Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடி நேற்று மாலை இதற்கான முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் அடிப்படையினல் 10 அம்சக்கோரிக்கை ஒன்றையும் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்த காலம் முதற்கொண்டு முக்கிய அரசியல் கட்சிகள் தனிநபர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்ப்பலரும் தமது ஆதரவு யாருக்கு என்று தெரிவித்துக்கொண்டுள்ள நிலையில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழத்தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவு யாருக்கு என்பதனை இதுவரையில் வெளியிடவில்லை.

கடந்த நாட்களில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களையும் பல தடவைகள் சந்தித்து பேசிய அவர்கள் இன்றைய தினம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளனர்.

– மீனகம் செய்தியாளர்

http://meenakam.com/?p=2239

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை துடக்கம் இதைத்தானே சொல்லுறியள். :(

ஞாயிற்றுக்கிழமை துடக்கம் இதைத்தானே சொல்லுறியள். :lol:

26ம் தேதிவரைக்கும் இதத்தான் சொல்வார்கள்...

அதுக்குப்பிறகு முடிவெடுக்க முயாமைக்கு வருத்தம் தெரிவிப்பார்கள்.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்சேகாவை ஆதரிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை அறிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுடனும் தாங்கள் பல சுற்று பேச்சுக்களை நடாத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தாம் பொன்சேகாவை ஆதரிக்கமமுடிவு செய்ததாகவும், இந்த முடிவுக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலதிக விபரங்களுக்காக மீனகம் தளத்தோடு இணைந்திருங்கள்…

http://meenakam.com/?p=2269

.... நல்ல முடிபு!!!

..... ஆத்தையிரோ, ஐயோ .... கொன்றவனுக்கு வாக்கு .... துரோகிகள் .... என்று கத்துவதற்கு முன்னுக்கு சிலவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!

நாளை சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் .... ஒருவேளை மகிந்த/கோத்தபாய கும்பலை சர்வதேச நீதிமன்றில் ஏற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் வரலாம்??!! ஏனெனில் சிலவற்றை ஏற்கனவே சரத்தே தனது வாயால் கக்கியும் விட்டார்! அது எமக்கா நடைபெறாவிட்டாலும், இன்றைய சிறிலங்காவில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மகிந்த கும்பல் செய்பவைகளுக்கான அறுபடைகளாகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே அமெரிக்காவிற்கு சரத் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலாவது இருக்கலாம்!!

இற்றைக்கு அறுபது வருடகால தமிழின அழிப்பில், நாம் இன்றுவரை ஒரு இனவழிப்பானையாவது சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்றியிருக்கிறோமா????? எமக்கு அதற்கான வலு இருக்கிறதா?? ..... ஆனால் இன்று ஏதே ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது!! அதனை பயன்படுத்துவோம்!!

.... அப்படியாயின் சரத், எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம், அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டூம்/ஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும், வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!

மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு, @புலி எதிர்ப்பு அரசியல்@ @மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???

:(:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் சரத் எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம் அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டும்ஃஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும் வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு "புலி எதிர்ப்பு அரசியல்"- "மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???

இது உண்மைதான்

ஆமோதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியாயின் சரத் எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம் அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டும்ஃஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும் வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு "புலி எதிர்ப்பு அரசியல்"- "மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???

இது உண்மைதான்

ஆமோதிக்கின்றேன்

:(:lol::D

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எதிர்பார்த்த முடிவு. :(

Edited by kalaivani

ஞாயிற்றுக்கிழமை துடக்கம் இதைத்தானே சொல்லுறியள். :(

நானும் நிறையப்பேரை கேட்டு பாத்தன்... எனக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த சிங்களவர்கள் வரை எல்லாருமே மகிந்த வருவதைத்தான் நாட்டில் சிங்கள மக்களிடை விரும்புவதாக சொல்கிறார்கள்...

சிங்கள மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்... எங்கட சனத்துக்கு தான் அங்கலாய்பு...

