Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடு ரெட்பார்னாவில் இரு தாய்மார்கள் படையினரால் பாலியல் பலாத்காரம்

Featured Replies

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு ரெபார்னா பகுதியில் இளங்கோ புரம் கிராமத்தில் இரவு வேளை வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்ப தாய்மார் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர்.

இரு பிள்ளைகளின் தாய்மார்களான இந்த பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்களாம்.

செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவரில் ஒருவர் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் தாய்மார்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.அண்மையில் தான் கோத்தபாய தனது படைகள் உயர் ஒழுக்கத்தை பேணுபவர்கள் என்றார்.

ஈழநாதம்

... இங்கு வந்து சிலரோ அல்லது மாற்றுக்கருத்துமாமணிகளின் இணையங்களிலோ எழுதப்போகிறார்கள் .... ஒன்றில் இப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை, இவைகள் பொய்கள் என்று ..... இல்லை, இராணுவம் என்றால் இப்படி நடக்கும்தான் தவிர்க்க முடியாது என்று ....

... ஒரு கேள்வி அவர்களிடம் ... உங்கள் தாயுக்கோ, இல்லை மனைவிக்கோ இல்லை சகோதரிகளுக்கோ நடந்தாலும் இவைகளையா சொல்வீர்கள்??????????? ... இதற்கு பாண்டு 007/விடிவெள்ளி, மதிவதங்ஜி, ... போன்றோர் பதிலளிக்கட்டும் பார்ப்போம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... இங்கு வந்து சிலரோ அல்லது மாற்றுக்கருத்துமாமணிகளின் இணையங்களிலோ எழுதப்போகிறார்கள் .... ஒன்றில் இப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை, இவைகள் பொய்கள் என்று ..... இல்லை, இராணுவம் என்றால் இப்படி நடக்கும்தான் தவிர்க்க முடியாது என்று ....

... ஒரு கேள்வி அவர்களிடம் ... உங்கள் தாயுக்கோ, இல்லை மனைவிக்கோ இல்லை சகோதரிகளுக்கோ நடந்தாலும் இவைகளையா சொல்வீர்கள்??????????? ... இதற்கு பாண்டு 007/விடிவெள்ளி, மதிவதங்ஜி, ... போன்றோர் பதிலளிக்கட்டும் பார்ப்போம்?

சொன்னாலும் சொல்லுவாங்க ஏண்னா இவங்க இனத்தை வித்து பிழைக்கேக்க இவங்க குடும்பம் மானத்தை வித்து பிழைக்குதுகளோ என்னவோ

My link

... இங்கு வந்து சிலரோ அல்லது மாற்றுக்கருத்துமாமணிகளின் இணையங்களிலோ எழுதப்போகிறார்கள் .... ஒன்றில் இப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை, இவைகள் பொய்கள் என்று ..... இல்லை, இராணுவம் என்றால் இப்படி நடக்கும்தான் தவிர்க்க முடியாது என்று ....

... ஒரு கேள்வி அவர்களிடம் ... உங்கள் தாயுக்கோ, இல்லை மனைவிக்கோ இல்லை சகோதரிகளுக்கோ நடந்தாலும் இவைகளையா சொல்வீர்கள்??????????? ... இதற்கு பாண்டு 007/விடிவெள்ளி, மதிவதங்ஜி, ... போன்றோர் பதிலளிக்கட்டும் பார்ப்போம்?

விசுவமடுவில் தாயொருவர் மீது பாலியல் வல்லுறவு;6 படையினர் விளக்கமறியலில்

புதன்கிழமை, 09 ஜூன் 2010 14:52

முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் மீள்குடியேறிய இளம் தாயொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 6 படையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாயாரான 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி 6 படையினரும், நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.

