Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம்

அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது.

இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுஇ

‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான் உருத்திரகுமாரனுக்கு எதிராக போட்டியிட்டதாகவும் பின்னர் போட்டியில் இருந்து ஒதுங்கி அவரைத் தேசியத்திற்கான தலைவராக்கினேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இச்செய்தியில் உண்மைக்குப் புறம்பான சில தவறுகள் எழுதப்பட்டுள்ளன.

உருத்திரகுமாரனை அமெரிக்காவில் இருந்து சிலர் தலைவராக பிரேரித்தபோது என்னை லண்டனில் இருந்து சிலர் பிரேரித்தனர்.

ஆனால் ஒரு பதவிக்கு இருவர் போட்டியிடுவதென்றால் ஐனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவிலும் ஜெனிவாவிலும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

லண்டனில் மாத்திரம் மூவர் தவிர ஏனைய 11 பேர் எனக்கு ஆதவவாக வாக்களித்தனர்.

எனவே ஐனநாயக முறைப்படி இத்தலைவர் தெரிவு இடம் பெறவில்லை.

அப்படி இடம் பெறுவதென்றால் ஏனைய இரு இடங்களான அமெரிக்கா, ஜெனிவா போன்ற இடங்களிலும் லண்டனைப் போன்று உறுப்பினர்களின் வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே இத்தலைவர் பதவி என்பது உத்தேச இடைக்கால பணிக்குழுவுக்கானதே தவிர தேசியத்திற்கானதல்ல.

தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே.

எனவே நான் தேசியத்திற்கான தலைவராக உருத்திரகுமாரனை தெரிவு செய்தாக குறிப்பிடப்பட்டுள்ளதை நான் மறுக்கின்றேன்.

நன்றி

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Edited by aathirai

ஜெயானந்தமூர்த்திக்கு தட்டிப்போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வமாக அவர்களால் அப்படி அறிவிக்கப்பட்டதா??

ஒரு சிறந்த ஊடகவியாளரான திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தமிழ்வின்னில் வந்த கட்டுரையை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வாறன மடல் வரைந்திருப்பது நாகரீகமாகத் தோன்றவில்லை. தமிழ்வின் என்பது ஒரு வியாபாரத் தளம். தங்களின் வருவாயிற்காகத் தினம் செய்தி போட வேண்டும் என்பதற்காகச் சிங்கள அரசு போடுகின்ற செய்தியையும் போடுவார்கள். நம்மவர்களின் செய்தியையும் போடுவார்கள்.

ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு கண்ட மேனிக்கு வசைபாடுவது எம்மை ஒன்றும் வலுப்படுத்தப் போவதில்லை. ஏன் நீங்களாக பிரிவினையையும், மனக்கசப்புக்களையும் ஊக்குவிக்கின்றீர்கள்?? இது எவ்வகையில் எம்மைப் பலப்படுத்தப் போகின்றது??

ஜெயானந்தமூர்த்தி சிறந்த ஊடகவியலாளர் என்பது உலகத்தில மிகச்சிறந்த பகிடி. ஜெயானந்தமூர்த்தி எந்த ஊடககல்வி நிறுவனத்தில படிச்சவர். அவர் ஒரு ஆரம்பவகுப்பு ஆசிரியர் அவ்வளவுதான். சிவராமின்ர புண்ணியத்தால கருணாவோட ஒண்டா படிச்ச அவன்ர ஒரே ஊரவன் என்ற செல்வாக்கில எம்பியாகினவர்தான் இந்த ஜெயானந்தமூர்த்தி. இவர் இருக்கிற இடமெல்லாம் குழப்பத்தைதான் கொண்டுவருவார். நல்லகாலம் இவர் இப்ப தமிழ்தேசியக்கூட்டமைப்பில இல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட கண்ட நாய் எல்லாம், முழக்கம் அது இது என்று பேப்பர் நடத்தும் போது, ஜெயானந்தமூர்த்தி இருக்கக்கூடாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு சகுனம்.