ஒரு விதத்திலை எங்கட ஆக்கள் சரத்துக்கு ஆதரவு குடுத்தும் சரத் தோத்துப்போவது நல்லதுதான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா

தங்கள் முடிவைச்சொல்லாது

மற்றவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பது தான் இப்ப பலபேருடைய நழுவல் போக்கு

தாங்களும் அதற்குள் என்பது வேதனை தருகிறது

தயா

தங்கள் முடிவைச்சொல்லாது

மற்றவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பது தான் இப்ப பலபேருடைய நழுவல் போக்கு

தாங்களும் அதற்குள் என்பது வேதனை தருகிறது

எனது முடிவா...??? தமிழர்கள் இந்த தேர்தலில் மானாவாரியாக போய் வோட்டு போட்டு சிங்கள் தலைவர் ஒருவரை தங்களது தலைவராக தெரிவு செய்வார்களாக இருந்தால்... தமிழருக்கு பிரச்சினை எண்டு ஒண்டு இலங்கையிலை இல்லை எண்டு முடுவெடுக்கும் நிலையிலை இருக்கிறன்...

அவர்கள் அப்படி ஒரு முடிவை எடுப்பார்களாக இருந்தால் நாங்கள் இங்கை இருந்து குத்தி முறிவதில் பலன் ஒண்டும் இருக்கப்போவதும் இல்லை... நாங்கள் பொழுது போக்கியதாக மட்டுமே அர்த்தம்... அதிலை மக்கள் கணிசமான வாக்கை சிவாஜிலிங்கத்தாருக்கு போட்டு இருந்தால் மகிழ்ச்சி... புறக்கணித்தாலும் மகிழ்ச்சி...

மற்றும் படி சரத்பொன்சேகா அதிபராவது தமிழருக்கு பலமான பாதங்களை தோற்றுவிக்கும் என்பதையும் நம்புகிறேன்...

இந்த நிலையிலை இருந்து மேலை நான் சொன்ன கருத்தை பாருங்கள்...

இந்த தேர்தல் உண்மையிலை தாயக மக்கள் புலம்பெயந்த தமிழருக்கு சொல்லும் செய்தியாக மட்டுமே இருக்கும்.... அதன் பின்னர் அவர்களது தலைவிதியை அவர்களே தீர்மானித்து கொள்ளட்டுமன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணித்தாலும்

லடசக்கணக்கில தமிழ் வாக்குகள் மகிந்த கொம்பனிக்கு போடுப்படத்தான் போகுது

அதனாலயும் நீங்கள் சொல்லுற செய்தி பலமா வெளியில வரும்

அதேநேரம்

சிவாஐpக்கு போடலாம்தான் எல்லோரும் ஒன்றாகினால்...???

ஆனால்

சரத்தை ஏத்திவிட்டால்

கமிந்தவுக்கு பல்லுப்புடுங்கி வெளியில் எடுக்கமுடியுமா?

முயற்சித்து பார்க்கலாமே?

முள்ளிவாய்க்கால் சாட்சியங்கள் பலமாக உள்ளநிலையில்...

முயற்சித்தால் என்ன....

இது என் போன்றாவர்களின் கேள்வி

தங்கள் பதில்....?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு பலவற்றை எழுதவிரும்பவில்லை

அவற்றை விமர்சனத்துக்கு ஆளாக்கவிரும்பவில்லை

முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் ..........

சொல்லப்பட்ட செய்தியின் பின்....

இலட்சியத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை எங்கிருந்து ஆரம்பிக்க போகின்றோம்என்ற கேள்விக்கு விடையை இப்பவே ஆரம்பித்தால்....

அது எவரைக்கவிழ்ப்பது என்று முடிவெடுப்பதாக வராதா???

அப்படியாயின் சரத் எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம் அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டும்ஃஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும் வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு "புலி எதிர்ப்பு அரசியல்"- "மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???

