைத்தான் நான் சொன்னேன். சிலர் விவாதத்தில் ஈடுபட்டது எனக்கு தெரியும். அதில் பலர் ஈடுபட்டிருக்கலாம் அல்லது ஒருவகையான ? கருத்துகணிப்பு மேற்கொண்டிருக்கலாம் என்பது தான் என்கருத்து.

.

  • தொடங்கியவர்

யாழ் நூலகம் அரசாங்கத்தின் சொத்தாக, அரசாங்கத்தின் நிருவாகத்தின் கீழ இருந்ததால நம்மவர்களால பல விசயங்களை செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஏதாவது தமிழ் அமைப்புக்கள்கூடி தனியார் நூலகமாக ஒன்றை உருவாக்கி இருந்தால்.. சிலவேளைகளில அது தப்பி இருக்கக்கூடும். எதிர்காலத்திலும்... அரிதான தமிழரின் ஆவணங்கள், பொருட்களை காப்புறுதி செய்து தனியார் நிருவாகத்தின் கீழ வைத்தால் நல்லதோ என்று நினைக்கின்றேன்.

ஏதாவது தமிழ் அமைப்புக்கள்கூடி தனியார் நூலகமாக ஒன்றை உருவாக்கி இருந்தால்.. சிலவேளைகளில அது தப்பி இருக்கக்கூடும். எதிர்காலத்திலும்... அரிதான தமிழரின் ஆவணங்கள், பொருட்களை காப்புறுதி செய்து தனியார் நிருவாகத்தின் கீழ வைத்தால் நல்லதோ என்று நினைக்கின்றேன்.

நூலகம் மட்டுமல்ல பல வடக்கு கிழக்கு நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தினால் நல்லம்

  • தொடங்கியவர்

அதிலும் சிக்கல்கள் இருக்கிது. ஏதாவது தனியார் நிறுவனம் நல்லாய் செயற்பட்டால்.. இல்லாட்டிக்கு அரசில அதிகாரங்களில இருக்கிறஆக்களுக்கு விசுவாசமாய் நடக்காவிட்டால் அதுக்கு புலிச்சாயம் பூசி அல்லது.. புலியின் பின்பலத்துடன் இயங்குகின்றது என்று சொல்லி.. அந்த தனியார் நிறுவனங்களையும் சிக்கல்களில மாட்டுவது.. சட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுப்பது.. பிறகு அதை அரசுடமையாக்குவது... இப்படியெல்லாம் பேரினவாத பிசாசுகள் ஆயுதங்கள் வச்சு இருக்கிதுகள். பல விசயங்களை சிந்திச்சு பார்க்கவேணும். தவிர.. நம்மவர்களும் சுருட்டிக்கொள்ளாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.