Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம்.

Featured Replies

ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம்

திகதி: 27.01.2010 // தமிழீழம்

வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்!

அன்புறவுகளே!

ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம்.

தமிழீழம். தமிழீழம். தமிழீழமே. அந்த ஒற்றைவார்த்தைக்காக உடமையிழந்து, உதிரம் சொரிந்து, உடலை அழித்து, உள்ளம் நசிந்து, உயிரைப்பிரிந்து போராடியவர்கள் நீங்கள். அந்த உன்னத இலட்சிய வேட்கையை அடிநாதமாகக் கொண்டு வாழ்பவர்களும் நீங்களே! நாங்கள் எத்தனை தடவை வீதிகளில் இறங்கி அடி வாங்கினாலும், உங்கள் தியாகத்திற்கு அது ஈடாகிவிடாது.

அந்நிய ஆக்கிரமிப்பிற்குள் அஞ்சாது நீங்கள் வாழும் வாழ்வு தன்னிகரற்றது. சனநாயக நாடொன்றில் எங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. நாங்கள் எதையும் பேசலாம். எதையும் சிந்திக்கலாம். எவரையும் கண்டிக்கலாம். ஆனால் நீங்கள்?

திறந்தவெளிச் சிறையில் வாழ்பவர்கள். பேசுவதற்கு உரிமையிழந்து வாழ்பவர்கள். சாவை முதுகில் சுமந்தவாறு வாழ்பவர்கள். ஆனாலும் என்ன?

நீங்கள் சிந்திக்க மறுக்கவில்லை! விடுதலை என்ற இலட்சியப் பாதையில் இருந்து இம்மியளவும் நீங்கள் விலகவில்லை! விடுதலையே உயிர்மூச்சென்று வாழும் உங்கள்முன் நாம் தலைசாய்த்து நிற்கின்றோம்.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது நாம் கலங்கிப்போனோம். நாள் நெருங்க நெருங்க எமது குலைநடுங்கியது. கதிகலங்கியது. புலிகளின் தவறை நிவர்த்திய செய்யப் போவதாக சம்பந்தர் எக்காளமிட்ட பொழுது துக்கம் எமது தொண்டையை அடைத்தது. ஆட்சி மாற்றத்திற்காக நீங்கள் ஏங்குவதாக சிலர் நீலிக்கண்ணீர் வடித்தபொழுது எமது இதயம்கலங்கி அழுதது. எல்லோரும் எதிர்பார்த்தார்கள், பேயை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு முனியை ஈழத்தமிழர்கள் ஆட்சியில் அமர்த்தப் போகின்றார்கள் என்று.

ஆனால் நேற்றுடன் அந்தநிலை மாறிவிட்டது.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவு சாதாரணமானதல்ல! அந்நிய ஆக்கிரமிப்பிற்குள், ஆயுத அடக்குமுறைக்குள், அந்நிய தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவு அபாரமானது. உங்கள் துணிச்சல் போற்றுதற்குரியது.

இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழமே எமக்கானது என்று நாங்கள் இங்கு வாக்களிக்க, சிங்கள தேசத்துடன் நீங்கள் நல்லிணக்கம் செய்துவிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம். வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை என்று நாங்கள் முழங்க, சிறீலங்கா, சிறீலங்கா என்று நீங்கள் கோசமிடுவீர்களோ என்று நாம் அஞ்சினோம்.

ஆனால்...

எல்லாவற்றையும் உடைத்தெறிந்து புலிகளை இழிவுபடுத்திய சம்பந்தரின் முகத்தில் நீங்கள் கரிபூசியது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது. பேயும் வேண்டாம், முனியும் வேண்டாம் என்று, ராஜபக்சவையும், பொன்சேகாவையும் நீங்கள் நிராகரித்தது எம்மைத் தலைநிமிர வைத்துள்ளது.

சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை 80 விழுக்காடு தமிழீழ மக்கள் புறக்கணித்தார்கள் என்ற செய்தி பரவிய பொழுது எங்கள் இதயங்களில் பட்டாம்பூச்சி சிறகு விரித்துப் பறந்தது. ஆட்சி மாற்றத்தை நீங்கள் விரும்புவது உண்மைதான். ஆனால் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆட்சியை அல்லவா நீங்கள் விரும்புகின்றீர்கள்! அந்தப் பெருந்தலைவனின் வழியில் போராடும் புலிகளுக்காக அல்லவா நீங்கள் வாழ்கின்றீர்கள்! உங்கள் கனவை நனவாக்குவது எமது கடன்.

இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதே எமது இலக்கு. வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை வலியுறுத்தி நாம் வாக்களிப்பது அதற்காகவே. இத்தளத்திலிருந்தமுன்னகரும் ஒவ்வொரு அடியும் தமிழீழத் தனியரசை நோக்கியதே. அதற்காகவே. நாம் உயர்த்தும் ஒவ்வொரும் குரல்களும் உங்களுக்கானவை. நாம் எடுத்து வைக்கும்ஒவ்வொரு அடிகளும் உங்களுக்கானவை. அந்நியனிடம் வாங்கும் ஒவ்வொரு அடிகளும்உங்களுக்கானவை.

உறவுகளே!

தமிழீழத்தைக் கூறுபோடுவதற்கும்,விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை காற்றில் பறக்க விடுவதற்கும் சில குழுக்கள் முற்படுவது கண்டு நீங்கள் சீற்றம்கொள்வதுஎமக்குப் புரிகின்றது.

இருந்தாலும் ஒன்றை மட்டும் ஐயம் திரிவு இன்றிகூறிக்கொள்ள விரும்புகின்றோம். எவர் தடம்புரண்டாலும் தமிழீழத்தனியரசு என்ற இலட்சியத்தில் இருந்து நாம் விலகப் போவதில்லை. உங்கள் ஆணையை நாம் நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம். இது மாவீரர்கள் மீது ஆணை.

மீண்டும் சந்திக்கும் வரை...

- சேரமான்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3135&cntnt01origid=52&cntnt01returnid=51

:lol:

மாவீரர்களின் கனவை நனவாக்கவேண்டும், எமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் தயவுசெய்து தமிழீழ விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் மீது தேவையற்ற விதத்தில் சேற்றை அள்ளி வீசாதீர்கள்.

இந்தக் கட்டுரையின் மூல வடிவத்தில் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்களை துரோகிகளாகச் சித்தரிக்கும் வசனங்கள் இருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழரின் ஒரே பலம் தாயக விடுதலைக்காக தமிழர்கள் ஒன்றுமையாக இருப்பது மட்டும்தான். தமிழீழத் தனியரசு நோக்கியதாகவே நாடுகடந்த அரசு அமைப்பவர்களின் பயணம் இருக்கிறது. தமிழீழ தனியரசை வென்றெடுக்கவே நாடுகடந்த தமிழீழ அரசு என்பதையே உருவாக்குவதாக அவர்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகிறார்கள். அதில் ஈடுபடுபவர்கள் யாரும் விடுதலைக்கு எதிரான நிலையில் நிற்பவர்கள் அல்ல. இந்த நிலையில் ஏன் தேவையற்ற விதத்தில் அவர்கள் மீது சேறு பூசும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன?

ஒருகணம் உங்கள் வாசல்களின் திசைதிரும்பி தலைசாய்த்து வணங்குகின்றோம்

நாள் நெருங்க நெருங்க எமது குலைநடுங்கியது. கதிகலங்கியது. புலிகளின் தவறை நிவர்த்திய செய்யப் போவதாக சம்பந்தர் எக்காளமிட்ட பொழுது துக்கம் எமது தொண்டையை அடைத்தது. ஆட்சி மாற்றத்திற்காக நீங்கள் ஏங்குவதாக சிலர் நீலிக்கண்ணீர் வடித்தபொழுது எமது இதயம்கலங்கி அழுதது. எல்லோரும் எதிர்பார்த்தார்கள், பேயை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு முனியை ஈழத்தமிழர்கள் ஆட்சியில் அமர்த்தப் போகின்றார்கள் என்று.

ஆனால் நேற்றுடன் அந்தநிலை மாறிவிட்டது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3135&cntnt01origid=52&cntnt01returnid=51

ஒரு ஜுஜுபி தேர்தலுக்காக எங்கள் 30 வருட புனித வேள்வியை கேள்விக்குறியாக்கிய கூட்டம் மக்களிடம் இருந்து வெகு தூரத்தில் என்ற செய்தி இதன்மூலம் உணர்த்தப்பட்டுள்லது.