இது உண்மைதான்

ஆமோதிக்கின்றேன்

இந்த விடயத்தில் எம்மைவிட நெல்லையன் தெளிவாக உள்ளார் போலுள்ளது

ஜனாதிபதி தேர்தல் அறிவித்தபின் யாராவது ஒரு தமிழர், இலங்கையில் உள்ள,புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என ஆக்கபூர்வமான அறிவிப்பையோ அல்லது கட்டுரையோ எழுதினார்களா? இல்லை ஏனெனில்

1. நாம் ஒன்றுபட்டு இப்பவும் இல்லை

2.எவருக்குமே நாம் இப்ப என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இல்லை.

3.சிங்களவன் என்ன செய்கின்றானோ அதை பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழி உண்மையில் இல்லை.

காலம் தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மகிந்த தான் திருப்பியும் வர வேண்டும் ஆனால் பொன்சேகரா வந்தால் ஒரு நன்மை கட்டாயம் உண்டு ஒட்டுக் குழுக்களை எல்லாம் இல்லாமல் ஆக்கி விடுவார்...அப்ப தெரியும் புலியின் அருமை.

.... அப்படியாயின் சரத், எம்மை அழிக்கவில்லையா??? என்று கேட்டு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவோருக்கு ... நாம் இதனை புறக்கணித்து ஒன்றும் காணப்போவதில்லை!!! ஒன்றில் ஒரு மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களித்து எமது எதிர்ப்பை காட்டலாம், அதுவும் வடகிழக்கில் இருக்கும் ஒட்டூம்/ஒட்டில்லாத குழுக்களும் மகிந்தவிற்கு ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், எமது மக்கள் அங்கு புறக்கணித்தாலும், வாக்குக்கள் கள்ள வாக்குகளாக போடப்பட்டே தீரும்!!! அதனை விட வாக்களிப்பதே மேலானது!!

மற்றும் இன்றுவரை நடைபெற்ற இனவழிப்புகளுக்கு, @புலி எதிர்ப்பு அரசியல்@ @மாற்றுக்கருத்து அரசியல்" எனும் பெயர்களில் பின்புலமாக இருந்தவர்களை சற்றாவது ஒதுக்க்க இத்தேர்தல் முடிபுகள் அமையலாம்!!???

புலிகளிடம் தூர நோக்கு இல்லை எண்டு கிண்டல் அடிச்ச உங்களிடம் நல்ல தூரநோக்கு இருக்கு... :(

சரி சரத் வந்தால் தமிழர்களுக்கு என்ன எல்லாம் நன்மைகள் செய்வார் எண்டு நம்புறீர்கள் எண்டு சொன்னால் கேட்டு நானும் புல்லரிச்சு போகலாம்..

Edited by தயா

சரத்தை ஏத்திவிட்டால்

கமிந்தவுக்கு பல்லுப்புடுங்கி வெளியில் எடுக்கமுடியுமா?

முயற்சித்து பார்க்கலாமே?

முள்ளிவாய்க்கால் சாட்சியங்கள் பலமாக உள்ளநிலையில்...

முயற்சித்தால் என்ன....

இது என் போன்றாவர்களின் கேள்வி

தங்கள் பதில்....?

தமிழர்களுக்கு சரத்பொன்சேகா நீதிய வழங்க மகிந்தவின் பல்லை புடுங்குவார் எண்டு நம்பிறன் எண்டுறீயள்...

சிங்கள தலைவர் ஒருவர் தண்டிக்க படுவதை இன்னும் ஒரு சிங்கள தலைவர் நடை முறைப்படுத்துவார் எண்டோ பௌத்த மல்வத்த பீடாதிபதிகளின் எதிர்ப்பையும் மீறி செயற்படுத்துவார் எண்டு தமிழர்களால் மட்டும் தான் சொல்லவும் நம்பவும் முடியும்.. உங்களுக்கு வரலாறு எந்தப்படிப்பினையையும் தரவில்லை எண்டால் நான் என்ன செய்ய முடியும்...??

