Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மல்லாக்கப் படுத்திருந்து காறி உமிழும் சேரமான்கள்!

Featured Replies

ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு திறந்த மடல் எழுதிக் களைத்துப்போன சேரமான் இப்போது கேபி அவர்களுக்ககு திறந்த மடல் எழுதத் தொடங்கியுள்ளார்.

இந்தத் திறந்த மடலின் நோக்கம் முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு கேபியைக் காரணமாகக் காட்டி தங்கள் மடியில் உள்ள ’பாரத்தை’ கேபியின் தலையில் கட்டுவதாகவே உள்ளது. இதற்கு கேபி புனர்வாழ்வு, புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு உள்ளதாகவும், இதற்கு உதவுவதற்காக அறிவுஜீவிகள், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் கொண்ட புலம்பெயர்ந்தோர் குழுவொன்று கொழும்பு சென்றுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் வெளியிட்ட செய்தியொன்றை ஆதாரமாக வைத்து தனது ஆவர்த்தனங்களைத் தொடங்கியுள்ளார் சேரமான்.

இக் கட்டுரையின் நோக்கம் கேபி இப்போது செய்யத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் விடயங்கள் குறித்த ஆராய்வதோ அல்லது அதற்கு நியாயம் கூறுவதோ அல்ல.

கேபி தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி தகவல்களைத் திரிபபடுத்தியும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டும் எல்லாவற்றுக்கும் காரணம் கேபிதான் என்று தமிழ்மக்களின் காதில் ப+ச்சுற்றும் வேலையில்; சேரமான் கூட்டம் தொடர்ந்தும் ஈடுபடுவதால் இக் கட்டுரையினையினையும் எழுத வேண்டி இருக்கிறது.

கேபி தற்போது சிறிலங்கா ஒரு அரசின் கைதி. சேரமான் வயைறாக்கள் கூறுவது போல அவரது கைது ஒரு நாடகம் அல்ல. இவர் மலேசியப் இராணுவப் புலனாய்வுத்துறையினரால் மலேசியாவின் சிவில்; சட்டவரறைக்குள் உள்ளடங்காத வகையில் கைது செய்யப்பட்டு சிறிலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டவர். இவர்களின் ஒத்துழையாமை மற்றும் தொல்லைகள் காரணமாகத் தனது குகையில் இருந்து வெளிவந்து செயற்பட்டு சிங்கத்தின் குகைகளில் அகப்பட்டுக் கொண்ட புலி அவர்.

சிங்களத்தின் சிறைகளில் அவருக்கு வரையயுக்கப்பட்ட தெரிவுகளே இருந்திருக்க முடியும். ஒன்றில் சிறிலங்கா அரசுடன் முட்டி மோதி, முரண்டு பிடித்து அழிந்து போயிருக்க வேண்டும். அல்லது இருக்கும் சூழலில் இருக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட தெரிவுகளுக்குள் தான் சிறந்தது என்று கருதும் ஒன்றைத் தெரிவு கொண்டிருக்க வேண்டும். கேபி சிறிலங்கா அரசுடன் முட்டி மோதி, முரண்டு பிடித்து ஏன் செத்துப் போகவில்லை என்று கேட்கும் தார்மீக உரிமை யாருக்குத்தான் இருக்கிறது?

சிறிலங்கா அரசகாவலில் இருக்கும் 10,000 க்கும் மேற்பட்ட போராளிகளின் விடுதலை, யுத்தத்தால் அழிந்து போயுள்ள மக்களது வாழ்வை மீளக் கட்டுதல் ஆகியனவே அவரது அக்கறைக்குரிய விடயங்கள் எனவும் அதற்காக அவர் சிறிலங்கா அரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளார் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன. கேபி என்ன, எப்படிச் செய்யப் பேகிறார் என்பது தொடர்பான போதிய தகவல்கள் இன்றி அதனைப் பற்றிப் பேசுவது அரைகுறையான ஒரு பார்வையாகத்தான் இருக்கும்.

இருந்தும் கேபி தற்போது சுதந்திர மனிதன் அல்ல என்பதால் அவர் மூலம் சிறிலங்கா அரசு தனது திட்டங்களையே நிறைவேற்ற முயலும் என எழும் அச்சங்கள் புறந்தள்ள முடியாதவை. இதேவேளை தற்போதய சூழலில் போராளிகள் விடுதலை தொடர்பாகவும், மக்களின் மீள்வாழ்வு தொடர்பாகவும் சிறிலங்கா அரசைப் புறந்தள்ளி விட்டு ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்ற கேள்வியும் புறந்தள்ள முடியாததது. தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் தற்போதய சூழலில் ப+தாகரமாக எழுந்துள்ள வாழ்வியல் தேவைகளையும் எப்படி ஒரே நேரத்தில் ஈழத் தமிழர் சமூகம் பாதுகாக்கப் போகிறது என்பது மிகவும் முக்கியமான விடயம். தொடரந்து விவாதிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட.

