Jump to content

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் நிர்வாகத்தோடு கூட குத்துமுறிப்பட்டு டன் அவர்களால் உருவாக்கப்பட்டு இணையவன் அவர்களால் இலட்சனை ஊட்டப்பட்டு பல உறுப்பினர்களின் பங்களிப்போடு சாந்தி சாத்திரி போன்றவர்களின் அயராத உழைப்பால் போராடி இணைக்கப்பட்ட நேசக்கரங்கள் தொடர்ந்து உதவி கோரி நீட்டும் கரங்களைப் பற்றி நிற்க வாழ்த்துகின்றேன்.

காலதாமதங்கள் ஆனாலும் நேசக்கரத்திற்கான எமது பங்களிப்புக்கள் வந்து சேரும். காலதாமதங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அதற்காக இச்செயற்திட்டங்களை செயற்படுத்துபவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம். தொய்வின்றி தொடரட்டும் தன்னிலமின்றி மக்கள் நலம் தேடும் உங்கள் சேவை..!

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் உதவிக் கூப்பன்களை தயாரித்து நம்பிக்கையான யாழ் கள உறுப்பினர்கள் மூலம் அவர்கள் வாழும் சமூகத்தில் இருந்து சிறுதொகை உதவிகளை பெற ஏன் முனையக் கூடாது.

கூப்பன்களில் நேசக்கரத்தின் நோக்கம் செயற்திட்டங்கள் அதற்கான சட்ட அங்கீகாரம் போன்றவற்றை விளங்கி 20 கட்டங்களில் தலா £5 அல்லது $5 அல்லது 5 யூரோக்கள் மூலம் 20 பேரிடம் இருந்து மாதாந்தம் சேகரிக்க முற்பட்டால் இலகுவாக சுமைகள் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் நிதியை சேகரிக்க முடியும் அல்லவா. இத்திட்டம் வெற்றி அளிப்பின் மேலும் சில சலுகைகளோடு திட்டத்தை விரிவாக்கலாம்.

நேசக்கரம் இப்படியான செயற்திட்டங்கள் குறித்தும் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட சேவை நிறுவனமாக தனது யுக்திகளை வகுத்து செயற்பட ஆரம்பிக்க வேண்டும். இன்றேல் நேசக்கரத்தின் பணியை கொண்டு செல்வதில் சீரான நிலையைப் பேணுவது கடினமாகவே இருக்கும். நேசக்கரம் இப்போ அடிப்படை கட்டமைப்புக்களை மட்டுமே கொண்டியங்கிறது. அதற்கேற்ப யுக்திகள் வகுப்பட்டு வழங்கப்படும் சேவையை விரிவாக்க வேண்டும். நேசக்கரத்தின் மீது கொண்டுள்ள மதிப்பின் பெயரில் இதனை முன்வைக்கின்றோம். மற்றும்படி நேசக்கரத்தின் செயற்பாடுகளில் இடையூறு அல்லது தலையீடு அல்லது செல்வாக்குச் செய்வதல்ல நோக்கம். :lol:

Link to comment
Share on other sites

நானும் ஆர்வத்துடன் இணைந்து கொள்கிறேன்.

வாருங்கள் சஜீவன் வரவேற்கிறோம்.

நேசக்கரத்தோடு இணையுங்கள். நேசக்கரம் இணையத்தில் நேசக்கரம் அங்கத்தவர் படிவம் மற்றும் உறவுகளுக்கு நீங்கள் உதவவிரும்புவோருக்கான படிவங்கள் இணத்துள்ளோம். அதில் சென்று பார்த்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் நிர்வாகத்தோடு கூட குத்துமுறிப்பட்டு டன் அவர்களால் உருவாக்கப்பட்டு இணையவன் அவர்களால் இலட்சனை ஊட்டப்பட்டு பல உறுப்பினர்களின் பங்களிப்போடு சாந்தி சாத்திரி போன்றவர்களின் அயராத உழைப்பால் போராடி இணைக்கப்பட்ட நேசக்கரங்கள் தொடர்ந்து உதவி கோரி நீட்டும் கரங்களைப் பற்றி நிற்க வாழ்த்துகின்றேன்.

காலதாமதங்கள் ஆனாலும் நேசக்கரத்திற்கான எமது பங்களிப்புக்கள் வந்து சேரும். காலதாமதங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அதற்காக இச்செயற்திட்டங்களை செயற்படுத்துபவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம். தொய்வின்றி தொடரட்டும் தன்னிலமின்றி மக்கள் நலம் தேடும் உங்கள் சேவை..!

