Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் - கவிஞர் சேரன்

Featured Replies

தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் சர்வதேச நாடுகளுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினுடைய இராணுவ முனைப்புகள் நசுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் எங்களுடைய தமிழீழம் என்ற இலட்சியத்தையும் கருதுகோளையும் புதிய தளங்களிலும் புதிய அரசியல் நிலைப்பாடுகளிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனுடைய விளைவாகத் தான் நாடு கடந்த தமிழீழ அரசு முன்மொழியப்பட்டுள்ளது எனவும் சேரன் குறிப்பிட்டார்.

தாயகத்தில் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில குறிப்பாக 2006ம் ஆண்டு பேச்சுவார்த்தை முறிவடைந்த காலப்பகுதியில் இத்தகைய ஒரு எண்ணக்கரு ஏன் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன் அந்தக் காலகட்டத்தில் தாயகத்தில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு தாயகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் அந்த அரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியே நடந்து கொண்டிருந்தது என்றும் அந்த நேரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேவை இருக்கவில்லை என்றும் அதே போல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாயக அரசுடன் சார்ந்து தாம் வாழ்கின்ற நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தனர் என்றும் பதிலளித்தார்.

2002ம் ஆண்டிற்கும் 2006ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்தில் இயங்கிய அங்கீகரிக்கப்படாத தமிழீழ அரசிற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சர்வதேச றாஜதந்திர நகர்வுகள் மற்றும் அரசியல் முன்னெடுப்புகளில் தீவிரமான கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்ட சேரன் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்ததைப் போன்ற எழுச்சியும் போராட்டங்களும் 2006ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இருந்திருந்தால் அப்போதே தமிழீழத்தை அமைத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து சர்வதேத்திடம் ஒரு குற்ற உணர்வு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன், அப்படித் தான் எண்ணவில்லை என்றும் சர்வதேச நாடுகளுக்கு குற்ற உணர்வென்பது கிடையாது என்றும் அரசியலில் தமது நிரந்தரமான நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவை செயற்படுகின்றன என்பதுடன் இரட்டைத்தன்மையுடனும் இயங்குகின்றன எனப் பதிலளித்தார்.

நாம் எவ்வளவு பலமாகவும திறமையாகவும் நாடு கடந்த தமிழீழ அரசைக் கட்டி எழுப்பப் போகிறோம் என்பதைப் பொறுத்து சர்வதேச அரங்கில் எமது கருத்துக்களை நாங்கள் தெளிவாக முன்வைக்க முடியும் எனக் குறிப்பிட்ட சேரன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை தன்னுடைய முதலாவது மாநாட்டின் மூலம் உலக அரங்கில் ஒரு றாஜதந்திரத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாடு கடந்த தமிழீழ அரசு இரண்டு முகங்களைக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் அதன் ஒரு முகம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அரசியலைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் அடுத்த முகம் தாயகத்திலே உருவாகும் தமிழீழத்திற்கான தார்மீக ஆதரவையும் பிற ஆதரவுகளையும் வழங்குவதாகும் எனவும் சேரன் குறிப்பிட்டார்.

SOURCE: http://www.eelamweb.com

Edited by kaviya

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி சரி

நியாயம்தான்

ஆனால் இன்று அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லலாமே...

இப்போது எங்கள் முன் உள்ள கடமை நாங்கள் எங்கே தவறுவிட்டோம் என்பதை கண்டறிவது.கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்வது தான் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தவறுகளை தவிர்க்க உதவும்.நாங்கள் எல்லாம் சரியாகத் தான் செய்தோம் உலகம் தான் எங்களை வஞ்சித்துவிட்டது என்று சாக்குப் போக்கு செல்லி எங்களது கடந்தகாலத் தவறுகளை மூடி மறைக்க முயல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.இந்த உலகம் ஒரே நாளில் எங்களுக்கு எதிரான முடிவை எடுக்கவில்லை.அதே போல சிறீலங்கா அரசும் ஒரே நாளில் முள்ளிவாய்க்காலில் போய் நிற்கவில்லை. சிறீலங்கா அரசை தனிமைப் படுத்துவதற்கும் இந்த உலக ஒழுங்கில்நாங்கள் வெட்டி ஓடி எங்கள் இருப்பை தக்க வைப்பதற்கும் எங்களுக்கு கால அவகாசம் இருந்தது. அதற்கான முயற்சிகளில் பாலா அண்ணை உட்பட பலர் இறங்கியிருந்தார்கள். அதெல்லாம் தேவையற்ற வேலை என்று வன்னிக்கு அறிக்கை சமர்பித்த அறிக்கை மன்னர்கள் தான் இன்று 24 கரட் சுத்த தேசபக்தர்களாக உலா வருகிறார்கள்.பாலா அண்ணை இந்த உலக மேலாதிக்க சக்திகளின் கபட நோக்கத்தை பரிந்து கொண்டு உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி பேசத் தயார் என்று நேர்வோ பேச்சு வார்த்தையில் அறிவித்தபோது அவர் தமிழீழ கோரிக்கைக்கு கைவிடும் நிலைக்கு போய்விட்டார் என்று அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்தவர்கள் இந்த தேசபக்தர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மீண்டும் மூக்கை சுத்தி தொடும் மாதிரியாகத்தான் தங்களது விளக்கமும் இருக்கிறது

