Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க கொள்கை - தமிழர்களின் புதிய அரசியல்

Featured Replies

சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. அமெரிக்காவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை தொடர்பான கொள்கையில் தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார சமூக நலன் சார்ந்த எந்த விடயங்களும் இல்லை. பேச்சளவில் அரசியல் உரிமைகள் ,மனித உரிமை, புனர்வாழ்வு, என்ற பதங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அந்த அறிக்கையின் உள்ளார்ந்தம் முற்று முழுதாக அமெரிக்க நலன் சார்ந்தவையே காணப்படுகின்றது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இனி கொண்டுவரப்படுகின்றது.

அதாவது அந்த அறிக்கையில் இலங்கையினை நாம் இழக்க முடியாது என்ற தலைப்பில் இந்த உள்ளார்ந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. இதன்படி சிங்கள மக்களுக்கு பாரிய பொருளாதார திட்டங்களை கொடுத்து அவர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபங்களை கழுவி அதனூடாக தமது திட்டங்களுக்குஆதரவு தேடும் முயற்சியினையே செய்யவேண்டும் என தெளிவாக கூறப்படுகின்றது.

சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் இதனையே இலங்கைக்கு செய்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வந்துள்ளது என்பதே கொள்கை வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

எனவே இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்கு பற்றியோ அன்றி தமிழ் மக்கள் பற்றியோ தாம் விசேடமாக எதுவும் செய்ய தேவை இல்லை என்பதே அமெரிக்க நிர்வாகத்தின் புதிய கொள்கை. பேசுவதற்கு எதுவும் இல்லை, போர் முடிந்து விட்டது, தலையிடி குறைந்து விட்டது, இனி வடக்கு கிழக்கில் யாரும் தலை எடுக்க போவதும் இல்லை தலையிடி தரப்போவதும் இல்லை, இருக்கின்ற விசுக்கோத்துக்களை எப்படியாவது ஜன நாயகம், மனித உரிமை என்று ஏமாற்றிவிடலாம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின் அடுத்த கட்ட திட்டம் இடம்பெற போகின்றது.

எங்கட விசுக்கோத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்பவும் மேற்குலகை உள்வாங்க வேணும் என்றால் அவர்கள் பாணியில் போகவேணும் என்று சொல்லிக்கொண்டும், புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றும் கூறி திரிகின்றனர். இந்தா பாருங்க செய்து காட்டுறம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் புறப்பட்டு விட்டனர்.இவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் மேற்குலகம் அயல் நாடுகள் தமது நோக்கத்தை தான் முன் நிறுத்துவார்கள் ஆனால் அதற்குள் எமக்கு என்ன எடுக்கலாம் என பார்க்கவேண்டும் அதுதான் அரசியல் என்றும் இராச தந்திரம் என்றும் கூறுகின்றார்கள்.

எடுத்துக்காட்டாக தேன் எடுப்பவன் எடுத்துக்கொண்டு போக சிந்துவதனை நாங்கள் நக்கலாம் என செய்தும் காட்டுகின்றார்கள். பிரச்சினை என்ன வென்றால் சிந்துவதனை நாங்கள் எமது மக்களுக்காக நக்குவதற்கும் கூட ஏதோ ஒரு வகையில் எமக்கு பலமும் அல்லது அழுத்தம் கொடுக்கும் சக்தியும் இருக்கவேண்டும். இது ஜன நாயக ரீதியாக சாத்தியமா? தற்போதுள்ள ஜன நாயக கட்டமைப்பின் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என கூறும் தமிழ் தலைவர்கள் உள்ளுக்குள் இது சாத்தியம் இல்லை என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட ரீதியில் கதைக்கும் போது சரியாக கதைப்பவர்கள் மக்கள் முன் சொல்லும் போது வெறுமாதிரி சொல்கின்றனர். ஆகவே எமது பிரதி நிதிகளும் கூட மேற்குலகம் மாதிரியே தமிழ் மக்களை அணுகுகின்றார்களா?

ஜன நாயக பாதை எமது செயற்பாடுகளை தற்போது பாதுகாப்பதற்காக, எம்மை பாதுகாப்பதற்காக, எம்மை சர்வதேசம் அணுகுவதற்காக என்று கூறும் இந்த புதிய அமைப்புக்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் உண்மையாக எம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எமக்கான சுதந்திரத்தை பெற அல்லது எம்மை முற்று முழுதாக இன அழிவில் இருந்து பாதுகாக்க வைத்திருக்கும் பொறிமுறை என்ன? பலம் என்ன?

