Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

யாழ் நகரம் , திருநெல்வேலி, தென்மராட்சியின் சில பகுதிகள், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பலாத்காரமாக மூட மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலைவேளை படையினராலும் காவற்துறையினராலும் முறியடிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு குறுக்காக தடைகளை ஏற்படுத்தி தடைகளை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் அவ்வப் பகுதிக் காவற்துறையினரால் வீதித் தடைகள் அகற்றப்பட்டு முறியடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுவெலிப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்று காவற்துறையினரால் தாக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. எனினும் இந்தத் தீ அயல் பெததுமக்களால் உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என தனது ஆதரவாளர்களைக் கோரியிருப்பதாக இன்று ஈபிடிபி அலுவலகம் அறிவித்துள்ளது. மக்களுக்கு சிரமங்களை தரும் இவ்வாறான நிகழ்சிசகளை உடனடியாகக் கைவிடுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்திருக்கும் அமைச்சர் நேரடியாக பல பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்துள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு:‐ போராட்டம் பிசுபிசுப்பு:‐

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பதவியினை ராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்று கதவடைப்பிற்கு நேற்று யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்க்குடாநாட்டுப் புத்திஜீவிகள் எனும் பெயரில் உள்ளுர் ஊடகங்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்படடதாக தெரியவருகிறது.

தன்னை புத்திஜீவிகள் சார்பானவர் என அறிமுகப்படுத்திய சுமார் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே அச்சுவேலியிலிருந்து இந்த அறிக்கையினை தமக்கு அனுப்பி வைத்ததுடன் தொலைபேசி மூலம் இந்தப் பிரசுரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் உள்ளுர் நாளிதழ்களின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது குடாநாட்டு மக்கள் மகிந்த ராஜபக்ஸவை நிராகரித்திருந்தனர். இதனால் அவரது வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தத் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று தமது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஆதரவாளர்களிடையே அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரும் நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

பல புத்திஜீவிகளும் பொது அமைப்புகளும் ராஜினாமாவைக் கைவிடக் கோரியுள்ளதாக உள்ளுர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையிலேயே குடாநாட்டுப் புத்திஜீவிகளின் பெயரில் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் இன்று இரவிரவாக கதவடைப்பைக் கோரும் சுவரொட்டிகள் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எனினும் இன்று இந்தக் கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் காலையில் சற்று நிலமை அசாதாரணமாகக் காணப்பட்டாலும் தற்போது படையினரும் தலையிட்டு கடைகள் போக்குவரத்து என்பவற்றை சுமூகமாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 2 பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் அடித்து நொருக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை எதிர்வரும் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் அறிவிப்பு வெளிவந்தால் அமைச்சுப் பதவி நாடாளுமன்றப் பதவிகள் காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஜி.ரி.என்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்திஜீவி என்று தங்களைத் தாங்களே எண்ணிக்கொள்ளுகிறவர்களும், மற்றவர்கள் மூலம் தன்னை புத்திஜீவி என்று அழைக்க

விரும்புகிறவர்களும்தான் இப்போதைய தேக்கத்துக்கு காரணம்.

தன்னை இழக்கத்துணியாமல் மற்றவர்களுக்கு ஆலோசனையும்,ஆய்வுகளும் சொல்லும் இந்த வர்க்கம் இப்போது புதிதாக

கடைலாயில் உமிழ்நீர்சுரக்க இங்கும் அங்கும் அலைகினம்.

அப்படியான ஒரு புத்திஜீவிதான் டக்கியையும் தொங்கிகக்கொண்டு அலையுது .

புத்திஜீவிக்களான சேர்.பொன்.இராமநாதனும்,ஜி.ஜி. பொன்னம்பலமும்,திருச்செல்வமும்,அமிர்தலிங்கமும் இந்த இனத்தை

மீளமுடியாத பாதாளத்துக்குள் தள்ளினதைப்போல இப்போது சில டொக்ரரேட்டுகளும்,காம்ரேட்டுகளும் வெளிக்கிட்டுஇருக்கினம்.

ஏதோ இல்லாதுவிட்டால் ஏதேதோ எல்லாம் வருமாம் என்பது போலவே..... :D

நாங்கள் எல்லாருமே புத்திஜீவிகளாக தானே; இதில என்ன சந்தேகம்?

மேலும் கீழும் கோடுகள் போடு

அதுதான் ஓவியம்

நீ சொன்னால் காவியம்..

ஓவியம் எதுவென்று தெரிந்தவர்கள்

இன்று எவரும் இல்லையடா

குருடர்கள் உலகில் கண்கள்

இருந்தால் அதுதான் தொல்லையடா.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இல்லாதுவிட்டால் ஏதேதோ எல்லாம் வருமாம் என்பது போலவே..... :D

அண்ணலும் அதற்குள் அடக்கமோ?

:rolleyes: ,மகிந்த ஆட்சியில் நாடகங்களுக்கு குறைவேயில்லையா?

எல்லாம் மகிந்த சிந்தனை தான் ...

Edited by vimalk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஷ்சு!!!!!!!

இப்பதான் வன்னியிலை இந்தியன் சீனாக்காரன் பாகிஸ்தான்காரன் போட்டிக்கு அடிச்ச கெமிக்கல்குண்டுவின்ரை மண்வாசனை கிளம்புதாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த சொல்லி என்னத்த செய்து, அவனருளாலே அவன் தாள் வணங்கி.......

EPDP- led hartal in Jaffna fails

An attempt by EPDP supporters to stage a hartal in the Jaffna peninsula demanding that their leader and Minister Douglas Devananda not quit politics failed, after the Army and Police intervened and called on shop owners to continue with their normal activities.

Earlier Minister Devananda told party supporters he wanted to quit politics as President Mahinda Rajapaksa lost in all the seats in the Jaffna peninsula, except in the Kayts electorate, at Tuesday’s Presidential elections.

EPDP supporters said they were protesting against the decision and called on shop keepers to close their shops and transport services to withdraw.

However the Army and Police moved in to restore order and after about an hour’s interruption services returned to normal. A bus was attacked in Atchuveli and damaged.

http://www.sundaytimes.lk/100131/News/nws_24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.