நாடு கடந்த அரசாங்கத்;தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ராம்ஸே கிளார்க் (82) தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது "உங்களுடைய சவால் மிகப் பெரியது. சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான் செயற்படுகீறீர்கள் என்பதை மற்றையவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அது மட்டுமன்றி உங்களுடைய வரலாற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாற்றுணர்வு கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். அத்தோடு ஒரே தீவில் வாழ்கின்ற சிங்கள மக்களை விட வேறுபட்ட தனித்துவமான மக்கள் என்பதனைப் புரிந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அத்தோடு "உங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து கொள்ளுங்கள். வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையோடும் ஒன்று சேருங்கள். நீங்கள் உடன்பாடு கண்ட நோக்கத்திற்காக அணிதிரளுங்கள். நீங்கள் அதனை அடைவீர்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by kalaivani

2004 தேசியத் தலைவரின் படத்தை அடித்து உடைத்துவிட்டு பின்னர் பிளேட்டை மாற்றிய சந்தர்ப்பவாதி தேசியத்தலைவர் பற்றி கதைக்குது கருணாவுக்கும் இந்தக் கனவானுக்கும் தற்போதுள்ள தொடர்பு மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு தெரியும்.நாடுகடந்த அரசை உடைக்க கருணாமூலம் இந்தக் கனவானிடம்; இரகசிய பேரம் பேசப்பட்டதையும் நாங்கள் அறிவோம்.

ஊரிலை இருந்தா இவருக்கு ஆபத்து எண்டதெல்லாம் சும்மா பீலா? கருணா நான் வெருட்டுறமாதிரி வெருட்டுறன் நீ பயப்பிடுறமாதிரி நடிச்ச குட்டையை குழப்பு என்று அனுப்பப்பட்ட ஆள்தான் இந்தக் கனவான்

Thalapathi Ram in the Jungle with Nakkeeran Reporter

ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.

2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்'' என்கிறார்.

உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திரிகோண மலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரி விக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில் படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.

விடியற்காலை நேரத்தில் திரிகோண மலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டிய னை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணு வத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல் கிறது. உள்ளே இருந்த இளை ஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர் களும் பதிலளித்துக் கொண்டே பயணிக் கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ""அது எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. இறங் கியவுடன், "வாருங்கோ..' என்றபடி என்னை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தி யான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர் கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச் சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது '' என்கிறார்.

காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனதைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது. அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்த படியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்பு களில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப் பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையி லேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

""நீங்க எங்களை மன்னிக் கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்'' என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ""ரொம்ப நன்றிங்க அய்யா... ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்'' என்கிறார்கள் புலிகள்.

பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியி லேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ""தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ'' என்கிறார் ஒரு புலி. ""சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்'' என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ""எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது'' என்கிறார்கள் புலிகள்.

அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார் கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டி யனை நோக்கி வேகமாகவும் கம்பீர மாகவும் வருகிறது அந்த உருவம்.

நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக் கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ""வாருங்கோ... வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்'' என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.

புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளை கள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது. முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப் போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.

பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ""யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்.

எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.

செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்து வது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கு வது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல் படுவோம்.

சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்.

(நேர்காணல் வரும் இதழில்)

-பிரகாஷ்

:lol::):(

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் வாக்களித்த மக்களை கைவிட்டு ஓடிவந்து லண்டனில் அசைலம் அடிக்க அல்ல தலைவரும் மக்களும் இவர்களை எல்லாம் பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

உருத்திரகுமார் அண்ணன் தலைவரோடு நெருங்கிச் செயற்பட்டவர் மட்டுமன்றி அவரின் வரவிற்காக பேச்சுக்களைக் கூட தள்ளிப்போட்ட நிகழ்வுகளும் இருந்தன. தலைவருக்கு நல்ல சட்ட ஆலோசகராக இருந்தவர் உருத்திரகுமார் அண்ணன். அதுமட்டுமன்றி தலைவரால் அனைத்துப் பேச்சுக்களிலும் பங்கேற்கச் செய்யப்பட்டவர். நல்ல அனுபவசாலி. அவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பொறுப்பை ஒப்படைப்பதே தற்போதைய சூழலில் சிறந்தது.