விடுதலைப்புலிகளே அந்த பொறியும் பலமுமாக இவ்வளவு காலம் வரை இருந்தார்கள் அதற்கு பின்னடைவு வந்தவுடன் இருப்பவர்களையும் பிய்த்தெடுத்து, பாடைகட்டி அனுப்புவதில் எம்மவர்களிடையே எவ்வளவு போட்டி? விடுதலைப்போரில் ஆயுத ரீதியான போராட்டத்தில் பின்னடைவு வந்தவுடன் அந்த கொள்கையே தவறு என கூறுபவர்கள் தங்கள் கொள்கையினை தெளிவாக விளக்கி எப்படி உரிமைகளை பெறமுடியும் என கேட்டால் விடை?? அவர்கள் சொல்ல வருவது காலவோட்டத்தில் ஒரு நாள் அது சாத்தியமாகும் என்கிறார்கள்.

இங்கு நாம் ஜன நாயக கட்டமைப்புக்களை புறக்கணிப்பது என்று கூறவில்லை ஆனால் உலகத்தில் ஜன நாயகத்தை பாதுகாப்பதற்கு எந்தவொரு நாடோ அல்லது நாடு சாரா அமைப்புக்களோ ஆயுத ரீதியாக எவ்வளவோ பலத்தினை வைத்துக்கொண்டுதான் , எவ்வளவோ உயிர்பலிகளை கொடுத்துதான் அதனை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேற்குலகமும் சரி, ஆசிய நாடுகளும் சரி தினம் தினம் உயிர்பலிகளை கொடுத்தே தமது ஜன நாயகம் என்ற சொல்லை பாதுகாத்து கொண்டு வருகின்றார்கள். இந்த உண்மையினை அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஏற்று கொள்ள மறுப்பது ஏன்? அதற்காக மேலும் தமிழர்கள் உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்பது இங்கு வாதம் அல்ல

சிங்கள தேசம் இன்று எதனையுமே தர மறுப்பதற்கு காரணம் என்ன? எமது இராணுவ பலம் இல்லாது போனது என்பதனை ஏன் உள்ளுக்குள்ளே ஒத்துக்கொண்டும் வெளிப்படையாக சடைந்தும் பேசி வருகின்றீர்கள்.

ஆகவே உங்கள் விருப்பப்படி சன நாயகத்தினை கட்டி எழுப்பி எதையாவது செய்யுங்கள் அதே நேரம் எல்லாவற்றுக்கும் அடிப்படையான தமிழர்களது சமூக, பொருளாதார, படை பலத்தினை கட்டி காக்கும் தந்திரோபாயத்தினையும் மறக்காதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை, வழுக்களை திருத்தி மீழ ஒழுங்கமைத்து, எப்படி அதனை செய்யலாம் எனவும் சிந்திக்க வேண்டும். ஆக குறைந்தது எமக்கு நியாய பூர்வமாக எதுவும் கிடைக்காது போனால் எமது உரிமைக்காகவும் எம்மை ஒடுக்கிவரும் சிங்கள தலைமைக்கு நாமே தண்டனை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்ற செய்தியினையாவது சொல்வதற்கு தமிழர்கள் தயாராக இருக்கவேண்டும்.

எல்லோரும் சன நாயகம் ,இராச தந்திரம் என்று மேற்குலகத்தின் (இனிப்பு) பாணிக்குள் போகாது அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்டி, தமிழர்களை ஏமாற்ற முடியாது என்றும் எமாற்ற நினைப்பவர்களை யாராக இருந்தாலும் தெட்ட தெளிவாக எதிர்த்து குரல் கொடுக்க கூடியவர்கள் எதிர்த்து நிற்க கூடியவர்கள் எப்போதும் இருக்கவேண்டும் அவர்களை பாதுகாக்க வேண்டும் அதனை சன நாயக அமைப்புக்களும் அதனை நிறுவ போகின்றவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.

http://www.eelanatham.net/news/important

இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கை பற்றிய இன்றைய AFP இன் செய்தி ஒன்று

US shouldn't 'lose' Sri Lanka: Senate

எங்களுக்காக அமரிக்க வெளிநாட்டு கொள்கை மாறுமென்று நாங்கள் நினைத்தால் அதுக்கு அமேரிக்கா pழசுரிpயய?

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலை மீள் வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையை அமெரிக்காவிட்டை கொடுத்து அமெரிக்கா ஊடாக இலங்கையரசிற்கு அழுத்தம் கொடுக்கப் போகிறம் என்று கதை சொல்லிக் கொண்டு திரியேக்குள்ளை அமெரிக்கா இப்பிடி அறிவிச்சு போட்டுது...அமெரிக்காவிட்டை கொடுத்து மகிந்தாவிட்டை குடுக்கிற நேரம் நேரடியா மகிந்தாவிட்டையே கொடுக்கலாம்போலை இருக்கு.. :lol:

வட்டுக்கோட்டையை பெயரைமாத்தி வட்டுகொட வாக்கப்போரன்களம் நாங்கள் இன்னும் வட்டுகோட்டை தீர்மானத்தில் தான் nமைமiசுழஅ.

