Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் முடிவுவரை ஓடியோடி உதவிய ஒரு உறவிற்காய் உதவுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

clip_imlage002.jpg

இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.கடந்த வருடம் இறுதி யுத்தத்தின்போது குண்டுச்சத்தங்களும் அவலங்களும் ஓலங்களும் மட்டுமே நிறை;ந்திருந்த முல்லைத்தீவில் காயமடைந்தவர்களிற்கெல்லாம் ஓடியோடி கையிலிருந்த குறைந்த வளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு காயமடைந்தவர்களிற்கும். கைகால் இழந்தவர்களிற்கும் மருத்துவ முதலுதவி முயற்சிகளை மேற்கொண்டிருந்த சில சொற்ப வைத்தியர்களில் சதீஸ்கரனும் ஒருவர்.அவரின் ஒரு காலையும்(02.01.2009) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். சிலமாதங்கள் சிகிச்சையின் பின்னர் ஒற்றைக்காலுடன் ஊன்றிய கோலுடனும் அவரது மருத்துவ சேவை அந்த மக்களிற்காக தொடர்ந்து கெண்டேயிருந்தது. இறுதியில் முல்லைத்தீவு மருத்துவ மனையும் குண்டுகளால் சிதைந்துபோக சிறிய கொட்டகைகள் மரநிழல்கள் எல்லாம் மருத்துவ மனைகளாக்கி இழந்துகொண்டிருந்த உயிர்களையும் முடிந்தவரை இழுத்துப்பிடித்து வைக்க முயற்சித்தார்கள்..இறுதியாய் 15.05.2009 வரை தன்னாலான சேவைகளை அந்த மக்களிற்காய் வழங்கியவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவரது ஒன்ரரை வயது சிறிய மகளுடன் குடும்பமாக திருகோணமலையில் வசித்துவரும் சதீஸ்கரன் தான் ஒரு சிறிய மருத்துவநிலையம்(கிளினிக்) ஒன்றினை நடத்தி தன்னுடைய குடும்பத்தினை காப்பாற்றுவதற்காக புலம்பெயர் உறவுகளே உங்களிடம் கை நீட்டுகிறார்..

இங்கு அழுத்துதன் மூலம் அவரது குரலினை நேடியாகக் கேட்கலாம்.

உதவிகோரி சதீஸ்கரன் எழுதிய கடிதம்.

clip_image002.jpg

சதீஸ்கரன் செல்வீச்சில் காயமடைந்து அவருடைய காலை இழந்ததற்கான வைத்தியசாலை அத்தாட்சி பத்திரம்.

clip_ime002.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

இவர் எவ்வளவு பணத்தை முதலில் அதாவது ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றார் என்று அறியத்தாருங்கள்

உறவுகளுடன் பேசிப்பார்க்கின்றேன்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர் தற்சமயம் ஒரு இடத்துடன் ஒரு கட்டிடத்தினை வாடைகைக்கு எடுத்து ஆரம்ப கட்ட தேவைகளிற்கான வைத்திய உபகரணங்களை வாங்குவதற்கு அண்ணளவாக 3 இலட்சம் இலங்கை ருபாய்கள்வரை தேவை என்று கூறியுள்ளதுடன் தன்னுடைய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார்..எம்மால் அந்தத் தொகையை கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்ததை சேகரித்து அனுப்புவோம் என்று எண்ணியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை பிரின்ற் எடுத்து

எனக்கு தெரிந்த 5 பேரிடம் கொடுத்துள்ளேன்

பதிலுக்கு காத்திருக்கின்றேன்.

அவரின் ஒரு காலையும்(02.01.2004) எங்கிருந்தோ வந்த ஒரு ஏவுகணையென்று துண்டித்துப்போய்விட அவரும் அதே முல்லைத்தீவு வைத்திய சாலையின் படுக்கையில் வீழ்ந்தார். ..இறுதியாய் 15.05.2099 வரை தன்னாலான சேவைகளை அந்த மக்களிற்காய் வழங்கியவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி ..

சில திகதிகளில் தவறுகள் உண்டு

திருத்தவும்

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருத்தியுள்ளேன் விசுகு..சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு துவசவீட்டுக்கு போயிருந்தேன்

அங்கும் சில பிரதிகளைக்கொடுத்துள்ளேன்

பார்க்கலாம்

இதை இங்கு பதிவதற்கு காரணம் பல....