இக் கட்டுரையின் நோக்கம் இவற்றை விவாதிப்பது அல்ல. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு கேபி காரணம் என அபாண்டமாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துரைக்கும் நோக்குடன்தான் இக் கட்டுரை எழுதப்படுகிறது. மிகவும் திட்டமிட்ட முறையில் இவ் அபாண்டங்கள் சுமத்தப்படுவதால் தெரிந்த சில தகவல்களை மக்கள் முன்வைப்பது அவசியமாகிறது.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு கேபியும் ஒரு காரணம் என்றால் அது கேபி தான் முன்னர் செய்த ஆயுத விநியோகத்தைச் செய்ய முடியாமல் 2002 க்குப் பின் முடக்கப்பட்டிருந்தமை மட்டுமே காரணமாக இருக்க முடியும். கேபி ஆயுத விநியோகத்தை செய்யக் கூடியதாக இருந்திருக்குமானால் தேசியத் தலைவரது படையணிகள் இவ்வளது தூரம் பின்வாங்க வேண்டியோ அல்லது தோல்வி கண்டிருக்க வேண்டிய நிலைமையோ ஏற்பட்டடிருக்காது என நம்புவதற்கு அடிப்படைகள் உள்ளன. இவ் விடயத்தில் கேபியின் ஆற்றலும் அனுபவமும் ஜெயசுக்குறுச் சமர் காலத்தில் நிரூபணம் செய்யப்பட்ட ஒரு விடயம். தமது சுயநலன்களுக்காக கேபியை முடக்குவதற்குக் காரணமாக இருந்தது இந்த சேரமான்கள் கூட்டந்தான். கேபி செய்த ஆயுத விநியோகத்தைத் தாமும் செய்வோம் எனப் புறப்பட்டு, ஆற்றலும் அனுபவமும் இன்றி முயற்சியில் தோல்வியும் கண்டு, மக்கள் பணத்தையும் அநியாயமாய்ப் பறிகொடுத்து, அதேவேளை இதோ செய்கிறோம், இதோ செய்கிறோம் என்று நம்பிக்கையையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்து தேசியத்தலைவரின் காலை வாரிவிட்டதில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்போது முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு இவர்கள் கேபியைக் குற்றம் சாட்டுவது மல்லாக்கப் படுத்திருந்து கொண்டு காறி உமிழ்வது போன்றது.

2009 ஜனவரியில் இருந்து மே மாதம் வரை தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் எப்படிப் பாதுகாப்பது என்பதே கேபியின் பிரதான அக்கறைக்குரிய விடயமாக இருந்தது. போரின் ஊடாக, சமர்களில் வெற்றி பெற்றுப் பாதுகாப்பது, அல்லது ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்திப் பாதுகாப்பது என்ற இருவழிமுறைகள் மூலமே இப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க முடியும். போரின் மூலம் சமர்களில் வெற்றி பெற்றுப் பாதுகாப்பதற்கு காலம் மிகவும் பிந்தி விட்டது என கேபி மீண்டும் செயற்பாட்டுக்கு வந்த ஜனவரி 2009 இருந்த நிலைமைகளை மதிப்பீடு செய்த போது புரிந்து கொண்டார். போதிய எறிகணைப்பலம் இன்றி முன்னேறி வரும் எதிரியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதும், இத்தகைய பலம் இயக்கத்திடம் இல்லை என்பதும், மிகக் குறுகிய காலத்தில் அத்தகைய பலத்தை இயக்கம் பெறு;றுக் கொள்ளவது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்பதும் அவருக்குப் புரிந்தது. இதனால் இராணுவரீதியாக எதிரியை வெற்றி பெறுவதற்கான வாய்பப்புக்கள் மிகவும் அரிதாகவே உள்ளது என அவர் உணர்ந்தார். இத்தகைய ஒரு சூழலில் தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஒரு யுத்த நிறுத்தம் அவசியம் என அவர் கருதினார்.

இயக்கமும் ஒரு யுத்த நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்குத் தயாராக இருந்தது. ஆனால் அனைத்துலக அரங்கில் யுத்தநிறுத்கக் கோரிக்கையை இயக்கத்தைப் பாதுகாப்பது எனும் காரணத்துக்காக முன்வைக்கமுடியாது. மக்களும் மிகப் பெருந்தொகையாக சிறிலங்காப்படைகiளால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழல். இதனால் மக்களைப் பாதுகாப்பதற்காக உடனடி யுத்த நிறுத்தம் அவசியம் எனும் கோரிக்கையோடு புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் எழுச்சகரமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் நடைமுறையில், இப் போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் மீது எழுப்பிய அழுத்தம் சிறிலங்கா அரசை விட விடுதலைப்புலிகள் மீதுதான் கூடுதலாக திரும்பியது. யுத்த நிறுத்தம் வேண்டும் என்று சிறிலங்கா அரசினை வற்புறுத்துவதற்குப் பதிலாக, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் யுத்தம் நடைபெறுவதனால் மக்களைப் பாதுகாப்பதற்காக யுத்தம் நடைபெறாத பகுதிகளான அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி மக்கள் நகர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற அழுத்தம் அனைத்துலக சமூகத்திடமிருந்து விடுதலைப்புலிகள் மீது எழுந்தது. சிறிலங்கா அரசுக்கும் தாக்குதல் நடைபெறாத பகுதிளை அறிவித்து மக்களை அப் பகுதிகளை நோக்கி நகர்வதற்கு வழிசெய்யுமாறு அழுத்தங்கள் எழுந்தன. சிறிலங்கா அரசும் தனது இராணுவத் திட்டத்துக்கு ஏற்றவாறு இவ் வலயங்களை அமைத்தது. மக்கள் இப் பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர். இவர்களுடன் இயக்கமும் நகர்ந்தது. இவ்வர்றுதான் மக்களும் இயக்கமும் முள்ளிவாய்க்கால்வரை போய்ச் சேர்ந்தனர்.

இவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது புலத்திலும் தமிழகத்திலும் நடைபெறும் போராட்டங்களால் யுத்தநிறுத்தம் வரப்போவதில்லை என்பதனை கேபி உணர்ந்தார். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்கு அனைத்துலக சமூகம் உதவப்போவதில்லை என்பதனை கேபி புரிந்து கொண்டார். எவ்வர்று யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவது என்பதுதான் கேபியின் சிந்தனையாக இருந்தது. நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்ததைக் கொண்டுவருதற்கான சாத்தியங்கள் இல்லாத போது யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு தந்திரோபாய விட்டுப்கொடுப்புக்களைச் செய்வதில் தவறில்லை எனக் கேபி கருதினார். இதற்கான திட்டம் ஒன்றையும் தலைவரிடம் முன்வைத்தார்.

இத் திட்டத்தின்படி இயக்கத்தின் ஒரு பகுதி ஆயதங்களை, அதுவும் கூடுதலாகப் பாவனையில் இல்லாத ஆயுதங்களை இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஒரு கொள்கலனில் வைத்துப் ப+ட்டுவதற்குச் சம்மதிப்பது. அதன் தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பது. இதுவே கேபி முன்வைத்த திட்டம். ஏறத்தாழ மார்க்சிஸ்டுகளுடனான சமாதான முயற்சியில் நோபாளத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயதங்கள் தொடர்பாக பின்பற்றப்பட்ட ஒரு முறைதான் இது. எதுவுமே இல்லாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு சூழலில், அழிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டு அடுத்து கட்டம் பற்றிச் சிந்திக்கலாம் என்றே கேபி எண்ணினார். மேலும், இயக்க வரலாற்றில் ஆயுதக் கையளிப்புக்கூட முன்னர் நடைபெற்றிருக்கிறது. அத்தோடு போராட்டம் நின்றுவிடவில்லை என்பதனையும் கேபி சுட்டிக் காட்டியிருந்தார்.

இது முழுக்க முழுக்க இயக்கத்தினதும் தமிழ்மக்களதும் நன்மை கருதி முன் வைக்கப்;பட்ட திட்டமே தவிர, வேறு எந்த அந்நிய சக்திகளது தூண்டுதலால் மேற்கொள்ளப்பட்டதல்ல. ஆயுதங்களைச் சேகரிப்பதில் உள்ள கஸ்டங்கள் கேபிக்குத் தெரிந்தளவுக்கு, புரிந்தளவுக்கு இந்த சேரமான் கூட்டங்களுக்கு தெரிந்த அல்லது புரிந்த விடயங்களும் அல்ல.

இத் திட்டம் வேறு நடைமுறைப்பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்ற காரணத்தைக்கூறித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. தாம் புலத்தில் ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போராட்டங்கள் நிபந்தனையில்லாமலே யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவரும் என இந்தச் சேரமான்கள் புலத்திலிருந்து களத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்த தகவல்களும் தலைவரது முடிவில் செல்வாக்குச் செலுத்தின. வருமுன் இல்லா விட்டாலும் அல்லது வரும் போது இல்லாது விட்டாலும் கூட வந்தபின் பாதுகாப்பதற்கு இருந்திருக்கக்கூடிய அல்லது முயற்சி செய்து பார்த்திருக்க்கூடிய வௌ;வேறு வாய்ப்புக்களைக் குழப்பியடித்து, இயக்கத்தை அழிவு நிலைக்கும் தமிழ்மக்களை இன்றைய இழிவு நிலைக்கும் கொண்டுபோய்ச் சேர்த்ததில் இந்த சேரமான்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கேபி முன்மொழிந்ததமையினைப் போல ஒரு முயற்சியினை எடுத்துப் பார்த்திருந்தால் என்ன என்பது இப்போது மனதில் ஒரு பெரும் ஆதங்கமாக இருக்கிறது. தலைவரையும் இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு சிந்தித்த கேபி முள்ளிவாய்க்காலுக்கு காரணமான துரோகி! தமது செயற்பாடுகள் மூலமாக எல்லா அழிவுகளுக்கும் காரணமாக இருந்த சேரமான்கள் புலத்தில் மக்களை வழிநடத்தும் தலைமைகள். எமது அடுத்த கட்டப் போராட்டமும் எங்கு போய்த் தொலையப்போகிறதோ?

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கட்டத்தில் எப்படியாவது போராளிகளையும் மக்களையும் பர்துகாப்பதற்கு 48 மணி நேரம் நித்திரை கொள்ளாது முயற்சிகள் எடுத்த வண்ணம் கேபி துடித்த துடிப்பு எமக்குத் தெரியும். கேபி மட்டுமன்றி களத்தில் நின்ற சூசை, நடேசன் உட்பட்ட தலைவர்களும் மக்கள், போராளிகள் குறித்து தவியாய்த் தவித்த தவிப்பும் நாம் அறிவோம். இறுதிக் கணத்தில் வீரமாகச் செத்துப் போகாமல் தமது உயிரைப் பாதுகாக்க இவர்கள் முயன்றது ஏன் என்று புலத்தில் இருந்து கொண்டு இந்த சேரமான்கள் தமக்குள் பேசிக் கொண்டதும் எமக்குத் தெரியும்.