மகிந்த ஆட்ச்சியில் இருக்கும் போது காணப்படும் போர் குற்றம் இளைத்த நாடாக இனம் காணப்படும் இலங்கை சரத்பொன்சேகா போர் குற்றம் இளைத்தவர்களில் ஒருவர் எண்டாலும் இலங்கை போர் குற்றம் இளைக்காத நாடாகிவிடும்.. பின்னர் எல்லாமே மறக்கடிக்கவும் மறந்து போயும் இருக்கும்... காரணம் இலங்கை மேற்குநாடுகளின் நட்பு நாடு... மேற்குநடுகளின் நட்பு நாடுகள் போர்க்குற்றம் இளைப்பது இல்லை... இதுதான் புதிய உலக ஒழுங்கின் ஒரு கூறு..

Edited by தயா

கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முடிவு சரியானதா ? ஒரு முக்கோணப் பார்வை

தமிழர் கூட்டமைப்பினர் மதில் மேல் பூனையாக நில்லாமல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். இதில் உள்ள சாதக பாதங்களை பார்க்கலாம்.

சாதகமான நிலை

01. தமிழர் கூட்டமைப்பு இதுதான் எமது முடிவென்று தற்றுணிபாக ஒரு முடிவுக்கு முதல் தடவையாக வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதே. புலிகள் தீர்மானம் செய்ய இறப்பர் ஸ்டாம்பு அரசியல் செய்த கூட்டமைப்பு துணிந்து ஒரு முடிவை எடுத்தது அதனுடைய வரலாற்றில் முக்கியமான முடிவாகும்.

02. தமிழர்களின் மற்றைய குழுக்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ், சித்தாத்தன், ஆனந்தசங்கரி போன்றவர்கள் மகிந்தவை ஆதரிக்கிறார்கள். இந்த நிலையில் மகிந்தவை கூட்டமைப்பும் ஆதரித்தால் அவர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் தெளிவான வேறுபாடில்லாமல் போய்விடும். ஆகவே அந்த அணிகளில் இருந்து கூட்டமைப்பினர் தம்மை வேறுபடுத்தியிருக்கிறார்கள்.

03. சிவாஜிலிங்கத்தை ஆதரித்தால் கூட்மைப்பின் ஒரு பிரிவான டெலோவின் கையில் தலைமையை கொடுத்து, அதன் பின்னால் போவது போன்ற நிலையை ஏற்படுத்திவிடும். கூட்டமைப்பு என்பது அதில் உள்ள எந்தவொரு தனிக்கட்சிக்கும் முதன்மை கொடுக்காதிருக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த முடிவு தவிர்க்க முடியாததே.

04. மகிந்தவின் அதிகார பலம், பின்னணியில் உள்ள கோத்தபாய ராஜபக்ஷ, வெள்ளை வான்கள், இலங்கையில் உள்ள இந்திய தேர்தல் ஆலோசகர்களின் வியூகங்களுக்கிடையில் வெறுங்கையுடன் நிற்கும் கூட்டமைப்பு அதற்கு மாறாக எடுத்த முடிவு துணிச்சாலனதே.

05. சரத் பொன்சேகாவும், ரணிலும் ஏதோ ஒரு தீர்வு வடிவத்தை கையொப்பமிட்டு கொடுத்துள்ளார்கள். அது சரியா தவறா என்பதற்கு அப்பால் மகிந்த ராஜபக்ஷ கொடுக்காத ஒரு வாக்குறுதியை அவர்கள் கொடுத்துள்ளார்கள்.

06. இரண்டு வேட்பாளரையும் புறக்கணித்து இனி நாம் பெறப்போவது என்ன ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆகவே யாரோ ஒருவரை ஆதரித்து அவர் மூலம் பேரம் பேசலாம் என்று முயற்சித்துள்ளார்கள்.

07. மகிந்தவின் குடும்ப ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற முடிவில் தமிழ் மக்களின் முக்கிய கட்சி ஒன்றும் இணைந்துள்ளமை கவனயீர்ப்பு பெற்றுள்ளது.

08. எந்தத் தீர்வையும் ஏற்காது, எதையாவது ஏற்றால் எதிர் விமர்சனம் வருமோ என்று அஞ்சி, எல்லாவற்றையும் தண்ணீர் பானைபோல போட்டுடைக்காமல் ஒரு முடிவெடுத்தது நல்லதே.

