Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதியை முறியடித்து விட்டார்களாம்???!!!

Featured Replies

தகுதி வாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும்

‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்ற போர்வையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடித்துக் காற்றில் பறக்க விடுவதற்கு சில நாசகார சக்திகள் எடுத்த முயற்சிகள் புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய உணர்வாளர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகக் கொண்டு நகரும் ஒரு மாபெரும் ‘அசைவியக்கம்‘. இந்த மாபெரும் அசைவியக்கத்தின் இயங்குசக்தியாக விளங்குவது ‘பிரபாகரன்‘ என்ற ‘அடிநாதம்‘.

‘பிரபாகரன்‘ என்ற இந்த அடிநாதத்தை மறுதலித்து, மறைத்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்திற்கு மாற்றீடான பல்தேசியக் கட்டமைப்புக்களை உருவகிப்பதன் ஊடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக துடைத்தழிப்பதே, கடந்த ஓராண்டாக இந்திய – சிங்கள அரசுகளின் கூட்டு நிகழ்ச்சித் திட்டமாக விளங்கி வந்துள்ளது.

இதற்கு உயிரூட்டமளிக்கும் வகையில், தமிழீழ தாயகத்தை மத அடிப்படையில் துண்டாடுவதற்கான திட்டங்களை இந்திய – சிங்கள அரசுகளின் கைக்கூலி ‘மதியுரைக் குழுக்கள்‘ அண்மைக் காலங்களில் வகுத்து நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கான கருவியாக மாறும் அறிகுறிகளை அண்மைய மாதங்களில் நாடுகடந்த தமிழீழ அரசமைப்புக் குழு வெளியிட்டு வந்த நிலையிலேயே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் களமிறங்கியிருந்தார்கள்.

பன்னாட்டு அரங்கில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கான பரப்புரைத்தளம் தவறான தரப்புக்களின் கைகளில் சிக்கிச் சிதறுண்டு போவதைத் தடுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் முதன்மை நோக்கமாக விளங்கியிருந்தது.

ஒருபுறம் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்று சுயமுத்திரை குத்தியவாறு, தம்மையொரு பல்தேசிய ‘கொம்பனியாகவும்‘, அரசுசாரா அமைப்பாகவும் மாற்றிக்கொள்ள முற்பட்ட ‘மதியுரைக் குழுக்கள்‘, மறுபுறம் முஸ்லிம் தாயகம் பற்றியும், முஸ்லிம் சுயநிர்ணய உரிமை பற்றியும் பேசி, எமது இஸ்லாமிய சகோதரர்களை தமிழீழ தேசத்தில் இருந்து நிரந்தரமாக அந்நியப்படுத்துவதற்கு முற்பட்டிருந்த வேளையிலேயே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் களமிறக்கம் நிகழ்ந்தேறியது.

ஆரம்பத்தில் இருந்தே தவறான கருத்துக்களை விதைக்கும் நடவடிக்கைகளில் நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் நாடுவாரியான செயற்குழுக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சி என்பது தமிழீழ தேசத்தையும், அதற்கான அடிப்படை இலட்சியங்களையும் விலைபேசும் அரங்காக மாறிவிடும் என்ற அங்கலாய்ப்பும், அதனால் எழுந்த சலிப்பும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே மேலோங்கியிருந்தது.

இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட ‘மதியுரைக் குழுக்கள்‘, தமது நாடுவாரியான செயற்குழுக்களின் உறுப்பினர்களை தேர்தலில் களமிறக்கி, போட்டியின்றி நாற்காலிகளைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டு தமது காய்களை நகர்த்தியிருந்தன.

ஆனால் இவையெல்லாவற்றிற்கும் ஆப்பு வைக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் களமிறங்கியமை எவருமே எதிர்பாராதது. இதில் ‘மதியுரைக் குழுக்களை‘ மீளமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திய விடயமாக நடந்தேறிய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

தமிழீழ தாயகத்தைத் துண்டாட முற்பட்ட தரப்புக்களை தோற்கடித்து அமோக வெற்றியைத் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் பெற்றிருப்பது, நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் மதியுரைக் குழுக்களும், நாடுவாரிக் குழுக்களும் சற்றுமே எதிர்பாராதது. இப்படியான பின்புலத்தில், தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளில் தற்பொழுது ‘மதியுரைக் குழுக்கள்‘ இறங்கியுள்ளன.

இதற்கு உடந்தையாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘இலவச தமிழ் செய்கோள் தொலைக்காட்சி‘ கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது.

இதில் முக்கியமாக, சனநாயகத்தின் தாய் என்று வர்ணிக்கப்படும் பிரித்தானியாவில் நடந்தேறிய தேர்தலில் வாக்குமோசடிகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி சில தொகுதிகளில் மறுதேர்தலுக்கும், மறுவாக்கெடுப்பிற்குமான அறிவிப்புக்களை நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் பிரித்தானிய தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது.