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு துவசவீட்டுக்கு போயிருந்தேன்

அங்கும் சில பிரதிகளைக்கொடுத்துள்ளேன்

பார்க்கலாம்

இதை இங்கு பதிவதற்கு காரணம் பல....

நன்றி

நன்றிகள் விசுகு இதுவரை இவரிற்கான எவ்வித உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை..அந்த வைத்தியரும் கடந்த வாரம் தொலைபேசியில்கதைத்தபொழுது மனமுடைந்தவர் போலவே கதைத்தார். தானும் மக்கள் என்றும் சேவை என்றும் வன்னிக்குள்ளையே காலத்தை கடத்தாமல் வெளிநாடு போயிருந்தால் வசதியாய் வாழ்ந்திருக்கலாம் இனி வெளிநாடு போகிற வசதியும் இல்லை பிழை விட்டிட்டன் என்று சொன்னார்.. முடிந்தவரை நாங்கள் முயற்சிக்கிறோம் என்று சொல்லியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படவேண்டாம் என்று சொல்லுங்கள்

துவசவீட்டில் கொடுத்ததற்கு

எனது ஊர் மக்களிடமிருந்து நல்ல செய்தி வந்துள்ளது

விபரமாக அறிந்ததும் தொடர்பு கொள்கின்றேன்

நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் நிர்வாகத்தினருக்கு..

சில முயற்கிகள் ஊடாக இவருக்கான முழுத்தொகையையும் செய்யக்கூடிய வழி கிடைக்கும் சாத்தியம் தென்படுகிறது

ஆனால் உதவி செய்வோர் சில இடங்களில் ஏமாற்றப்பட்டுள்ளதால் அவரிடமிருந்து .....

அவர் கேட்ட பணத்தை நாம் கொடுத்தால்...

அவர் இனிமேல் இது போன்று இணையத்தளங்களிலேயோ அல்லது வேறு வழிகளிலேயோ உதவி கோரக்கூடாது என்ற உத்தரவாதத்தை நிர்வாக ரீதியாக தாங்கள் பெற்றுத்தரமுடியுமா.....?

ஏனெனில் இது போன்ற உதவிகள் மீண்டும் மீண்டும் பெறப்படுவதாகவும் இது ஒரு வியாபார நோக்கமாக வளர்ந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

இது உதவி செய்வோருக்கும் நல்லதல்ல.

இனிமேல்உதவி கோருவோருக்கும் நல்லதல்ல.

எனவே இது தெளிவாக்கப்படவேண்டும்.

அதற்காகவே இங்கு இதை எழுதுகின்றேன்.

தங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு இது போன்ற அனுபவங்கள் எங்கள் நேசக்கரம் அமைப்பிற்கு ஆரம்பங்களில் ஏற்பட்டது உண்மை;..பின்னர் வெளிநாடுகளில் இருந்து உதவும் தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் நாங்கள் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி எங்களிற்கு கிடைக்கும் தகவல்களை பரிமாறி ஒருவரிற்கு பலரின் உதவிகள் கிடைப்பதனை முடிந்தளவு தவிர்த்து வருகிறோம்..அதே நேரம் பல உதவிகளை பெற்றவர்களது உதவிகளையும் நிறுத்தியுமுள்ளோம்..நேசக்கரம் அமைப்பு இப்படியான விடயங்களின் அதிக கவனமெடுத்து இயங்குகின்றது..இதனை நீங்கள் வேறு உதவும் அமைப்புக்களிடமும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு இது போன்ற அனுபவங்கள் எங்கள் நேசக்கரம் அமைப்பிற்கு ஆரம்பங்களில் ஏற்பட்டது உண்மை;..பின்னர் வெளிநாடுகளில் இருந்து உதவும் தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் நாங்கள் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி எங்களிற்கு கிடைக்கும் தகவல்களை பரிமாறி ஒருவரிற்கு பலரின் உதவிகள் கிடைப்பதனை முடிந்தளவு தவிர்த்து வருகிறோம்..அதே நேரம் பல உதவிகளை பெற்றவர்களது உதவிகளையும் நிறுத்தியுமுள்ளோம்..நேசக்கரம் அமைப்பு இப்படியான விடயங்களின் அதிக கவனமெடுத்து இயங்குகின்றது..இதனை நீங்கள் வேறு உதவும் அமைப்புக்களிடமும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் நன்றி

இது போன்ற தங்களது செயல்கள் வெளிவரவேண்டும் என்பதற்காகவே இங்கு எழுதினேன் சாத்திரி

அதேநேரம் எனது உறவினர் அவரிடமிருந்து இந்த உத்தரவாதத்தினை கேட்கின்றனர்

அதை தாங்கள் பெற்றுத்தரவேண்டும்

எனெனில் எந்த உதவியும் அதனுடைய நம்பகத்தன்மையை இழக்கக்கூடாது

அதைவிட அது தொடர வேண்டும்

தாங்களும் இது போன்றவற்றை ஏற்கனவே கண்டிருப்பதால்...