சிங்களமும் உலகமும் தமிழீழம் தரப்போவதில்லை.ஆனால் நாங்கள் விடப்போவதுமில்லை.இதை அனைவருக்கும் உணர்த்திய தேர்தல்.

அந்த தீ ஒவ்வோர் உள்ளத்திலும் இருக்கவேண்டிய அவசியம், சந்தர்ப்பவாதிகளுக்கு விதிவிலக்கு.மக்கள் தீர்ப்பே எங்கள் ஆண்டவரின் ஆசை என உணர்த்திய பாடம்.

Edited by vimalk

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு-கிழக்கு மக்கள் தேர்தலில் ஆர்வமின்மையாக இருந்தது ஒருபக்கம் என்றால் போட இருந்தவர்களுக்கு காலையில் பல இடங்களில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

புலத்தில் இணையத்தளங்களிலும் இலவச பத்திரிகைகள் வாயிலாகவும் கட்டுரை எழுதுகின்ற பெருமக்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவது நல்லது.

அதாவது, விடுதலைப் புலிகள் என்கிற பேரில் விடுக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் எதுவும் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காரணம், இலங்கையில் வெளிவருகின்ற எந்தவொரு தமிழ், ஆங்கில ஊடகங்களும் புலிகளின் பேரால் விடுக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடவில்லை.

இந்நிலையில் அந்த மக்களுக்கு புலிகளின் பேரால் விடுக்கப்பட்ட அறிக்கைகள் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை யாழ். கள நண்பர்களே! வடக்கு-கிழக்கில் வாழ்ந்துவரும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக தெரிந்துகொண்டு இதில் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

வடக்கில் 20 வீத வாக்களிப்பு என்பது அந்த மக்கள் தேர்தலில் ஆர்வமின்மையாக இருந்ததும் அச்சுறுத்தலுமே காரணமே தவிர புலிகளின் பேரால் விடுக்கப்பட்ட அறிக்கை காரணமல்ல; அல்லது புலத்தில் ஆய்வாளப் பெருந்தகைகள் எழுதிய கட்டுரைகளும் அல்ல. இலகுவாக சொல்வதனால் குருவி இருக்க பனம் விழுந்த கதைபோலத்தான் இதுவும்.

மலையக தமிழர்கள் கூட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு விடுத்த அழைப்பினை புறக்கணித்து சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பதனையும் நாம் இங்கே கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் விடுதலைப் புலிகள் மீண்டும் புத்தெழுச்சி பெறுவார்கள், அதன் தலைவர் மீண்டும் வருவார் என்று வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புக்கள் கூறும் கதைகளை நம்பி அடுத்தகட்டத்துக்கு நகராமல் இருப்பதுதான் வேதனையான விடயம்.

அடுத்த கட்டம் என்பதனை நான் இங்கே கூறவருவது, இன்று வடக்கு-கிழக்கில் அரசியல் செய்ய பலமாக இருக்கக்கூடியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதற்கு நாம் பொருளாதார ரீதியாக பங்களிப்புச் செய்ய வேண்டும்.

அதாவது, எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரங்களுக்கும் அவர்களின் செலவுகளுக்கும் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்கள்தான் பங்களிப்புச் செய்யவேண்டும். (பழக்க தோசத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்கச் சொல்லி அறிக்கைப் போர் நடாத்தி விடாதீர்கள்)

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் எதனை எடுத்துக்கொண்டாலும் பழக்க தோசத்தில் புறக்கணிப்பதே பழக்கமாகக் கொண்டவர்கள். அதனால்தான் மேற்படி வசனத்தை அடைப்புக்குறிக்குள் இட்டிருக்கின்றேன்.

எதிர்வரும் காலத்தில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிக்குமாறு அறிக்கைகளையோ, கட்டுரைகளையோ இணையத்தளங்களிலும் இலவச பத்திரிகைகள் வாயிலாகவும் வெளியிட்டால் புலத்தில் வாழ்கின்ற சிந்திக்கக்கூடிய தமிழர்கள் அதற்கு எதிர்புத் தெரிவியுங்கள்.