09. ஆட்சி மாற்றம் கே.பி என்பவர் யார் என்ற கேள்விக்கும் பதில் தரும்.

10. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு பேரம் பேசலில் விலைப்பட்டுவிட்டன. இனி கூட்டமைப்பு மட்டும் தனியாக நின்று சிவாஜிலிங்கத்தை ஆதரித்து என்ன பயன் ?

சாதகமற்ற நிலை

01. வன்னிப் போர்க்களத்தில் தமிழ் மக்கள் சிந்திய இரத்தம் சரத் பொன்சேகா கைகளிலும் படிந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவரை ஆதரிப்பது சரியா என்ற கேள்விக்கு பதில் கூற முடியாத நிலை இருக்கிறது.

02. மகிந்த குடும்பத்துடன் கூடியிருந்து இன்று அவர்களையே கைவிட்ட சரத் நாளைக்கு கூட்மைப்பை கைவிடமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

03. தந்தை செல்வா யூ.என்.பியை ஆதரித்த காலத்து அரசியலுக்கு போயிருக்கிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முந்திய அரசியலுக்குள் போன பின்பு மீண்டும் வட்டுக்கோட்டை தீர்மானம் எதற்கு என்ற கேள்வி உருவாக வாய்ப்புண்டு.

04. கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவு இனவாதிகளை மகிந்த பக்கமாக திருப்பிவிட வாய்ப்பிருக்கிறது.

05. வடக்குக் கிழக்கு மக்களோடு மக்களாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. கொழும்பிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து கொண்டு மக்கள் சார்பில் கருத்துரைப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தலாம்.

06. இப்பொழுது கூட வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசனையை கேட்டுத்தான் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. அது தனது மக்களிடம் இது குறித்து ஒரு பொதுக் கூட்டம் கூட வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்புண்டு. எங்களை தீர்மானிக்க நீங்கள் யார் ? என்ற கேள்வி யாழ். மக்களிடத்தில் இருந்து வரலாம்.

07. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மதக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், உயர்கல்வி நிறுவனங்கள், அரசியல் கற்றவர்கள் என்று புத்திஜீவிகள் யாவரும் புறந்தள்ளப்பட்ட அரசியலே வடக்கிலும் கிழக்கிலும் 30 வருடங்களாக நடந்தது, இனியும் அதுதான் தொடர் கதையா என்ற வலி வடக்குக் கிழக்கில் ஏற்படலாம்.

08. எல்லைகடந்த தமிழீழ அரசு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஆகியவற்றுக்கும் நாட்டின் யதார்த்த நிலைக்கும் பலத்த இடைவெளி இருப்பதை இந்த முடிவு காட்டும். இதைப் பார்க்காமல் நாம் கண்களை வசதியாக மூடினாலும் வெளிநாடுகள் பார்க்கும்.

09. யார் மீதாவது துரோகிப்பட்டம் கட்டி அவதூறு செய்யும் ஒரு குழு வெளிநாட்டில் உள்ளது. அவர்கள் வசதியாக சம்மந்தர் மீது சேற்றை வாரி இறைக்க வழி பிறக்கும்.

10. விடுதலைப் புலி ஆதரவாளர் போல வேடமிட்டு, எதிரிகளே சம்மந்தர் மீது புரளி கிளப்பி சேறடிக்க முயல்வார்கள்.

தொகுப்பு

யார் வெற்றி பெறுவார் என்பது தெளிவாக தெரிந்தால் அவருடன் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டு மக்களே தீர்மானிக்கட்டும் என்று நழுவிவிடலாம். ஆனால் இலங்கை வரலாற்றில் யார் வெல்வார் என்று யாருக்குமே தெரியாத முதலாவது தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில் ஏதோ ஒரு பக்கம் சாராது அரசியல் செய்ய வழியில்லை.