அதைவிடுத்து எனக்கு அதிகம் விருப்பு வாக்கு உனக்கு அப்படியில்லை என்று ஜனநாயகம் பேசிக்கொண்டிருக்க அல்ல நாடு கடந்த தமிழீழ அரசு என்பது. நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயகத்தன்மை பேணப்படுவது இனங்காட்டப்பட வேண்டிய அதேவேளை தமிழீழத் தனியரசுக்கான உலக அங்கீகாரம் நோக்கி ஒற்றுமையோடு செயற்படுவதே முக்கியம்.

ஜெயானந்த மூர்த்தி இனியாவது குழப்பவாதியாக இருக்காமல் கொள்கைக்கும் செயற்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் முக்கியமளித்துச் செயற்பட வேண்டும். இன்றேல் இவரை மக்கள் தூக்கி வீச அதிக நேரம் எடுக்காது. நாடு கடந்த தமிழீழ அரசு தலைமைப் போட்டிக்குரிய இடமல்ல.. என்பதை முதலில் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது அசைலம் அடிக்கும் விடயமல்ல..!

Edited by nedukkalapoovan

நல்லதொரு சகுனம்.

10000000000000000000000000000000000000000000000000000000000 green points

  • கருத்துக்கள உறவுகள்

10000000000000000000000000000000000000000000000000000000000 green points

இன்றைய சூழலில் இணையத்தில் எவரும் இப்படி ஜெயானந்தமூர்த்தி சொன்னார் என்று எழுதிப் போடலாம். குழப்பவாதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசை முறியடிக்க சிங்களம் படாதபாடு படுகிறது. எனவே மக்கள் மட்டுமன்றி எல்லோரும் அவதானமாக இருந்து செயற்பட வேண்டும்.

ஜெயானந்தமூர்த்தி தப்பித்தவறி இப்படி எழுதி இருப்பாரானால்.. அதற்கு சரியான பதில் எங்கள் முன்னைய கருத்தில் இடம்பெற்றுள்ளது. மற்றும்படி ஜெயானந்தமூர்த்தி உட்பட எவருமே இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்பதுதான் மக்களின் விருப்பம்.

Thalapathi Ram in the Jungle with Nakkeeran Reporter

ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில் லை. கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. ""முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில், விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை'' என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாண்டி யன். அரசியல் பத்திரிகை வட்டாரங்களில் அறியப் பட்டவரான இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் இலங்கைக்குப் பயணம் செய்தவர்.

2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்'' என்கிறார்.

உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திரிகோண மலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரி விக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில் படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.

விடியற்காலை நேரத்தில் திரிகோண மலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டிய னை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணு வத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல் கிறது. உள்ளே இருந்த இளை ஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர் களும் பதிலளித்துக் கொண்டே பயணிக் கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ""அது எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. இறங் கியவுடன், "வாருங்கோ..' என்றபடி என்னை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தி யான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர் கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச் சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது '' என்கிறார்.

காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனதைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது. அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்த படியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்பு களில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப் பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையி லேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

""நீங்க எங்களை மன்னிக் கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்'' என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ""ரொம்ப நன்றிங்க அய்யா... ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்'' என்கிறார்கள் புலிகள்.

பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியி லேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ""தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ'' என்கிறார் ஒரு புலி. ""சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்'' என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ""எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது'' என்கிறார்கள் புலிகள்.

அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார் கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டி யனை நோக்கி வேகமாகவும் கம்பீர மாகவும் வருகிறது அந்த உருவம்.

நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக் கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ""வாருங்கோ... வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்'' என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.

புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளை கள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது. முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப் போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.

பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ""யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்.

எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.

செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்து வது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கு வது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல் படுவோம்.

சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்.

