Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்குப் பின்னான சிறிலங்காவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு படு வேகத்துடன் வளர்ந்து செல்கின்றது

Featured Replies

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்பு சிறிலங்காவின் பொருளாதாரம் படு வேகமாக வளர்ந்துசெல்வதாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கான குறைந்த வட்டி வீதம், நுகர்வோரையும் நிறுவனங்களையும் சிறிலங்கா நோக்கி வரத் தூண்டுகின்றது. பங்குச் சந்தை தற்போது அதியுயர் நிலையை எட்டி உள்ளது.

செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த மூன்று மாத காலத்தில் உள்ளுர் உற்பத்தி 4.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதற்கு முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி விழுக்காடு 2.1 ஆக இருந்தது.

விடுலைப் புலிகள் மேற்கொண்டு வந்த தனி நாட்டுக்கான போராட்டம் கடந்த மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வர்த்தக நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன.

சிறிலங்காவில் உள்ள பெரிய வெளிநாட்டு நிறுவனங்களான John Keells Holdings Plc மற்றும் Aitken Spence Plc என்பன தமது வர்த்தக நடவடிக்கைகளை அங்கு விரிவுபடுத்தி உள்ளன.

பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே குறைந்த வட்டி வீதத்தைப் பேணுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

“போர் முடிந்ததைத் தொடர்ந்து சிறிலங்கா பொருளாதார நடவடிக்கைகள் தமது சக்தியைத் திரும்பப் பெற்றுள்ளன” என்று கூறுகின்றார் Eagle NDB Fund Management Co. நிறுவனத்தின் ஆய்வாளர் பிமானி மீபகலா (Bimanee Meepagala).

“போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வளர்ச்சியின் உண்மையான வேகம் சூடுபிடிப்பதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் இருந்து வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் அனைத்துலக நாணய நிதியம் 2.6 மில்லியன் டொலர் நிதி உதவியை, பாடசாலைகளையும் வீதிகளையும் புனரமைப்பதற்கெனக் கடந்த யூலை மாதத்தில் வழங்கி இருந்தது.

சிறிலங்காவின் அனைத்துப் பங்குச் சந்தைகளும் - அண்மைக் காலத்தில் - முன்னெப்போதும் காண்டிராத மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன.

1.7 விழுக்காடு வளர்ச்சியைக் கண்ட பங்குச் சந்தை - வரலாற்றில் முதல் தடவையாக - 3,188.82 புள்ளி என்ற உயர் நிலையை எட்டியது.

இந்த ஆண்டில் சிறிலங்காவில் பங்குச் சந்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிற்கு அடுத்து உலகப் பங்குச் சந்தையில் மிகச் சிறப்பான செயற்பாடாக இது கருதப்படுகின்றது.

மே மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 114.35 ஆக இருந்தது; இப்போது அந்த நிலை 0.7 விழுக்காடு இறங்கி உள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் சிறிலங்காவின் சேவைத் துறை 5.1 விழுக்காடு அளவிற்கு வளர்ந்துள்ளது என இன்றைய நிலவர அறிக்கை தெரிவிக்கின்றது.

“இந்தக் காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததற்கு - போர் முடிவுக்கு வந்ததே மிக முக்கியமான ஒரு காரணம்” என நளானி குமாரசிங்க தெரிவித்தார்; புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அவர்.

“வடக்கு - கிழக்கின் அமைதியை அடுத்து உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது; குறைந்த வட்டி வீதம் முதலீடுகளைக் கவர்ந்துள்ளது” என அவர் மேலும் விபரித்தார்.

அதே சமயம் - Marks & Spencer, The Gap, Victoria’s Secret போன்ற நிறுவனங்களுக்குச் செயயப்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்திருக்கின்றது.

ஆனால், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிலையில் இருந்து மீண்டு விடலாம் என்று நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOImd4decOYldxc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது பொய்ச்செய்தி எங்கட பகிஸ்கரிப்பால சிங்கள எயாலைன்ஸ் க்கு ரிக்கெற் எடுக்கிறது கஸ்டமாகிடக்காம், குத்தரிசி வில்படாமல் கால்விலைக்கு போட்டிருக்காம், ஊர் மீன்வகை எல்லாம் அழுகி கடைக்காரங்க பிறீசரோட தூக்கி ஏறியிறினமாம், மாக்சன் பென்சர் பக்கதே எங்கட சனம் தலைகாட்டுறேலயாம். எப்பிடி உவங்கட பொருளாதாரம் வளச்சியடையிறது? எல்லாமே பொய்............. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உது பொய்ச்செய்தி எங்கட பகிஸ்கரிப்பால சிங்கள எயாலைன்ஸ் க்கு ரிக்கெற் எடுக்கிறது கஸ்டமாகிடக்காம், குத்தரிசி வில்படாமல் கால்விலைக்கு போட்டிருக்காம், ஊர் மீன்வகை எல்லாம் அழுகி கடைக்காரங்க பிறீசரோட தூக்கி ஏறியிறினமாம், மாக்சன் பென்சர் பக்கதே எங்கட சனம் தலைகாட்டுறேலயாம். எப்பிடி உவங்கட பொருளாதாரம் வளச்சியடையிறது? எல்லாமே பொய்............. :rolleyes:

அதே சமயம் - Marks & Spencer, The Gap, Victoria’s Secret போன்ற நிறுவனங்களுக்குச் செயயப்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பண வீக்கத்தைக்குறைப்பதற்கு வழமையாக வட்டி வீதத்தையே அதிகரிப்பர், ஆனால் இலங்கையில் வட்டி வீதத்தைக்குறைப்பதன் நோக்கம் பணவீக்கத்தை குறைப்பதற்காகவாம்?

