Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபோதும் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது கிடையாது - இரா.சம்பந்தன்

Featured Replies

கிட்ட தட்ட தலைவர் நெல் என்ற புலிகள் அமைப்பில் கருணா என்ற புல்லை வளர்த்து அதை அழிக்காது புடுக்கி எறிந்ததது போல நீங்களும் செய்ய போகிறிங்களோ?

கருணா பிழை செய்தான் எண்றால் அது தலைவரின் நம்பிக்கைக்கே... 20 வருட கருணாவில் போராட்ட வாழ்க்கையில் அதுவரை தலைவர் அவனில் எந்த குறைகளும் கண்டதில்லை...

தனி மனிதன் ஒருவனுக்கு இருக்கும் சில பலவீனங்களால் கருணா ஒரு போராளி எண்ற நிலையில் இருந்து வெளியேறி இருக்கலாம்...

புலிகள் அமைப்பில் போராளிகளுக்கு சொல்லப்படும் முக்கிய விடயம் எண்ற ஒண்று இருக்கிறது .. அது.. பொதுமக்களுக்கு எண்று நடை முறையில் சட்டங்கள் இருக்கின்றன.. அவை பொது மக்களை மனிதனாக வாழ வகை செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டவை... எப்போது மனிதன் மிருகமாக மாறுகிறானோ அவனை தண்டனை மூலம் கட்டுப்படுத்தவே அந்தச்சட்டங்கள் வகை செய்கின்றன... அதே போல போராளிகளுக்கு எண்று சட்டங்கள் இருக்கின்றன... அதில் மனிதன் எப்படி போராளியாக இருக்க வேண்டும் எண்று அந்த சட்டங்கள் வகை செய்கின்றன... அதில் போராளி எப்போது சாதாரண மனிதனாக செயற்படுகிறானோ அந்தச்சட்டங்கள் அவனை வளிப்படுத்தும்... என்பதுதான் அது...

இதில் கருணா செய்தவை சாதாரண தனிமனிதன் செய்ய கூடிய சிறிய தவறுகள்... அதை கட்டுக்கோப்பான அமைப்பின் ஒரு போராளி செய்த போது பெரிதாக தெரிகின்றது...

Edited by தயா

  • Replies 85
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி முறையிலான தீர்வு என்றால் என்ன...தயவு செய்து சொல்லுங்கள்..நன்றி.

மக்களாட்சி நிலவும் நாடுகளில் மக்கள் தமது ஆட்சியாளர்களை தெரிவு செய்கிறார்கள். இவ்வாறான சில நாடுகளில் ஒரு குறித்த பெரும்பான்மை மீண்டும் மீண்டும் ஏனைய மக்களை ஆட்சி செய்யும் நிலை உருவாகும் போது, அங்குள்ள சிறுபான்மை மக்கள் தமது ஆட்சியாளரை தெரிவு செய்யும் உரிமையை இழந்து விடுகிறார்கள். இந்த நிலையை மாற்றியமைக்க பொதுவாக இரண்டு வழிகள் பயன்படுத்த படுகின்றன. அவை வருமாறு:

  1. இரு சபைகளை கொண்ட பாராளுமன்றம்
  2. சமஷ்டி ஆட்சிமுறை

இந்த இரண்டு முறைகளிலும் மக்களில் யார் அந்த பெரும்பான்மை என்று அடையாளம் கண்டு, அவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு சட்டம் இயற்றும் அதிகாரம், கட்டுப்பாடு என்பன வழங்கப்படுகின்றன. குறிப்பாக இரு சபைகளை கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டாவது சபை, முதலாவது சபை ஒருவாக்கும் சட்டங்களை தடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது. இந்த இரண்டாவது சபை மேல் சபை அல்லது செனட் சபை என்று அழைக்கப்படுகிறது. சமஷ்டி ஆட்சிமுறையில் சட்டம் இயற்றும் அதிகாரங்களில் பல பிராந்திய அளவிலான சட்டசபைகளுக்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, சுவிற்சலாந்து, ஜேர்மனி, மலேசியா, சீனா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் சமஷ்டி ஆட்சியையும் இரு சபை பாராளுமன்றத்தையும் கொண்டிருக்கின்றன. சமஷ்டி அமைப்பு முறை பல தேசங்களை கொண்ட நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது. மத்திய அரசு நாட்டின் அரசாகவும், நாட்டிலுள்ள தேசங்கள் தமக்கென பிராந்திய அரசுகளை கொண்டும் சமஷ்டி ஆட்சி அமைக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியா மத்திய அரசையும், அந்த நாட்டிலுள்ள தமிழர் தேசம் தமிழ்நாடு பிராந்திய அரசையும், ஏனைய தேசங்களின் பிராந்திய அரசுகளையும் கொண்டு இயங்குன்றது. இது தவிர, இந்திய மேல் சபை ( ராஜ்ய சபா) பிராந்திய அரசுகளின் பிரதிநிதிகளையும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளையும் கொண்டு இயங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருப்பது உண்மையான சமஸ்டி ஆட்சி முறையல்ல. மொழிவளி மாநிலங்களுக்கு சிறிய உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் குவிந்து கிடக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருப்பது உண்மையான சமஸ்டி ஆட்சி முறையல்ல.