இன்று இந்தச் சேரமான்கள் நடேசன், புலித்தேவன் உட்பட்ட போரளிகள் கொல்லப்பட்டதற்கும் கேபியைக் குற்றம் சுமத்துகின்றனர். நடேசன் இறுதிக் கணம் வரை சற்றலைட் தொலைபேசியுடன் உலகுடன் தொடர்புடன் இருந்துதான் இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் செய்தார். இதற்காக இவர்; எரிக் சோல்கைம் உடன் இறுதிக் கணங்களில் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசியுள்ளார். பத்திரிகாளர் ஆயசநை ஊழடஎin உடனும் பேசியுள்ளார். தமது தொடர்பு அறுபட்டால் கேபியுடன் தொடர்புகளைப் பேணுமாறும் தன்னொடு தொடர்புகளில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். இவையெல்லாம் முடிவுகளை நடேசன் நேரடியாகவே எடுத்தமையினையே வெளிப்படுத்துகின்றன.

அடுத்த விடயம், தலைவரை இறுதிக் காலகட்டத்தில் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்துவது தொடர்பானது. வௌ;வேறு முயற்சிகள் எடுத்தும், அவை நடைமுறைச் சாத்தியமற்றுப் போனமையால் தலைவைரப் பாதுகாக்கும் திட்டம் குறித்து தலைவரின் மகன் சார்ல்ஸ் அன்ரனி கேபியுடன் புதிய திட்டம் குறித்து கலந்து பேசியிருக்கிறார். கெலிகப்டர் ஒன்றினை வாங்கி மிகவும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றக்குத் தலைவரை நகர்த்துவதும் வகுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று. இத் திட்டத்தினைத் தலைவரின் மகனே நேரடியாகத் தலைவரிடம் தெரிவித்து சம்மதம் பெறு;று அதனை கேபியிடம் தெரிவித்திருக்கிறார். எல்லா ஏற்பாடுகளுக்கும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தேவைப்பட்டிருக்கிறது. உரிய பணத்தைக் கொடுக்கமாறும் அறிவுறுத்தல் இந்த சேரமான் கூட்டங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உரிய பணத்தைத் தம் வசம் வைத்திருந்தும் சாக்குப் போக்குச் சொல்லி இப் பணத்தை கேபியிடம் கொடுக்காது விட்டிருக்கிறார்கள் இந்த சேரமான்கள். அதனால் திட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் தலைவரை பாதுகாப்பாக இடத்துக்கு நகர்த்துவது சாத்தியப்பட்டிருக்கவும்கூடும். ஏதோ கேபியின் சதி முயற்சியில் இருந்து தாம் தலைவரை காப்பாற்றி உயிருடன் பாதுகாத்து வைத்திருப்பது போல ஒரு பாசாங்குக் கள்ளத்துடன் கேபி மீது தமது வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கின்றனர் இந்த சேரமான்கள்;.

முள்ளிவாய்க்காலின் முடிவுகளுக்குப் பின்னர் போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறையில் நகர்தவேண்டும் என்ற முடிவுக்குப் போகிறார் கேபி. ஆயுதப்போராட்டத்தை உடனடியாகத் தொடர்வது சாத்தியமில்லை எனவும் பாதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக இருந்தது. அதேவேளை போராளிகளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று பெரிதும் முயற்சித்தவர் அவர். கேபி மீது அபாண்டமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தச் சந்தர்ப்பம் பார்த்திருந்த சேரமான்கள் இப்போது கொடுக்குக் கட்டிக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் குறற்வாளிகளே மற்றவர்கள் மீது குற்றங்களைச் சுமத்துவதனையும் தீர்ப்புக்களை வழங்குவதனையும் சாத்தியமாக்கக்கூடிய ஒரு சூழல் நம்மிடையே நிலவுவதனையே காட்டுகிறது. கேபி விடயத்தில் கேபியின் கைதுக்கு முன்னர் பின்னர் என இரு வகையில் நாம் விடயங்களைப் பகுத்துக் பார்க்க வேண்டும். கேபின் கைதுக்கு முன்னர் சுதந்திர மனிதானாக இருந்த கேபி எப்போதும் போராட்டத்தின் பக்கம்தான் நின்றார். இப்போது சிறிலங்கா அரசின் கைதியாக இருக்கும் கேபியின் செயற்பாட்டைக் காலம்தான் மதிப்பீடு செய்ய வேண்டும்.

- கஜன் -

தாய்நிலம் பத்திரிகை

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரை கூறும் உண்மைகள் அனைத்தையும் நானும் அறிந்திருக்கின்றேன். இதுதான் உண்மையும் கூட. இதனை வரலாறாகவே பதிவு செய்யப் போகின்றனர். அப்போதுதான் புலத்தில் உள்ள மக்களுக்கு தாம் கொடுத்த நிதியுதவிகள் சரியாகப் போகவில்லை என்பது தெரியவரும்.

இங்கே நான் எழுப்பும் கேள்வி யாதெனில், கே.பி. பிடிபட்ட இடத்தில் நெடியவன் உள்ளிட்ட அவரது எடுபிடிகள், தமிழ்நெட் ஜெயா போன்றவர்கள் பிடிபட்டால் சிறிலங்கா அரசுக்கு உண்மைகள் கூறாது வீரமாகவா செயற்படுபவர்? அவர்களுக்கே நன்கு தெரியும். தற்போது எதனையும் வீரமாக பேசினாலோ அல்லது வீறாப்பாக இருந்தாலோ எதனையும் சாதிக்கமுடியாது என்பது.

