Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

Featured Replies

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார் விடயங்களை அமைச்சர் சிதம்பரம் தமக்கேற்பக் கையாள வசதியாக புதுடில்லி, ஜனவரி 17 இதுவரை

2010-01-17 07:15:10

இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.

x

புதுடில்லி, ஜனவரி 17

இந்திய மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட்ட விவகாரங்களை தமக்கேற்ற முறையில் கையாளுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்படுவதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேசமயம், இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த சேகர் தத்தும் மாநிலம் ஒன்றின் ஆளுநராக நிய மிக்கப்படுகின்றார் என்றும் கூறப்பட்டது.

எம்.கே.நாராயணனின் தேசியப் பாது காப்பு ஆலோசகர் பதவிக்கு முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான சியாம் சரண், சிவ்சங்கர் மேனன் ஆகிய இருவ ரில் ஒருவரே பெரும்பாலும் நியமிக்கப்ப டுவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2008 நவம்பர் 26 ஆம் திகதி மும்பாய் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக் குதல்களை அடுத், அச்சமயம் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் தமது பதவியை துறக்க முன்வந்தார்.

எனினும் அச்சமயம் உள்துறை அமைச் சராக இருந்த சிவராஜ் பட்டீலின் இராஜி னாமா மட்டுமே அப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டது.

அதனையடுத்து புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.

இப்போது உள்துறை தொடர்பான சகல கட்டமைப்புகளையும் புதிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கையாளத்தக்க விதத்திலான ஏற்பாடுகளையும் ஒழுங்கு களையும் பிரதமர் மன்மோகன் சிங் அரசு செய்து வருகிறது என்று கூறப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாகவே தேசியப் பாது காப்பு ஆலோசகர் பதவியிலிருந்து எம்.கே. நாரயணனை தூக்கி விட்டு அந்த இடத் துக்கு அமைச்சர் சிதம்பரத்துக்கு இணக்க மான ஒருவரை நியமிக்க முடிவு செய்யப் பட்டிருப்பதாக அறியவந்தது.

நாராயணனை மேற்படி பதவியிலி ருந்து நீக்குவதற்கான முடிவை மத்திய அரசுத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்த போதும், அதற்குப் பொருத்தமான சந்தர்ப் பத்துக்கு காத்திருந்தது என்றும்

இப்போது பல்வேறு மாநிலங்களுக் கும் புதிய ஆளுநர்களை நியமிக்கும் சந் தடி சாக்கில், அவரை மேற்குவங்காள ஆளு நராக நியமித்து அதன் மூலம் தேசிய பாது காப்பு ஆலோசகர் பதவியிலிருந்து அவர் தூக்கப்படுவதை ஆராவாரமின்றி ஒப்பேற்ற வியூகம் வகுக்கப்பட்டது என்றும் கூறப் பட்டது.

கடந்த வியாழனும் வெள்ளியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நான்கு எம்.பிக்கள் குழு புதுடில்லியின் தங்கியிருந்து இந்திய மத்திய அரசின் உயர்மட்டங்களுடன் பேச்சு நடத்திய சமயம், பிரதமரின் தேசிய பாதுக் காப்பு ஆலோசகரையும் அவர்கள் சந்திக்கின்றமை அவர்களுக்கான நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தது என்றும்

எனினும் அச்சமயம் அப்பதவியிலிருந்த நாராயணன் ஓரிரு தினங்களில் அப்பதவி யிலிருந்து தூக்கப்படும் நிலைமை இருந் ததன் காரணமாக, அவருடனான கூட் டமைப்பினரின் சந்திப்பு ரத்துச் செய்யப் பட்டது என்றும் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன்.

எட்டு மாநிலங்களுக்குமான புதிய ஆளுநர் பட்டியலை இந்திய மத்திய அரசு இன்னும் ஓரிரு தினங்களில் த்தியோகபூர் வமாக வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது.

புதிய ஆளுநர்கள்

உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து முன்னர் இராஜினாமாச் செய்த சிவராஜ் பட்டீல் பஞ்சாப், எம்.கே.நாராயணன் மேற்கு வங்காளம், தற்சமயம் சட்டீஸ்கா ஆளு நராக இருக்கும் ஈ.எஸ்.எல். நரசிம்மன் ஆந்திரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோசினா கிப் வாய் ஜார்க்கண்ட், பாது காப்பு அமைச்சின் செயலாளராக இருந்த சேகர் தத் சட்டீஸ்கா, முன்னாள் மத்திய அமைச்சர் ஊர்மிளா பென் பட்டேல் இமாஷல் பிர தேசம் தற்போதைய ஜார்க்கண்ட ஆளு நரான கே.சங்கர நாரயணன் மகாராஷ்ட, தற்போது இமாச்சல் பிரதேச ஆளுநர் பிரபாராவ் ராஜஸ்தான் மாநில ஆளு நராக நியமிக்கப்படுகின்றனர்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2647&Uthayan1263738893

பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஊடகப்பணியாற்றி வரும் உதயன் போன்ற பத்திரிகைகள் கூட மக்களை பேய்க்காட்டும் தலைப்புகளை செய்திகளுக்கு இடுவது வருந்தத்தக்கது. சிவில் சேவையில் இருக்கும் ஒருவரை இன்னொரு பதவியில் அமர்த்துவது 'தூக்கப்பட்டார்' என்று ஆகாது. அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி கொடுப்பது என்பது ஒருவகையில் பதவியுயர்வே. நாராயணனின் மேலிருக்கும் கோபத்திற்காக சிறுபிள்ளைத்தனமான தலைப்புகளை போட்டு மக்களை ஏமாற்றக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டு அரசபயங்கரவாதிகளும் தங்கள் நாட்டு மக்களை கொல்லலாம் .. என்று விளக்கம் கூறிய, கைப்புள்ளை கருநாகத்தை பூட்டிய அறையில் வைத்து மிரட்டிய கத்திரிக்காய் முகர்சியும்.. நாராயணனும்(இவனை பற்றி அதிகம் கூறதேவையில்லை என நினைக்கிறேன்) ஒரே குட்டையில் மூழ்கி மேற்குவங்கத்தில் மீன் பிடிக்க போகிறார்கள்.. வங்காளிகளும் மலையாளிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை..சபாஸ் சரியான போட்டி..

புரட்சிகர தமிழ்தேசியன் திருவண்ணாமலை

  • கருத்துக்கள உறவுகள்

பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஊடகப்பணியாற்றி வரும் உதயன் போன்ற பத்திரிகைகள் கூட மக்களை பேய்க்காட்டும் தலைப்புகளை செய்திகளுக்கு இடுவது வருந்தத்தக்கது. சிவில் சேவையில் இருக்கும் ஒருவரை இன்னொரு பதவியில் அமர்த்துவது 'தூக்கப்பட்டார்' என்று ஆகாது. அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி கொடுப்பது என்பது ஒருவகையில் பதவியுயர்வே. நாராயணனின் மேலிருக்கும் கோபத்திற்காக சிறுபிள்ளைத்தனமான தலைப்புகளை போட்டு மக்களை ஏமாற்றக்கூடாது

பாராட்டுக்கள் நிழலி!!!

எம்.கே.நாராயணன் (75) என்றழைக்கப் படும் மாயன்கோட்டே கேளத் நாராயணன் தற்போது பாரதப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.

இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் எப்படியும் பதவியிலோ, அல்லது அதிகார மையத்திலோ இருப்பார்கள் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். அதனால் அந்த தொடர்பை உயர் அதிகாரிகள் பலரும், போஷாக்காக பாதுகாத்து வளர்த்து வருவது வழக்கம். அப்படித்தான், நாராயணனும் காந்தி குடும்பத்துடனான தொடர்பை பாதுகாத்து வந்தார்.

ஜே.என்.தீட்சித், மரணமடைந்தவுடன் ஜனவரி 2005ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப் பட்டார் நாராயணன்.

மும்பை குண்டுவெடிப்பின்போது, சிவராஜ் பாட்டீல் உட்பட பெருந்தலைகள் பலரும் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தும், நாராயணன் மட்டும் பதவியில் நீடித்தார். பதட்டமான சூழ்நிலையில் இவரை மாற்றுவது சரியாக இருக்காது என்று பிரதமர் கருதியதால், இவர் பதவிக்கு ஆபத்து வரவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீவிரமாக இருந்த நேரத்தில், அதில் பெரிய அளவில் குழப்பினார் என்ற விமர்சனங்கள் எழுந்தபோதும், இவர் பதவியில் நீடிக்கவே செய்தார்.

ஷியாம் சரண் அல்லது சிவசங்கர் மேனன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில், தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நாராயணன் கவர்னராக இருக்க வேண்டுமென, காங்கிரஸ் விரும்புகிறது.

====================================================================

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவசர அவசரமாக டில்லிக்கு 1987 ஜூலை 23 ஆம் திகதி அழைக்கப்பட்டார். அப்போது இலங்கையில் இந்திய தூதுவராக இருந்த ஜே.என். டிக்ஸிட் ஒப்பந்தத்தின் நகலை பிரபாகரனிடம் காட்டி அடுத்த இரண்டு மணிநேரத்துக்குள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து சம்மதம் தெரிவிக்க வேண்டுமெனவும் இல்லையேல் விடுதலைப் புலிகளை ஊதித்தள்ளிவிடுவோம் என்று வாயில் `சுருட்டை' பற்ற வைத்துக் கொண்டே மிரட்டினார்.