  1. உண்மையான சமஷ்டி ஆட்சிக்கு எந்த நாடுகள் உதாரணமாக திகழ்கின்றன?
  2. அந்த நாடுகளில் உள்ள சமஷ்டி ஆட்சிக்கும் இந்தியாவில் உள்ள சமஷ்டி ஆட்சிக்கும் இடையேயான வேறுபாடுகள் எவை?

மொழிவளி மாநிலங்களுக்கு சிறிய உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் குவிந்து கிடக்கின்றது.

மொழி, தேசியத்தை வரையறுக்கும் மக்கள் குழுமத்தின் ஒரு முக்கியமான அம்சம். இந்தியாவில் உள்ள சமஷ்டி ஆட்சி இந்தியாவில் உள்ள பல தேசங்களுக்கும் குறிப்பிடத்தக்க தன்னாட்சி அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. இன்று தமிழ்நாடு போன்ற பல தேசங்கள்:

  1. பொருளாதார, அறிவியல், வாழ்க்கை தர மட்டங்களில் சிறந்து விளங்குவதும்,
  2. தேசிய பிரிவினை கோரிக்கைகள் தமிழ்நாடு உட்பட பல தேசங்களில் பெருமளவு மக்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதும்,

இந்திய சமஷ்டி தேசங்கள் போதுமான அளவில் அதிகாரங்களை கொண்டிருப்பதற்கு ஆதாரங்களாக கொள்ளப்படலாம்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, உணர்ச்சி அரசியல் என்றால் என்ன??

உணர்ச்சி அரசியலை புரிந்து கொள்ள பின்வரும் உதாரணங்கள் உதவக்கூடும்.

சிங்கப்பூர் பிரித்தானியர் ஆட்சியில் இருந்து பின்னர் மலேசியாவின் ஒரு பாகமாக 1965 வரை இருந்தது. லீ குவான் யூ, தேவன் நாயர் போன்றவர்களின் தலைமையிலான மக்கள் செயற்பாட்டு கட்சி சிங்கப்பூரில் உள்ள சீன மக்களுக்கும், தமிழ் பேசும் இந்திய மக்களுக்கும் கூடுதல் உரிமையும் தன்னாட்சியும் கேட்டு அரசியல் நடத்தி வந்தனர். இந்த மக்கள் செயற்பாட்டு கட்சி தமிழர் விடுதலை கூட்டணிக்கு ஒப்பானது. மலேசியாவில் துங்கு ரகுமானின் கட்சி தேர்தலில் நின்றபோது, அந்த கட்சியுடன் மக்கள் செயற்பாட்டு கட்சி அதிக தன்னாட்சி பற்றிய தேர்தல் உடன்பாட்டை செய்து கொண்டது. அந்த உடன்பாட்டின் படி, மக்கள் செயற்பாட்டு கட்சியின் ஆதரவால், சீனர், இந்தியரின் அமோக ஆதரவுடன் துங்கு ரகுமான் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த பிறகு, துங்கு ரகுமான் தனது உடன்பாட்டின் படி சிங்கப்பூருக்கு அதிக தன்னாட்சி வழங்காமல் ஏமாற்றப் பார்த்தார். லீ குவான் யூ தலைமையிலான மக்கள் செயற்பாட்டு கட்சி துங்கு ரகுமானுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் துங்கு ரகுமானுக்கு மக்கள் செயற்பாட்டு கட்சி எந்த காலத்திலும் ஆதரவளிக்காது என்பதையும், ஆட்சியை கவிழ்க்க தாம் எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க இருப்பதையும் தெளிவு படுத்தினர். மக்கள் செயற்பாட்டு கட்சியும், லீ குவான் யூவும் வெறும் பேச்சுடன் நின்று விடுவதில்லை, சொன்னதை செய்பவர்கள் என்பதை துங்கு ரகுமான் அறிவார். ஆகவே அவர் தனது ஆட்சியை இழக்காமல் இருக்கவும், இனிமேல் லீ குவான் யூ, மக்கள் செயற்பாட்டு கட்சியில் தங்கியிருப்பதை குறைக்கும் நோக்குடனும், வெறும் மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூரை பிரிந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இலங்கை நிலைக்கும், மலேசியாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. சிங்கப்பூர் பிரித்தானியரால் தனியாக நிருவகிக்கப்பட்டு வந்ததாகும்.