அவரவர் தனது, கண்ணாடிகள் மூலம் பார்து ... ...

பேய் பூதம் தேவன் தெய்வம் என்று எல்லாம், வர்ணிப்பதைக் கேட்டு ... ...

கிளர்சசியோ கவலையோ அடைந்து பேதலிப்பதை விடுத்து ... ...

... ... ... , ... ... ...

நேரடியாக செய்தியை, தேடி எல்லோரும் ... ஊற்றிலே குடித்தால் ... ஏன் இந்தப் பாடு.

LETTER OF TRANSMITTAL

UNITED STATES SENATE,

COMMITTEE ON FOREIGN RELATIONS,

Washington, DC, December 7, 2009.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் சரி மேற்கு நாடுகளும் சரி தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அல்லது உரிமைக்கான தேவையை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் எப்போதும் ஐக்கிய இலங்கை.. அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடிய தீர்வு இதைத்தான் சொல்லி வருகின்றனர்.

இப்படி இருக்க.. அமெரிக்காவும் மேற்குலகமும்.. வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்று தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்பது பகற்கனவுக்குரிய விடயம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமே தமிழர்களின் பேரம்பேசும் வலுவாக இருந்தது. இன்று அதை சர்வதேசம் திட்டமிட்டு சிதைத்துக் கொண்டுவிட்டுள்ளது.

இந்தியா சீனா பாகிஸ்தான் நேரடியாக களத்தில் நின்றமை எமக்குத் தெரிந்ததால் அவற்றின் மீது தமிழர்களுக்கு உள்ள கோபம் வெளிப்படை. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதன் கீழ் எமது விடுதலைப் போராட்டத்தை உள்ளடக்கி அதனை அடக்கி ஒடுக்க அதிகம் சிறீலங்காவிற்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

தனது சுதந்திர தலையீட்டுக் கொள்கைக்கு புலிகளின் இருப்பும் பலமும் தலையிடியாக இருப்பதை அறிந்து கொண்டு தான் அமெரிக்கா தமிழர்களை நேரடியாக பகைக்காத மாதிரிக்கு நடந்து கொள்ள முனைந்தது. இன்று அந்தப் பலம் இல்லை என்றதும் அமெரிக்காவின் உண்மை நிலை மீண்டு வெளிப்படையாக காட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகள் தெற்காசியாவிலும் மத்திய கிழக்கிலும் சவாலுக்குரியதாக விடுதலைப்புலிகள் அறிமுகப்படுத்திய சில தாக்குதல் வடிவங்களை பிறரும் உள்வாங்கிக் கொண்டுள்ளமை தான் இப்போ அமெரிக்காவிற்குள்ள ஒரே தலையிடி. இந்த நிலையில் இரட்டைத்தலையிடி இன்றி ஒற்றைத்தலையிடியாக விடுதலைப்புலிகளின் பலமிழப்பு அமெரிக்காவிற்கும் அதன் மேற்குலக நேட்டோ கூட்டாளிகளுக்கும் ஓர் ஆறுதலே அன்றி வேறில்லை.

சரிந்து வரும் மேற்குலக பொருளாதாரத்தில் அகதிகளின் வரவும் அவர்களுக்கும் ஆகும் செலவும் சுமையாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களின் அகதி வாழ்க்கைக்கு முடிவு கட்டவும் மேற்குலக நாடுகள் விரும்புகின்றன.

தமிழர்கள் அகதி அந்தஸ்து வாங்குவதோடு நின்றுவிடுவதில்லை. வாங்கிய பின்னர் தான் அவர்களின் திருவிளையாடல்களைக் காட்ட ஆரம்பிக்கின்றனர். ஒரு காலத்தில் தமிழர்கள் என்றால் ஓடிவந்து விசா வழங்கிய நாடுகள் இன்று ஓடடா என்று விரட்டும் நிலைக்கு தமிழர்களே அந்த நாடுகளில் நிலைமைகளை உருவாக்கிவிட்டுள்ளனர்.

அகதி அந்தஸ்து வாங்கியவர்கள் பலர் மேற்கு நாட்டு அரசுகளிற்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். அதுமட்டுமன்றி தமிழர்களின் வழியை பிற மூன்றாம் உலக நாட்டு மக்களும் பின்பற்றி அகதிகளாக நுழைவது மேற்குலக நாடுகளுக்கு பெரும் தலையிடியாகியுள்ளன.