ஏனெனில் தமிழீழப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல் வீரமாக இருந்து தாம் அழிவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கருதி சிறிலங்கா அரசுடன் செயற்படவே முனைவர். அதாவது, பச்சையாகக் கூறுவதனால் எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து தாமும் தப்பவே முயற்சிப்பர்.

இங்கே நான் எழுப்பும் மற்றொரு கேள்வி இதுதான், அனைத்துலக தொடர்பகத்துக்கும் புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கும் தொடர்புகளைப் பேணுகின்றேன் பேர்வழி என்று வன்னியில் இருந்து எத்தனையோ பேருக்கு தகடு வைத்த நந்தகோபன் என்பவரும் இறுதிக்கட்டத்தில் உணர்ச்சி பொங்க புலத்து மக்களை உசுப்பிய திலீபனும் எவ்வாறு உயிர்தப்பி வெளிநாடு வந்தனர்? காஸ்ட்ரோவை தவறாக வழிநடத்தியவர்களில் மிக முக்கியானவர் நந்தகோபன். இவரைப்பற்றி தெரியவேண்டுமானால் கள நண்பர்களே உங்கள் நாட்டில் பணிபுரியும் செயற்பாட்டாளர்களிடமே கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு நான் எழுதியவுடனேயே பலர் வாய்திறக்காது பேசாமல் இருந்துவிடுவார்கள். ஏனெனில் நந்தகோபன் ஐரோப்பாவில் இருந்துகொண்டு, தானே எல்லாம் என்கின்ற பாணியில் பலரை பழைய பாணியில் மிரட்டும் செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கின்றார்.

இங்கே நான் காட்டிக்கொடுக்கும் பாணியில் எழுதுவதாக பலர் நினைக்கலாம். எனக்கு அவ்வாறான எண்ணமில்லை. ஆனால், மலிந்தால் சந்தைக்கு வரத்தான் வேண்டும் என்கின்ற முதுமொழியின் அடிப்படையில் உண்மைகளை மறைக்காது இருக்கமுடியாது.

விடுதலைப் புலிகளின் தலைவரைக் காப்பாற்றுகின்றோம் பேர்வழிகள் என்று தலைவரையும் முக்கிய தளபதிகளையும் தாமே ஏமாற்றிவிட்டு இன்று கே.பி. மீது பழிபோட்டு தாம் தப்பி அந்தப் பணத்தினை தமது கைக்குள் வைத்திருக்க விரும்பும் இவர்களைப் பற்றி பேசாது இருக்கமுடியாது.

Edited by nirmalan

KP யை நியாயப்படுத்தும் யாரோ ஒரு அரை குறை ஒண்டு எழுதி இருக்கு...! இவ்வளவு தான் சொல்ல கூடியது...

Edited by தயா

எதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. தற்போதைக்கு இணக்கம் மூலம் தான் எதையும் செய்ய முடியும்.. முரண்பட்டு நின்று எதுவும் நடக்காது.. மாறாக சிறைவைக்கப்பட்டிருக்கும் போராளிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆபத்தாகவே முடியும்.. துன்பங்களையே சந்தித்த போராளிகளும் கூட நின்ற மக்களும் என்ன விலை கொடுத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.. மக்களுக்காகவே போராட்டமே தவிர போராட்டத்துக்காக மக்கள் அல்ல..

கேபி துரோகி காட்டிக் கொடுப்பவர் என்று சொல்லும் புலத்து மேதகுக்கும் மேலான மேதகுக்களுக்கும் இணைய புரட்சி செம்மல்களான பிரிகேடியர் ஜெனரல்களுக்கும் வணக்கமுங்க.....

தாயக விடுதலையையே அண்ணையை நம்பி தங்கள் வாழ்வை இளமையை எதிர்காலத்தை அர்பணித்த 12ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள்...

தாயக விடுதலைக்க அதாவது எங்களுக்கு உதவி செய்ததற்காக வாழ்வை வளத்தை தேட்டத்தை எதிர்காலத்தை தன்மானத்தை இழந்து இன்னும் முகாங்களில் ஒருவேளை சோற்றுக்கா சிங்களவனிடம் கையேந்தி நிற்கும் 2

இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்...

சிங்கள இராணுவ வெறியர்களின் பாலியல் கொடுமைகளை நிதம் அனுபவிக்கும் நம் பெண் போராளிகள்.....

வாழ்க்கைத் துணையை இழந்து பரிதவிக்கும் தங்கள் பிள்ளைகளுக்க பாலுட்ட வழியின்றி தவிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தும் அதிகமான விதவைகள்... (அவர்களின் மானத்துக்கு விலை பேசும் சிங்களக் காடையர் கூட்டம்)

இந்த போராட்டத்தை நம்பி வந்ததற்கான அவயங்களை இழந்த ஒரு இலட்சத்துக்கு அதிகமான சிறிவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் ….

2002 க்க முன் எமது பொராட்டத்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பும் பாதிப்பு 10 வீதம் என்றால் 2009 ல் ஏற்பட்ட பாதிப்பு 90 வீதம்.