குறைந்த வட்டி வீதம் நுகர்வோர் செலவு விகிதத்தை அதிகரித்து பணவீக்கத்தையே தோற்றுவிக்கும்.

1987 காலப்பகுதியில் உலக பங்குச்சந்தை சரிவிற்கு முன்னதாக 1985 இல் சிங்கப்பூர் மலேசிய வர்த்தகம் என்றுமில்லாதவாறு உயர்வடைந்தது இதனையே பொருளியலாளர்"dead cat bounce" என்பர்

புளுகுவர்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்."Dead tiger bounce" :)

  • கருத்துக்கள உறவுகள்

உது பொய்ச்செய்தி எங்கட பகிஸ்கரிப்பால சிங்கள எயாலைன்ஸ் க்கு ரிக்கெற் எடுக்கிறது கஸ்டமாகிடக்காம், குத்தரிசி வில்படாமல் கால்விலைக்கு போட்டிருக்காம், ஊர் மீன்வகை எல்லாம் அழுகி கடைக்காரங்க பிறீசரோட தூக்கி ஏறியிறினமாம், மாக்சன் பென்சர் பக்கதே எங்கட சனம் தலைகாட்டுறேலயாம். எப்பிடி உவங்கட பொருளாதாரம் வளச்சியடையிறது? எல்லாமே பொய்............. :)

ச்சே.. இலங்கை மாதிரி குத்தரிசியும், மீனும் ஏற்றுமதி செய்தால் போதும் போல இருக்கே.. பொருளாதாரம் அந்தமாதிரி வளரும் போல இருக்கே.. இந்த அடிப்படை பொருளாதார அறிவுகூட இல்லாமல் அமெரிக்கா, கனடா எல்லாம் கார் கம்பனிகளை காப்பற்றிக்கொண்டு இருக்கினம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே.. இலங்கை மாதிரி குத்தரிசியும், மீனும் ஏற்றுமதி செய்தால் போதும் போல இருக்கே.. பொருளாதாரம் அந்தமாதிரி வளரும் போல இருக்கே.. இந்த அடிப்படை பொருளாதார அறிவுகூட இல்லாமல் அமெரிக்கா, கனடா எல்லாம் கார் கம்பனிகளை காப்பற்றிக்கொண்டு இருக்கினம்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சே.. இலங்கை மாதிரி குத்தரிசியும், மீனும் ஏற்றுமதி செய்தால் போதும் போல இருக்கே.. பொருளாதாரம் அந்தமாதிரி வளரும் போல இருக்கே.. இந்த அடிப்படை பொருளாதார அறிவுகூட இல்லாமல் அமெரிக்கா, கனடா எல்லாம் கார் கம்பனிகளை காப்பற்றிக்கொண்டு இருக்கினம்..! :)

அப்ப நீங்க உதுகள பகிஸ்கரிக்க சொல்லலியா? பாசுமதி சோறுகூட சாப்பிட ஏலாது, சீனா பாக்கிஸ்தான் இந்தியா பர்மாவெண்டு அங்கயிருந்துதான் பாசுமதி வருது, எலக்ரோணிக் சாமானுகள்கூட சீனாவிலயிருந்து யப்பானிலயிருந்து அமெரிக்காவிலயிருந்துதான் வருது உடுப்புகள்கூட ஸ்ரீலங்கா சீனா இந்தியாவிலயிருந்துதான் வருது. மலிவன் பிஸ்கட் இல்லாட்டி வீட்டில தேத்தண்ணி இறங்குதில்ல. எங்கட சானலுகள பாக்கிறபோது தமிழனுக்கு தமிழ்கூட இந்தியாவிலயிருந்துதான் வருகிது எண்டு விளங்கிது. எல்லா நாட்டயும் பகிஸ்கரி எண்டு சொல்லி எத வேண்டிறதெண்டே தெரியேல. இந்த லச்சனத்தில எல்லாத்தயும் பகிஸ்கரி ஸ்ரீலங்கா பொருளாதாரத்த சீர்குலை எண்டா ??????

ஊர் கத்தரிக்கா இல்லாட்டி எங்கவீடு ரெண்டாப்போகும். நல்லகாலம் கென்யாவிலயிருந்து கொஞ்சமெண்டாலும் வாறதால தப்பி பிழைச்சிருக்கிறம்..... :):D

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்வு,தமிழ்வின்..........புதினப்பலகை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.