My link

விசுவமடுவில் தாயொருவர் மீது பாலியல் வல்லுறவு;6 படையினர் விளக்கமறியலில்

புதன்கிழமை, 09 ஜூன் 2010 14:52

முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் மீள்குடியேறிய இளம் தாயொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 6 படையினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகளின் தாயாரான 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி 6 படையினரும், நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.

... இங்கை எல்லோரும் ஒருக்கால் ... இங்கை பாண்டு 007 கூறுகிறார் ... "ஆத்தையை, மனுசியை, சகோதரிகளை சிங்கள ஆமி கெடுத்தாலும், கெடுத்த அவர்களை கைது செய்தால் சரி" ..... கேவலம் கெட்ட ஜென்மங்களடாப்பா!......... விட்டால் நாங்கள் கூட்டியும் .....!!!!!!!!!!!!

... ஆமா, இந்த வெள்ளைக்காரன் விட்டுட்டு வந்து 60 வருடங்கள் தாண்டீட்டுது! அந்த அறுபது வருடங்களுக்குள் எத்தனை தமிழ்ப் பெண்கள் சிங்கள மிருகங்களுக்கு இரையானார்கள்??????? எத்தனை மிருகங்களை சிங்கள அரசுகளின் சட்டம் தண்டித்து உள்ளது????????

Edited by Nellaiyan

நீங்கள் நேரம் கிடைக்கேக்கை உணர்சிவசப்பட்டு கத்துவியள்! எங்களையும் திட்டுவியள் பிறகு இழுத்துப்போத்தி கொண்டு படுத்திடுவியள்! நீங்கள் என்னை துரோகி கூட்டிக்கொடுப்பவன் என்று என்னவும் கூறுவியள் உதை விட வேறு என்ன செய்தியள்? செய்யுங்கோ நல்லா செய்யுங்கோ! இலங்கையில் மட்டுமல் உலகம் முழுவதும் உள்ள இராணுவங்கள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவித்துள்ளனர். இந்திய இராணுவம் இதை மிக மோசமாக செய்தது! இன்று அதை உங்கள் வசதிக்காக துக்கிப்பிடிக்கிறியள்! பாலியல் வன்முறையை சிறீ லங்கா இராணுவம் மட்டும் செய்ய வில்லை! விடுதலைக்காப போராட முனைந்த பலரும் செய்துள்ளனர். நாம் இங்கு இராணுவத்திறகோ அல்லது சிறீ லங்காவிற்கோ வக்காலத்து வாங்கவில்லை. மாறாக இனி வரும் காலங்களின் ஒரு செய்தியை பக்க சார்பின்றி எழுதவே கோருகிறோம்! வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு மீள வரவேண்டும்! இதை தவிர நாம் எதுவும் கூற வில்லை! வெறுமனே கூக்குரல் இடுவதும் அடுத்தவர்களை சாடுவதும் இல்லாத பொல்லாத பொய்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதுவதால் பிரச்சனை தீர்ந்து விடாது! பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால் வெறுமனே கணணிப் புரட்சியாளர்களாக மட்டும் இருந்து கொண்டு உங்களால் செய்ய கூடியது இது மட்டும் தான்! அடுத்தவனை குறை கூறுவது! திட்டுவது! இதை தானே கடந்த 10 வருசத்திற்கு மேலாக செய்யிறியள்!

... மாறாக இனி வரும் காலங்களின் ஒரு செய்தியை பக்க சார்பின்றி எழுதவே கோருகிறோம்! ....

... இனி இப்படியான செய்திகளை இணைக்கும் போது தமிழ்ப்பெண்கள் சிங்கள இராணுவத்தினரை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று எழுதட்டாம்? :unsure:

நீங்கள் நேரம் கிடைக்கேக்கை உணர்சிவசப்பட்டு கத்துவியள்! எங்களையும் திட்டுவியள் பிறகு இழுத்துப்போத்தி கொண்டு படுத்திடுவியள்! .....