நெடுக்ஸ் உங்களையும் வரவேற்றுக் கொள்கிறோம். வாருங்கள் பழையபடி நேசக்கரம் ஊடாக உறவுகளுக்கு உதவுவோம்.

நேசக்கரத்திற்கான அங்கத்தவர்களையும் எல்லா நாடுகளிலிருந்தும் வரவேற்றுக்கொள்கிறோம். உங்களையும் நேசக்கரம் அங்கத்தவராக இணையுமாறு வேண்டுகிறோம். நேசக்கரம் அங்கத்தவர் விண்ணப்பம் மற்றும் உறவுகளுக்கு உதவ விரும்புவோருக்கான விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை நேசக்கரம் இணையத்தில் இணைத்துள்ளோம். உங்கள் நண்பர்களையும் இத்திட்டத்தில் இணைத்து உதவுங்கள்.

அங்கத்தவராக இணைவோர் வருட சந்தாவாக 12€ செலுத்தி அங்கத்வராகலாம். அங்கத்தவராகும் வழிமுறைகள் விண்ணப்பங்கள் இணையத்தில் இணைத்துள்ளோம்.

அந்தந்த நாடுகளிலிருந்து செயற்பட விரும்புவோரையும் வரவேற்கிறோம்.

பழைய உறுப்பினர்களில் உங்களைப்போன்ற சிலர்தான் தற்போது உதவ முன்வந்துள்ளீர்கள். மற்றும்படி பெரிதாக யாரும் தொடர்பு கொள்கிறார்களில்லை. அவர்களும் இணைந்தால் மகிழ்ச்சி. தினமும் உதவிகோருவோர் தொகை கூடிக்கொண்டு வருகிறது. ஆனால் உதவுவதற்கான வசதி பெருமளவில் இல்லாதுள்ளது.

சிறுவர்கள் மாணவர்கள் குடும்பங்கள் அங்கவீனமடைந்தோர் மனநலம் பாதிப்படைந்தோர் முதியோர் என தேவைகள் வேண்டிய விபரங்கள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் யாவரும் கைகொடுத்தால் இதனை நீங்கள் கூறியபடி நாங்கள் திட்டங்களை வகுத்து செயற்படலாம்.

மற்றும் கூப்பன் தயாரிப்புப் பணியை நீங்கள் செய்து தருவீர்களானால் உதவியாக இருக்கும். தனித்து என்னால் முழுவதையும் செய்ய முடியவில்லை.

அந்தந்த நாடுகளில் நேசக்கரம் அறிமுகம் ஒன்றினை செய்வதற்கும் உதவிகளை வேண்டி நிற்கிறோம். இயன்றவரை ஆர்வமுள்ளவாஇகளை இணைக்க முயற்சிக்கிறோம். நீங்களும் தங்களுக்கு நேரம் கிடைக்கின்ற சமயங்களில் எங்களுடன் இணைந்து செயற்பட வாருங்கள்.

டண் மறக்க முடியாத ஒருவர். ஓயாது உழைத்த நண்பர். ஆனால் தனிப்பட்ட சில துயரங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் எங்களுடன் இணைய வேண்டுமென விரும்புகிறோம். நிச்சயம் டண் பழைய நிலமைக்குத் திரும்பி செயற்படுவார் என நம்புகிறோம்.

இதுபோல கனடிய அமெரிக்க உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்.

ஆலோசனைகள் கருத்துக்கள் நேசக்கரம் செயற்பாடு திட்டங்கள் பற்றிய உங்கள் எண்ணங்கள் யாவையும் தெரியப்படுத்துங்கள்.

நெடுக்ஸ்,

உங்கள் கருத்துக்கு எங்கள் நன்றிகள். கூப்பன் தயாரிப்பு உங்கள் கையில் தருகிறோம் செய்து தாருங்கள்.

சட்ட ரீதியான பதிவுகள் தொடர்பு பகுதியில் இணைத்துள்ளோம். பாருங்கள்.

