Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹாத்மா காந்தியின் சாம்பல் தென்னாப்பிரிக்காவில் கரைக்கப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது.

பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகளின் 62ஆவது நினைவு தினமான சனிக்கிழமையன்று, டர்பன் அருகே அஸ்திக் கரைப்பு வைபவம் நடந்துள்ளது.அர்ச்சகர் ஒருவர் மந்திரங்களை ஓத, கடலில் மலர்கள் தூவப்பட்டு நடந்த இந்த வைபவத்தில் இருநூறு பேர் வரையிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

1948 இல் காந்திபடிகள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது அஸ்தி பல கலசங்கங்களில் பகிர்ந்து அடைக்கப்பட்டு பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

அவ்வாறு தென்னாப்பிரிக்கா அனுப்பப்பட்ட அஸ்தியின் ஒரு பகுதி குடும்ப நண்பர் ஒருவரால் இவ்வளவு காலமும் பாதுகாக்கப்பட்டிருந்தது என்று காந்தியின் பேத்தி இலா காந்தி பிபிசியிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.

-வீரகேசரி-

.

மஹாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கரைக்கப்பட்டது.

பிபிசி 1/31/2010 12:39:24 PM - மஹாத்மா காந்தியுடைய அஸ்தியின் ஒரு பாகம் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்க கடற்பரப்பில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

-வீரகேசரி-

:rolleyes: அஸ்தியை முழுசா கடலில் கரைப்பதில்லையா? :rolleyes:

இந்தியாவில் அவரது கொள்கைக்கு இன்று துளியும் இடமில்லை. அதனால் தான் அதை இனி வைத்திருந்து பிரயோசனம் இல்லை என்று தென் ஆபிரிக்காவில் கடலில் போட்டனர் போல உள்ளது.

நல்ல காலம் அதை வட இந்திய பயங்கரவாதிகளிடம் கொடுக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: அஸ்தியை முழுசா கடலில் கரைப்பதில்லையா? :rolleyes:

சாதாரண மனிதர்களுக்கு இறந்த எட்டாம் நாள் சாம்பலை கடலில் கரைத்து விடுவார்கள்.

சில அரசியல் வாதிகளின் சாம்பலை வைத்து, அதிலும் அரசியல் செய்து கொண்டிருப்பார்கள்.

:D அஸ்தியை முழுசா கடலில் கரைப்பதில்லையா? :lol:

சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும்.

இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின் வழமை. இதில் வருடாந்த திவசங்கள் செய்து அஸ்திக்கு புனித நீர் தெளிக்க, மிக நுட்பமான நுண் கால்வாய் அமைப்பும் இருக்கும்.

இதைவிட போர்வீரர்களுக்கு (சத்திரியர்களுக்கு) சிறப்பாக நடுகல், வட்டக்கல் வைக்கும் முறைகளும் புறநானூற்று தமிழர் நடைமுறையாக இருந்து வந்துள்ளது.

அண்மையில் (50 வருடங்களின் முன்) தமிழ் அறிஞர் சுவாமி விபுலானந்தருக்கு இதை ஒத்த எளிய-சிறிய நினைவிடம் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது ஓர் உதாரணம்.

மிக பழமையான பல சித்தர்களின் சமாதிகள் கதிர்காமம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு, முறிகண்டி, நெடுங்கேணி, மாந்தை, .... போன்ற பல பகுதிகளில் இன்றும் உண்டு. சிந்துவெளியிலும் இதை ஒத்த சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முறிகண்டியின் உட்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை கி. மு. 800 வருடங்களுக்கு முற்பட்டவை என்று பத்து வருடங்களின் முன் இரண்டு நாடுகளில் தனித்தனியாக செய்யப்பட்ட விஞ்ஞான காபன் காலக்கணிப்புகள் மூலம் (Carbon Dating) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் தம்மை பௌத்தர்களாக வேறுபடுத்திய மக்கள், உருவ வழிபாட்டுக்கு பதிலாக தமிழரின் இந்த நடைமுறையை இறுக்கி பின்பற்றிவரத் தொடங்கினர். தமது வரலாற்றில், பாரம்பரிய நடைமுறைகளில் அவ்வளவு அக்கறையில்லாத தமிழர், தனித்துவம் என்ற போர்வையில் இந்த நடைமுறைகளை கைவிட, பின்னர் அந்தக் கட்டிட அமைப்பு விரிந்து இன்று பாரிய பௌத்த விகாரைகளாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

இலங்கையில் பௌத்தன் தமிழரிடம் இருந்து பலவற்றை பறித்து, அவற்றை தனதென பொய் வரலாறு எழுதி, அதை ஆயிரம் தடவை சொல்லிச்சொல்லி, உண்மைபோல் மாற்றி வருவது காலங்காலமாக நடந்துவரும் ஆக்கிரமிப்புச் செயல்.

இதற்கு உதாரணமாக, அண்மையில் கதிர்காமம், கதிரமலை, சூரன் கோட்டை (கடந்த 30 வருடங்களில் இது கிரி விகாரையாக மாறிவிட்டது) என்பவற்றை சொல்லலாம்.

மிக அண்மையில் யாழ்ப்பாணத்திலும் தனது கைவரிசையை காட்ட முனைந்துள்ள சிங்களவன், கந்தரோடையில் தமிழரின் அருகருகே உள்ள வட்டக்கற்களை பௌத்த விகாரையாகவும், கீரிமலையில் இருந்து 3 km தூரத்தில் சங்கமித்தை வந்து இறங்கியது என்று புதிய பௌத்த விகாரையையும் நிர்மாணித்து வருவது தமிழர் நலனில், தமிழர் வரலாற்றை பேணுவதில் உண்மையான அக்கறையுள்ள தமிழர் அறிந்து வைத்திருக்கும் செய்திகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சாம்பலில் கொஞ்சத்தைக் கரைத்து தமிழக அரசுத்தலைவர் பணிமணை, மற்றும் வடகிந்திய ஆளும் வர்க்கங்களது இடங்களைச் சுற்றித் தெளித்திருந்தால் கொஞ்சம் அகிம்சையைப் பற்றிப் புரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தி பெற்றுக்கொடுத்த வெள்ளையனை அகற்றிய சுதந்திரம் ஒரு சுயநலம் என்பது பலருக்குத்தெரியாது, தென்னாபிரிக்காவில் காந்திக்கு நடந்த கொடூரத்திற்கு வெள்ளையனுக்குப்பாடம் படிப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டே போராட்டம் ஆரம்பமனது. அடிவிழும் வரை காந்தி ஒரு வக்கீலாகப்பணியாற்றியிருந்தார். இப்போது ஆயுதம் வைத்திருக்கின்றோம் என்ற மமதைப்போக்கால் உலகின் நீதியான குரல்களுக்குகெதிராக ஆயுதத்தைப் பாவித்து அடக்குவோம் என்று ஆட்டம் போடும் இந்திய அரசு விரைவில் ஆட்டம் காணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.