தங்களுக்கு புரியும் என்று எதிர்பார்க்கின்றேன்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியரின் உதவிக்காக யாழ் களத்தினுடாக வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து வைத்தியர் சதீஸ்கரனிற்கு டுபாய் நாட்டிலிருந்து ஒரு உறவு உடனடியாக இலங்கைப்பணம் 50 ஆயிரம் ரூபாயை அனுப்பிவைத்திருந்தார் அந்தப் பணம் கிடைத்தற்கான வைத்தியரின் அத்தாட்சி கடிதம்

ScannedImage-6.jpg

அவரால் தாடங்கப்பட்டுள்ள சிறிய கிளினிக்

ScannedImage-3.jpg

ScannedImage-2.jpg

வைத்தியர் சதீஸ்கரன் அவர்கள் வேறெந்த அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் இருந்து எவ்வித உதவிகளையும் பெற்றுக்கொள்ளவில்லைபதனை உறுதிப்படுத்தும் கடிதம்.

ScannedImage-5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொப்பி எடுத்துக்கொண்டேன் சாத்திரி

எனது பக்கத்தால் திட்டத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டேன்

இனி நான் வைத்தியருடன் நேரில் கதைத்து செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

தங்களது பதிலை அறியத்தரவும்

நன்றி

தங்களது நேரத்திற்கும் எமது மக்களுக்கான செயற்பாடுகளுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்களிடம் அவரது விபரங்கள் உள்ளதுதானே எனவே நேரடியாக அவரது உதவிகளை வழங்கலாம்..எவ்வளவு பணம் எந்தெந்த திகதிகளில் அனுப்பினீர்கள் என்கிற விபரங்களை நேசக்கரத்திற்கு தெரியப்படுத்தினால் போதுமானது நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் வடிவேலு சதீஸ்குமார்அவர்களுடைய தொலைபேசி வேலை செய்யவில்லை

இது பற்றிய ஏதாவது தகவல் தெரிந்தால் அறியத்தரவும்

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் வடிவேலு சதீஸ்குமார்அவர்களுடைய தொலைபேசி வேலை செய்யவில்லை

இது பற்றிய ஏதாவது தகவல் தெரிந்தால் அறியத்தரவும்

நன்றி.

டயலொக் தொலைபேசிகள் கடந்த 3நாட்களாக இணைப்பு கிடைப்பது சிரமமாகவுள்ளது. இன்று டயலொக் தொலைபேசிகள் வேலைசெய்யுதில்லை. நாமும் பலருடன் தொடர்பினை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரவில் தொடர்பு கொள்ளுங்கள். சில சமயம் தொடர்பு கிடைக்கலாம். அல்லது நாம் பேச முடிந்தால் அறியத்தருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தியக்கா

சாத்திரி உடன் அறியத்தந்தார்

நானும் வைத்தியருடன் கதைத்தேன்

இத்திட்டம் இனி என்பொறுப்பு

தங்களது சுமையில் ஒருசிறு துளியை என்னால் ஏற்கமுடிந்ததையிட்டு மகிழ்ச்சி

நன்றி தங்களது நேரத்திற்கும் பதிலுக்கும்

தங்கள் சேவை தொடரவாழ்த்துக்கள்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு 1000 ஈரோக்கள் ( ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 193 இலங்கைப்பணம்) அனுப்பி வைக்கப்பட்டு பெற்றுக்கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கான அத்தாட்சி இங்கு இணைக்கப்படுகிறது

இதற்கான பங்களிப்பை செய்த எனது ஊரைச்சேர்ந்த உறவினர்கள் நண்பர்களின் பெயர் விபரங்களை இத்திட்டம் முழுமையாக நிறைவேறியதும் அறியத்தருகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் PDF இல் இங்கு இணைக்கமுடியவில்லை

நேசக்கரத்துக்கு அனுப்பியுள்ளேன்

அவர்கள் அதை இணைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

நன்றி

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
visuku.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.