இன்றைய சீனா, மாவோ செ துங்கின் காலத்தை இருண்ட காலம் என்று தமது மாணவர்களுக்கு கற்று கொடுக்கிறது. சீனா இன்று முதலீட்டு பொருளாதாரத்தை முற்றிலும் ஏற்றுக் கொண்ட ஒரு நாடு. இந்த மாற்றத்துக்கு காரணமான தலைவர் டெங் சா பெங் ஆவார். டெங் சா பெங் சிங்கப்பூருக்கு சென்று லீ குவான் யூவின் உதவியுடன் தான் இந்த மாற்றங்களை திட்டமிட்டார். பின்னர் சீன தலைவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி பயிற்சி அளித்தார். சிங்கப்பூரியர்களும் சீனாவுக்கு வந்து பயிற்சி அளித்தார்கள். இன்றும் அந்த உறவு தொடர்கிறது. யாழ்ப்பாணத்திலும் பார்க்க சின்ன சிங்கப்பூரின் அரசியல்வாதிகள், 1960களில் தமது மக்களுக்கு நாம் சிங்கப்பூரை சிலோனின் கொழும்பு போல மாற்றுவோம் என்று சொல்லி வாக்கு கேட்டார்கள். இன்று சிங்கப்பூர் உலகின் முதல் 10 பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்து சீனாவை அமெரிக்காவிலும் பார்க்க பெரிய பணக்கார நாடாக உருவாக வழிகாட்டுகிறது. இது அந்த நாட்டின் அரசியல் தலைவர்களின் அறிவுவழி அரசியல் தலைமைத்துவத்துக்கு உதாரணம்.

இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படுவது குறைவு. உணர்ச்சிவசப்படுவதும், மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, இந்திய இரகசிய பிரிவின் தேவைகளுக்கு பலியாக்குவதுமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். சிங்கப்பூரின் லீ குவான் யூ போன்ற ஆற்றலும், அறிவும், விவேகமும் உள்ள தலைவர் எமது மக்களுக்கு கிடைக்காதது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களாட்சி நிலவும் நாடுகளில் மக்கள் தமது ஆட்சியாளர்களை தெரிவு செய்கிறார்கள். இவ்வாறான சில நாடுகளில் ஒரு குறித்த பெரும்பான்மை மீண்டும் மீண்டும் ஏனைய மக்களை ஆட்சி செய்யும் நிலை உருவாகும் போது, அங்குள்ள சிறுபான்மை மக்கள் தமது ஆட்சியாளரை தெரிவு செய்யும் உரிமையை இழந்து விடுகிறார்கள். இந்த நிலையை மாற்றியமைக்க பொதுவாக இரண்டு வழிகள் பயன்படுத்த படுகின்றன. அவை வருமாறு:

  1. இரு சபைகளை கொண்ட பாராளுமன்றம்
  2. சமஷ்டி ஆட்சிமுறை

இந்த இரண்டு முறைகளிலும் மக்களில் யார் அந்த பெரும்பான்மை என்று அடையாளம் கண்டு, அவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு சட்டம் இயற்றும் அதிகாரம், கட்டுப்பாடு என்பன வழங்கப்படுகின்றன. குறிப்பாக இரு சபைகளை கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டாவது சபை, முதலாவது சபை ஒருவாக்கும் சட்டங்களை தடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது. இந்த இரண்டாவது சபை மேல் சபை அல்லது செனட் சபை என்று அழைக்கப்படுகிறது. சமஷ்டி ஆட்சிமுறையில் சட்டம் இயற்றும் அதிகாரங்களில் பல பிராந்திய அளவிலான சட்டசபைகளுக்கு வழங்கப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, சுவிற்சலாந்து, ஜேர்மனி, மலேசியா, சீனா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் சமஷ்டி ஆட்சியையும் இரு சபை பாராளுமன்றத்தையும் கொண்டிருக்கின்றன. சமஷ்டி அமைப்பு முறை பல தேசங்களை கொண்ட நாடுகளுக்கு மிகவும் பொருத்தமானது. மத்திய அரசு நாட்டின் அரசாகவும், நாட்டிலுள்ள தேசங்கள் தமக்கென பிராந்திய அரசுகளை கொண்டும் சமஷ்டி ஆட்சி அமைக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியா மத்திய அரசையும், அந்த நாட்டிலுள்ள தமிழர் தேசம் தமிழ்நாடு பிராந்திய அரசையும், ஏனைய தேசங்களின் பிராந்திய அரசுகளையும் கொண்டு இயங்குன்றது. இது தவிர, இந்திய மேல் சபை ( ராஜ்ய சபா) பிராந்திய அரசுகளின் பிரதிநிதிகளையும், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளையும் கொண்டு இயங்குகிறது.

உங்கள் விரிவான விளக்கத்திற்கு நன்றி ஜூட்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிழை செய்தான் எண்றால் அது தலைவரின் நம்பிக்கைக்கே... 20 வருட கருணாவில் போராட்ட வாழ்க்கையில் அதுவரை தலைவர் அவனில் எந்த குறைகளும் கண்டதில்லை...

சிறந்த தலைவர்களின் ஆற்றல்களில் முக்கியமானது, நம்பிக்கையான, சிறப்பான ஆற்றலுள்ள தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உதவியுடன் தமது நிறுவனத்தை வழிநடத்துவதாகும்.

உலகின் பல வணிக நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்து, இந்த வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்தி நடத்திவரும் வரன் புபர்ட் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தராவார். இவர் தனது நிறுவனங்களை நடத்திவரும் தலைவர்களுடன் வருடம் ஒரு முறை மட்டுமே தொடர்புகொள்வதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஒருமுறையும் அவர் அவர்களுக்கு வழங்குவதெல்லாம் இரண்டு விதிகள் மட்டுமே:

  1. முதல் விதி: உங்கள் நிறுவனத்தின் உரிமையாளரின் பணத்தை இழந்துவிடாதீர்கள்.
  2. இரண்டாவது விதி: முதலாவது விதியை மறந்துவிடாதீர்கள்.

அந்த அளவுக்கு அவர் சிறப்பாக தனக்கு நம்பிக்கையானவர்களை தெரிவு செய்கிறார்.

விடுதலைப்புலிகளின் குறிப்பித்தக்க பலவீனங்களில் சில:

  1. தமிழ் மக்களின் அரசியல்வாதிகள், ஏனைய போராளிகள் அமைப்புகளின் நம்பிக்கையை வென்றெடுக்கும் ஆற்றல் இல்லாத நிலை.
  2. தனது அமைப்புக்குள்ளேயே, உயர்வான தலைமைப்பொறுப்புகளில் நீண்டகாலம் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் தெரிவுகளை சரியாக செய்ய முடியாமை.
  3. தம்மை நம்பி வன்னிக்கு வந்து வாழ்ந்த பெற்றவர்களையும், உற்றவர்களையும் கூட காப்பாற்றும் ஆற்றலும் திட்டமும் இல்லாமை.
  4. தமது பலவீனங்களில் இருந்து பாடம் கற்று, தம்மை தாமே மேம்படுத்தி கொள்ளும் பக்குவம் போதாமை. உதாரணமாக,