பெரும் பொருளாதாரச் செலவாக அமைந்திருக்கும் அகதிகளின் உள்வாங்கலைத் தடுக்க சிறீலங்காவில் போர் நின்றாக வேண்டும். அதற்கான நிலை ஒன்றை தற்காலிகமாக வேணும் ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயன்றன. அதற்கு விடுதலைப்புலிகளின் பேரம் பேசும் பலம் பெரும் இடைஞ்சலாக இருக்க.. அதனை அடித்து நொருக்குவதில் அமெரிக்காவிற்கோ மேற்குநாடுகளுக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அடித்து நொருக்கும் போதும் தமது செல்வாக்கே மிஞ்சி இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பு. அதில் மகிந்த கொஞ்சம் விலகிப் போக முற்பட இப்போ சரத் பொன்சேகாவை வைத்து அதைச் சரிக்கட்டி விட முனைகின்றது அமெரிக்கா.

அமெரிக்காவைப் பொறுத்தவரை.. தனது ஆக்கிரமிப்பிற்குத்தான் ஜனநாயகமும் மனித உரிமை மீறல் உச்சரிப்புக்களும். கடந்த 6 வருடங்களாக ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க நேட்டோ படைகள் செய்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி உலகில் எவருமே வாய் திறக்காது பார்த்துக் கொள்ளும் அமெரிக்கா தமிழர்களின் அழிவில் வாய் திறக்கப் போவதில்லை. ஆனால் அங்கு மனித உரிமை.. போர் குற்றம் போற்றவற்றை சாக்குப் போக்கிற்காக உச்சரித்து சிங்கள அரசுகளை தமது பக்கம் ஆக்கிக் கொள்வதே அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நோக்கம்.

இதை விடுதலைப்புலிகள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர். விடுதலைப்புலிகள் அமெரிக்கா சொல்லியோ.. நோர்வே சொல்லியோ.. இந்தியா சொல்லியோ.. ஏன் சரணடையவில்லை. மாறாக தாங்களாகவே தான் துப்பாக்கிகளை மெளனிக்க வைத்தனர். பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் நியுயோர் இணைத்தலைமை மாநாட்டில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பை அமெரிக்கா நிராகரித்ததோடு.. விடுதலைப்புலிகள் பேச்சுக்கு திரும்பாவிட்டால் நினைத்துப் பார்க்க முடியாத விளைவை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்தது. அந்த எச்சரிப்பை புலிகள் அமைப்பு தமக்கான சவாலாக எடுத்துக் கொண்டு தமது போராட்ட இலட்சியத்தை எச்சரிப்புகளுக்கு தாரைவார்க்கத் தயாராக இல்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தனர்.

நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இணைத்தலைமை நாடுகளின் பங்களிப்பு என்பது நாம் நினைக்கும் அளவிற்கு இலகுவானதாக அன்றி மிகப் பொறுப்பு வாய்ந்ததாக காத்திரமாக இருந்துள்ளது.

அன்றைய அமெரிக்க தூதுவர் யுத்தத்தை ஆதரித்து சிறீலங்கா ஆயுதப்படைகளை ஆதரித்து அவர்களின் நடவடிக்கைகளை திருமலையில் வைத்து தொடக்கி வைத்ததை தமிழர்களில் ஒரு பகுதியினர் இலகுவாக மறந்துவிட்டு ஜனநாயகம்.. மனித உரிமைகளின் பெயரால் அமெரிக்கா தமிழர்களை ரட்சிக்கும் என்று கதையளந்து திரிவதுதான் வேடிக்கை வினோதம். அதிலும்.. ஒபாமா தமிழர்களை ஒப்பேற்ற வந்த இரட்சகர் என்று சித்தரித்து கற்பனையில் வாழாதிருந்த தமிழர்களையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆனால் இன்று... ஒபாமா என்ன செய்து விட்டிருக்கிறார்.. எட்ட இருந்து இரத்தக் குளியல் செய்து கொண்டிருக்கிறார். தனது நலன் நோக்கிய நகர்வுகளுக்கான நேரம் பார்த்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் ஊரானை நம்பிக்கெட்டது வேறு எவருமல்ல. தமிழர்களே. அவர்களைப் போல முட்டாள்கள் இந்த உலகில் எவரும் இல்லை..! :):lol:

Edited by nedukkalapoovan

இங்கு எந்த ஆதிக்கசக்திகளின் கொள்ளையும் எமக்கு முழுக்கசார்பானதாகவோ எதிரானதாகவோ இருக்காது.

அதில் உள்ள எதிர்,அல்லது சார்புநிலைகளை நாம்தான் உள்வாங்கி மேலேழ வேண்டும்.அதைப் போலவே

எந்த அன்னியசக்திகளின் கொள்ளையும் நடைமுறையும் சிங்களத்துக்கு முழுஆதரவாகவோ முழு எதிராகவோ இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.