Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளம் வற்றும்வரை காத்திருந்த கூட்டமைப்புக் கொக்குகள்!

Featured Replies

அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல் அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன.

அயற்காட்டுச் சிங்கள நரிகளுக்கும் அந்த அழகு பிடிக்கவில்லை. குளத்திலிருந்துகொண்டு கும்மாளம் போடும் அந்த மீன்களை நினைத்தபோதெல்லாம் பசி எடுத்தது. அதனால், அந்த மீன்களைக் குரூரத்துடன் பார்த்தது. அவற்றைச் சிதைத்து, உணவாக்க ஆசை கொண்டது. அந்தக் குளத்தின் அணைகளை உடைத்தாவது அந்த மீன்களைப் பிரித்து எடுக்க யோசனை போட்டது. அயற்காட்டு இந்திய நரிகளுக்கும் தூது அனுப்பியது. ஆலோசனை கேட்டது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எப்படி நழுவ விடுவது? இரண்டு நரிக் கூட்டங்களும் இணைந்து திட்டம் தீட்டின.

நாங்கள் பிரிந்திருந்து தனித் தனியாக இந்தக் குளத்தை உடைப்பது சாத்தியமேயில்லை. இருவரும் இணைந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று தோழில் கைபோட்டு உறவாடின. இந்திய நரிகள் செய்யும் உபகாரத்திற்கு, கிடைக்கும் இரையைப் பங்கு போடவும், தப்பிப் பிழைத்து எஞ்சிய தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மீன்களைத் தேவைக்கேற்றவாறு பகிர்ந்து கொள்ளவும், அதற்காக அந்தப் பகுதியில் நிலை கொள்ளவும் இந்திய நரிகளுடன் சிங்கள நரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டன.

வெகு நாட்கள் திட்டம் தீட்டப்பட்டு, ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குளத்தை உடைக்கும் தாக்குத்களும் மேற்கொள்ளப்பட்டது. பலமான குளக் கட்டுக்களும் தொடர்ந்த நரிக் கூட்டங்களின் தாக்குதல்களால் சிதைந்து உடைந்தே போய்விட்டது. தண்ணீர் கரை கடந்தது. மீன்கள் தவித்தன. தண்ணீரின் போக்கில் தப்பி ஓடின. நரிகளின் வேட்டையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் பலிகொள்ளப்பட்டன. அப்படியும் தொடர்ந்தது தாக்குதல். இறுதிக் கரைவரை ஓடி ஒழிந்த மின்கள் சிறைபடுத்தப்பட்டன. நரிகளால் சித்திவதை செய்யப்பட்டு, சீரழிக்கப்பட்டன.

குளம் வற்றியதை கொக்குகளால் கொண்டாட முடியாவிட்டாலும், இரைக்கு இனிப் பஞ்சம் எப்போதும் இல்லை என்று திருப்தி கொண்டன. அதற்காக நரிகளுடனும் பேச்சுக்கள் நடாத்தின. அந்தக் குளத்தின் எல்லைக்குட்பட்ட அனைத்தும் எங்களது ஆளுகைக்குட்பட்டது என்று ஏற்றுக்கொண்டால், உங்களையும் சேர்த்துக்கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது ஆனால், எங்கள் மீன் வேட்டைக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தன.

குளத்தின் எல்லைக்குள் நாங்களும் இருந்தால்தான், சிங்கள நரிகளின் மீன் வேட்டையைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு, எங்கள் பிரன்னத்தை ஏற்றுக் கொள்வதுடன், எங்கள் ஆலோசனை கேட்டுத்தான் நீங்கள் நடக்க வேண்டும். நாங்கள் மீன் வேட்டையில் சிங்கள நரிகளுடன் சமரசம் செய்து கொள்ளுகின்றோம் என்றன தலைக் கொக்குகள் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தன.

