Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய யாழ்ப்பாணம் - பதிவும் எனது எண்ணங்களும்

கலாச்சார சீரழிவு 8 members have voted

  1. 1. எமது சமுதாயம் செல்லும் வழி சரியா

    • சரி
    • தவறு
      0
    • சமாளித்துப் போகலாம்
    • பாரதூரமான தவறு
    • என்ன செய்யமுடியும்
      0
    • சொல்லத் தெரியவில்லை
      0
    • வாருங்கள் மாற்றுவோம்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஒரு பதிவைப் பார்த்தேன்.

http://kiruthikan.blogspot.com/2009/12/blog-post.html

எம்மவர்களது சிந்தனை எவ்வாறு மழுங்கிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளைப் பார்க்க ஒஎஉவருக்கும் மனம் துடிக்கவில்லையா . எமது கலாச்சாரத்தைத் திட்டமிட்டு அழிக்கின்றார்களே எனத் தோன்றவில்லையா. உலகத்திற்கேற்ப மாற வேண்டும் எனச் சொல்கிறீர்களே , எமது விழுமியங்கள் இப்படி அழிகின்றதே என்ற கவலை இல்லையா.

இப்படி நடக்கின்றது எனச் சொல்கிறீர்களே, இதனை மாற்ற வேண்டும் என ஏன் ஒருவரும் சிந்திக்கிறீர்கள் இல்லை. எமது யாழ்ப்பாணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்படித்தானே அழிக்கின்றான் எதிரி. கல்வியும் பின்னோக்கிச் செல்லுகின்றது. கலாச்சாரமும் நாறுகின்றது. ஒருவரும் இதற்கு எதிராக முன்வரமாட்டீர்களா?

தியேட்டர்களில் box எனப்படும் சீரழிவை அகற்றுவதற்கு யாராவது ஒரு நல்ல வழிமுறை சொல்லுவீர்களா..

கொஞ்சம் கொஞ்சமாக எமது தாயகத்தை நாம் மாற்றுவோமா..

எத்தனை பேர் இதற்குத் தயார்.

எல்லாம் அவர்கள் வந்து செய்வார்கள் என எதிர்பார்க்காமல் நாமும் தொடங்குவோமா புதிய தலைமுறைக்கான புதிய பாதையை.

அன்புடன்,

ஆண்டவன்

Edited by ஆண்டவன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாக்களிக்கவில்லை உங்களுக்கு பொது சேவை இணையத்தில் செய்யவேண்டுமா அல்லது நேரடியாக அங்கு போய் செய்யவேண்டுமா அங்கு போய் செய்வதென்றால் உங்களுக்கு உடம்பு எல்லாம் சூடு வைத்து விடுவார்கள் எனது அனுபவம்

மற்றது இணையத்தில் செய்யலாம் ஏனென்றால் வாசித்து விட்டு போய் அதைத்தான் செய்வார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலச்சாரத்துக்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் இன்று கலாச்சார சீர்கேடுகள் தலைவிரித்தாடுகிறது என்றால் திடுக்கிடாமல் என்ன செய்யமுடியும்......

1.சுப்பிரமணீயம் பூங்கா மற்றும் அனுஷா கிறீம் ஹவுஸ் என்பன பெயரிடப்படாத விபச்சார விடுதிகளாக உள்ளனவாம்.....

2.ஈசி ரீலோட்டை ஓசியா போடுறதுக்காக communication கடைல இல்லாத கற்பை வாடகைக்கு விடுகிறார்களாம்...

3.வீட்டில unlimited internet connection இருந்தாலும் net cafeக்கு கிழமைக்கு ஒருதடவையேனும் சென்றுவரும் இளைஞர் மற்றும் யுவதிகள்......

4.பிரத்யேக அறைகளாக அமைக்கப்பட்டிருக்கும் net cafeக்கள்

5.5 மற்றும் 6 வயது சிறுமிகள் அணியும் ஆடைகளையே பாவம் வயசுக்கு வந்த யுவதுகளும் போடவேண்டியதாயுள்ளது....

6.security check point ல் நிற்கும் கோப்ரலின் பெயரைச் சொல்லி அடாவடித்தனம் பண்ணும் இளைஞ்ர்கள்......

7.தினமும் ஒருத்தனையாவது அடிக்கவேண்டும் என்று அலையும் கோஷ்டிகள்

8.Giga byte கணக்கில் பரிமாறப்படும் நீலப்படங்கள்....

9.சந்து பொந்துகளில் எல்லாம் காதலன் மடிமேல் உட்காந்திருக்கும் காதலிகள்(சைக்கிளில்)

10.இளைஞ்ர்களின் cell phone ல் யுவதுகளும் யுவதி cell phone ல் இளைஞனும் மட்டுமே அழைத்து பேசுகிறார்கள்......

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....இந்த சீரளிவில் 100% இளைஞ்ர் யுவதுகளும் ஈடுபடவில்லை என்பதை நினத்து மனதை ஆற்றிக்கொள்ளவேண்டியது தான்.....