முந்தி நாங்கள் இது எங்கடை ஊர் எங்கடை நிலம் எண்டு நாங்கள் உரிமை கொண்டாடக் கூடியதாக இருந்ததுஇ இப்ப எந்த சிமிடத்திலையும் சிங்கள இராணுவம் வந்தி எங்களை எங்கடை சொந்த வீட்டில் இருந்து எங்களை வெளியேற்றலாம்....

இது தான் எங்கடை தாயகத்தின் நிலைமை இன்று...

இந்த நிலைமையை மாற்றுறதுக்கு உங்களிட்டை என்ன திட்டம் இருக்கு....

இங்கை இருந்து ஒரு தரையிறக்கம் செய்து சிங்கள ஆமிக்காரனை உடனடியா அடிச்சு விரட்டி எங்கடை தாயகத்தை நாளைக்கே மீட்க முடியுமா? அப்படி ஒரு தரையிறக்கத்துக்கு போக இணையப் பரட்சியார்கள் தயாரா?

அல்லது அங்கி தப்பி எஞசி இருக்கிற போராளிகள் ஒன்று திரண்டு தாக்கதல் நடத்தி சிறையிலுள்ள போராளிகளையும் மக்களையும் விடுவிக்க முடியுமா?

ஊங்கடை மக்கள் பேரவைகளோ தமிழர் ஒன்றியங்களோ அல்லது நாடுகடந்த அரசோ தமிழர் புனர்வாழ்வுக் கழகமோ அங்கை போய் பாதிக்ப்பட்ட அவலத்தில் வாழ்கிற அந்த அப்பாவி உறவுகளுக்கு புனர்வாழ்வழிக்க முடியமா?

எல்லாம் நாங்கள் கதைகிறோம் சந்திக்கிறோம் எங்களுக்கு தொடர்புகள் இருக்கு எண்டு சொல்லுற மேற்குலக அரசுகள் ஊடனடியா ஓடிவந்து எங்கடை சகோதரிகள் சிங்களவன்ரை பிள்ளையை சுமக்கிற அல்லது அதை கருக்கலைப்பு செய்யிற அலத்தை தடுக்க உதவுமா? பட்டிணிபோட்டு பிள்ளைகளை கொல்வோம் என்ற மிரட்டி படுக்க அழைக்கும் நிர்பந்திக்கும் கொடுமையை உங்களால் இங்கை இருந்து தடுக்க முடியுமா?

மக்களை காப்பாற்ற என்ன திட்டம் இருக்கு உங்களிட்டை?

சொல்லுங்கோ அண்ணைமாரே........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசுரன், நிர்மலன், ஆதியன் ... இன்னும் எத்தனை பேரில் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் இனியும் உங்கள் கே.பீ ரொம்ப நல்லவர் சாயம் இங்கு எடுபடாது.

ஆனால் யாழ் நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் சங்கதி பதிவின் ஆக்கங்களை எவ்வாறு கடாசி வீசுகிறீர்களோ அதே போல் கே.பீ குரூப்பின் கருத்துக்களையும் தூக்கினால் ஒரு நியாயத் தன்மை இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு

அவர்களை இங்கு எழுதாதீர்கள்

எடுபடாது என்று சொல்வது எனக்கு சரியாகப்படவில்லை

நீங்கள் அவர்களுக்கான பதில்களை எழுதுங்கள்

அவர்களும் தமது பதில்களைத்தரட்டும்

முடிவை மக்கள் எடுக்கட்டும்

நன்றி

அசுரன், நிர்மலன், ஆதியன் ... இன்னும் எத்தனை பேரில் வேண்டுமானாலும் வாருங்கள். ஆனால் இனியும் உங்கள் கே.பீ ரொம்ப நல்லவர் சாயம் இங்கு எடுபடாது.

ஆனால் யாழ் நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் சங்கதி பதிவின் ஆக்கங்களை எவ்வாறு கடாசி வீசுகிறீர்களோ அதே போல் கே.பீ குரூப்பின் கருத்துக்களையும் தூக்கினால் ஒரு நியாயத் தன்மை இருக்கும்.

அண்ணை 2009 க்கு முன்னர் தமிழ் மக்களுக்கு தாயகத்தில் குறைந்த பட்ட சட்டப் பாதுகாப்பும் சமூகப்பாதுகாப்பும் இருந்தது.சிங்கள இனவெறியர்கள் சிறய அளவிலைதான் எமது உறவுகளை அழிச்சவங்கள் ஆனால் இண்டைக்கு எமது இனம் நிர்க்கதியான ஒரு நிலையில இருக்குது. பணத்தை கொடுப்பதல்ல பிரச்சனை.எமது மக்களையும் பொராளிகளையும் உடனடியாக எப்படி பாது காக்கிறது என்பது தான் இப்ப உள்ள பிரச்சனை.

2 பிள்ளைகளின் தாயான ஒரு பெண்போராளி கடந்த வாரம் 22 இராணுவவெறிர்களால் குரூரமாக குதறப்பட்டிருக்கிறார்கள்.வெளியே சொன்னால் அவளது 2 குழந்கைளும் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டிருக்கிறாhள். இன்னொருபெண் தன்னுடைய பிள்ளைகள் பசியால் துடிப்பதை பொறுக்க முடியாமல் கூட்டுத் தற்கொலை செய்திருக்கிறாள்.இதெல்லாம் வெளியுலகத்தக்கு மறைக்கப்படும் செய்திகள்இ

இங்கை பாதுகாப்பான வசதியுள்ள உயிராபத்தில்லாத சிறையில் இருக்கும் செயற்பாட்டாளரை வெளியிலை எடுக்க ஒரு இலட்சத்து இருப்பத்தையாயிரம் யூரோ கட்ட முடியுது.அங்கை எந்தசேரம் என்ன நடக்கும் என்ற தெரியாமல் அவல வாழ்வு வாழும் போராளிகளை வெளியல எடுக்க ஒரு திட்டமும் இல்லை

சரி இந்தப் போராளிகளை விடுவிக்க உங்கள் கே.பீ யிடம் இருக்கும் திட்டம் தான் என்ன?