தப்பிப் பிழைத்த மீன்கள் மீதான பகுதி ஆதிக்கம் கொக்குகளிடம் வந்து சேர்ந்தது. அத்துடன் அவைகளுக்கிடையே போட்டிகளும் உருவெடுத்தன. சில கொக்குகள் சிங்கள நரிகளுடன் கூட்டுச் சேர்ந்தன. சிங்கள நரிகளாலேயே எஞ்சியிருக்கும் மீன்களை வாழ விட முடியும் என்று பட்டயம் போட்டு அறிவித்தன. இல்லை, இல்லை... இந்திய நரிகள்தான் இந்த மீன்களின் இரட்சகர்கள். அவர்களை மீட்பர்களாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த மீன்களுக்குப் பாதுகாப்பு என்றன தலைமைக் கொக்குகள். இந்திய நரிகள் சிங்கள நரிகளை விடவும் கொடுமையானவை, கோரமானவை. அந்த இரண்டு நரிகளாலும் இந்த மீன்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கப்போவதில்லை. மீண்டு அணையைக் கட்டும் உதவியை எவரிடமிருந்தாவது அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தால் மட்டுமே அவர்கள் இந்த இடத்தில் வாழ முடியும் என்று போர்க் குரல் எழுப்பின மீன்களின் அவலம் கண்டு கலங்கிநின்ற சில மனச்சாட்சியுள்ள கொக்குகள். முரண்பட்ட கொக்குகள் அங்கிருந்து தலைமைக் கொக்குகளால் வெளியேற்றப்பட்டன.

இழப்புக்களுடன் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் தமிழ் மீன்கள் சோகமாகத் தங்கள் விதியை நொந்து சிரித்துக்கொண்டன. குளத்திற்கு அணை கட்டித் தங்களை வாழ வைக்க யாராவது வரமாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் அவைகளால் காத்திருக்கத்தான் முடிகின்றது.

நீங்கள் அணை கட்டக் கைகொடுக்கப் போகின்றீர்களா? சிங்கள நரிகளின் தொடர் வேட்டைக்குத் துணைபோகப் போகுறீர்களா? அல்லது தலைக் கொக்குகளின் துணையோடு இந்திய நரிகளின் தொடர் துரோகங்களை அனுமதிக்கப் போகின்றீர்களா?

இனி நீங்களே முடிவு செய்யுங்கள்!

சி. பாலச்சந்திரன்

ஆசிரியர்

ஈழநாடு

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இறக்கும் வரை பல கொக்குகள் காத்து தான் இருந்தார்கள்.அவர்களில் கூட்டணியும் அடங்குமே தவிர மற்றும் பலரையும் குறிப்பிட கட்டுரையாளருக்கு ஏனோ மனம் வரவில்லை.

இந்த அணை கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம் அதை அந்த தலைமைக்கொக்கோடு சண்டைபோட்டு வெளியேறிய கொக்குகளாலோ,இல்லை அந்த தலைமைக் கொக்காலோ..தற்போது கட்டமுடியாது...இந்த கொக்குகள் கட்டுமுடிப்பதுக்கள் அந்த மீன்கள் செத்து கருவாடாகிவிடும்.பின் பலம் இல்லாமல் சரியாக கட்டமுடியாது;அதற்குரிய பொருட்கள்(Latest Wepons),அரசியல் சூழ்நிலை என்பன சரியாக வரும்போதுதான் அந்த நரியால் உடைக்கப்பட்ட குளத்தை கட்டமுடியும்.

ஆகவே தற்போது அந்த நரிகளால் கொடுக்கப்பட்ட(கொடுமையானது),வாளிநீரில் வாழ்வதுதான் கொஞ்ச காலத்துக்கு பொருத்தம்;இல்லை அந்த வெளியேறிய கொக்குகளின் கதையை கேட்டு;குளத்திலையே இருந்தால்;விரைவில் அம் மீன்கள் கருவாடாகிவிடும்;இதை விட அந்த வாளியில் சிறிதுகாலம் இருந்துவிட்டு;

பின் அணைகட்டியவுடன் குளத்துக்கு வந்தால் சரி;

இக்குளத்தில் விட வெளிநாட்டு குளங்களில் உள்ள மீன்களுக்கு இரு குஞ்சுகள் இருந்தால் ஒரு குஞ்சை இந்த வன்னிக் குளத்தில் விடவேண்டும்..தயாரா??