    1. யாழ்ப்பாணத்தையும், கிழக்கையும் இழந்த அனுபவத்தில் இருந்தும், ஏனைய நாடுகளின் அனுபவத்தில் இருந்தும் வன்னியை பாதுகாக்கும் சிறப்பான திட்டத்தை வகுத்து கொள்ளாமை,
    2. மாத்தையாவின் அனுபவத்தில் இருந்து கருணாவின் விவகாரத்தை பக்குவமாக கையாள கற்றுக்கொள்ளாமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளிடம் இருந்த ஒரே ஒரு பலவீனம் இந்தியாவை கடைசி வரை நடபான நாடாக நம்பிக்கொண்டு இருந்தது, நட்பாக கருதிகொண்டு இருந்தது, நட்பாக்க முயற்சி செய்து கொண்டு இருந்தது, சீனாவின் பக்கம் அல்லது அமெரிக்காவின் பக்கம் திருகோணமலையை அடகு வைத்தாவது சார்ந்து போய் இருக்க வேண்டும், இனிவரும் காலத்திலாவது இந்தியாவை எதிரி என கொண்டு, இந்தியாவை நம்பாது இந்தியாவுற்கு எதிராக எமது முயற்சிகளை தமி்ழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும். எமது சீனா பக்கமான கட்டாய நகர்வு இந்தியா்வைம், மேற்குலகையும் தமி்ழர் நலன் பற்றி தமது நலனூடா சிந்திக்க வைக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த தலைவர்களின் ஆற்றல்களில் முக்கியமானது, நம்பிக்கையான, சிறப்பான ஆற்றலுள்ள தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உதவியுடன் தமது நிறுவனத்தை வழிநடத்துவதாகும்.

உலகின் பல வணிக நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்து, இந்த வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்தி நடத்திவரும் வரன் புபர்ட் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தராவார். இவர் தனது நிறுவனங்களை நடத்திவரும் தலைவர்களுடன் வருடம் ஒரு முறை மட்டுமே தொடர்புகொள்வதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஒருமுறையும் அவர் அவர்களுக்கு வழங்குவதெல்லாம் இரண்டு விதிகள் மட்டுமே:

  1. முதல் விதி: உங்கள் நிறுவனத்தின் உரிமையாளரின் பணத்தை இழந்துவிடாதீர்கள்.
  2. இரண்டாவது விதி: முதலாவது விதியை மறந்துவிடாதீர்கள்.

அந்த அளவுக்கு அவர் சிறப்பாக தனக்கு நம்பிக்கையானவர்களை தெரிவு செய்கிறார்.

விடுதலைப்புலிகளின் குறிப்பித்தக்க பலவீனங்களில் சில:

  1. தமிழ் மக்களின் அரசியல்வாதிகள், ஏனைய போராளிகள் அமைப்புகளின் நம்பிக்கையை வென்றெடுக்கும் ஆற்றல் இல்லாத நிலை.
  2. தனது அமைப்புக்குள்ளேயே, உயர்வான தலைமைப்பொறுப்புகளில் நீண்டகாலம் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் தெரிவுகளை சரியாக செய்ய முடியாமை.
  3. தம்மை நம்பி வன்னிக்கு வந்து வாழ்ந்த பெற்றவர்களையும், உற்றவர்களையும் கூட காப்பாற்றும் ஆற்றலும் திட்டமும் இல்லாமை.
  4. தமது பலவீனங்களில் இருந்து பாடம் கற்று, தம்மை தாமே மேம்படுத்தி கொள்ளும் பக்குவம் போதாமை. உதாரணமாக,

    1. யாழ்ப்பாணத்தையும், கிழக்கையும் இழந்த அனுபவத்தில் இருந்தும், ஏனைய நாடுகளின் அனுபவத்தில் இருந்தும் வன்னியை பாதுகாக்கும் சிறப்பான திட்டத்தை வகுத்து கொள்ளாமை,
    2. மாத்தையாவின் அனுபவத்தில் இருந்து கருணாவின் விவகாரத்தை பக்குவமாக கையாள கற்றுக்கொள்ளாமை.

1) எதை வைத்து புலிகள் மக்களின் நம்பிக்கையை வென்றேடுக்கவில்லை என சொல்வீர்கள்...நம்பிக்கை இல்லாமலா அவ்வளவு மக்களும் புலிகளோடு யாழில் இருந்து வன்னிக்கு போனார்கள்...அரசியல்வாதிகளும்,ஏனைய போராளிகளும் தங்கள் சுய லாபத்திற்காகத் தான் புலிகளை ஒதுக்கினார்கள்.

2)மாத்தையாவோ,கருணாவோ அமைப்பில் இருக்கும் போது திறமையாகத் தான் செயற்பட்டார்கள்...மாத்தையாவை பற்றி எனக்கு சரியாகத் தெரியாது...ஆனால் கருணா புலிகளில் இருக்கும் வரைக்கும் புலிக்கு விசுவாசமாய்த் தான் இருந்தார்...அவர் திறமையானவர் அதனால் தான் தலைவர் அப் பொறுப்பை கருணாவிடம் கொடுத்தார்...