(நேர்காணல் வரும் இதழில்)

-பிரகாஷ்

:lol::):(

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊ

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம்

அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது.

ஒரு தரப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியம் என்ற வரைவை எல்லாமக்களும் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியத் தமிழர்கள் புலிகள் தலைவர் பிரபாகரனையோ இல்லை உருத்திரகுமாரனையோ தமது தேசியத் தலைமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியத்துள் இல்லை. வரைவில் வடகிழக்கு நிலப்பரப்பை தேசிய அலகாக கொண்டுள்ளபோது மலையகத் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் அவசியத்தில் இல்லை. வடகிழக்கில் இருப்பவர்களே பல்வேறு விதமான கருத்து முறண்பாட்டாலும் தனித்துவமான கருத்தாலும் பிரதேசவாத சிந்தனை நிமிர்த்தமும் தேசிய வரைவையோ அதற்கான தலைமைகளையோ ஏற்றது கிடையாது. இங்கே கலைவாணி இணைத்த கருத்துக்கு ஒரு சிவப்பு புள்ளியை ஒருவர் குத்தியிருக்கின்றார்.

நாடு கடந்த அரசாங்கத்;தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ராம்ஸே கிளார்க் (82) தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது "உங்களுடைய சவால் மிகப் பெரியது. சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான் செயற்படுகீறீர்கள் என்பதை மற்றையவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அது மட்டுமன்றி உங்களுடைய வரலாற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாற்றுணர்வு கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். அத்தோடு ஒரே தீவில் வாழ்கின்ற சிங்கள மக்களை விட வேறுபட்ட தனித்துவமான மக்கள் என்பதனைப் புரிந்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அத்தோடு "உங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து கொள்ளுங்கள். வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையோடும் ஒன்று சேருங்கள். நீங்கள் உடன்பாடு கண்ட நோக்கத்திற்காக அணிதிரளுங்கள். நீங்கள் அதனை அடைவீர்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் பிரச்சனை இந்தக் கருத்தோடு ஒன்றிப்போய்த்தான் இருக்கின்றது. இந்தக் கருத்தில் உள்ள விசயங்கள் சாத்தியமில்லாதபோதே அகிம்சைப் போரும் ஆயுதப்போரும் வெற்றியை இழக்கின்றது. இதே தடத்தில் பயணிப்பது தான் நாடுகடந்த அரசும். இனத்தை முன்வைத்து தேசியம் என்ற கருத்து நிலையும் உணர்வையும் ஒன்றாக நாம் கருதுவது ஏக மக்களையும் உள்ளடக்கியதில்லை. முரண்பாடுகளை களைந்த நிலையில் இல்லை. இது ஒரு குறுகிய வட்டக் கருத்து நிலை என்பதை ஏற்று அதை ஏக மக்களுக்கும் பொதுவானதாக மாற்றவேண்டும் பின்னர் அதை தனித்துவமானதாக வளர்க்க வேண்டும். இது இரண்டையும் குப்பையில் போட்டுவிட்டு எமக்கும் விலகிநிற்பவர்களுக்கான தேசியமும் இதுதான் என்றும் அதறக்கு நான் நீ தலைமை என்பதும் அதற்காக சண்டைபிடிப்பதும் எந்தக் காலத்திலும் எந்தப் பயனையும் தரமாட்டாததோடு எஞ்சி அங்காங்கே சிதறிக்கிடக்கும் சொற்ப தனித்துவமும் அழிந்து போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசின்ர அங்குரார்ப்பன நிகழ்வில பேசினவை கிறிஸ்தவ இந்து தமிழ்மக்களைத்தான் பிரதிநிதிப்படுத்திச்சினம்மாம், இஸ்லாமியர்களை விட்டிட்டினமாம். இலங்கையின்ர இரண்டாவது இனமா முஸ்லீம் இணம் மாறிக்கொண்டு வரேக்க (ஏற்கெனவே மாறீட்டதா கணக்கெடுப்பு சொல்லுது) நாடு கடந்தவை தமிழ் முஸ்லீம்களை புறக்கனிச்சிருக்கினம். சம்பந்தர் ஐயா ஹக்கீமோட அங்க சேந்து செயல்படப்போறதா சொல்லேக்க இங்க புறக்கணிச்சிருக்கினம். பதிவுக்கு ஜெயானந்த மூர்த்தியார் குடுத்த அறிக்கைய பாத்தா சைக்கில் ஓட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு. நேற்றைய நிகழ்வுகளில பறந்த புலிக்கொடியள் புலம்பெயர் நாடுகளில என்ன செய்திய சொல்லியிருக்கும்.... பழைய செய்திதான்.... சானல் 4 சொன்னதுகள உந்தக்கொடி காட்டிக்குடுத்தது எண்டதுதான் உண்மை. :lol:

ஐயா ஜெயானந்த மூர்த்தி அவர்களே ஏற்கனவே குழம்பிய நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நீங்கள் இப்படி

பதவி வெறி பிடித்து அலைவது ஏன்…? மக்கள் உங்களுக்கு வழங்கிய வாக்குகளை தவறாக தமிழ் மக்களை சிதைப்பதற்கு பயன்படுத்தக் கூடாது….. உந்த ஆளுக்கு உதுக்கா வாக்களித்தோம் என்று மக்களை புலம்ப விடாதீர்கள்..... .இலட்சியத்திற்காக போராடும் உருத்திர குமாரன்…. அவரது பற்றுறுதி ஆளுமையில் 2% கூட உம்மிடம் இல்லை….. உருத்திர குமாரனுடன் உங்களை தயவு செய்து ஒப்பிட வேண்டாம்...கருணாவின் மூலமாக சிங்கள அரசிற்கு ஆதரவாக புலனாய்வு வேலை செய்வதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது....அதை உண்மை ஆக்கி விடாதீர்கள்.....

மக்களுக்குத் தெரியும் உருத்திரகுமரன் யார் என்று…. என்ன கேவலமானது உங்கள் எண்ணம் தேசியத் தலைவரின் பெயரில் நாடகம் ஆட வேண்டாம்...உங்கள் கூத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.... தவறானவர்களின் பேச்சைக் கேட்டு தவறு செய்து விடாதீர்கள்.....

Edited by Rudran

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு தலைப்பில் எழுதியதை பொருத்தம் கருதி இணைக்கிறேன்.ஜெயானந்த மூர்த்தி தமிழில் பேசும் போதே குழப்பமாகப் பேசுவார்.பேச்சில் ஒரு ஒழுங்கபை;பு இருக்காது.நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் தமிழருடன் அரசியல் பேசுவதை விடுத்து உலக அரசியல் தலைவர்களுடன் பேச வெண்டம் அதற்குத் உருத்திரகுமாரன் தகுதியானவர்தான்.

நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒன்று.அது ஒன்றே இன்றைய நிலையில் வெளிப்படையாகச் செயற்படக் கூடிய நிலையில் உள்ளது.அதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் அரசியல்வாதிகளின் ஆதரவும் உண்டு.அதனை ஆதரிக்க அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.இது தன் நோக்கத்தில் வெற்றி பெறாது என்ற வகையில் கருத்துக் கூறுவதோடு அதனைக் குழப்புபவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள் என்றுதான் கருத வேண்டியுள்ளது.உண்மையில் தமிழ்மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பார்கள் நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் ஆதரவளிப்பார்கள்.நம்பிக்கையில்லாதவர்கள் ஒதுங்கி இருக்கலாம். சேரமான் ஏன் ஜெயானந்தமூர்த்தியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.ஜெயானந்தமூர்த்தியும் இது ஒரு அதி உயர்பீடமில்லை என்று பேசியிருக்கிறார். நம்பிக்கையில்லாவிட்டால் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கலாம்.மக்கள் அவரை தேர்ந்தெடுத்தது நாடுகடந்த அரசாங்கத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கே அதனைப் பிளவுபடுத்துவதற்கல்ல.கே.பியால் முன்மொழியப்பட்ட ஒரு விடயம் என்பதற்காக அதனைச் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது அழகல்ல.கேபி தற்போது சிறிலங்காவின் பிடியில் இருப்பதால் அவருக்கும் உருத்திரகுமாரனுக்கும் தொடர்பு படுத்தி சந்தேகப்படுவது நியாயமானதல்ல.கருணா சிறிலங்கா அரசுடன் சேர்ந்து கொண்டபொழுது யாரும் எப்படித் தலைவரைச் சந்தேகிக்கவில்லையோ அது போலத்தான் இதுவும். ஜெயானந்தமூர்த்தி தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்பியதாகவும் ஒரு இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன்.செய்தி உண்மையெனில் அவர் யாராலோ ஆட்டுவிக்கப் படுகிறார் என்றே அர்த்தம்.நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் பெரும்பாலும் தங்கள் அரசியலை பிற நாட்டவர்களுடன்தான் செய்ய வேண்டும்.அதற்கு தகுந்த சட்ட அறிவும் பல்மொழி ஆளுமையும் கொண்ட உருத்திரகுமாரனே பொருத்தமானவர்.தேசியத் தலைவர் பாலா அண்ணாவை எதற்கு அரசியல் மதியுரைஞராகத் (உருத்திரகுமாரனையும் தேர்ந்;தெடுத்திருந்தார்.)தேரந்தெடுத்திருந்தாரோ அதே காரணங்கள் உருத்திரகுமாரனுக்கும் பொருந்தும்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து-அதனை

அவன் கண் விடல்.

என்ற குறளுக்கேற்ப நடப்பதே நல்லது.

மிக முக்கியமான அரசியல் நகர்வொன்றை உலகத்தமிழினம் செய்த செய்தியை சங்கதி பதிவு போன்ற ஊடகங்கள் ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன என்றே தெரியவில்லை? தமிழர்பற்றிய ஒரு செய்தியாகத்தானும் இதனை என் போடவிi;லை. இவை தமிழர்களின் ஊடகங்களா?

0

தமிழ்த் தேசியத் தலைமையென்று இனியொருவரை அறிவிக்க முடியாது. இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. தேசியத் தலைமையென்பது பதவிநிலையில் இல்லாதது. அது உருத்திரகுமாரனாகவிருந்தாலும் ஜெயாநந்தமூர்த்தியாகவிருந்தாலும். தேசியத் தலைமைக்குரிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

கூட்டமைப்பிலிருந்தே வெளியேற்றப்பட்டவர் ஜெயானந்தமூர்த்தி. சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருப்பவர் உருத்திரகுமாரன். இவைகளைக் கடந்து தேசியத் தலைமை எங்கே நிலை கொண்டிருக்கிறது? மக்களிடம் தெளிவும் தெரிவும் உள்ளது. தமிழர்கள் சிந்திக்க முடியாதவர்களில்லை. பிரபாகரன் என்ற ஒரு நாமம் அதி சக்தி வாய்ந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.

இருந்தாலும் மறைந்தாலும் தேசியத் தலைமையென்பது ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியத் தலைமையென்று இனியொருவரை அறிவிக்க முடியாது.

இருந்தாலும் மறைந்தாலும் தேசியத் தலைமையென்பது ஒன்றுதான்.

இது எந்த மறைந்தாலும்? சூரியன் மாதிரியா? :)

தோன்றுதலும் மறைதலும் இயல்பு. அதில் இணையற்றதாயிருத்தல் மட்டுமே தமிழ்த் தேசியத் தலைமை. சூரியனும் அவ்வாறுதான். தோன்றும் போதும் அதற்கு இணையில்லை. மறையும் போதும் அதற்கு இணையில்லை.