புலம் பெயர் மக்கள் நமோ நமோ மாதா பாடி சிங்கள போர் குற்றம் ஏதும் செயயவில்லை என்று உலகத்துக்கு சத்தியம் செய்து கொடுத்தால் இந்த போராளிகளை விடுதலை செய்வார்களா? அல்லது குறித்த தொகை பணத்தை மகிந்தவிடம் கொடுத்தால் அனைத்து போராளிகளையும் விடுதலை செய்வார்களா? தயவு செய்து உங்கள் திட்டத்தைச் சொல்லுங்கள்!

ஆதென்ன உங்கடை கேபி நான் ஒண்டும் உங்களை மாதிரி குழு சோந்த ஆளில்லை. சரி உங்கடை வழிக்கே வாறன் உங்கடை அறிவும் நந்தகோனும் ஆரக்கு காசு கொடுத.த வெளிய வந்தவை. கருணாதானே அவையை வெளியிலை எடுத்துவிட்டவன் புலம்பெயர்ந்த மக்களின்ரை காசை பதிக்கி வைச்சிருக்கிற உங்கடை சாம்ராஜ் எங்கை அதை சொல்லுங்கோ இன்டைக்கு சுவீசிலை இந்த காசுப்பிரச்சனையால் பல குடும்பங்கள் பிரியிற நிலைக்கு வந்திருக்கு.

என்னைப் பொறுத்தவரை கேபி ஒரு சிறைக் கைதி அவ்வளவுதான்.மகிந்தவையும் கோத்தபாயவையும் போர் குற்றவாளியாக்கினால் மட்டும் இங்கை மேற்குலகத்தில கொண்டுவந்து அவையை தூக்கில போட்டிடுவினமாக்கும். அப்படி நடந்தால் அவங்கள் வசதியிhன சிறையிலதான் இருக்கப் போறாங்கள்.

நந்தமோகன் இப்போது எந்த நாட்டில் வாழ்கின்றார்?

ஐயா நான் ஒரு பொதுமகன். நீங்கள் சொல்லும் நபர்களின் பெயரை கூட வாழ்நாளில் கேட்டது கிடையாது. அதே போல் அனைத்துலகத் தொடர்பகம் நெடியவன் ... இவர்கள் எல்லாம் நல்லவர்களா கெட்டவர்களா எதுவும் தெரியாது. ஆனால் கே.பி அப்பாவி. குண்டுக் கட்டாக ஸ்ரீ லங்காவால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் இன்று டாக்டர் அருட்குமாரின் செவ்வியின் பின் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது.

நான் ஏன் இங்கு விசனம் எழுப்புகிறேன் என்றால் அசுரன், நிர்மலன், ஆதியன் என்னும் பெயர்களில் வரிந்து கட்டிக்கொண்டு கே.பி யை வக்காலத்து வாங்குவதால் தான். மற்றும்படி அனைத்துலக தொடர்பகம் சம்பந்தப்பட்ட உங்கள் விமர்சனங்களில் எனக்கு மறுப்போ உடன்பாடோ என்று எதுவுமேயில்லை.

கேபி தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி தகவல்களைத் திரிபபடுத்தியும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டும் எல்லாவற்றுக்கும் காரணம் கேபிதான் என்று தமிழ்மக்களின் காதில் ப+ச்சுற்றும் வேலையில்; சேரமான் கூட்டம் தொடர்ந்தும் ஈடுபடுவதால் இக் கட்டுரையினையினையும் எழுத வேண்டி இருக்கிறது.

கே.பி சூழ் நிலைக் கைதி என்பதை ஏற்கமுடியாது.

சூழ் நிலையை ஏற்படுத்திச் சிக்குப்பட்டவர் என்று சொல்லலாமா?

தலைவர் மீது வழுதி, வாந்தி எடுத்த போது வாராத வலியை

கே.பி இற்கு சேரமான் எழுதும் கடிதம் வலி ஏற்படுத்துகின்றது இவர்களுக்கு.

இவர்கள் தலைவர் பிரபாகரனை, தலைவராக ஏற்று வேலை செய்தார்களா?

கே.பி யைத் தலைவர், ஆக்குவதற்கு, வேலை செய்தார்களா?

Edited by kalaivani

நான் சொல்ல வருகிறது கேபிக்கு காசு கொடுத்து போராளிகளை விடுவிப்பதலலஇ சிறீலங்கா அரசு கேபியை துருப்புச் சீட்டா பயன்படத்தப் பாக்குது.போர் குற்ற விசாரணை என்ற ஒன்று நடந்தால் அதில் முக்கிய சாட்சி கேபி.அதனால் அவரை தம்பக்கம் வைத்திருக்க வேண்டிய அவர் சொல்வதை கேட்க வேண்டிய தேவை சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது.

இதை நாங்கள் அதாவது புலம் பெயாந்த சமூகம் பயன் படுத்த வேண்டும்.