ம்ம்ம்ம் ... இங்கெல்லாம் முழுநேரமாக சிலபேர் என்ன? என்னத்தை? எப்போ? எப்படி செய்தவர்கள் என்ற விபரங்கள் தெரிய வருகிறது! நாங்கள் பாட்டைம்காரர்கள்தான்!! நாங்கள் உழைத்துக்கொண்டு பாட்டைமாக இந்த தட்டச்சு, ஆனால் உழைப்பிற்காக(?) தட்டச்சல்ல!!! :unsure:

........

அடுத்தவனை குறை கூறுவது! திட்டுவது! இதை தானே கடந்த 10 வருசத்திற்கு மேலாக செய்யிறியள்!

நீங்கள் கடந்த பத்து வருடமா என்ன பண்ணுறாப் போல? :unsure:

நீங்கள் மட்டும் இஞ்ச வந்து புகழாரமா பாடுறியள்? அடுத்தவனைத் தானே குறை சொல்லுறியள்? :unsure:

ஆளுக்கு ஒரு குடும்பத்தைத் தத்து எடுக்கிறாப் போல நீங்கள் எழுதித் தான் வாசிச்சனான், தத்து எடுத்தாச்சோ?

நீங்கள் கடந்த பத்து வருடமா என்ன பண்ணுறாப் போல? :)

நீங்கள் மட்டும் இஞ்ச வந்து புகழாரமா பாடுறியள்? அடுத்தவனைத் தானே குறை சொல்லுறியள்? :huh:

ஆளுக்கு ஒரு குடும்பத்தைத் தத்து எடுக்கிறாப் போல நீங்கள் எழுதித் தான் வாசிச்சனான், தத்து எடுத்தாச்சோ?

:lol: :lol: நல்லா தான் ஜோக் அடிக்கிறியள்! இப்பிடி கனபேர் இப்ப வெளிக்கிட்டிருக்கினம்!

நீங்கள் கடந்த பத்து வருடமா என்ன பண்ணுறாப் போல? :D

நீங்கள் மட்டும் இஞ்ச வந்து புகழாரமா பாடுறியள்? அடுத்தவனைத் தானே குறை சொல்லுறியள்? :huh:

ஆளுக்கு ஒரு குடும்பத்தைத் தத்து எடுக்கிறாப் போல நீங்கள் எழுதித் தான் வாசிச்சனான், தத்து எடுத்தாச்சோ?

படம் போடுறவையெல்லாம் படம் காட்டதான் முடியும் என்றால் மற்றவையும் அப்படி நினைக்க கூடாது! நாங்கள் செய்து போட்டு தான் பிறகு மற்றவையிற்றை கேட்பம்! படம் போட்டது உட்பட! வீட்டை அம்மா கூப்பிடறா ஓடீப்போங்கோ.... :D

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ட் அண்ணா.. நீங்கள் நெல்லையனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்.. அவர்கள் வெறுமனவே கத்திக் கொண்டிருப்பதோடு சரி நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கும் என்று.

அதேபோல் நீங்கள் சொல்லும் கைதுகளும் எதனையும் எங்கள் மக்களுக்கு தரவில்லை என்பதும் யதார்த்தம். கைதுகள்.. ஆணைக்குழுக்கள் எல்லாம் செய்கிறார்கள் அமைக்கிறார்கள்.. இன்று வரை சிங்களப் படைகளின் அநியாயத்தை எவரும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் பிரசன்னம் தவிர வேறு எதுவும் இவற்றை தடுத்து நிறுத்தவில்லை என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதுதான் உண்மையாகவும் இருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக எத்தனையோ தமிழ் பெண்கள் சிங்கள.. இந்திய படைகளால் மற்றும் தமிழ் கூலிக் கும்பல்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு அபலைகளாக்கப்பட்டுள்ளதுடன் பலர் கொன்று அழிக்கப்பட்டுள்ளனர் அல்லது புதைக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் சாட்டு புலி. இன்று புலிகள் அழிந்துவிட்டதாக அவர்களே சொல்லும் நிலையில்.. இந்த அடாவடித்தனங்கள் தொடர்வதன் மர்மம் என்ன..??! இன அழிப்பின் பகுதியாகத்தான் நாம் இதனை பார்க்க வேண்டி உள்ளது. நாம் இதனை உலகிற்குச் சொல்ல வேண்டும். ஆதாரங்களோடு சொல்ல வேண்டும். அப்போதுதான் சிறீலங்காவில் புலிகளின் அழிவின் பின்னரும் கூட தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் தொடரப்படுகின்றன என்ற உணர்வை கொண்டு செல்ல முடியும்.