அந்த சூழலில் ஜூலை 23 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை பிரபாகரனுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தவர் அப்போது புலனாய்வுத்துறையின் இயக்குநராகவிருந்த இதே நாராயணன் தான்.

=======================================================================

தமது தேசிய நலனுக்காக எந்த நாசகார வேலையையும் செய்ய வேண்டுமென்பது இந்திய அரசு நன்றாக புரிந்து வைத்துள்ள ஒன்று.

எனவே, தமது தேசிய நலன்கள், சுய இலாபங்களுக்காக அடிமைப்பட்ட ஒரு இனத்தின் சுதந்திரப் போராட்டத்தை அழிக்க முற்படுவது அடிமைப்பட்டவர்களாகவிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியர்களுக்கு அழகல்ல.

Edited by akootha

பல இன்னல்களுக்கு மத்தியிலும் ஊடகப்பணியாற்றி வரும் உதயன் போன்ற பத்திரிகைகள் கூட மக்களை பேய்க்காட்டும் தலைப்புகளை செய்திகளுக்கு இடுவது வருந்தத்தக்கது. சிவில் சேவையில் இருக்கும் ஒருவரை இன்னொரு பதவியில் அமர்த்துவது 'தூக்கப்பட்டார்' என்று ஆகாது. அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவி கொடுப்பது என்பது ஒருவகையில் பதவியுயர்வே. நாராயணனின் மேலிருக்கும் கோபத்திற்காக சிறுபிள்ளைத்தனமான தலைப்புகளை போட்டு மக்களை ஏமாற்றக்கூடாது

நிழலி, உங்கள் கருத்து தவறானது! ஆளுனர் பதவி என்பது, எந்த ஒரு அதிகாரமுமற்ற ஒன்றே! ... வருடத்துக்கு ஒருதடவை மாநில அரசு எழுதிக்கொடுக்கும், அதன் கொள்கை விளக்க அறிக்கையை சட்டசபையில் ... என் அரசு இதை செய்யவுள்ளது .... வாசிப்பார்!! .... மற்றும்படி சில கட்டங்களை திறந்து வைக்கத்தான் இவரின் பதவி உதவும்!!!

.... நாராயணன் தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, ஆளுனராக்கப்பட்டார், என்பதில் உதயனின் செய்தியில் எவ்வித தவறும் இல்லை!!!

புதுடில்லி, ஜனவரி 17

இதுவரை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த எம்.கே.நாராயணன் அந்தப் பதவியிலிருந்து திடீரெனத் தூக்கப்பட்டு மாநிலம் ஒன்றின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் எனப் புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.

இந்திய மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், நாட்டின் தேசிய பாதுகாப்பு உட்பட்ட விவகாரங்களை தமக்கேற்ற முறையில் கையாளுவதற்கு வசதியான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி மாற்றம் செய்யப்படுவதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.uthayan.com/Welcome/full.php?id=2647&Uthayan1263738893

இந்த நடவெடிக்கையானது உதாரணத்துக்கு ...

பொன்னருக்கு இராணுவதளபதி பதவியை தூக்கி.. கூட்டுப்படை தளபதி என்ற அதிகாரம் இல்லாத பட்டப்பெயரை கொடுத்துபோல.... :)

"நாராயணனை மேற்படி பதவியிலி ருந்து நீக்குவதற்கான முடிவை மத்திய அரசுத் தலைமை ஏற்கனவே எடுத்திருந்த போதும்இ அதற்குப் பொருத்தமான சந்தர்ப் பத்துக்கு காத்திருந்தது "

ஆமாம். இந்தியாவின் தேசிய நலந்தான் இதில் தெரிகிறது. எல்லாம் தம்மைப் பாதுகாக்கத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் எதற்காக அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது இந்திய அரசுக்கே வெளிச்சம்..

ஆனால் உதயனில் வெளிவந்தது போல அவர் பதவியிலிருந்து தூக்கப்படவில்லை என்பது மட்டும் உண்மை...

இந்தியா இன அழிப்பில் ஈடுபட்டதுக்கு இவரும் ஒருவகையில் சாட்சியமே...

அவர் அவ்வாறு தூக்கப்பட்டிருந்தால் இவரால் நிச்சயமாக தொல்லை வரும் என்பது இந்திய அரசாங்கம் அறிந்ததே..

இவர் மேற்கு வங்கத்திற்க்கு ஆளுனராக நியமிக்கப்பட்டதில் எதோ சூழ்ச்சி வலை விரிக்கப்பட்டுள்ளதே உண்மை... ஏன் என்றால் மேற்கு வங்கத்தில் நடப்பது மார்க்ஸிஸ்ட் ஆட்சி அதை கவிழ்க்க சூழ்ச்சி செய்ய கூட இந்த நரியை இவர்கள் அனுப்பி இருக்கலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்

தூக்கினதோ தூக்கேல்லயோ யார் வந்தாலும் எதுவும் மாறப்போறேல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.