  • கருத்துக்கள உறவுகள்

இக்குளத்தில் விட வெளிநாட்டு குளங்களில் உள்ள மீன்களுக்கு இரு குஞ்சுகள் இருந்தால் ஒரு குஞ்சை இந்த வன்னிக் குளத்தில் விடவேண்டும்..தயாரா??

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட அந்த வாளியில் சிறிதுகாலம் இருந்துவிட்டு;

பின் அணைகட்டியவுடன் குளத்துக்கு வந்தால் சரி;

இக்குளத்தில் விட வெளிநாட்டு குளங்களில் உள்ள மீன்களுக்கு இரு குஞ்சுகள் இருந்தால் ஒரு குஞ்சை இந்த வன்னிக் குளத்தில் விடவேண்டும்..தயாரா??

ஒரு பச்சை குத்தியுள்ளேன் தராக்கி அவர்களது நடைமுறையான கருத்துக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடு.........யானை சிங்கம் புலி கரடி ஓநாய் நாய் கழுதைப்புலி கழுதை ஆடு மாடு எண்டு எல்லாத்தையும் எழுதியிருந்தா ....

பாலைவனத்தில குளமாம்.... மீனாம்.... நரியாம்..... கொக்காம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடு.........யானை சிங்கம் புலி கரடி ஓநாய் நாய் கழுதைப்புலி கழுதை ஆடு மாடு எண்டு எல்லாத்தையும் எழுதியிருந்தா ....

பாலைவனத்தில குளமாம்.... மீனாம்.... நரியாம்..... கொக்காம்.....

அண்ணே நீங்க இலங்கை தமிழ் தானே?? உங்கள் தமிழ் எனக்கு புரியிறது கஷ்டமாக இருக்கிறது.. மப்புல சம்பந்தமில்லாம எழுதுகிறீர்களோ என்று பல சமயத்துல தோன்றும்.. மன்னிக்கணும் தப்பாய் இருந்தால்..

Edited by Ealam_Supporter

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்க இலங்கை தமிழ் தானே?? உங்கள் தமிழ் எனக்கு புரியிறது கஷ்டமாக இருக்கிறது.. மப்புல சம்பந்தமில்லாம எழுதுகிறீர்களோ என்று பல சமயத்துல தோன்றும்.. மன்னிக்கணும் தப்பாய் இருந்தால்..

அது மப்பு என்று சொல்ல முடியாது.வேணுமானால் "குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பு" என்று சொல்லாம்.

அது மப்பு என்று சொல்ல முடியாது.வேணுமானால் "குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பு" என்று சொல்லாம்.

கோடாரி காம்புகளை கேவலப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நீங்க இலங்கை தமிழ் தானே?? உங்கள் தமிழ் எனக்கு புரியிறது கஷ்டமாக இருக்கிறது.. மப்புல சம்பந்தமில்லாம எழுதுகிறீர்களோ என்று பல சமயத்துல தோன்றும்.. மன்னிக்கணும் தப்பாய் இருந்தால்..

எழுதுவதையும் எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பது தொட்டிலயும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவதுமாதிரிஉள்ளது.

அவரை நோகாதீர்கள் தமழ்விளங்கவில்லை என்று அவமதிக்காதீர்கள் ( அவர் வந்ததில் இருந்து வாசிக்கிற எங்களுக்கே ஒன்றும் விளங்குதில்லை இதிலே நீங்கள்?) ஏதோ தன்னால் முடிந்ததை எழுகிறார் அந்த அண்ணா. அவருடைய வயிற்று பிழைப்பு அதுவாக உள்ளது ஏதோ ஒரு உறவு உணவுக்காக கஸ்ரபடுகிறது பொறுத்துகொள்ளுங்கள். ஏதோ முடிந்ததைதானே எழுத முடியும்??? 20 வருடங்களுக்கு பிறகும் எழுத்துபிழையில்லாது தமிழை எழுதுகிறார் என்று மகிழ்சிகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காட யூனிப்படிப்புக்கு முன்னால ....போட்டியா எழுதேலுமே. :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அக்காட யூனிப்படிப்புக்கு முன்னால ....போட்டியா எழுதேலுமே. :wub::lol:

எனக்கும் உங்களுக்கும் என்ன அண்ணா போட்டி......?

