Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகத்திக் கீரை

agaththikkeerai.jpg

"அகர முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத் துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல் கீரை "அகத்திக் கீரையாகும்." அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். ஆகவே கீரைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதற்கு முதல்கீரையாக விளங்குவது அகத்திக் கீரையே ஆகும்.

அகத்திக் கீரை இந்தியாவில் எங்கும் ஏராளமாக வளரக் கூடியது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பயி¡¢டப் படுகிறது. இருப்பினும் இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, கா£ரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவா¢ன் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. அன்றியும் இதன் பூவானது வளைந்து கோணலாக, வக்கா¢த்து, அ¡¢வாள் போல் காணப்படுவதினால் இதற்கு "வக்ரபுஷ்பம்" என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.

அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை நிறப் பூக்களை உடையது. இதனையே பொதுவாக அகத்தி என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென அழைப்பார்கள். பொதுவாக அகத்தியும், செவ்வகத்தியுமே உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்தி மரம்போன்று 6 முதல் 9 மீட்டர் (20 அடி முதல் 30 அடி) உயரம் வளர்ந்த போதிலும் இது செடியினைத்தைச் சேர்ந்ததே ஆகும். மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது இச்செடி. ஆயினும் நீண்ட நாட்கள் வாழக்கூடிய தன்மை பெற்றதில்லை.

பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

அகத்திக் கீரை உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையை வேகவைத்து பொ¡¢யலாகச் செய்துண்பர். கீரையுடன் தேங்காயைச் சேர்த்துக் தாளிதம் செய்து உண்ணலாம். மற்றும் பருப்புடன் சேர்த்து வேகவைத்து உண்பதும் உண்டு. இதனைக் குழம்பாகவும், மிளகு நீர் செய்தும் உண்ணலாம்.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்களும் மருத்துவ நூலாகும் கூறியிருக்கின்றனர். பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைக்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ணவேண்டும் என்று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு கைப்பிடி உணவில் நூறுவிதச் சத்துக்களை பெரும் வழியை மருத்துவ நூல்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன:

1. அகத்திக் கீரை - 63 சத்துக்கள்

2. சுண்டைக்காய் - 20 சத்துக்கள்

3. வாழைக்காய் - 2 சத்துக்கள்

4. கொத்தவரை - 1 சத்து

5. அ¡¢சிச் சோறு - 1 சத்து

6. பருப்பு - 1 சத்து

7. நெய் - 1 சத்து

ஆக மொத்தம் - 100 சத்து

இந்த ஏழு உணவுப் பொருட்களிலும் நூறுவிதச் சத்துக்களும் அடங்கி விட்டதைக் காணலாம். அகத்திக் கீரை முதல் கீரையாக நின்று அறுபத்து மூன்று வகைக் சத்துக்களைப் பெற்று விளங்குவதைக் காணலாம்.

இக்கீரை கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் நல்ல தீவனமாகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு, கோழி உணவோடு காய்ந்த அகத்திக் கீரையைச் சேர்த்து தீவனமாகக் கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ச்சி பெறுகின்றன.

கால்நடைகளுக்கு இக்கீரையத் தீவனமாகக் கொடுத்தால் அதிகமாகப் பால் கறக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான கருத்து என விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

அகத்திக் கீரையில் 73 விழுக்காடு நீரும் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும் 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 விழுக்காடு நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 விழுக்காடு இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோ¡¢ சக்தியைக் கொடுக்கவல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராலும், ரைபோ· பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.

இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.

அகத்திக்கீரை பொதுவாக சிறு கைப்பு ருசி உடையது. இக்கைப்புச் சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியேற்றும் குணமுடையது; குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.

இக்கைப்புச் சுவை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அ¡¢ப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, உட்காங்கை என்னும் குட்டின். நோய் ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்குட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.

வெய்யிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.

இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடுமருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.

அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

மலோ¢யா போன்ற முறைக் காய்ச்சல்களுக்கு அகத்தி இலைச் சாற்றை ஒரு நாளைக்கு ஒருதடவை இரண்டொரு துளிகள் மூக்கில்விட காய்ச்சலின் வேகம் குறைந்து குணமடையும்.

சா¢யாக பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். மூளை தொடர்பான பிணிகள் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை உண்பதன் மூலம் நல்ல பயன் பெறலாம்.

அகத்திக் கீரையிலிருந்து ஒரு வகைத் தைலம் எடுக்கப்படுகிறது. இந்த அகத்தித் தைலத்தைத் தேய்ப்பதினால் கண் குளிர்ச்சி அடையும்; பார்வை தெளிவாகும்; மயிர் செழித்து வளரும், அகத்திப் பூவின் சாற்றைக் கண் பார்வைக் குறைவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

அகத்தியின் பட்டையைப் பொ¢யம்மை எனப்படும் "லைசூ¡¢" நோய் காணப்பட்டால் அதன் ஆரம்ப காலத்தில் கொடுக்கலாம். அம்மை நோயின் வேகத்தைத் தணிப்பதற்கு விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கலாம்.