நேசக்கரத்தின் மீது கொண்டுள்ள மதிப்பின் பெயரில் இதனை முன்வைக்கின்றோம். மற்றும்படி நேசக்கரத்தின் செயற்பாடுகளில் இடையூறு அல்லது தலையீடு அல்லது செல்வாக்குச் செய்வதல்ல நோக்கம். :lol:

அப்படி நாங்கள் நினைக்கவில்லை. உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

சஜீவன் மற்றும் நெடுக்கு ஆகியோர் நேசக்கரத்தில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி உங்கள் உதவிகள் உறவுகளிற்கு தொடரவேண்டும். அதே நேரம் நானும் நெடுக்குவுடன் ஒரு சந்தர்ப்பத்தில் கருத்து மேதல்களில் ஈடுபட்டிருந்தேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இனிவருங்காலங்களில் அப்படியான கருத்து மோதல்கள் வருவதை தவிர்ப்பதற்காகவே நான் நேசக்கரம் தவிர்ந்து அரசியலோ வேறு விடயங்களோ எதுவும் எழுதுவதில்லையென முடிவெடுத்துள்ளேன். மற்றும் பழைய நேசக்கர உறவுகளிற்கு முக்கிய விடயம் என்ன வெனில் முன்னர் யாழ்களத்தில் மட்டுமே இயக்கிவந்த நேசக்கரம் அமைப்பின் சின்னத்தில் தற்சமயம் மாற்றம் கொண்டுவந்துள்ளோம். பழைய நேசக்கரம் சின்னம் யாழ்கள சின்னமும் தமிழீழ படமும் கைகோர்ப்பது போல் யாழ்கள இணையவனால் வடிவமைக்கப்பட்டிருந்தது..அதனை மாற்றுவதற்கான காரணம் நேசக்கரம் அமைப்பு ஜேர்மனியில் சட்டரீதியாக பதியப்பட்டு அதில் ஜெர்மனிய நாட்டவர்களும் உள்வாங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.;எனவேதான் பொதுவானதொரு சின்னத்தை தெரிவுசெய்யவேண்டியிருந்தது. அதே நேரம் நேசக்கரத்தின் செயற்பாடுகளும் இனி வெளிப்படையாகவே இயங்கவேண்டும். உதவ விரும்பும் உறவுகள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிட விரும்பாதவர்கள் எங்களுடன் மின்னஞ்சல் மூலம் தொர்புகளை ஏற்படுத்தலாம்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

உங்கள் கருத்துக்கு எங்கள் நன்றிகள். கூப்பன் தயாரிப்பு உங்கள் கையில் தருகிறோம் செய்து தாருங்கள்.

இப்பணியை செய்து தர பலர் முன் வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு இதனை உங்களுக்கு செய்து தரலாம்.

கூப்பனில் அடங்க வேண்டிய விடயங்கள் மற்றும் பணப் பெறுமதி ஆகியவற்றை தந்துதவினால் நன்று.( எனது தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள். இதை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு இருப்பின்.)

மேலும் கூப்பனை மலிவான வகையில் தயாரிப்பதே பணச் செலவை கட்டுப்படுத்த உதவும். எனவே அதற்கேற்ப வடிவமைத்து தருகின்றோம். விரும்பும் உறுப்பினர்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பி வைத்தால் அவர்கள் குறித்த ஒரு மாத கால எல்லைக்குள் சேகரித்த பணத்துடன் பூர்த்தியான கூப்பனையும் திருப்பி அனுப்பின் உங்களுக்கு சிரமமாக இருக்காது என்று நினைக்கிறேன். எதற்கும் இத்திட்டத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்க முன் நீங்கள் நிர்வாகிகள் கூடிக் கலந்தாலோசித்து எழக்கூடிய சாதக பாதக நிலைகளை அறிந்து எமக்கு தேவையான ஒத்துழைப்புகளை அதன் பின்னர் அளிக்கலாம்.

உடனடியாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவைகள் உடனடியாக இருப்பதால்.. சீக்கிரம் செய்வது நேசக்கரத்தின் பணி தொய்வின்றி தொடர உதவும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நேசக்கரம் இணையத்தளத்தினை ஆங்கிலத்திலும் செய்வதற்கு உதவிகள் தேவை யாராவது முன்வந்தால் நேசக்கரத்திற்கு உதவியாக இருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

நேசக்கரங்கள் உதவி கோரி நீட்டும் கரங்களைப் பற்றிக்கொள்வதுடன் அவர்கள் சேவைக்கு வாழ்த்துகின்றேன்.

நேசக்கரத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தை அனுப்பியதுடன்..