எனக்கு பொழுபோக்கு உங்களுக்கு பிழைப்பு இதில் ஏன் நீங்கள் என்னோடு கோபிக்கின்றீர்கள்? இந்த யாழ்களத்திலேயே அடிக்கடி உங்களுக்கா வாதாடுபவள் அதுவும் தனித்து நின்று நான் ஒருத்திதானே?

  • கருத்துக்கள உறவுகள்

இக்குளத்தில் விட வெளிநாட்டு குளங்களில் உள்ள மீன்களுக்கு இரு குஞ்சுகள் இருந்தால் ஒரு குஞ்சை இந்த வன்னிக் குளத்தில் விடவேண்டும்..தயாரா??

என்ன பகிடியோ? கந்தசாமிக் கோவிலில் கூட்டம் கூடி (எண்ணி நாலுபேர், ஆனால் பெருங் கூட்டம்) புக்கை சாப்பிட்டு, ஏவறை விட்டுக் கொண்டு ஒரு ஐந்து ரூபாயுக்கு ஒரு புளொக்கை உருவாக்கி அதுக்கு தேசியம் என்ற மலிவான சொல்லைச் சேர்த்துக் கொண்டு இங்கிருந்தவாறு எவ்வளவு ஈசியாக நாங்கள் வியாபாரம்..மன்னிக்கவும் அறிக்கை விடுறம்... எங்களைப் போய், எங்கள் பிள்ளைகளை அங்க கொண்டு போய் சேர்க்க சொல்றியள். அதுகள் ஐபொட்டில் பாட்டுக் கேட்டு, WII இல் கேம் விளையாடி வளரும் செல்லக் குழந்தைகள். அதுகள் ஏன் சாகவேண்டும்? அதுக்குத்தான், ஊரில் பல இளந்தாரிகள் இருக்கே. நாம் இங்கிருந்து புறக்கணி, பொக்கணி என்று கட்டளை இட அவர்கள் அங்கு போராடவேண்டும்; அதுதான் விதி (அல்லாட்டி போராட்டத்தைக் காரணம் காட்டி பிழைக்க முடியாதே இங்கிருந்து)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

View PostEalam_Supporter, on 18 March 2010 - 10:16 PM, said:

அண்ணே நீங்க இலங்கை தமிழ் தானே?? உங்கள் தமிழ் எனக்கு புரியிறது கஷ்டமாக இருக்கிறது.. மப்புல சம்பந்தமில்லாம எழுதுகிறீர்களோ என்று பல சமயத்துல தோன்றும்.. மன்னிக்கணும் தப்பாய் இருந்தால்..

எழுதுவதையும் எழுதிவிட்டு மன்னிப்பு கேட்பது தொட்டிலயும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவதுமாதிரிஉள்ளது.

இல்லை அதுக்கு இல்லை, எனக்கு மட்டும் தான் இவருடைய தமிழ் புரியலையோனு நினச்சு மன்னிப்பு கேட்டேன் எதுக்கும் முற் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று .. :rolleyes: அதாவது எனது தமிழ் மொழியில் பிரச்சினையோ என்று.. தான் தயங்கி தயங்கி கேட்டேன்... :D ஏனெனில் இங்கு யாரும் இவரின் தமிழை புரியவில்லை என்று சொல்லவில்லை... இப்போது தான் எனக்கே இருந்த டவுட் clear ஆச்சு.. அதாவது எனது தமிழ் மொழி அறிவில் சிறு துரும்பு கூட தப்பு இல்லை என்று 100 வீதம் confirmed.. :(^_^:unsure: நன்றி மருதங்கேணி அவர்களே.. எனக்குள் இருந்த சந்தேகத்தை clear பண்ணியதுக்கு.. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.