3)திட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள்...எப்படியாவது வன்னியில் இருக்கும் மக்களை காப்பாற்ற தான் கடைசி வரை முயற்சி செய்தார்கள்...ஆனால் யாரோ நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்.

4)1)யாழை இழந்தது சந்திரிக்கா காலத்தில் திரும்பி கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைத்தும் இந்தியாவின் சொல் கேட்டு நம்பி ஏமாந்தது புலிகளின் பிழை தான்...கிழக்கை புலிகள் கைப்பற்றினாலும் நீண்ட நாள் புலிகளால் வைத்திருக்க முடியாது...வன்னிப் போர் முனை வித்தியாசமானது எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத் புலிகள் கடைசி வரை போராடினார்கள்...யார் கண்டது அரசு நச்சு வாயு அடிச்சும்,தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தும் மக்களை கொல்லுமெனவும் அதற்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்கும் எனவும் புலிகள் யோசித்திருக்க மாட்டார்கள்.

2)மாத்தையாவிலும் பார்க்க கருணாவில் தலைவர் அதித நம்பிக்கை வைத்து உள்ளார்...நான் நினைக்கிறேன் மாத்தையாவுக்கும்,கருணாவுக்கும் வித்தியாசம் உள்ளது என...மாத்தையா புலிகள் கூட இருந்தே குழி பறித்தார் ஆனால் கருணா அப்படி இல்லை ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிய ஆசைப்பட்டார்...தான் பிரியப் போகிறேன் எனச் சொல்லி பிரிந்து விட்டார்...அவர்களோடு கூட இருந்து கொண்டே குழி பறிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1) எதை வைத்து புலிகள் மக்களின் நம்பிக்கையை வென்றேடுக்கவில்லை என சொல்வீர்கள்...நம்பிக்கை இல்லாமலா அவ்வளவு மக்களும் புலிகளோடு யாழில் இருந்து வன்னிக்கு போனார்கள்...

மக்களின் நம்பிக்கையை விடுதலைப்புலிகள் வென்றெடுத்திருந்தார்கள் என்பது உண்மை.

அரசியல்வாதிகளும்,ஏனைய போராளிகளும் தங்கள் சுய லாபத்திற்காகத் தான் புலிகளை ஒதுக்கினார்கள்.

பெரும்பாலான மக்கள் சுயநலம் உள்ளவர்கள். அவர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து அவற்றை பொதுநலத்துக்கு பயன்படுத்துவது சிறந்த நிருவாகத்துக்கு தேவையான அடிப்படைகளில் ஒன்று. இதைத்தான் கருணாவுடனும், டக்கிளசுடனும் மகிந்த ராஜபக்சவினால் செய்ய முடிந்திருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இது தெரியாத தத்துவமல்ல. வெளிநாடுகளில் ஆயுதங்கள் வாங்கி கொண்டு செல்ல இந்தவிதமான தத்துவத்தை அவர்கள் நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுடனும், ஆயுதக்குழுக்களுடனும் அவர்கள் இந்த அணுகுமுறையை பயன்படுத்தி, ஆயுதக்குழுக்களினதும், அரசியல்வாதிகளினதும் நம்பிக்கைளை வென்றெடுத்து செயற்பட்டிருக்க வேண்டும். சிங்கள அரசியல்வாதிகளால் அதை செய்ய முடிந்திருக்கிறது பாருங்கள்.

2)மாத்தையாவோ,கருணாவோ அமைப்பில் இருக்கும் போது திறமையாகத் தான் செயற்பட்டார்கள்...மாத்தையாவை பற்றி எனக்கு சரியாகத் தெரியாது...ஆனால் கருணா புலிகளில் இருக்கும் வரைக்கும் புலிக்கு விசுவாசமாய்த் தான் இருந்தார்...அவர் திறமையானவர் அதனால் தான் தலைவர் அப் பொறுப்பை கருணாவிடம் கொடுத்தார்...

.........

2)மாத்தையாவிலும் பார்க்க கருணாவில் தலைவர் அதித நம்பிக்கை வைத்து உள்ளார்...நான் நினைக்கிறேன் மாத்தையாவுக்கும்,கருணாவுக்கும் வித்தியாசம் உள்ளது என...மாத்தையா புலிகள் கூட இருந்தே குழி பறித்தார் ஆனால் கருணா அப்படி இல்லை ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிய ஆசைப்பட்டார்...தான் பிரியப் போகிறேன் எனச் சொல்லி பிரிந்து விட்டார்...அவர்களோடு கூட இருந்து கொண்டே குழி பறிக்கவில்லை.