அகத்தி வேர் ஓர் சிறந்த மருந்தாக விளங்குகிறது. அகத்தி வேர் பட்டை விதிப்படி குடிநீர் செய்து உட்கொள்ள மேகம், தாகம், மெய் எ¡¢வு, கை எ¡¢வு, ஆண் குறியின் உள் எ¡¢வு, ஐம்பொறிகளை சேர்ந்த எ¡¢வு ஆகியவைகள் நீங்கும்.

இவ்வளவு சிறந்த மருத்துவப் பயனுடைய இக் கீரையை அடிக்கடி உண்பதினாலோ நாள் தவறாமல் சேர்த்துக் கொள்வதினாலோ நன்மைக்குப் பதில் தீமையே அதிகமாகும். இவ்வாறு உண்பதினால் உடலிலுள்ள நல்ல இரத்தத்தையெல்லாம் முறித்து வாய்வைப் பெருக்கிச் சோகை, பாண்டு முதலிய நோய்களை உண்டாக்கும்.

அன்றியும் அகத்திக் கீரையை அதிகம் உண்டால் கடுவனும் வாயுவும் உண்டாகும். அகத்திக் கீரை பத்தியத்தை முறிக்க வல்லது. ஆதலால் மருந்துண்ணும் காலங்களிலோ பத்திய மிருக்கும் போதோ அகத்திக் கீரையை உண்ணக் கூடாது.

ஆகையினால் இக் கீரையை நாள்தோறுமின்றி -வேண்டும் பொழுது கறியாகச் சமைத்துண்பதே நல்லது. பொதுவாக வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்கட்கொரு முறையோ இக்கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. அகத்திமரம் மிளகு, வெற்றிலை முதலிய கொடிகளுக்குப் படரும் கொழு கொம்பிற்காக பயி¡¢டுகிறார்கள். இது கொழு கொம்பாகப் பயன்படுவதோடு அப்பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகவும் உதவுகிறது. தென்னையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு நிழல் தேவைப்படுகிறது. அதற்கு நிழல் கொடுக்க அகத்தியை வளர்க்கலாம். மேற்கிந்தியத் தீவுகளில் காபி மற்றும் மலையில் வளரும் பழப்பயிர்களுக்குக் காற்றுத் தடுப்பானாக அகத்தியை நடுகிறார்கள்.

அகத்திக் கீரை மற்றும் அதன் பட்டை ஆகியவற்றிலிருந்து எடுக்கும் சாற்றினை மீனவர்கள் தங்கள் வலைகளுக்கு உறுதியளிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டை தோல் பதனிடவும், சாயம் உண்டாக்கவும் பயன்படுகிறது. பட்டையினுள்ளிருக்கும் நாரானது மிகவும் பயனுள்ளது. இந்த நா¡¢ன் நீளம் சராசா¢ 2.7 மில்லி மீட்டர் இருக்கும். இதனால் இந்நார் கயிறு செய்யப் பயன்படுகிறது.

அகத்தி மரத்தின் பட்டையை நீக்கினால் அதன் தண்டு வெண்மையாகவும், மெண்மையாகவுமிருக்கும், இத்தண்டு வெடிமருந்து செய்யப் பயன்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் செய்யவும் பயன்படுகிறது.

மூங்கில் கிடைக்காத இடங்களில் தற்காலிகக் கூரை வேய உதவும் குறுக்குச் சட்டங்களுக்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவர். இதற்கு நீண்டு வளர்ந்த, கணுவு குறைந்த அகத்தி மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டில் பெரும்பாலும் அகத்தியைத் தனியாகப் பயி¡¢டுவதில்லை. வெற்றிலைக் கொடிக்கால்களில்தான் இதனை மிகுதியும் பயி¡¢டுகின்றனர்.

அகத்திச் செடி வளர, வளர இதன் கிளைகளை முறித்துவிட்டுக் கொண்டு வருதல் நலம். இவ்வாறு செய்வதினால் மிகக் குறுகிய காலத்திலேயே அகத்த மரமாக வளர்ச்சி பெற்றுவிடுகிறது.

அகத்தி எல்லாவித மண்ணிலும் வளரும். சிறிது களிப்பசையுடைய நிலம் இக்கீரைக்கு ஏற்ற நிலமாகும். இந்நிலத்தில் இக்கீரை மிக நன்றாக விளையக்கூடியது. மேல் மண் இறுக்கமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அகத்தி வறட்சியைத் தாங்கும் சக்தியுடையது. இது செப்படம்பர் முதல் டிசம்பர் வரை நன்றாகப் பூக்கிறது. வெய்யிற்காலத்தில் காய்க்க ஆரம்பிக்கிறது.

அகத்திச் செடிகளை விதை மூலம் எளிதாக உற்பத்தி செய்யலாம்.

கொடிக்கால்களில் பயி¡¢டும்போது வெற்றிலை நடுவதற்கு முள் திண்ணைப் பாத்திகளில் நெருக்கமாக விதைத்து விடுவார்கள். செடிகள் சுமார் இரண்டடி வளர்ந்தபின் வெற்றிலைக் கொடியை நடுவார்கள். பிறகு நெருக்கமாக வளர்ந்துள்ள அகத்திச் செடிகளை ஓரளவிற்கு கலைத்துப் பிடுங்கி விடுவார்கள்.