நன்றி : facebook இல் இருந்து அமரேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாக்களிக்கவில்லை உங்களுக்கு பொது சேவை இணையத்தில் செய்யவேண்டுமா அல்லது நேரடியாக அங்கு போய் செய்யவேண்டுமா அங்கு போய் செய்வதென்றால் உங்களுக்கு உடம்பு எல்லாம் சூடு வைத்து விடுவார்கள் எனது அனுபவம்

மற்றது இணையத்தில் செய்யலாம் ஏனென்றால் வாசித்து விட்டு போய் அதைத்தான் செய்வார்கள்

காலம் மாறும் முனிவரே ... செய்யவிருப்பமுள்ளோர் முதலில் ஒன்றுசேருவோம்.. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சிசெய்வோம். எவ்வளவு நாள்தான் நடப்பதெல்லாம் பார்த்துக்கொண்டு சும்ம இருப்பது

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயச்சிக்கு எனது வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போன்ற சமுதாய நோக்கு உள்ளவர்களால் முடியும்.

முயற்சி எடுங்கள். பாராடுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

உங்கள் எண்ணத்தை வரவேற்கின்றேன்.

வாழ்த்துக்கள்.

நான் தினமும் உதயன் பத்திரிகை பார்ப்பது வழக்கம் அதில் மக்கள் முகம் என்ற பகுதியில்

இது போன்ற பல செய்திகள் பார்த்திருக்கிறேன்.

யாழ்ப்பாணத்தின் மூலதனமான கல்வியை விட இப்போ கேளிக்கைகளும் விளையாட்டுக்களும் அதிகமாகிவிட்டன.

கேளிக்கைகளும் விளையாட்டுக்களும் தேவையில்லை என நான் கூறவில்லை.ஆனால் அவை தேவைக்கு அதிமாகி பாடப்படிப்புகளை குழப்புவனவாகிவிட்டமை தான் எம் மன ஆதங்கம்.

உங்கள் பதிவு ஒரு அமர்க்களத்தை ஏற்படுத்திவிட்டதென்பது உண்மை.

நீங்கள் கூறிய அனைத்து விடயங்களும் எமது மூதாதையர் காலங்களிலும் நடந்தேறியவை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இருப்பினும்,நீங்கள் கூறியபடி, இவைகள் எண்ணிக்கையில் அதிகம் என்பது முற்றிலும் உண்மையே. கற்பு சம்பந்தப்பட்ட சீரழிவுகள் ஏககாலத்தில் நடந்தேறினும்,அது மன்னிக்க முடியாக்குற்றம். பின்னர் குறிப்பிடப்பட்டவை, கால நீரோட்டத்துடன் ஒன்றிணைந்துவிட்டவை.

மாறிவரும் ஆடை அமைப்பு>> மேலைத்தேயத்தில் வாழும் எமது புலம்பெயர் சமுதாயம் இதற்கு ஆற்றிய பணி முக்கியமானதொன்று. எமது இளஞ்சமுதாயம் தமது நண்பர்/உறவினர் குழந்தைகளுக்கு அனுப்பும்/அளிக்கும் அன்புப்பரிசாக இத்தகைய உடைகள் அமைந்தன முக்கிய காரணம். தாயகத்திலோ/தலைநகரிலோ, இப்படிப்பட்ட உடைகளை விற்கப்படுவது அரிதிலும் அரிது. விற்றாலும் வாங்குபவர் எண்ணிக்கை குறைவு.

இவைகளை மாற்றலாம்இ நான்/நீங்கள் நினைத்தால் மட்டும் அன்று-எமது புலம்பெயர் சமூகம் விழித்தால்.

சொன்னதில் தப்பிருந்தால் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றி. நினைத்தால் மாற்றலாம் என்பது எனது கருத்து. பலபேர் பிழைவிடுவது மற்றவருக்குத் தெரியாது என்பதனால் தான். ஒருவர் செய்யும் தப்பு அனைவருக்கும் தெரியவந்தால் மற்றவர்களும் பிழை விடப் பயப்பிடுவார்கள்.

பெற்றோருக்கும் விழிப்புணர்வு கொடுக்கவேண்டும். எல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பிழைவிடமாட்டார்கள் என எண்ணி பிள்ளைகள் செய்வதைக் கவனிப்பது இல்லை. இந்த நிலமையை மாற்றவேண்டும்.

ஆடை>> ஆடை உடுத்துபவர்கள் மற்றவர்கள் கண்ணுக்கு தாங்கள் அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறான உடைகளை உடுத்துகின்றார்கள் என்பது எனது எண்ணம். பிரச்சாரம் மூலம், இவ்வாறான உடை தவறு என்று பரப்புரை செய்தால், இவ்வாறான உடை உடுத்துபவர்களை மற்றவர்கள் கேவலமாகப் பார்த்தால், இந்த நிலை மாறும்.

ஆடை நாகரீகமாக இருப்பது தவறென நான் கூறவரவில்லை. ஆனால் மற்றவரின் கண்ணைக்கூசும் உடைகள் தவறு தானே..

கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவோம் எமது தாயகத்தை... அதற்காக இவ்வாறான உணர்வுள்ளவர்கள் முதலில் ஒன்று சேருவோம்

நன்றி

இது எல்லாம் ஜனநாயக நாட்டில சகஜமப்பா.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.