தேவையான உதவிகள் தொடர்பாக சாந்தியுடன் தொடர்புகொண்டுள்ளேன்

என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த நாடுகளில் நேசக்கரம் அறிமுகம் ஒன்றினை செய்வதற்கும் உதவிகளை வேண்டி நிற்கிறோம். இயன்றவரை ஆர்வமுள்ளவாஇகளை இணைக்க முயற்சிக்கிறோம். நீங்களும் தங்களுக்கு நேரம் கிடைக்கின்ற சமயங்களில் எங்களுடன் இணைந்து செயற்பட வாருங்கள்

நான் முதல் கட்டமாக நன்பர்கள் மட்டத்திலும் பின் எனது மானிலத்திலும் நேசக்கரத்தை அறிமுகப்படுத்துகிறேன்.சாத்திரிக்கு தனி மடல் போட்டிருக்கிறேன்.

நேசக்கரங்கள் உதவி கோரி நீட்டும் கரங்களைப் பற்றிக்கொள்வதுடன் அவர்கள் சேவைக்கு வாழ்த்துகின்றேன்.

நேசக்கரத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தை அனுப்பியதுடன்..

தேவையான உதவிகள் தொடர்பாக சாந்தியுடன் தொடர்புகொண்டுள்ளேன்

என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.

மகிழ்ச்சி.நீங்களும் நன்பர்களுக்கு நேசக்கரைத்தை அறிமுப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

நேசக்கரங்கள் உதவி கோரி நீட்டும் கரங்களைப் பற்றிக்கொள்வதுடன் அவர்கள் சேவைக்கு வாழ்த்துகின்றேன்.

நேசக்கரத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தை அனுப்பியதுடன்..

தேவையான உதவிகள் தொடர்பாக சாந்தியுடன் தொடர்புகொண்டுள்ளேன்

என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்சியடைகிறேன்.

வணக்கம் அம்பலத்தார்,

நகைச்சுவைகளால் அறிமுகமான அம்பலத்தாரை நேசக்கரம் இருகரம் நீட்டி வரவேற்கிறது. தங்கள்போல பழைய நண்பர்கள் அனைவரும் இணைய வேண்டும் புதியவர்களையும் இணைக்க வேண்டுமென விரும்புகிறோம்.

நீங்கள் அனுப்பி வைத்த அங்கத்துவக் கட்டணம் கிடைத்தது நன்றிகள்.

தொடர்பு கொள்ளுங்கள் பேசுவோம். உங்கள் பகுதியில் இருந்து நேசக்கரம் அங்கத்தவர்களை மற்றும் பங்காளர்களை இணைத்துத் தருவீர்களாயின் பேருதவியாக இருக்கும்.

நான் முதல் கட்டமாக நன்பர்கள் மட்டத்திலும் பின் எனது மானிலத்திலும் நேசக்கரத்தை அறிமுகப்படுத்துகிறேன்.சாத்திரிக்கு தனி மடல் போட்டிருக்கிறேன்.

சஜீவன்,

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள். முதற்கட்டமாக உங்கள் நண்பர்கள் மட்டத்திலும் பின்னர் உங்கள் மானிலத்திலும் அறிமுகப்படுத்துவது நல்ல விடயம். வேறும் சில உறவுகள் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்களையும் உங்களுடன் இணைத்துவிடலாம் ஒரே நாட்டில் உள்ளவர்கள் இணைந்து செயற்படுவதற்கும் உதவியாக இருக்கும்.

சாத்திரி உங்கள் தனிமடலில் குறித்த விடயங்கள் பற்றி சொன்னார். உங்கள் போல் அனைத்து நண்பர்களும் இணையுங்கள்.

புதிதாக 50 சிறுவர்கள் வரையில் விபரங்கள் கிடைத்துள்ளது. அவர்களுக்கான உதவிகளுக்கான வேண்டுதல்கள் மற்றும் குடும்பங்களின் விபரங்களும் வந்துள்ளன. தேவைகள் நாளுக்கு நாள் நமது மக்களுக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால் நிச்சயம் அவர்கள் நிமிர்வார்கள்.

நேசக்கரம் ஊடாய் கரம் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

யானைப்பசிக்கு சோளப்பொறிமாதிரியாவது உதவி செய்கிறீங்கள். வாழ்த்துகள், பாராட்டுக்கள் எண்டு தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்க முடிய இல்லை. வசதி வரும்போது என்னால் முடியுமான சிறு உதவிகளை செய்துகொள்கிறன். சாந்தி அக்கா, சாத்திரி அண்ணை அமைதியாக நிரம்ப விசயங்களை செய்துகொண்டு இருக்கிறீங்கள். அங்க அடிபட்ட மக்களிண்ட வலிகள், வேதனைகள் மறையவேணும். அவர்கள் துன்பங்கள் தற்காலிகமாகவேணும் குறையவேணும்.

