Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புதிய கிலி தளம்

Featured Replies

puli.jpg

புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும். இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது...'' எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள். அவர்களின் துணையுடனேயே நாம் 'ச.தமிழ்மாற'னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?''

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!'' ''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.'' ''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''''இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''

source:vikatan

Edited by deivamagan

தொழில்நுட்பம் வளர்ந்ததால வந்த பிரச்சனைகள். ஒருதர் நினைத்தாலும் ஏதோ ஒண்று செய்துகொண்டு இருக்கல்லாம். தமிழன்ர தலையெழுத்து எங்கபோய் முடியப்போவுதோ???????

Edited by naaddan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கெலிதளம்(Heli pad) என்று போட்டிருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்

புலிகள் இல்லாமல் இலங்கையும் சரி, இந்தியாவும் சரி அரசியல் செய்ய முடியாது போல் உள்ளது. விகடன் உண்மையில் ஆனந்த விகடன் தான். மக்கள் சிரிப்பதற்கு இவ்வாறான கட்டுரைகளை எழுதுகிறார்கள் போலும்.

ஒரு வரியில் இப்படி கூறுகிறார்கள்:

சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார்

அடுத்த வரியில் இப்படி தடம் மாறுகிறது: :rolleyes::unsure:

45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார்.

பொய்களை திரிக்கும்போது சிறிதளவாவது சிந்திக்க மாட்டார்களா? இதை வாசிக்கும் போது எனக்கு ஒரு பஞ்சதந்திர கதை ஞாபகம் வருகிறது. ஒரு குருவிடம் மூன்று சீடர்கள் கல்வி பயின்று வந்தனர். ஒருவன் மருத்துவம், இன்னொருவன் சோதிடம், மற்றவன் தர்க்க சாஸ்த்திரம் கற்று வந்தனர். குருபத்தினி ஒருமுறை பேச்சுவாக்கில் மருத்துவம் கற்கும் மாணவனே பல மேலானவன் என பொருள் படும்படி கூறியிருந்தார். குருவும் இதற்கு அடுத்த நாள் பதில் கூறுவதாக சொல்லிவிட்டார்.

அடுத்த நாள், குருவானவர் குரல்வளையை இறுக பிடித்தபடி வலியால் நிலத்தில் விழுந்து துடித்தார். அவரின் மனைவி என்ன விடயம் என்று கேட்ட போது, ஒரு பொற்காசு அளவுள்ள நீல நிற விஷப்புழுவை பழத்துடன் விழுங்கி விட்டதாக கூறினார். உடனே சோதிடம் கற்றவன் குருவின் சாதகத்தை எடுத்து ஆயுள் கணிக்க தொடங்கினான். மருத்துவம் கற்றவன் பச்சிலைகளை தேடி ஓடினான். ஆனால் தர்க்க சாஸ்த்திரம் கற்றவனோ ஆற அமர இருந்து நன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

அப்போது குரு பத்தினி அவனை பலவாறு திட்டி, நீயும் ஒரு சீடனா? உன் குரு உயிர் பிரியும் தறுவாயில் நீ சாப்பிட்டு கொண்டு இருக்கிறாயே? என்று கேட்டார். அப்போது அந்த சீடன் குறிய பதில் இது. "குரு பொற்காசு அளவுள்ள, நீல நிற மான விஷப்புழு என்று சொன்னார் அல்லவா? இவ்வளவு நுட்பமாக பார்த்த பின்பும் அதை விழுங்க அவாருக்கு என்ன தேவை இருக்கிறது. இது வெறும் பொய்".

உடனே குரு எழுந்து மனைவியிடம் சொன்னார் "பார்த்தாயா? தர்க்க சாஸ்த்திரத்தின் பெறுமதியை."

இந்த கட்டுரையும் இவ்வாறான ஒரு கதைதான். என்ன செய்வது? புலிகளை வைத்து வியாபாரம் செய்ய முனைகிறார்கள்.

இஞ்ச நான் போட்டதை காக்கா தூக்கி கொண்டு போட்டுதா................................................?

கருத்துக்கள் படிப்பதற்கு போலியானவையாகத் தோன்றவில்லை... பொறுத்திருப்போம் காலம் நம்மை மிக அதிகமாகவே சோதிக்கிறது அதுவும் நல்லதிற்கே!

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்தமானத்தில் நினைத்தபடி எல்லாவற்றையும் புறக்கணிக்கவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது, இருந்தாலும் இந்த கட்டுரையில் பல விடயங்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.