Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம்

Featured Replies

பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம்

இலண்டன் நிருபர்

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010

Liam fox

பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோருக்கு இடையே சமரசம் பேசி பொன்சேகாவை ஒருவாறு மீட்பதே ஆகும் என கூறப்படுகின்றது. லியன் பொக்ஸ் அவர்களை இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் படியும், அபிவிருத்திக்கு உதவும் படியும் கேட்பதற்காக மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லியன்பொக்ஸ் தான் வருவதென்றால் சரத் பொன்சேகா விடயத்தில் தளர்வு போக்கினை காட்டவேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வருகின்ற சனி கிழமை லியன் பொக்ஸ் இலங்கை செல்கின்றார் என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

-

இந்தச் செய்தி உண்மையா ?
:lol:

வலை உலகத்தில் எங்களைத் தவிர வேறு யாரவது இது பற்றிப் பேசுகிறார்களா?
:lol:

அந்த நாட்டு அரசாங்கம் இது பற்றி என்ன சொல்கிறது? ...
:D

:D

நீங்களே தேடிப் பாருங்கள்
:lol:

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த லியன் பொக்ஸ்..?

புதிய ஜேம்ஸ் பொன்ட்???? :D

  • தொடங்கியவர்

யார் இந்த லியன் பொக்ஸ்..?

புதிய ஜேம்ஸ் பொன்ட்???? :D

z_new350.jpg

பிரித்தானியாவின் எதிர்க்கட்ச்சியின் பாதுக்காப்பு விவகாரங்கள் பற்றிய நிழல் அமைச்சர்...

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம்

நல்ல செய்தியப்பா......,

பொன்சேகா, உயிரோடை இருந்தால் தான் தமிழருக்கு விடிவு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த நரியர்(பாக்ஸ் எண்டா நரிதானே?) என்ன டீலோட போறாரோ தெரியேல்ல. வெஸ்மினிஸ்ரர் முன்னால செய்த டீலே என்னவெண்டு தெரியாது! உவர் செய்யிற டீலோ தெரிய வரப்போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

------(பாக்ஸ் எண்டா நரிதானே?) -----

பாக்ஸ் எண்டால் நாய்.டோக்ஸ் என்றால் தான் நரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா.ஹா..............சிறியண்ணா

  • தொடங்கியவர்

உந்த நரியர்(பாக்ஸ் எண்டா நரிதானே?) என்ன டீலோட போறாரோ தெரியேல்ல. வெஸ்மினிஸ்ரர் முன்னால செய்த டீலே என்னவெண்டு தெரியாது! உவர் செய்யிற டீலோ தெரிய வரப்போகுது?

நேற்ற முன் தினம்(வியாளன்) இலண்டன் LBC 97.3 வானொலியில் பாராளுமண்ற உறுப்பினர்களின் அதிகப்படியான செலவீனங்கள் பற்றி விவாதத்தின் போது ஒரு இங்கிலாந்து பிரஜை ( அனேகமாக வெள்ளை போல இருந்தது.. ஆங்கில உச்சரிப்பு அப்படி) சொன்னார் பாராளுமண்றதுக்குக்கு முன்னால் நாங்கள் போராட வேண்டும் எண்று அதுக்கு அறிவிப்பாளர் சொன்ன பதில் ஆச்சரியமானது...

அவர் சொன்னது நாங்கள் அங்கே போராட முடியாது... கூட்டம் போடுவதும் பாராளுமண்றத்தை சுற்றி ஒரு மைல் தூரத்துக்கு கூடுவதும் பிரித்தானிய பயங்கரவாத சிறப்பு சட்டம் மூலம் தடை செய்ய பட்டு இருக்கிறது... தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் நியாயத்தன்மை காரணமாக காவத்துறையும் பாராளுமண்றமும் மிகவும் இளக்கத்தோடு நடந்து கொண்டது எண்றார்... இதை மறுமுனயில் பேசியவரும் ஏற்றுக்கொண்டார்...

ஆனால் அந்த போராட்டம் சட்ட விரோதமானது எண்றும் பலவகையான எதிர்ப்பை போராட்டம் நடந்த போது பாராளுமண்றத்துக்குள் ஒலிக்க செய்தவர் உந்த LIAM FOX எனும் பழமை வாத கட்ச்சியின் பாராளு மண்ற உறுப்பினர்...

அதே போல பிரித்தானிய மக்களிடன் தமிழர்களின் நியாயத்தன்மை எனும் பக்கமும் இருக்கிறது எனும் ஒரு கோணத்தை காட்டியதும் அந்தப்போராட்டம் தான்... அது வரைக்கும் தமிழர்களும் சிங்களவரும் பாதிக்கப்படுவது புலிகளால் மட்டுமே எனும் கோணம் மட்டுமே அந்த மக்களிடன் இருந்தது...

-

No foreign country should interfere with SL legal process – Liam Fox

[February 18, 2010] - www.priu.gov.lk

The British Shadow Defence Secretary and the Conservative Party parliamentarian, Dr. Liam Fox said that no foreign country or foreign body should interfere in the legal process of another country and influence the enforcement of the law.
:)

-

  • கருத்துக்கள உறவுகள்

-

No foreign country should interfere with SL legal process – Liam Fox

[February 18, 2010] - www.priu.gov.lk

The British Shadow Defence Secretary and the Conservative Party parliamentarian, Dr. Liam Fox said that no foreign country or foreign body should interfere in the legal process of another country and influence the enforcement of the law.
:wub:

-

இதை இந்தியா போன்ற மொள்ளமாரிகளுக்குச் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமோ? :)

இதை இந்தியா போன்ற மொள்ளமாரிகளுக்குச் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமோ? :)

நடப்பதை பார்கும் போது, உது எல்லம் மஹிந்தாவின்ட பெரிய நாடகம் போலத்தான் இருக்கு ...

எது எப்படியோ, தமிழரையும் அவர்களின் பிரச்சனைகளையும் மெல்ல மெல்லமாக எல்லோரும் மறக்கப் போகினம் ... அதுதான் அவற்ற இலக்கு ...? :wub:

-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.