2004 இல கருணாவின் பிழவு நேரத்தில கருணாவுக்குச் சார்பாக மேடைகளில் பேசி தேசியத் தலைவரின்ட கொடும்பாவிய எரிச்சு கருணாவின் கையாளா கருணாவால கள்ளவாக்குப் போட்டு நாடாளமன்றம் சென்றவர்தான் இந்த ஜயாணந்தமூர்த்தி. பிறகு கிழக்கில புலியள்ர கை ஓங்கி பொட்டர்ர பொடியள் மிரட்ட பயத்தில வன்னிக்கு ஓடி பிழைப்பு நடத்தினார். பேந்து வெளிநாடு வந்து சில சருகுப்புலிகளோட சேந்து பிழைப்புவாதம் நடத்தினார். இப்ப கிசோர் எம்பிய பிடித்து கொழும்பில இவர்ர பெயரில புலிகள் வாங்கியிருந்த வீட்ட பெரும் தொகைக்கு விற்க முனைகிறார். தம்பிமாரே ஜயாணந்தமூர்த்தி தேசியத்த வைத்து வியாபாரம் நடாத்திறார். பிழைப்பு நடத்திரார். ருத்திரக்குமார தேசியத்தலைவர் எண்டு யாருமே எங்கயுமே சொல்லேல்ல. ஆனா இவர் அப்ப்டிச் சொன்னதா தானே கதை கட்டி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். இதில இருந்தே இவர்ர பிழைப்பு

தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

எட்டி எட்டி எட்டி பார்த்து, எட்டாத பழம் கடுமையா புளிக்கும்!!!

ஜெயானந்தமூர்த்தி சிறந்த ஊடகவியலாளர் என்பது உலகத்தில மிகச்சிறந்த பகிடி. ஜெயானந்தமூர்த்தி எந்த ஊடககல்வி நிறுவனத்தில படிச்சவர். அவர் ஒரு ஆரம்பவகுப்பு ஆசிரியர் அவ்வளவுதான். சிவராமின்ர புண்ணியத்தால கருணாவோட ஒண்டா படிச்ச அவன்ர ஒரே ஊரவன் என்ற செல்வாக்கில எம்பியாகினவர்தான் இந்த ஜெயானந்தமூர்த்தி. இவர் இருக்கிற இடமெல்லாம் குழப்பத்தைதான் கொண்டுவருவார். நல்லகாலம் இவர் இப்ப தமிழ்தேசியக்கூட்டமைப்பில இல்ல.

2004 இல கருணாவின் பிழவு நேரத்தில கருணாவுக்குச் சார்பாக மேடைகளில் பேசி தேசியத் தலைவரின்ட கொடும்பாவிய எரிச்சு கருணாவின் கையாளா கருணாவால கள்ளவாக்குப் போட்டு நாடாளமன்றம் சென்றவர்தான் இந்த ஜயாணந்தமூர்த்தி. பிறகு கிழக்கில புலியள்ர கை ஓங்கி பொட்டர்ர பொடியள் மிரட்ட பயத்தில வன்னிக்கு ஓடி பிழைப்பு நடத்தினார். பேந்து வெளிநாடு வந்து சில சருகுப்புலிகளோட சேந்து பிழைப்புவாதம் நடத்தினார். இப்ப கிசோர் எம்பிய பிடித்து கொழும்பில இவர்ர பெயரில புலிகள் வாங்கியிருந்த வீட்ட பெரும் தொகைக்கு விற்க முனைகிறார். தம்பிமாரே ஜயாணந்தமூர்த்தி தேசியத்த வைத்து வியாபாரம் நடாத்திறார். பிழைப்பு நடத்திரார். ருத்திரக்குமார தேசியத்தலைவர் எண்டு யாருமே எங்கயுமே சொல்லேல்ல. ஆனா இவர் அப்ப்டிச் சொன்னதா தானே கதை கட்டி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். இதில இருந்தே இவர்ர பிழைப்பு

வீண்பழி சுமத்தத் தேவையில்லை. கருணாவிற்குச் சார்பாக ஜெயாநந்தமூர்த்தி பேசியது கிடையாது. ற்றையது பிரதேசவாதம் இந்தவிடையத்தில் முன்னெடுக்கப்படக் கூடாது. துரோகம் செய்தவர்கள் துரோகிகளாகக் கருதலாமேயொழிய தமிழர்கள் அதுவும் பிரதேசவாதப்படுத்தி அவர்கள்தான் துரோகிகள் எனச் சுட்டிக்காட்டுவது பிழையான கருத்து. கிழக்குப் பிரதேச இளையவர்கள் ஈழப் போராட்டத்தில் வகித்த பங்கு வட பிரதேச இளையவர்களின் பங்கிற்கு நிகரானதுதான்.