புது மாத்தளனில் அமைக்கப்பட்ட இராணுவ வீரருக்கான சமாதியின் முன்னால் சரத் பொன்சேகா இல்லை. ஆட்சிக்கு வந்தது முதல் புது மாத்தளனில் சமாதி வைத்து, மாதகலில் புத்தவிகாரையை புதுப்பித்ததைவிட மகிந்த தமிழருக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்கு மீண்டும் ஆதரவளித்து யாது பயன் என்ற கோணத்தில் கூட்டமைப்பு இந்த இடத்திற்கு வந்துள்ளதாகவும் கருதலாம்.

கூட்டமைப்பிற்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

இலங்கையின் இன்றய அரசியல் கள யதார்த்தத்திலும் வேறு ஆடுகளம் எதுவும் இல்லை.

கூட்டமைப்பு மேலே சொன்ன விடயங்களை எல்லாம் விவாதித்துத்தான் முடிவெடுத்திருக்கும் என்றும் கருதிவிட முடியாது. கந்தையா ஆற்றில் பாய்ந்தால் பொன்னையா குளத்தில் பாயும் என்பதைப் போலவும் பாய்ந்திருக்கலாம்.

ஏதோ ஒரு நம்பிக்கை பாய்ந்துவிட்டார்கள்.

கூட்டமைப்பினர்தானே ஆயுதம் கையில் இல்லாமல் வேஷ்டி, சட்டையுடன் நிற்கிறார்களே! நாம் மனம்போனபடி துரோகிப்பட்டம் கட்டி சன்னதமாடலாம் என்று எண்ணுவோர் மேலே சொன்ன விடயங்களை சீர்துக்கிவிட்டே சேற்றை அள்ள முற்பட வேண்டும்.

கூட்டமைப்பினரோ யாரோ கூற அதன்படி கும்பலாக ஓட இலங்கைத் தமிழர் இப்போதும் தயாராக இருப்பார்கள் என்று கருதிவிட முடியாது.

இது தமிழரசு, ஈ.பி.ஆர்.எல்.எப் முடிவு மட்டுமே என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தமிழ் மக்களிடையே முடிவெடுக்க முடியாத அரசியல் தள்ளாட்டம் ஏற்பட சேறள்ளி வீசுவோரே முக்கிய காரணம். ஆகவே சேறள்ளி வீசாது மக்களுக்கும் மனமுள்ளது என்ற கோணத்தில் அனைவர் கருத்துக்களையும் தொகுத்து சிந்தித்துப் பார்ப்பதே அறிவுக்கு வெளிச்சமாகும்.

அலைகள்

http://www.puthinamnews.com/?p=4447

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடையே முடிவெடுக்க முடியாத அரசியல் தள்ளாட்டம் ஏற்பட சேறள்ளி வீசுவோரே முக்கிய காரணம். ஆகவே சேறள்ளி வீசாது மக்களுக்கும் மனமுள்ளது என்ற கோணத்தில் அனைவர் கருத்துக்களையும் தொகுத்து சிந்தித்துப் பார்ப்பதே அறிவுக்கு வெளிச்சமாகும்.

தமிழனுக்கு துரும்புதான் கிடைத்துள்ளது

அதையாவது பிடிக்கவேண்டும்

... நல்லது ... சரி சரத்துக்கும் வாக்களிக்க வேண்டாம் ...

1) என்ன செய்யலாம்?

2) என்ன செய்யப் போகிறோம்?

3) ஏதாவது செய்யலாமா?

.... ஒன்றுக்கும் பதிலில்லை! திரும்பத்திரும்ப பழைய வாய் வீச்சுக்களை விட்டுக் கொண்டிருக்கத்தான் சரி!! நாங்கள் இங்கு விட்டுக் கொண்டிருக்க ... அங்கு சிலர் உள்ளதுகளை சுருட்டுகிறார்கள் .... கொடுத்த ஒருவரிடம் காசு கேட்டினமாம் .. பதில் வந்ததாம், தலைவர் வரட்டும் தருகிறேன் என்று!!! ... இப்படி பலவாம்!! உதுகள் ஒருபுறம் கிடக்கட்டும் ..,...