Link to comment
Share on other sites

யானைப்பசிக்கு எலிப்பொறிமாதிரியாவது உதவி செய்கிறீங்கள். வாழ்த்துகள்இ பாராட்டுக்கள் எண்டு தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்க முடிய இல்லை. வசதி வரும்போது என்னால் முடியுமான சிறு உதவிகளை செய்துகொள்கிறன். சாந்தி அக்காஇ சாத்திரி அண்ணை அமைதியாக நிரம்ப விசயங்களை செய்துகொண்டு இருக்கிறீங்கள். அங்க அடிபட்ட மக்களிண்ட வலிகள்இ வேதனைகள் மறையவேணும். அவர்கள் துன்பங்கள் தற்காலிகமாகவேணும் குறையவேணும்.

மச்சான் யானைப்பசிக்கு சோளப்பொரி.என்பது பழமொழி..நீங்கள் நகைச்சுவையாக எழுதினீங்களோ தெரியாது..ஆனால் ஏதோ எங்களால் முடிந்த சோளப்பொரி சேகரித்து கொடுக்கிறோம்..முடிந்தால் நீங்கள் நேசக்கரத்திற்கான உறுப்பினர்களை இணைக்க முயற்சித்தால் உறவுகளிற்கான தேவைகள் விரிவடையும் நன்றி

Link to comment
Share on other sites

வரவர தமிழ் அறிவு மட்டமாய் போகிது. சோளப்பொறி எண்டுறதை எலிப்பொறி எண்டு எழுதிப்போட்டன். மன்னிக்கவும் சாத்திரி அண்ணை.

Link to comment
Share on other sites

வவுனியா முகாமிலிருந்து கல்விக்காக காமினி மகாவித்தியாலத்திற்குச் சென்ற சிறுமிகள் இருவர் பாடசாலை முன்றலில் அவசர வாகனச் சாரதியொருவரால் விபத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். இந்தச் சிறுமிகளில் ஒருத்தி அரவிந்தகுமார் கஸ்மிகா எட்டுவயது விபத்து நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளாள். இந்தச் சிறுமியை சைக்கிளில் ஏற்றிச்சென்ற கஸ்மிகாவின் மைத்துனியான 16வயதுடைய யெயானந்தம் லக்சுமிதா உயிருக்குப் போராடிக் கொண்டு குருநாகல வைத்தியசாலையில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அகதி மாணவர்களை வவுனியா கல்வித்திணைக்கள அதிகாரியாலேயே அயல் பாடசாலைகளில் அனுமதி மறுக்கப்பட்டு தூரத்திலமைந்த காமினி மகாவித்தியாலயத்துக்குத் துரத்தப்பட்ட சிறுமிகள். தங்கள் மகள்களின் எதிர்காலக் கனவில் வாழ்ந்த அம்மாக்கள் இருவரின் அவலக்குரல்கள் இது…..மனசெங்கும் வலிக்கிறது….அவர்களின் கண்ணீர்க் குரலைக் கேளுங்கள்….உங்கள் நேசக்கரத்தை நீட்டுங்கள்.

laksumitha.jpg

குழந்தையை இழந்து தவிக்கும் தாயின் குரலை இங்கு அழுத்துவதன் மூலம் கேட்கலாம்

Link to comment
Share on other sites

நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை.

நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை.

1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் - 318 பேர்.

2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர்.

3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள்.

4)இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளின்றி தவித்தவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களிற்கான மருத்துவ உதவிகள் 19 பேர்.