அதுமட்டுமன்றி.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களை புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்களோடு இணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இன்னும் இன்னும் நாம் சர்வதேச அமைப்புக்களை தாயகம் நோக்கி நகர்த்திச் செல்ல முனைவது அங்குள்ள மக்கள் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவும் அவர்களுக்கு அவசியமான தேவைகள் சர்வதேச தரத்தில் கிட்டவும் சர்வதேசம் மக்களிற்கு எதிராக செய்யப்படும் கொடுமைகளுக்கு சாட்சியாக நிற்கவும் வகை செய்யும். இது சிறீலங்கா படைகளை தாயக மண்ணில் இருந்து அகற்ற சர்வதேசமே கோர வகை செய்யக் கூடிய வகைக்கு கொண்டு செல்ல நமக்கு உதவலாம்.

வெறுமனவே சிங்கள அரசின் நீதி நிர்வாக அமைப்புக்களையும் ஆணைக்குழுக்களையும் நம்பிக் கொண்டிருப்பின்.. இப்படியான துன்ப துயரங்கள் நிற்கப் போவதில்லை. நீதி வழங்கப்படுவதற்குள் பல பெண்கள் பாதிக்கப்படும் நிலை தொடரும். சிங்கள அரசின் நீதி நிர்வாகத்திற்கு அஞ்சும் நிலையில் சிங்களப் பேரினவாதமும் அதன் இராணுவ இயந்திரமும் இல்லை. யாழ்ப்பாண கைப்பற்றலின் பின் செம்மணியில் புதையுண்ட சகோதரி கிருசாந்தி குமாரசாமி தொடர்பான வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கி சிலர் தண்டிக்கப்பட்டு பலர் பாதுகாக்கப்பட்டு உள்ள நிலையிலும் அதன் பின்னர் எத்தனையோ தமிழ் பெண்களை சிங்களக் காடையர்கள் சீரழித்துதான் உள்ளனர்.

தெந்தமிழீழம் வடதமிழீழம் என்ற வேறுபாடின்றி பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்... பட்டும் வருகின்றனர். சிங்கள அரசின் நீதி நிர்வாகம் இவற்றை எல்லாம் கண்டுகொண்டதே இல்லை. செய்யப்படும் கைதுகளும் பத்திரிகைகளில் வருவதோடு சரி. உண்மையில் சிங்களப் படையினர் மத்தியில் தப்புச் செய்ய தூண்டப்படும் நிலைதான் இருக்கிறதே அன்றி தப்புச் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இல்லவே இல்லை. அந்தளவிற்கு சிங்கள நீதி நிர்வாகத்துறையும் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதோ ஒரு வகையில் ஒத்தூதிக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்க நீங்கள் நெல்லையனின் நிலைப்பாட்டை மட்டும் தூக்கிப் பிடித்து ஏதோ செய்யப்பட்ட கைதுகள் மக்களை பாதுகாக்கும் என்பது போன்ற தோற்றப்பாட்டை காட்டுவதும் தவறுதான் போண்டு அண்ணா.