அதேபோன்று புலத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும் 24 மணிநேர தமிழ் வானொலிகள் சிலவும் தாமே ஒரு முடிவினை எடுத்து வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் மீது திணிப்பதுடன் அதற்கு ஆதரவாக அங்கு வாழும் சிலரை பிடித்து தமது வானொலியில் கொண்டுவந்து இதுதான் வடக்கு-கிழக்கு மக்களின் கருத்துக்கள் என தவறான வழிக்கு கொண்டு செல்கின்றன.

இன்னொரு விடயத்தினையும் இங்கே கூறியாக வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இயக்க வேண்டும் என்று கனவு காணக்கூடாது. புலிகளின் காலத்தில் புலிகளின் சொல்லைக் கேட்டு அவர்களால் அரசியலே செய்ய முடியவில்லை. இனியாவது, அவர்களை சுதந்திரமாக செயற்பட விடுவதுதான் நல்லது.

ஏன், இதனை இங்கே நான் கூற வருகின்றேன் எனில், அவர்கள் அந்த மண்ணில் இருந்துகொண்டு அரசியல் செய்து வருகின்றனர் என்பதனை நாம் மறக்கக்கூடாது. வெளிநாடுகளில் சொகுசாக இருந்துகொண்டு அவர்களை இயக்க வேண்டும் அல்லது எமது சொற்படி இயங்க வேண்டும் என மிரட்டுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நோர்வேயில் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவோடு இருந்து கொண்டு அறிக்கைப் போர் நடத்திய செல்வராஜா கஜேந்திரன் இறுதியில் என்ன செய்தார் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள். அவர் மகிந்த சகோதரர்களோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு இன்று அங்கே சுதந்திரமாக நடமாடுகின்றார்.

இதில் சோகம் என்னவெனில் இதே கஜேந்திரனால் உசுப்பப்பட்ட பெருமளவிலான யாழ். இளைஞர்கள் 2006 ஓகஸ்ட்டுக்குப் பிறகு சிறிலங்காப் படையினராலும் அதன் துணைப் படையினராலும் கடத்தியும் படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.

புலத்தில் விடுதலைப் புலிகளின் பேரால் இருதரப்பட்ட அறிக்கைகள் வெளிவருகின்றன அதனையும் யாழ். கள நண்பர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது.

ஒரு அறிக்கையில் செய்தித் தொடர்பாளர் என ச.தமிழ்மாறன் என்றும் இன்னொரு அறிக்கையில் ஊடகப் பிரிவு சார்பாக ஆ.அன்பரசன் எனக் குறிப்பிட்டு அறிக்கைகள் விடுகின்றனர்.

மேற்படி இரண்டுபட்ட அறிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன? தெளிவுபடுத்தக் கூடியவர்கள் தெளிவுபடுத்துங்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமாக எம் மக்களுக்கு தெளிவு தேவை, முதலில் தமிழ் ஊடகங்கள் தெளிவடையவேண்டும்.

முயற்சித்தால் முடியாததென்று ஒன்றுமில்லை.

இந்த பாடலையும் ஒருமுறை பாருங்கள், கேளுங்கள். இன்னும் குருதி கொதிக்கவில்லையா???

http://www.youtube.com/watch?v=IX1yxQnyc50

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை, அதிலும் முக்கியமாக யாழ்ப்பாணத்தை மட்டும் மனதில் வைத்து எழுதிய அரைகுறை கட்டுரை இது (வழக்கம் போல்)

மன்னார் மக்கள் எந்த தேசத்தவர்கள்? (இடம்பெயர்ந்து வன்னியில் செத்த சனத்தில் மிச்சமானவர்களில் 34.19% வாக்களித்துள்ளார்கள்)

கிழக்கு மக்கள் தேர்தலை புறக்கணித்தார்களா?

தெற்கில் முக்கியமாக கொழும்பில் இருக்கும் வடக்கு/கிழக்கு மற்றும் ஏனைய பகுதித் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லையோ (கொழும்புக்கு போனதால அவர்கள் துரோகிகளாகிட்டினமோ?)

மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் தமிழர்கள் இல்லையா?

தமிழராக ஒன்றுபட வேண்டிய இன்றைய நிலையிலும் வெற்றுக் கட்டுரைகளை தமிழ் தேசியத்தின் பெயரால் எழுதி வெளியிட்டு, அந்த தமிழ் தேசியத்துக்கே ஆபத்தை கொண்டு வரப்போகின்றார்கள்.

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.