மாத்தையாவும் திறமையானவர். மாத்தையா அளவுக்கதிமான சந்தேகத்தால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்படத்தக்களவு போராளிகளும் அந்த நேரம் அழிக்கப்பட்டிருக்க கூடும்.

கருணா தனக்கு மாத்தையாவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படக்கூடாது என்று கருதி, தனது எதிரியின் பலம் கருதி, கோத்தபாயவுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தான் கருணாவின் உயிரும் எதிர்காலமும் தங்கியிருந்திருக்க வேண்டும். இன்று அந்த ஒப்பந்தத்தின் விலை இத்தனை ஆயிரம் மக்களின் உயிர். ஆக, கருணாவை எதிரியிடம் சரணடைய வைத்த நிருவாக பலவீனம் என்ன விலை கொடுக்க வைத்திருக்கிறது பாருங்கள்?

மறுவளமாக பார்த்தால், தனக்கு 100 வீதம் விசுவாசம் இல்லாதவர்களை ஏன் சிறப்பு பயிற்சி கொடுத்து உயர் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்? அல்லது தன்னால் 100 வீதம் நம்பமுடியாதவர்களை ஏன் இவ்வாறான உயர்பொறுப்புகளுக்கு கொண்டுவர வேண்டும்? அல்லது இவர்களை எவ்வளவு தூரம் நம்பலாம் என்று கணிக்க தெரியவில்லையா?

3)திட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள்...எப்படியாவது வன்னியில் இருக்கும் மக்களை காப்பாற்ற தான் கடைசி வரை முயற்சி செய்தார்கள்...ஆனால் யாரோ நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள்.

4)1)யாழை இழந்தது சந்திரிக்கா காலத்தில் திரும்பி கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைத்தும் இந்தியாவின் சொல் கேட்டு நம்பி ஏமாந்தது புலிகளின் பிழை தான்...கிழக்கை புலிகள் கைப்பற்றினாலும் நீண்ட நாள் புலிகளால் வைத்திருக்க முடியாது...வன்னிப் போர் முனை வித்தியாசமானது எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத் புலிகள் கடைசி வரை போராடினார்கள்...யார் கண்டது அரசு நச்சு வாயு அடிச்சும்,தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தும் மக்களை கொல்லுமெனவும் அதற்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்கும் எனவும் புலிகள் யோசித்திருக்க மாட்டார்கள்.

திட்டம் A பிழைத்தால் திட்டம் B என்று தான் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இவ்வாறாக திட்டங்கள் இருந்திருந்தால் ஏதோ ஒரு வழி பிறந்திருக்கும். எதிரியை குறைவாக கணிப்பிடுவது எவ்வளவு தூரம் வீவேகமானது? நச்சுவாயு பயன்படுத்துவார்கள் என்பது எவரும் எதிர்பார்க்க கூடியது, விடுதலைப்புலிகள் அதை எதிர்பார்த்திருக்காவிட்டால், அவர்களது உளவுபிரிவு, திட்டமிடல் ஆகியன கேள்விக்குரியதாகின்றன. எவரையோ நம்பி ஏமாந்திருந்தால், அது இவற்றிலும் மோசமானது. தம்மை தாமே நம்பும் அளவுக்கு பலமற்ற நிலையில் மக்களை ஏன் இந்த தண்ணியில்லாத நிலத்துக்கு கொண்டு சென்றார்கள்? எது எப்படியோ, அவர்களால் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்பது உண்மை. இனிமேல் மக்களிடம் விடுதலைப்புலிகள் எதை சொன்னாலும் அவர்களை மக்கள் நம்பி போகும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு.

விடுதலைப்புலிகளின் குறிப்பித்தக்க பலவீனங்களில் சில:

தமிழ் மக்களின் அரசியல்வாதிகள், ஏனைய போராளிகள் அமைப்புகளின் நம்பிக்கையை வென்றெடுக்கும் ஆற்றல் இல்லாத நிலை.

ஏனையை போராட்ட குழுக்களின் நம்பிக்கையை வெண்று எடுக்காத நிலை எண்று சொல்கிறீர்களே அப்படி எண்றால் கூட்டமைப்பு யார்...??