நமது தூரதிஷ்டம் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

இது பிரதேசவாதமல்ல. துரோகி எங்கே இருந்ததாலும் எங்கே பிறந்தாலும் பிழை எண்டா பிழைதான். கருணாவின் காலத்தில கருணாட சொந்த உரான கிரன் எண்ட இடத்தில தேசியத்தலைவரிட கொடும்பாவி எரிப்புச் சம்பவம் நடந்திருக்கு. அந்த கொடும்பாவி எரிப்புச் சம்பவத்த தலைம தாங்கி நடத்தினவர் இந்த ஜயானந்தமூர்த்திதான் என்டத எனது சில கிழக்கு நன்பர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அந்த நேரத்தில மாமாங்கம் என்ட இடத்தில நடந்த கூட்டத்திலயும் இவர் தேசியத்தலைவரை முட்டாள் என்று பேசி இருக்கின்ரார். அந்த நேரத்தில கிழக்கு பல்கலைக்கழகத்தில நடந்த சந்திப்பு ஒன்றிலையும் கருணாவை ஆதரிச்சு உரையாற்றி இருக்கிறார். ஒரு நன்பர் இல்ல பல கிழக்கு நன்பர்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். சந்தேகம் உள்ளவங்க கிழக்கைச் சேர்ந்த உங்கட தொடர்புகளிட்ட கேட்டுத் தெரிஞ்சுகொள்ளுங்கோ. நாடுகடந்த அரசு என்டது ஈழத் தமிழர் பெற்றெடுத்த ஒரு புதுக் குழந்தை. அதனை ஜயாணந்தமூர்த்தி போன்ற ஒருவரிட்ட கொடுத்தா சிம்பிளா அதை கிசோருக்கோ’ கருணாவுக்கோ வித்துப்போடுவார். இது நாடுகடந்த அரசை வெறுக்கிற சேரமான் போன்றவர்களுக்குத் தெரியும். அதுதான் இந்த மூவ் எடுக்கினம். கிழக்கு மாணத்தைச் சேர்ந்த பல தேசிய உணர்வாளர்களிட்ட பேசிப்பார்த்தனான். அவர்கள் எவருமே ஜயாணந்தமூர்த்தி பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லேல்ல. ஜயாணந்தமூர்த்தியை தலையில துாக்கி வைச்சுக்கொண்டு ஆடுறதுகள் முதல்ல அவர்ர மாகாணத்தில ஒருக்கா கேட்டுப்பார்த்துவிட்டு வடிவா ஆடங்கோ. புன்னியம் கிடைக்கும்

ஜெயானந்தமூர்த்தியை ஏன் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும். அவர் தனிப்பட பிழை செய்திருக்கலாம். ஆனால் கருணாவோடு ஒன்றாக இணைந்து தேசியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர், தலைவரின் கொடும்பாவி எரித்தவர் என்ற விடயங்கள் எந்த ஊடகஙடகளழலும் வெளியாகவில்லை. இதைச் சொல்வதால் ஜெயானந்தமூர்த்திக்கு நான் ஆதரவளிக்கவில்லை.

அப்படி அவர் அன்று கருணாவோடு இணைந்து செயற்பட்டிருந்தால், ராஜன் அழிக்கப்பட்டதுபோன்று அன்றே அழிக்கப்பட்டிருப்பார். நீங்கள் ராஜன் என்று கருதித்தான் ஜெயானந்தமூர்த்தியிடம் குறை காண்கின்றீர்களோ தெரியவில்லை. ராஜன் என்பவர்தான் இவ்வாறான செயற்பாடுகளில் முன்னின்றவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.