... நேற்றொருவர் ஒரு தொலைக்காட்சியில் சொன்னார் ... மகிந்தவையும், சரத்தையும் ஒப்பிடும் போது சரத், பலமில்லாத எதிரியாம்!! ஆகவே அவரை தெரிந்து , எமது அடுத்த கட்டத்தை கொண்டு போவோம் என்று!!

மற்றும் வரலாற்றில் இலங்கையில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு வென்றதாக சரித்திரம் இல்லை!!! இம்முறைதான் தனித்து போட்டியிடுகிறார்கள், முக்கிய சிங்கள கட்சிகளின் துணை இல்லாமல் .... முடிபை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!!????

எங்களுக்கு மகிந்த மீது இயற்கையாக கருணை இருக்கிறது???? ஏனெனில் போன தேர்தலுக்கும் 80 கோடி தந்தானல்லவா???? இம்முறை வேண்ட ஆள் இல்லையாயினும் "நன்றிக்கடன் என்பதா" அது!!!!!!

80 கோடி தந்தவன் வந்து உங்களுக்கு சொன்னவனே நாங்கள் குடுத்தனாங்கள் எண்டு... ??? புளுகுறது எண்டால் எங்கட ஆக்களை கேக்க வேண்டியது இல்லை...!

புலிகளை எப்பவும் குறை கூறும் உங்களுக்கு தமிழர் எங்கை தோத்து போனவை எண்டதை கூட புரிந்து கொள்ள முடியவில்லை... அப்படி தெரிந்து கொண்டால் அடுத்த ஜனாதிபதியாக யார் வந்தால் தமிழர்களின் வாதம் பலப்படுத்தபடும் நிரந்தரமாக ஒரு தீர்வு கிட்டும் எண்டு புரிந்து கொள்ள முடியலாம்...

நாய் எப்பவும் கம்பத்தை கண்டால் காலை தூக்கிற மாதிரி சும்மா புலி எதிர்பு புராணம் பாடி கொண்டு திரியுங்கோ விரைவா உருப்பட்டு விடுவியள்...

குறுகிய அரசியல் லாபத்துக்காக தூரநோக்கு இல்லாது இண்டைக்கு கூட்டமைப்பு விட்ட தவறில் இருந்து எங்களை காக்க போவது தமிழர் எதிர்ப்பு கொண்ட சிங்களவர்களாக மட்டும் தான் இருக்க முடியும் போல கிடக்கு...

80 கோடி தந்தவன் வந்து உங்களுக்கு சொன்னவனே நாங்கள் குடுத்தனாங்கள் எண்டு... ??? புளுகுறது எண்டால் எங்கட ஆக்களை கேக்க வேண்டியது இல்லை...!

இதற்கான பதில் பல தடவை களத்தில் ......

http://lankawhistleblower.blogspot.com/2007/07/how-mahinda-rajapaksa-channeled-money.html

http://www.lankaenews.com/English/news.php?id=4387

Edited by Nellaiyan

... பிழைகள் விடப்பட்டவைதான்!!! திரும்பத்திரும்ப ... முழுப்பூசனிக்காயை சோற்றினுள் புதைக்கும் அலுவல்களை விடுங்கள்!! ... முதலில் விட்ட பிழைகளை ஒத்துக்கொள்வோம்!! ... அதனை மீளாய்வு செய்து ... சரியான பாதையில் செல்ல முற்படுவோம்!! இல்லை .... சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள்ளேயே .....

குறுகிய அரசியல் லாபத்துக்காக தூரநோக்கு இல்லாது இண்டைக்கு கூட்டமைப்பு விட்ட தவறில் இருந்து எங்களை காக்க போவது தமிழர் எதிர்ப்பு கொண்ட சிங்களவர்களாக மட்டும் தான் இருக்க முடியும் போல கிடக்கு...

குறுகியது ... தூரமானது !!! விடுங்கள் ... உந்த வசனங்களை!!! .... அங்கு அணு அசைவதானாலும் ... பிராந்திய வல்லரசை தாண்டி நடைபெறுமா??? .... உதுகளை விட்டு .... இன்று சிங்கள பிளவை பயன்படுத்துவோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.