உலகிலை இருக்கும் நாடுகளில் போட்டி அமைப்புக்கள் தோண்றுவதுக்கான காரணம் தான் என்ன...?? இலங்கையிலேயே தமிழரை அழிக்கும் கொள்கை உடைய சிங்கள கட்ச்சிகள் எல்லாம் ஒண்றுக்கு ஒண்று நம்பிக்கையை வெண்று எடுத்தா செயற்படுகின்றன....?? அதிலை சிங்களவர்கள் தங்களை பார்த்து தாங்களே காறி துப்பிக்கொள்ளும் ஈனத்தனம் அற்றவர்கள் என்பதினால் அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் அவ்வளவாக வெளிச்வருவதில்லை... பிரச்சினை என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது... எல்லா ஜனநாயக நாட்டின் பாராளு மண்றத்துனுள்ளும் அது தெரிகிறது...

தனது அமைப்புக்குள்ளேயே, உயர்வான தலைமைப்பொறுப்புகளில் நீண்டகாலம் இருந்த மாத்தையா, கருணா போன்றவர்களின் தெரிவுகளை சரியாக செய்ய முடியாமை.

கருணா என்பவர் தெரிவு எண்ற ஒண்டை வைத்து அதை தலைவர் கேட்க்காமல் விட்டதினால் தான் கருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகி போனான் எண்று நீங்கள் நினைத்து கொண்டு இருப்பவராக இருந்தால் இதை பற்றி உங்களுக்கு புரிய வைக்க எனக்கு ஒண்றும் இல்லை...

மாத்தையா கூட அரசியல் ரீதியில் புலிகளின் துணைத்தலைவராகவும் அரசியல் அமைப்பின் தலைவராகவும் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்... தனது அந்த பதவியை தக்க வைக்கவும் கிட்டண்ணாவுடனான முரண்பாட்டில் நடந்தவைகளையும் புலிகள் அமைப்பு தொடர்ந்து அனுமதிக்க முடியும் எண்று எந்த புலி உறுப்பினரையும் ஊக்கிவிக்க புலிகள் அமைப்பின் கட்டுப்பாடுகள் இடம் கொடுக்க வில்லை...

தம்மை நம்பி வன்னிக்கு வந்து வாழ்ந்த பெற்றவர்களையும், உற்றவர்களையும் கூட காப்பாற்றும் ஆற்றலும் திட்டமும் இல்லாமை.

தனியாக எந்த நாட்டின் ஆதரவும் இல்லாது போராடும் அமைப்பு எண்ற வகையில் புலிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்...

தமது பலவீனங்களில் இருந்து பாடம் கற்று, தம்மை தாமே மேம்படுத்தி கொள்ளும் பக்குவம் போதாமை. உதாரணமாக,

யாழ்ப்பாணத்தையும், கிழக்கையும் இழந்த அனுபவத்தில் இருந்தும், ஏனைய நாடுகளின் அனுபவத்தில் இருந்தும் வன்னியை பாதுகாக்கும் சிறப்பான திட்டத்தை வகுத்து கொள்ளாமை,

நீங்கள் இதுக்கும் முன் போராடிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா...?? வன்னி மீது எந்தினை டண் வெடி பொருட்கள் அண்ணளவாக கொட்டப்பட்டு இருக்கும் எண்று உங்களுக்கு தெரியுமா...?? அதனை எல்லாம் இரணிலின் ஏற்பாட்டில் இலங்கைக்கு 24 நாடுகளுடன் இந்தியாவின் உதவியும் இருந்ததாவது...??

வானில் இருந்து கொண்டும் வெடி பொருளுக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்கிறீர்கள்.... அப்படி வெடி பொருட்கள் கொட்டாது இருக்க புலம்பெயர்தவர்களின் செயற்பாடுகள் எப்படி இருந்தன...???

மாத்தையாவின் அனுபவத்தில் இருந்து கருணாவின் விவகாரத்தை பக்குவமாக கையாள கற்றுக்கொள்ளாமை.

கருணாவின் விடயத்திலும் மாத்தையாவின் விடயத்திலும் நடந்தவை நேர் எதிராக சம்பவங்கள்... மாத்தையா வேறு ஒரு நாட்டின் ஏற்பாட்டின் செயற்பட்டான்... கருணா பிரிந்து போனதின் பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து கொண்டான்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.