அகத்தி மிக வேகமாக வளரக் கூடிய பயிராதலால் வெற்றிலைக்கு மேல் வளர்ந்து கொண்டே போகும். அடியிலிருந்து கிளைகள் கிளைக்க விடுவதில்லை.

வெற்றிலை நடும் வயல்களில் அதிகளவு தொழுஉரம் இருப்பதால் அந்த உரத்தைக் கொண்டே அகத்தி செழித்து வளரும். மேல்க் கிளைகளிலிருந்து கீரையை அடிக்கடி ஒடித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

வீட்டுத் தோட்டங்களில் பயி¡¢டும் போது இரண்டு மீட்டர் இடை¨வெளியில் குழி தோண்டி குழிகளில் நன்கு மக்கிய தொழுஉரம் இரண்டு கூடை இட்டு மண்ணோடு கலந்துவிட வேண்டும். இவ்வாறு தயா¡¢க்கப்பட்ட குழிகளில் ஐந்தாறு விதைகளை ஊன்றித் தண்ணீர் ஊற்றி வர ஏழெட்டு நாட்களில் முளைத்து விடும்.

செடிகள் அரையடி வளர்ந்த உடன் நல்ல செடி ஒன்றை வைத்துக் கொண்டு மற்றவைகளைப் பிடுங்கிவிடஇ வேண்டும் செடிகளுக்கு மூன்று நாட்களுக்கொரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். நன்கு வளர்ந்தபின் பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. அகத்தச் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விட்டால் அதிக மகசூல் கிடைக்கும். அதே சமயத்தில் நன்கு வளர்ந்த செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் கூட ஓரளவு நல்ல மகசூலைக் கொடுக்கும்.

தனிமரமாக இருக்கும்போது செடிகள் பத்து வருடத்திற்கு மேல் உயிரோடு இருக்கும். ஆனால் மரங்கள் அதி உயரம் வளர்ந்து விடுவதால் கீரைகளைப் பறிப்பது சிரமமாக இருக்கும் ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செடிகளை வைத்திருக்க வேண்டியதில்லை. செடிகளை அகற்றிவிட்டு வேறு புதிய கன்றுகளை நட்டுக் கொள்ளலாம்.

நன்றி:

கே. பாலசுப்பிரமணியன்

கே. கருப்பஞானி

(மார்டன் தமிழ் வோர்ல்ட்)

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள அகத்திக்கீரையின் பதிவுக்கு நன்றி...........

  • கருத்துக்கள உறவுகள்

.

நல்ல அருமையான பதிவு புரட்சி.

கடைகளில் அகத்தி இலையை கண்டால், ஒரு பிடி வாங்கிக் கொண்டு சொதி வைத்து, அல்லது வறை வறுத்து சாப்பிடும் பழக்கம் என்றும் உண்டு.

உங்கள் பதிவு,அகத்தி இலையைப் பற்றி மேலும் பல தகவல்களை தந்தது.

.

அகத்திக் கீரை

agaththikkeerai.jpg

மேலே நீங்கள் தரும் அகத்தியும், நான் கீழே தந்துள்ள அகத்தியும் ஒன்றா ?

இங்கு வீதிக்கரைகளிலே அழகிற்காக வளர்கிறார்கள் ...!

3972.jpg5405.jpg

image from toptropicals.com இங்கு அக்த்தி விதைகள் விற்கிறார்கள் ...!?

Scientific name :
(L.) Pers.

Synonyms : Aeschynomene grandiflora (L.) L. Agati grandiflora (L.) Desv. Robinia grandiflora L. Sesban grandiflorus Poir.

Family: Fabaceae (alt. Leguminosae) subfamily: Faboideae tribe: Robinieae. Also placed in: Papilionaceae.

Common names:

agathi, agati sesbania, August flower, Australian corkwood tree, flamingo bill, grandiflora, sesban, swamp pea, tiger tongue, scarlet wistaria-tree, vegetable-hummingbird, West Indian pea, white dragon tree (English); pois valliere (French); baculo, cresta de gallo, gallito, paloma, pico de flamenco, zapaton blanco (Spanish); pwa valet, pwa valye (Creole Patois);

kathuru, murunga (Sinhala); agathi, agati, peragathi (Tamil); gauai-gauai, katuday, katurai, pan (Filipino); kae-ban, khae, ton kae (Thai); So dua (Vietnamese); kacang turi, petai belalang, sesban, sesban getih (Malay); agasti (Nepali); agasti, agati, anari (Sanskrit); agasti, bak, basma, basna, chogache, hatiya (Hindi);

agati, agusta, bagphal, bak, bake (Bengali); toroy, turi, tuwi (Indonesian); ângkiëdèi (Khmer); kh'ê: kha:w (Lao (Sino-Tibetan));

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா புரட்சி!

அகத்தி ஆயிரம் காய்ச்சாலும் புறத்தி புறத்திதானெண்டுறாங்கள் ஏன் என்ன விசயம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.