இவற்றின் பின்னணி என்ன?

உண்மையில் இவ்வாறான வாக்குமோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா? என்பதே இன்று தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே உள்ள கேள்விகளாகும்.

அதாவது, பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் சகல வாக்குப் பதிவுநிலையங்களும் நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் தேர்தல் ஆணையத்தினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இதில் கடமையாற்றுவதற்கான பணியாளர்கள் கூட தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டதோடு, வாக்குச்சீட்டுக்களும் தேர்தல் ஆணையத்தின் வசமே இருந்தன.

இப்படியிருக்கும் பொழுது வாக்குமோசடிகள் எவ்வாறு நிகழ முடியும்?

அவ்வாறான வாக்குமோசடிகள் நிகழ்ந்தேறியிருந்தால் அவற்றை தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களே நிகழ்த்தியிருக்க முடியும். அல்லது வாக்குமோசடிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டிருக்காத பட்சத்தில், வாக்குப் பெட்டிகளை வாக்கும் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்க வேண்டும்!

அப்படியாயின் மோசடிகாரர்களின் கூட்டமைப்பாகவா நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் தேர்தல் ஆணையம் விளங்கியது?

இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி நாடுகடந்த அரசமைப்புக் குழுவால் களமிறக்கப்பட்ட சகல பிரித்தானிய வேட்பாளர்களும் தேர்தலில் படுதோல்வியைத் தழுவி மண்கவ்வியிருப்பதாகவே அறிய முடிகின்றது.

ஓரிரு சுயேட்சை வேட்பாளர்களைத் தவிர சே.ஜெயனாந்தமூர்த்தி அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய உணர்வாளர்களே பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

இதனை சகித்துக் கொள்ள முடியாத நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் ‘மதியுரைக் குழுக்களும்‘, ‘நாடுவாரிக் குழுக்களும்‘, இப்படியான தேர்தல் மோசடி நாடகம் ஒன்றை நிகழ்த்தி தேர்தல் முடிவுகளைக் குழப்ப முற்படுகின்றார்களா? என்ற ஐயம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் இயல்பாக எழுகின்றது.

சுயாதீனமாக செயற்படுவதாக தேர்தல் ஆணையத்தினர் கூறிக்கொண்டாலும், தம்மை நியமித்த ‘மதியுரைக் குழு‘ எசமானர்களுக்கு இவர்களை துணைபோகின்றார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாகவே எழுகின்றது.

சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வெற்றியீட்டியுள்ளார்கள்:

ஒருவர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, மற்றையவர் ம.க.ஈழவேந்தன்.

இவர்களில் சே.ஜெயனாந்தமூர்த்தி அவர்கள் அதிக அளவிலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். சரியான தரப்புக்களின் கைகளில் இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிட்டியுள்ள நிலையில், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்துலகப் பரப்புரைத்தளமாக விளங்கப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தலைமையேற்று வழிநடத்துவதற்கு சே.ஜெயானந்தமூர்த்தி போன்றவர்களே தகுதியானவர்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை தவறான சக்திகளிடம் விலைபேசுவதற்கும், சூரியத்தேவனுக்கு சவால்விடுக்கும் வகையில் தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடுவதற்கும் இதுவரை முற்பட்டவர்கள் இனியாவது ஒதுங்கியிருந்து சட்டஆலோசனை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

இதுதான் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஒருமித்த கருத்து.

இதுவே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணக்கருத்துமாகும்!

- சேரமான்

http://www.pathivu.com/index.php/news/6798/68//d,view/

இவர்களால் மீள உருவாக்கப்பட முடியாத சர்வதேசக் கட்டமைப்பு ஒன்றை உருத்திரகுமார் அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார். அதைத் தட்டிப் பறித்து என்ன செய்யப் போக்கிறார்கள் ? தாங்கள் பதவியில் இருக்க வேண்டும், சட்ட ஆலோசனைகளை மட்டும் வேறொருவர் செய்ய வேண்டுமாம். நல்ல கொள்கை. மீண்டும் சர்வதேச அரங்கில் தடையைப் பெற்றுத் தராமல் இருந்தால் சரி.