எனது கேள்விக்கு பதில் தராது

மீண்டும் மீண்டும் அவற்றை கிளறுவதால் எந்த நன்மையும் இல்லை

எனக்கு நடந்தவை தெரியாது என்று நினைப்பதும் சரியல்ல

ஆனால் இன்று எப்படி எங்கிருந்து தொடர்வது என்பதே தேடல்

இப்போது எங்கள் முன் உள்ள முதலாவது தெரிவு புலம் பெயர்ந்த தமிழர்களுடைய பலத்தை சிதறவிடாமல் ஒருங்கிணைப்பது.இதற்கு தடையாக இருக்கும் சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு நிலைமையை புரிய வைப்பது.அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவர்களை அம்பலப்படுத்துவது. தமிழ் தேசியத்தின் பேரைச் சொல்லி மக்களை பிளவு படுத்தி திசை திருப்பும் ஊடகங்களை திருந்த வைப்பது.திருந்த மறுத்தால் அம்பலப்படுத்தி ஒதுக்குவது.நாடுகடந்த தமிழீழம் என்பதன் தேவையை மக்களுக்கு உணர்த்துவது.மக்கள் பேரவையை நாடுகடந்த தமிழீழம் அமைப்பதற்கான முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வலியுறுத்துவது.........

சரி கடந்த காலத் தவறைக் கண்டறிவதற்கு யாழும் இடம் தருமோ தெரியாது. தவறு வன்னிவிட்டதாக சொல்வதும், இங்கிருந்து அறிக்கை எழுதித்தான் தலைவரை தவறாக வழிநடத்திவிட்டார்கள் என்பதும், உயிருடன் இல்லாத பாலா அண்ணையை உதவிக்கு அழைப்பதையும் நிறுத்துவது நல்லது. பசித்த வயிற்றுக்கு பழைய கணக்கு சோறு போடாது. புதுப்பிளைப்பிற்கு வழியைப்பாருங்கள்.

இல்லையேல் பழைய கணக்குப் பார்த்தால்தான், இப்போ இருக்கும் பசிக்கு தீனி போடலாம் என்றால் நாம் புலத்தில் வாழ்கின்றோம், புலத்தில் அரசு அமைத்து, புலத்து மக்களுக்கு வழிகாட்டவும், தாயகத்து விடுதலைக்கு துணை நிற்பதற்கும் செயற்படப்போகின்றோமென்றால் புலத்தில் அமைப்புச் செயற்பாட்டுக்காலம் 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, எனவே புலத்தில் நிகழ்ந்த கடந்த காலத் தவறை கண்டறிவது, புலத்தில் நிகழ்கால, எதிர்காலச் செயற்பாட்டுக்கு பெரும் துணையாக அமையும். 2002 இல் இருந்து 2009 வரை தான் தவறு விடப்பட்டுள்ளதாக தொடர்ந்து கருத்துக்களை விதைப்பது பிரிவினைகளைத்தூண்டும்.

தேசியதலைவர் மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு அப்படி ஒன்றும் ஆளுமை இல்லாதவர் அல்ல.அவருக்கு இழைக்கப்பட்டது நம்பிக்கைத் துரோகம்.அது தான் உண்மை. புலத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது.எல்லாம் சரியான திசை நோக்கி வீறு நடை போடுகிறது.மேற்குலகத்தின் தடையெல்லாம் எங்களை ஒண்டும் செய்யாது.உந்தத் தடையை எல்லாம் சுழிச்சு ஓடி நாங்கள் வெல்லுவம் என்று அண்ணையை நம்ப வைத்தார்கள். ஒருவர் இருவர் அல்ல.....பலர்...

சேரனுக்கு புலிக்காத்து ஒத்துவராததல் தேச விடுதலைக்காக சேர்ந்து இயங்காது, புலிகளைப் புறணிபாடி பல பத்து வருடங்களைக் கழித்தார்.

