Jump to content

இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?


இடியப்பத்துடன் சாப்பிட சிறந்தது எது?  

55 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு.. :P

அடடா அப்படி இல்லை .. இங்கு கிடைக்கும் சொதியிலும் பார்க்க சம்பல் நல்லது என்றேன்.. கடைசாப்பாடு தான் அதிகம் ...ஆனால் நான் இடியப்பம் சாப்பிட மாட்டனே .. வீட்டிலை இடியப்பம் எல்லாம் அவிப்பது இல்லை . இடியப்பம் சாப்பாடு என்றால் கடை தான் , அவ்வளவு மலிவாக இங்கே கிடைக்கும் ( 50 இடியப்பம் $3-$5).மற்றும் படி கடைச்சாப்பாடு நல்லா தான் இருக்கு. அது தான் மக்டோனால் , கே.எவ்.சி , சப்வே, வெண்டிஸ் என்று மற்ற உணவகங்களில் சாப்பிடுவதிலும் பார்க்க எங்கள் உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் அவ்வளவு கூடாதவை அல்லவே.. அத்தோடு மிக மிக குறைந்த விலையில் எங்கள் உணவு தேவையையும் பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கின்றனவே. கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் . :lol:

  • Replies 154
  • Created
  • Last Reply
Posted

அட பாவிகளா இடியப்பத்துக்கே வோட்டா.. எனக்கு பிடிக்காதா உணவே இடியப்பம் தாப்பா.. ஒவொரு நாளும் சாப்பிட்டு சாப்பிட்டே அலுத்து போச்சு ..

முன்னர் இடியப்பம் சொதியோடு தான் சாப்பிடுவேன் அம்மா அவிச்சு தரேக்கை அதானால் சொதிக்கு தான் என் வாக்கு . :lol:

இடியப்பத்தை பிடிக்காது என்று அறிக்கைவிட்ட கவிதனை

அகில உலக இடியப்ப ரசிகர் மன்றம் சார்ப்பாக மிகவும்

வன்மையாக கண்டிக்கிறோம்.. :evil: :evil:

ஆனாலும் அவர் முன்னர் இடியப்பங்களை விரும்பி

சாப்பிட்டதாலும்...சொதிக்கு வாக்களித்ததாலும் திருந்துவதற்கு

சந்தர்ப்பம் கொடுத்து போராட்டத்தை மீளப்பெற்றுக்கொள்கிறோம்.. :lol: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இடியப்பத்தை பிடிக்காது என்று அறிக்கைவிட்ட கவிதனை

அகில உலக இடியப்ப ரசிகர் மன்றம் சார்ப்பாக மிகவும்

வன்மையாக கண்டிக்கிறோம்..

ஆனாலும் அவர் முன்னர் இடியப்பங்களை விரும்பி

சாப்பிட்டதாலும்...சொதிக்கு வாக்களித்ததாலும் திருந்துவதற்கு

சந்தர்ப்பம் கொடுத்து போராட்டத்தை மீளப்பெற்றுக்கொள்கிறோம்.. .

_________________

தல தீர்ப்பை மாத்திச்சொல்லுங்கள் என்று வரப்போறாங்க. கொடிபிடிச்சே ஆகவேணும். கவிதன் இப்படிச்சொன்னாப்பிறகு இடியப்பம் என்ன பாடுபடும். :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு..

_________________

அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:

கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் .

ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: :P

Posted

இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. :lol:

அடப்பாவிகளா இப்படி வேறை நடக்குதா.? முதல் வேலையா அம்மாக்கு சொல்றது சம்பலைக்கட் பண்ணுங்க என்று. கெட்ட பழக்கம். :evil: வாறன் வாறன். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இடியப்பமும் (களவாகப்பிடித்த) கோழிக்குழம்பும்தான் ருசி!

அதுக்கு நிகர் வேறெதுவுமில்லைங்கோ! இது தாய்நிலத்திலைமட்டும்தான் சாத்தியம்.