தோத்து போனவர்களுக்கும் KPக்கும் இண்றுவரை இருந்த தொடர்பும் உண்மைதானே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கதியும் பதிவும் தமிழ்த் தேசிய விரோத ஊடகங்கள் எண்டத தமிழர்கள் விரைவில் உணரவேணும்............................. இல்லாட்டி ஒளிஞ்சிருந்து வீரமுஇ பேசுறவை விடுதலப் போராட்டத்த சீரழிச்சிடுவினம். நெஞ்சில் உரமுமின்றி............. நேர்மைத் திறனுமின்றி.......... வஞ்சனை செய்வாரடி.................... எண்டு பாரதித்தாத்தா எப்பவோ சொல்லி வைச்சிட்டுப் போட்டார்......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியை இவ்வாறு உரிமை கோருவது அழகல்ல.தமிழ்தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களையும் தடுமாறாமல் வேகமும் விவேகமும் அறிவும் எமது பிரச்சனைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய மொழியாளுமை உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.அத்துடன் இன்னொன்றையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகத்தையும் தமிழர்களையும் பிரதேச வேறுபாடு காட்டி பிரிக்க முடியாது என்பதை புலத்தில் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மக்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயானந்த மூர்த்தியை அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்ததன் மூலம் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

இவர்களால் மீள உருவாக்கப்பட முடியாத சர்வதேசக் கட்டமைப்பு ஒன்றை உருத்திரகுமார் அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார். அதைத் தட்டிப் பறித்து என்ன செய்யப் போக்கிறார்கள் ? தாங்கள் பதவியில் இருக்க வேண்டும், சட்ட ஆலோசனைகளை மட்டும் வேறொருவர் செய்ய வேண்டுமாம். நல்ல கொள்கை. மீண்டும் சர்வதேச அரங்கில் தடையைப் பெற்றுத் தராமல் இருந்தால் சரி.

இந்த வெற்றியை இவ்வாறு உரிமை கோருவது அழகல்ல.தமிழ்தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களையும் தடுமாறாமல் வேகமும் விவேகமும் அறிவும் எமது பிரச்சனைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய மொழியாளுமை உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.அத்துடன் இன்னொன்றையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகத்தையும் தமிழர்களையும் பிரதேச வேறுபாடு காட்டி பிரிக்க முடியாது என்பதை புலத்தில் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மக்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயானந்த மூர்த்தியை அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்ததன் மூலம் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட உங்கட கருத்துதான் எனதும்...

  • தொடங்கியவர்

தோத்து போனவர்களுக்கும் KPக்கும் இண்றுவரை இருந்த தொடர்பும் உண்மைதானே...??

தோற்றுப்போனவர்கள் ....??????? உண்மைதான், தொடர்பு தலையிலிருந்து அடிவரை இருந்தது!!! .... இறுதி நேரமும் கே.பியை கொண்டுதானாம் கதைத்துக்கொண்டிருந்ததாம் சிங்களம்!

  • தொடங்கியவர்

இற்றுவரை இச்சர்வதேச செயலகத்தின் செயற்பாடுகள் ... அதிசயிக்கத்தக்கன! எல்லோரையும் உள்ளுக்குள், அந்த அந்த நாட்டினுள் தள்ளுகிறார்கள்!! ... அதைவிட இவர்களின் அரசியல் இவர்களிடம் அகப்பட்டிருக்கும் நிதிகளையும், ஏறி தாமே அமர்ந்த கதிரைகளையும் பாதுகாக்கவே!!! .... இன்று இந்நிதிகளீல் எவ்வாறு அவரவர் சுற்றுகிறார்கள் என்பது பற்றிய செய்திகளை, இவர்களே வெளியிட்டும் கொண்டிருக்கிறார்கள்.

இன்று வரை செய்ததும் ஒன்றுமில்லை, இனியும் ஒன்றும் செய்யப்போவதுமைல்லை!!! ... அடித்ததையும், இனி அடிக்க இருப்பதையும் எடுத்துக் கொண்டு ஒதுங்குவதுதான் இன்று அங்குள்ள மக்களுக்கு இவர்கள் செய்யக்கூடியது!

தோற்றுப்போனவர்கள் ....??????? உண்மைதான், தொடர்பு தலையிலிருந்து அடிவரை இருந்தது!!! .... இறுதி நேரமும் கே.பியை கொண்டுதானாம் கதைத்துக்கொண்டிருந்ததாம் சிங்களம்!

சில உண்மைகள் வெளிவருவது கடினமாக தான் இருக்கிறது... 2002 ம் ஆண்டு முதன்மை பொறுப்பில் இருந்து நீக்கப்பட KP கடைசி யுத்த காலத்தில் தனக்கு இருந்த தொடர்புகளை (முக்கியமாக RAW) வைத்து கொண்டு அவர்களுடன் பேசுவதுக்கு வாய்ப்பு வந்து இருக்கிறது அனுமதியை வாங்கி தருமாறு வேறு ஒருவர் மூலம் தலைவருக்கு செய்தியை அனுப்பி வைக்கிறார்... அதன் பிரகாரம் சில தொடர்புகளை தலைமைக்கும் ஏற்படுத்தி கொடுத்து இருந்தார்... அதனால் தலைவர் அவருக்கான அனுமதியை கொடுத்து ஒரு கடிதமும் வரைந்து கொடுத்தார்...