மேற்படி அனைத்து உதவிகளும் நேசக்கரம் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தேசத்து மக்களிடமிருந்து தாயகத்து உறவுகளிற்காகக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டவையாகும்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாகத் தாயகத்து உறவுகளிற்கு உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்

- நேசக்கரம் நிருவாகம் -

Link to comment
Share on other sites

பெற்றவரை இழந்த நிதர்சனுக்கு ஒரு அம்மா கிடைத்துள்ளார்

அன்னை தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் புத்தொழியேற்றியுள்ளார் ஒரு தாய். நேசக்கரம் ஊடாக தன் துயரை வெளிப்படுத்திய 20வயது நிதர்சனின் குரலைக்கேட்டு நிதர்சனை அவனது தங்கை தம்பியை தன் பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டுள்ள தாய்க்கு நன்றி கூறுகிறான் நிதர்சன். "]அன்னை தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் புத்தொழியேற்றியுள்ளார் ஒரு தாய். நேசக்கரம் ஊடாக தன் துயரை வெளிப்படுத்திய 20வயது நிதர்சனின் குரலைக்கேட்டு நிதர்சனை அவனது தங்கை தம்பியை தன் பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டுள்ள தாய்க்கு நன்றி கூறுகிறான் நிதர்சன்.

Link to comment
Share on other sites

வன்னிப்போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் மூவாயிரம்

வரையிலான மாணவர்கள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் மீள் கற்கைக்கு

அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பிள்ளைகளில் அங்கவீனமடைந்த மற்றும்

பெற்றோரை சகோதரர்களை உறவுகளை இழந்த பிள்ளைகளே அதிகம் காணப்படுகிறார்கள்.

மேற்படி பாதிப்புக்கு உள்ளான மாணவர்களை நமது நேசக்கரம் இலங்கைக்கான

தொடர்பாளர் திருமதி. கமலாதேவி சதாசிவம் மற்றும் செயற்பாட்டாளர் அமுதா

ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதில் நேசக்கரம் செயற்பாட்டாளர்களின் தரவுகளின்

அடிப்படையில் மாணவர்களுக்கான உதவிகளாக உடனடித் தெவையாக கற்றலுக்கான உதவிகள்

முதன்மையானதாக உள்ளது.

gaminimv.png

Link to comment
Share on other sites

கால் நடக்க இயலாத பல்கலைக்கழக மாணவனுக்கு கால் கொடுங்கள்

jegan.JPG

audio.gifஅவலம் அகதி வாழ்வென அலைக்கழிந்த பொழுதொன்றில் எறிகணையில் காயடமைகிறான் ஜெகன். ஒற்றைக்கால் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. சரியான மருத்துவம் கவனிப்பின்றி கால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலியும் வேதனையும் அவனைத் தொடர்ந்தே வந்தது. 2009 மேமாதம் தமிழரின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத துயரைத் தந்தபோக அகதி முகாம்களுக்குள் அடைபட்ட லட்சக்கணக்கானவர்களில் ஜெகனும் ஜெகனின் குடும்பமும் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்குள் அடைந்துபோனது. இன்றும் இவனது குடும்பம் அகதி முகாமில்தான் வாழ்கிறது. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீளவும் கற்பதற்கு யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ள இந்த இளைஞனால் நடக்க முடியாது. வீல்செயாரில்தான் இவனது காலம் போகிறது. எறிகணையில் காயமுற்ற காலின் பாதிப்பு பாதிப்படைந்த கால் மறுபடி இயங்குவற்கான மருத்துவத்திற்குத் தேவைப்படும் 3லட்சத்து எண்பத்தையாயிரம் ரூபாவை எங்கிருந்தும் பெறமுடியாத நிலமையில் இவன் எதிர்காலமே துயர் நிரம்பிப்போயுள்ளது. பல்கலைக்கழகப் படிப்பை நம்பிய இவனது வாழ்வு இன்று அந்தக்கல்வியைக்கற்பதற்கே யாரிடமாவது கையேந்தும் நிலமையில் 3லட்சத்து எண்பத்தையாயிரம் ரூபாவை எங்கே பெற்றுக்கொள்வான் ? பல இடங்களில் தன் காலைச் சரிப்படுத்த மீண்டும் நடக்க ஆசையுடன் பண உதவி தேடித் தோற்றுப்போன இவன் நேசக்கரத்தை நாடியிருக்கிறான். நாங்கள் மட்டுமே இப்போதைய இவனது நம்பிக்கை….இதோ ஜெகனின் குரலில் கேளுங்கள்.

பங்களிக்க

பேபால் ஊடாக Paypal - nesakkaram@gmail.com

வங்கி ஊடாக - NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code - 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code - PBNKDEFF

Postbank Stuttgart

Germany

ஜெகனுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு உதவ விரும்பின் நேசக்கரம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.தொடர்பினை ஏற்படுத்தித்தர முடியும்.

http://nesakkaram.org

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.