இங்கென்றால் இடியப்பமும் சாம்பாரும்தான் ருசி!

Posted

அக்கா என் அம்மா கேட்கிறா உன் அக்காட்டை கேட்டு வா எப்படி சம்பலை கட் பண்ணுவது என்று? கத்தியா அரிவாளா பாவிக்கிறதுன்னு கேட்கட்டுமாம். :wink:

Posted

இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள்.

ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அம்மாவும் சேந்தா. அப்ப இது சரி வராது. உலகம் பூராவும் சம்பலுக்கு தடை போடிறதைத்தவிர. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம் சில சமயம் சீனியுடனும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், நல்லாத்தான் இருந்துச்சு. பால் விட்டு புட்டுடன் சீனி போட்டு சாப்பிட நல்லா இருக்கும் (இருந்தது)

புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:

Posted

இடியப்பம் முதல்ல மெதுமெதுவென பதமா இருக்கணும்.. கருக்கு மட்டை மாதிரி மொறுமொறுவென இருந்தா சொதீக்கைதான் ஊறவைச்சு அதக்கணும்.. :P

ம் சில நேரத்தில அதுவும் கடை இடியப்பம் ப்ரிஜில் வச்சு எடுத்த பிறக்கு மென்மையா இல்லாட்டா சொதியில ஊற வச்சு தான் அதக்கணும் அல்லது அடிக்கணும்.

வெள்ளை இடியப்பத்துக்கு சாம்பாறு நல்லா இருக்கும்

Posted

புட்டை இடியப்பம் சீனியோட சாப்பிட சரிவராது. பல்ப்புட்டு என்றால் வாழைப்பழத்தோட சாப்பிட நல்லது தனியசீனி என்டா சாப்பிடாமலே விடலாம். :? :evil:

பால் புட்டு சீனியோட தனியாவோ அல்லது பாலும் சீனியும் சேர்த்தோ சாப்பிட நல்லா இருக்குமே?

இந்த மலையாளிகள் வித விதமா புட்டு அவிப்பாங்க, வெல்ல புட்டு சம்பல் புட்டு கறி புட்டு என்று நிறைய வகையா எல்லாமே ருசிச்சு கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.

இடியப்பம் அம்மா முழுவதும் அவிச்சு முடிந்து கறி வைப்பதற்கு முதலே கொஞ்சத்தை எடுத்து சீனியோட சாப்பிட்டிருக்கன், டேஸ்டா தான் இருந்துச்சு. கனக்க சாப்பிட முடியாது என்பது உண்மை தான்

Posted

இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:

Posted

இடியப்பத்திற்கு சொதியும் சம்பலும்தான் நல்லம் இப்படியொரு கொம்பினேஷன் போடாமல் கருத்துகணிப்பெல்லாம் தேவையா வசி அண்ணா :evil: உருளைக்கிழங்கு பிரட்டலையும் விட்டுட்டீங்களே அதுவும் என்ர பேவரைட் :roll:

ஓய் என்ன லொள்ளா?? :evil: :evil: :evil: எதுக்கு இங்க வாக்கெடுப்பு நடக்குது ஆ? இடியப்பத்துக்கு எது சிறந்ததெண்டா? அல்லது நித்திலாக்கு எது பிடிக்குமெண்டா?? விட்டால் உங்களுக்கெண்டு தனிய பிறிம்பா ஒரு ஜனாதிபதிதேர்தல் வைப்ப சொல்லுவீங்க போல... :evil: உருளைகிழக்கு பிரட்டல் வாழைக்காய் வறுவல் எண்டுபுட்டு.. ஒழுங்கா சமைக்கத்தெரியாது கதைக்கவந்திட்டாங்கள்.... :evil: :wink: :P