புலிகளின் அழிவுக்காக காத்திருந்து புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசின் பிதா மகன்களில் ஒருவராக செயற்படுகின்றார் நான் இவரை வரவேற்கப்போவதில்லை.

சேரன், நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், புலிகளின் உயிர், உதிரம், உறுப்புகளின் விதைப்பில் விளைந்த அரசியல் அடித்தளத்தில்தான் நீங்கள் நிக்கின்றீரகள்.

தேசியதலைவர் மற்றவர்களால் தவறாக வழிநடத்தப்படுவதற்கு அப்படி ஒன்றும் ஆளுமை இல்லாதவர் அல்ல.அவருக்கு இழைக்கப்பட்டது நம்பிக்கைத் துரோகம்.அது தான் உண்மை. புலத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது.எல்லாம் சரியான திசை நோக்கி வீறு நடை போடுகிறது.மேற்குலகத்தின் தடையெல்லாம் எங்களை ஒண்டும் செய்யாது.உந்தத் தடையை எல்லாம் சுழிச்சு ஓடி நாங்கள் வெல்லுவம் என்று அண்ணையை நம்ப வைத்தார்கள். ஒருவர் இருவர் அல்ல.....பலர்...

புலத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கின்றது என்பதை தலைவர் நம்பி இருந்தார் என்பதும் ஏற்புடையதாக இல்லை.

Edited by kalaivani

புலத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கின்றது என்பதை தலைவர் நம்பி இருந்தார் என்பதும் ஏற்புடையதாக இல்லை.

எல்லாம் சரியாக நடந்தது. தமிழக அரசையும் அம்மக்கள் எங்களை கைவிடார் என்ற்று நம்பியது தான் பிழை.

தமிழக அரசு சரியாக செயற்பட்டிருந்தால் விடுதலை போரை அழிவில் இருந்து காத்திருக்கலாம்.

புலம்பெயர் தமிழருக்கு அப்பாற்பட்ட சக்தி தான் இந்த அழிவை தடுப்பது. ஆனால் தமிழக அரசால் முடிந்திருக்கும்.

தமிழன் தான் தமிழனின் விடுதலையை அழித்தான்.

மேற்குலகம் கூட புலிகளின் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை. மாறாக அதனை சரியானதாக ஊக்குவிக்கவே விரும்பினார்கள்

இந்தியன் தான் கள்ளன். சதி செய்து அழித்தான் தன்கையால் தன் கண்ணை குத்தும் அளவுக்கு கருநாநிதியை பயன்படுத்தினார்கள்.

இதி இன்று நேற்றல்ல வரலாறு வட இந்தியர்கள் பற்றி அப்படித்தான் சொல்கிறது.

பிராமணன் பலம் கொண்டதும் அப்படிதான். இந்துக்கள் என்று மாறியது அப்படிதான். திராவிடன் இல்லாமல் மதத்துக்குள் அழுங்கி போனதும் இப்படிதான்.

ஈழத்தமிழரை அவர்களது விருப்பை அழித்து வட இந்தியா மீண்டும் ஒரு தரம் புதிய தென் இந்தியா நோக்கிய படை எடுப்பு வரலாற்றை பதிவு செய்துள்ளது.

எங்கள் அழிவுக்கு தமிழகதமிழர் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி நவம்

கிட்டத்தட்ட எனது பார்வையும் அதுதான்

விரைவில் சந்திக்கலாம்

தமிழன் தான் தமிழனின் விடுதலையை அழித்தான்.

மிகச் சரியாக சொன்னீர்கள். தமிழன்தான் தமிழனின் விடுதலையை அழித்தான்.

காத்திருந்து கழுத்தறுத்தவர்கள், கழுத்தை அறுத்ததோடு நிற்காமல், தமிழகத்தில் கருணாநிதியும்

புலத்தில் பல கருணாநிகளும் புனைகதைகள் புனைகின்றனர்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

விட்ட தவறுகளை மூடி மறைப்பதனால் மக்களை ஒன்றிணைத்து ஒரு பலமான சக்தியாகத் தொடர்ந்தும் வைத்திருக்கமுடியாது. நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொள்வோர் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்கும் பாடங்களை மக்கள் முன்வைக்கவேண்டும்.

தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடாத்த முனைவோர் காலவோட்டத்தில் காணாமல் போவார்கள்.

விட்ட தவறுகளை மூடி மறைப்பதனால் மக்களை ஒன்றிணைத்து ஒரு பலமான சக்தியாகத் தொடர்ந்தும் வைத்திருக்கமுடியாது. நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தலைமைகள் என்று சொல்லிக்கொள்வோர் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்கும் பாடங்களை மக்கள் முன்வைக்கவேண்டும்.

தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடாத்த முனைவோர் காலவோட்டத்தில் காணாமல் போவார்கள்.

சேரனில் இருந்து ஆரம்பிப்போமா?

Edited by kalaivani

நான் நினைக்கிறேன் சேரனிலிருந்து ஆரம்பிக்கலாம்.தன்னுடைய கடந்தகாலத் தவறுகளை சுயவிமர்சனம் செய்யும் பக்குவம் சேரனிடம் இருக்கிறது. சேரன் அதை செய்ததை அவதானித்தும் இருக்கிறேன். ஆனால் புலத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னுடன் பணிபரிந்தவனை பட்டிபோட்டு அதில் இன்பம் கண்டவர்கள்.உடன் பணி புரிந்தவனுக்கு படுக்க இடம் கொடுக்க மறுத்தவர்கள்-படுக்க இடம் கொடுக்க முன்வந்தவர்களை அச்சுறுத்தி மார்கழிமாத உறைபனிக் குளிpரில் கார் து நோட் தொடருந்து நிலையத்தில் ஒரு வாரம் வரை குந்தியிருக்க வைத்தவர்கள்.சாதி பார்த்தவர்கள் ஒரு செய்தி ஆசிரியனாக இருப்பதற்கு பிறப்பால் தகுதி வேணும் என்று கேட்டவர்கள்.அப்படிக் கேட்டவர்களை நியாயப் படுத்தி ஊக்குவித்தவர்கள்(இப்படி நிறையசொல்லலாம்) இவர்களையெல்லாம் பகிரங்கமாக ஆதாரபுர்வமாக நான் அம்பலப்படுத்தத் தாயார். இவர்கள் தங்கள் தவறுகளை ஒத்துக் கொண்டு சுயவிமாசனம் செய்வார்களா? ஈழமுரசு நிர்வாகியில் இருந்து ஆரம்பிப்போமா?.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் மூடிமறைத்து தமிழீழத்தை அடையலாம் என்றால் தமிழீழம் கிடைக்காது. எனினும் தமிழ் மக்களை கனவுலகில் வைத்தே வியாபாரம் செய்யலாம் என்று அனுபவ ரீதியில் கண்டுகொண்டவர்கள் விட்டுவிடுவா போகின்றார்கள்.

பணம் வசூலிக்க வழியில்லாவிட்டால் மே 18ந் தேதியை ஒரு சாதாரண நாளாக ஆக்கினாலும் ஆக்குவார்கள்.

மற்றவர்களை விடுங்கள். :rolleyes:

90% அதிகமான ஈழத்தமிழர்களுக்கு,ஈழத்தமிழர்களின் விடுதலையில் ஆர்வம் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்

எவ்வளவு விரைவாக இந்த நாடு விட்டு நாடு பாயும் அரசியலும் பனங்கொட்டை தீர்மானமும் உதாசினபடுத்தி மறக்கபடுகிறதொ..

அன்றுதான் ஈழத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மனிதர்களக வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வளவு காலமும் சாக்கடை பண்டிகளை எடுத்து நடுவீட்டில் வைத்து கொண்டாடிகொண்டு திரிந்ததையிட்டு மிகவும் வெக்கமடைகிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின்

வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு 99வீதம் வாக்கு விழுந்துள்ளதே

கடைசியாக நடந்த மாகாணசபை தேர்தல்களிலும் தாயக மக்கள் கூட்டமைப்புக்குத்தானே வாக்களித்திருந்தார்கள்

இதற்கு தங்கள் பதில் என்ன பனங்காய்..?

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by விசுகு

அப்படியாயின்

வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு 99வீதம் வாக்கு விழுந்துள்ளதே

கடைசியாக நடந்த மாகாணசபை தேர்தல்களிலும் தாயக மக்கள் கூட்டமைப்புக்குத்தானே வாக்களித்திருந்தார்கள்

இதற்கு தங்கள் பதில் என்ன பனங்காய்..?

99 என்ன 110 சதவீத வாக்கு கூட விழுந்தாலும் என்ன புண்ணியம்? நேர, எரிபொருள், பண மற்றும் பலவிதமான அநியாய விரயமே தவிர ஒரு மண்ணங்கட்டியும் நடக்கப்போவதில்லை.

என்னது? கூட்டமைப்பா? :wub::wub::wub::wub::wub::lol::lol::lol::lol:

தமிழராவது கூடுறதாவது......... கூத்தமைப்பு எண்டுதான் வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.