... இனி இப்படியான செய்திகளை இணைக்கும் போது தமிழ்ப்பெண்கள் சிங்கள இராணுவத்தினரை பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று எழுதட்டாம்? :)

ம்ம்ம்ம் ... இங்கெல்லாம் முழுநேரமாக சிலபேர் என்ன? என்னத்தை? எப்போ? எப்படி செய்தவர்கள் என்ற விபரங்கள் தெரிய வருகிறது! நாங்கள் பாட்டைம்காரர்கள்தான்!! நாங்கள் உழைத்துக்கொண்டு பாட்டைமாக இந்த தட்டச்சு, ஆனால் உழைப்பிற்காக(?) தட்டச்சல்ல!!! :D

அண்ணை நீங்கள் தான் அந்த நமோ நமோ பாடும் முன்னாள் புலநாய்வு புலியோ...??

சரி நீங்கள் புலநாய்வாளர்தானே....?? அதுக்கேன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எழுதுறீயள்...? ,குட்டி எதையோ சொன்னதுக்கு எல்லாம் உங்கட பாட்டுக்கு பதில் போட்டு இருக்கிறீயளே... சந்தேகமாய் இருக்கே உங்களை எப்படி புலநாய்வு குறூப் வைச்சு இருந்தாங்கள் எண்டு...

Don't waste water. drink beer..

Edited by தயா

அன்பின் தல ...

Edited by Nellaiyan

உங்கள் இந்தப் பணிக்கு நிச்சயம் எனது ஆதரவையும் எனது நண்பர்களின் அதரவையும் பெற்று தர முனைகிறேன்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72281

:huh::huh::lol::lol::D

நீங்கள் நேரம் கிடைக்கேக்கை உணர்சிவசப்பட்டு கத்துவியள்! எங்களையும் திட்டுவியள் பிறகு இழுத்துப்போத்தி கொண்டு படுத்திடுவியள்! நீங்கள் என்னை துரோகி கூட்டிக்கொடுப்பவன் என்று என்னவும் கூறுவியள் உதை விட வேறு என்ன செய்தியள்? செய்யுங்கோ நல்லா செய்யுங்கோ! ...

பாண்டு 00, உங்களை நான் ஒருபோதும் துரோகி என்று கூறவில்லை!!!!!! ... அந்த வசனத்தை நீங்களே உங்களுக்கு சூட்டுகிறீர்கள்!!! உண்மையோ/பொய்மையோ உங்களுக்கு தெரியும்!!!!!!!!!!!

நீங்கள் கூறுவது உண்மை, உணர்ச்சிவசப்பட்ட கத்தல்கள் ..... என்ன செய்வது பலகோட்டைகளை கட்டி அது பின் தகர உண்டாகும் உள்ளக்குமுறல்தான்.

சில நாட்களுக்கு முன், நானும் இன்னோருவரும் முன்னால் ரெலோ உறுப்பினரும், திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அவரை கண்டு கதைக்கும்போது குறிப்பிட்டார் .... " ... நான் புலியை வெறுக்கிறேன். அதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக சிங்களவன் கால்களில் விழவோ, கட்டி அணைக்கவோ நான் தயாராக இல்லை. அவன் என்றும் எம் எதிரியே. ..." .. இப்படியாக ஒரு மாற்றுக்கருத்தாளனுக்கு உள்ள கொள்கை கூட உங்கள் போன்றோருக்கு எப்படி இல்லாமல் போய்விட்டது? ஏன் மனிதத்தை தொலைத்து விட்டு திரிகிறீர்கள்??

... எமது தலைமைகள் காலம் காலமாக விட்ட தவறுகள் தான் எம்மினத்தை இன்றைய நிலைக்கு கொண்டு சென்றது என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை! ஆனால் அதற்காக சிங்களத்துடன் ஒட்டி உறவாட தயாரில்லை! ... நீங்கள் ஒட்டுகிறீர்களோ, உறவாடுகிறீர்களோ ... அவன் அதற்கு தயாரில்லை! ... உங்களை கருவறுக்கவே முயல்கிறான்/முயல்வான்!!!

சிங்கள பயங்கரவாதிகளின் முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.