Posted

இடியப்பத்துக்கு சம்பல் தானுங்க நல்லம். தொட்டு சாப்பிட்டு விட்டு கையை ரிசுவில் துடைச்சிட்டு கீபோர்டில் ரைப்பண்ணலாம். எழும்பி போயெல்லாம் கழுவத்தேவையில்லை. :lol:

அடப்பாவமே கவனம் கையை கண்ணுக்கை வச்சுடாதீங்க எரியப்போகுது :P :P

Posted

வசம்பு அண்ணா எழுதியது:

சங்கீத் நீங்கள் தண்ணிச்சம்பலென்று குறிப்பிடுவது நான் நினைக்கறேன் சட்னியை என்று. சட்னி இட்லியுடன் அல்லது தோசைக்கு சுப்பர்

இல்லை அண்ணா அம்மியில் அரைச்ச சம்பலை சொன்னேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அம்மியில் அரைத்த சம்பலைவிட. கட்டைச்சம்பல் தான் நல்லம். அருவல் நொருவலா இடிச்ச சம்பல் தான் பிட்டுக்கும் சரி இடியப்பத்திற்கும் சரி. செய்து சாப்பிட்டிட்டு அனுப்பிவிடுங்க யாராவது செய்முறை தரலாம். :wink:

Posted

சொதி என்றால் நினைவுக்கு வருவது இடியப்பம்

அப்படி பார்த்தால் இடியப்பத்துக்கு சொதிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சொதி என்றால் நினைவுக்கு வருவது இடியப்பம்

அப்படி பார்த்தால் இடியப்பத்துக்கு சொதிதான்.

ஓகே மைண்ட் .. அப்ப இடியப்பம் என்றால் என்ன நினைவுவருகுது ஆ.. :wink: :lol:

Posted

ஓகே மைண்ட் .. அப்ப இடியப்பம் என்றால் என்ன நினைவுவருகுது ஆ.. :wink: :lol:

இடியப்பத்தை நினைத்தால் கவிதன் நினைவுக்கு வாறார் :P :P :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:

ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: :P

அங்கைதான் கூட சாப்பிடுறது அவை ஏன் பிறியா தரணும் ஆ... அவர்கள் உணவின் தரம் , உபசரிப்பு , வேகம், உணவு வகைகளின் எண்ணிக்கை, என்று பல செயற்பாடுகளில் அவர்கள் முன்னோடிகளாக உள்ளார்கள். அத்தோடு அவர்கள் ஈழ உணவுவகைகளை வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பிரபலமாக ஆக்கியிருக்கிறார்கள். என்பன போன்ற விடயங்களை வைத்து கூறினேன் ஆக்கும் . ம்ம் நீங்களூம் தான் இருக்கிறியள் ஒரு பிறீ சாப்பாடு அனுப்பினியளா.. ஆ ஆனால் உங்களை பற்றி நல்லா சொல்லலையா. :wink: :lol:

Posted

கணவாய்க்கறி செல்லி வேலையில்லை

குறுக்ஸ் இது புட்டுக்குத்தான் தூக்கும் இடியப்பத்துக்கு சொதிதான் நல்லம் இனி செய்யுறதும் லேசுதானே பத்தாமப் போனா சுடுதண்ணியை ஊத்திவிட்டாச் சரி

யாராவது திருகோணமலையிலை சாம்பல்தீவு எண்ட இடத்துக்குப் போயிருக்கிறீங்களா அங்கு வருடத்தில் ஒருநாள் பொங்கல் (வேள்வி ) நடக்கும் இரவு எண்டபடியால் அங்குள்ள சிறு சிறு பெட்டிக்கடைகளில் குழல் புட்டும் பலாப்பழமும் (சுளையாக எடுத்து) குடுப்பார்கள் இலையிலை வாங்கி அந்த கடற் கரை மணலில்; சும்மா சைட்டுகளோடு (நண்பர்கள் ) இருந்து சாப்பிட்டா சும்மா..............வார்த்தையே யில்லையப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.