கடைசி வரைக்கும் தலைவரின் நோக்கம் என்ன என்பதை நாடி பிடிக்க போரை முன்நிண்று இயக்கிய இன்னும் ஒரு நாட்டுக்கு KP பயன் பட்டார் எனும் உண்மை காலம் கடந்துதான் தெரிய வந்தது... இந்த உண்மைகள் வெளிவருவதில் காலம் கடந்து போகலாம் ஆனால் KP யாரிடம் தலைவரிடம் அனுமதி கேட்டாரோ ( அவர்கள் இப்போ இராணுவ பிடியில் கூட இருக்கலாம்) அவர்கள் உயிரோடைதான் இருக்கிறார்கள்...

Edited by தயா

இவர்களால் மீள உருவாக்கப்பட முடியாத சர்வதேசக் கட்டமைப்பு ஒன்றை உருத்திரகுமார் அவர்கள் உருவாக்க முயற்சிக்கிறார். அதைத் தட்டிப் பறித்து என்ன செய்யப் போக்கிறார்கள் ? தாங்கள் பதவியில் இருக்க வேண்டும், சட்ட ஆலோசனைகளை மட்டும் வேறொருவர் செய்ய வேண்டுமாம். நல்ல கொள்கை. மீண்டும் சர்வதேச அரங்கில் தடையைப் பெற்றுத் தராமல் இருந்தால் சரி.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை தவறான சக்திகளிடம் விலைபேசுவதற்கும், சூரியத்தேவனுக்கு சவால்விடுக்கும் வகையில் தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடுவதற்கும் இதுவரை முற்பட்டவர்கள் இனியாவது ஒதுங்கியிருந்து சட்டஆலோசனை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

என்ன படுமுட்டாள இருக்கறார் முடிச்சால் ஒன்றுபடுவதற்கு முயற்சி பண்ணவும் அதன்பிறகு அரசு அமையுங்கோ தமிழர்களுக்கே பேசித்தீர்க்க முடியாதவர்கள் இவர்களா? எமக்காக போராடுபவர்கள் வாய் வீரத்தால் போராட்டத்தை நசுக்கிவிட்டு அந்த தன்னிகரில்லாத தேசியத்தலைவனை இணைத்து கதைப்பது வேடிக்கையாகவுள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது இவர்களுக்கு வேண்டும் பதவிதான் அவர் சட்ட ஆலோசனையை மட்டும் போதுமானால் ஏன் அவர் தலைமையை ஏற்கமுடியாது

இதற்கு காரணமானவர் விரைவில் மக்கள் முன் அறியப்படத்தப்படும்

Edited by suryaa

சரியாக சொன்னீர்கள்! நாலு பேருடன் நாலு வார்த்தை கதைக்கத் தெரியாததுகளும், சேர்த்தவற்றை சுற்றுபவர்களும் தலைவராகலாம்!! நாலு எழுத்து படித்து, நாலு மனிதர் மதிக்கும் ஒருவர் எப்படி எமக்கு தலைமை தாங்குவது??

இந்த வெற்றியை இவ்வாறு உரிமை கோருவது அழகல்ல.தமிழ்தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களையும் தடுமாறாமல் வேகமும் விவேகமும் அறிவும் எமது பிரச்சனைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய மொழியாளுமை உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.அத்துடன் இன்னொன்றையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகத்தையும் தமிழர்களையும் பிரதேச வேறுபாடு காட்டி பிரிக்க முடியாது என்பதை புலத்தில் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மக்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயானந்த மூர்த்தியை அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்ததன் மூலம் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெயானந்தமூர்த்தி கோஷ்டி நாடு கடந்த அரசை குழப்புறதிற்கு எண்டே போட்டியிட்டதுகள். அதுக்குள்ள உந்த சோரமான்( தமிழ்நெற் ஜெயச்சந்திரன்) ஜெயானந்தமூர்த்தியை தலைவராக்க போறாராம். நாடு கடந்த தமிழீழ அரசு உருப்பபட்டமாதிரித்தான். எந்த மொழியில ஜெயானந்தமூர்த்தி வெளிநாட்டு இராதந்திரிகளோட பேசப்போறார். நாடு கடந்த அரசை குழப்புறவங்களுக்கு என்னத்துக்கு மொழி அறிவு அரசியல் அறிவு.

உருத்திரகுமார் தலைமையிலான அரசியல் ஆளுமை மிக்க குழுவினால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்ற நல்ல திட்டம் ஜெயானந்தமூர்த்தி போன்றதுகளின் கைகளில் போனால் எப்பிடி இருக்கும் எண்டு யோசிச்சு பாருங்கோ. குரங்கின் கைபூமாலை.

தமிழன உருப்பட விடமாட்டாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.