சிறையிலுள்ள போராளிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று நாங்கள் கேபிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனக்கு கிடைத்த தகவல் முதற்கட்டமாக 5000 போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கேபி கோரிக்கை வைத்திருக்கிறாராம்இஇது கொழும்பிலுள்ள அரசியல் கட்சி வட்டாரம் ஒன்றுக் கூடாக நான் உறுதிப்படுத்திய தகவல்.அப்படி 5ஆயிரம் போராளிகள் விடுதலை செய்ப்பட்டால் வரவேற்க வேண்டுமா வேண்டாமா? இதுதான் எனது கேள்வி இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு போராளியணின் விடுதலையும் மக்கியமானது அதுவும் பெண் போராளிகளின் பாதுகாப்பும் விடுதலையும் முக்கியமானது.

இதை தமிழ் நெட் ஈமுரசு கனவான்களால் செய்ய முடியுமா ? ஏன்பது தான் என்னுடைய கேள்வி?

இப்ப பேட்டி குடுத்த உந்த டாக்குத்தரை தமிழ் நெட்கனவான் செட்பண்ணி ஆனுப்பினதாகவும் இப்ப ஒரு தகவல் வந்திருக்குஎனக்க தமிழ் நெட் இந்த பேராட்டத்துக்கு என்ன செய்தவர் ஊரிலை என்ன செய்தவர் எண்டது அக்கு வேற ஆணிவேறா தெரியும்.ஈழப் போராட்டத்துக்கு அதிகம் துரொகம் செய்தது ஆர் எண்டால் முதல் இந்த கனவானின் பெயரைத் தான் நான் சொல்லுவன்இஅதுக்குபிறகு தான் கருணா மற்றவை எல்லாம் கரணாவை பிளவு படுத்தினதே உவர் தான் எண்டதும் சிவராமின்ரை அறிமுகத்தை வைத்து உவர் தென் தமிழீழத்திலை நகர்த்தின காய் நகர்த்தலகள் எத்தினை பேருக்கு தெரியும் உருவரை தெரிஞ்சுவங்க்ள இப்ப இஞ்சைதான் இருக்கிறங்கள்இஒண்டல்ல இரண்டல் பத்துக் கணக்கில் தங்களை வெளிப்படுத்தினால் காட்டிக் கொடுக்கப்படுவோம எண்ட பயம் அவங்களிட்டை இன்னமும் இருக்கு;

கே.பி சூழ் நிலைக் கைதி என்பதை ஏற்கமுடியாது.

சூழ் நிலையை ஏற்படுத்திச் சிக்குப்பட்டவர் என்று சொல்லலாமா?

தலைவர் மீது வழுதி, வாந்தி எடுத்த போது வாராத வலியை

கே.பி இற்கு சேரமான் எழுதும் கடிதம் வலி ஏற்படுத்துகின்றது இவர்களுக்கு.

இவர்கள் தலைவர் பிரபாகரனை, தலைவராக ஏற்று வேலை செய்தார்களா?

கே.பி யைத் தலைவர், ஆக்குவதற்கு, வேலை செய்தார்களா?

இறுதிக்கட்டத்தில் போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சரண் அடைவதுக்கு இந்திய இலங்கை பிரிவுகளிடம் இருந்து உறுதி வாங்கிக்கொடுத்தவர் இந்த KP ... அந்த வகையில் போராளிகளை இலங்கை படைகள் கொலை செய்ய போது என்ன செய்தால்...?? குறைந்தது தமிழ் மக்களுக்கு சொன்னாரா...?? தடுமாற்றத்தில் கஸ்பரும், இங்கிலாந்தின் மேரி கெல்வின் அம்மையாரும் சொல்லித்தானே வெளி வந்தது...?? அங்கே KP எதை மறைக்க முயண்றார்...??

KP சரண் அடையும் வரைக்கும் கடவுச்சீட்டு அலுவலகத்திலும் விமான நிலையத்திலும் வைத்திருந்த ஜோகி அண்ணா போண்றவர்கள் இப்ப எங்கே...?? KP யின் தலைமை கனவுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள் எண்று போட்டு தள்ளிவிட்டார்களா...??

போராளிகளின் மக்களின் அழிவுக்கு நம்பிக்கை கொடுத்த KP எதை மறைத்தார்...?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவையும் கோத்தபாயவையும் போர் குற்றவாளியாக்கினால் மட்டும் இங்கை மேற்குலகத்தில கொண்டுவந்து அவையை தூக்கில போட்டிடுவினமாக்கும். அப்படி நடந்தால் அவங்கள் வசதியிhன சிறையிலதான் இருக்கப் போறாங்கள்.

சேர்பியாவில் போர்க்குற்றம் இழைத்த ஒரு ஆளை சி ஐ ஏ கடத்திவந்து ஹேகில் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்திய ஒரு நிகழ்வை அன்று ஒருநாள் தொலைக்காட்சியில் விவரணமாகப் போட்டார்கள். மகிந்தவுக்கும் இது நடக்கும் என்று ஆருடம் கூறவரவில்லை. ஆனால் நான் முன் சொன்னதும் நடந்திருக்கிறது. :(

இக்கட்டுரையை வடித்த கஜனுக்கு,

வணக்கம்! .. நானும் உங்களை போல் கேபியை ஆதரித்தவர்களில் ஒருவன்! உங்களுக்கு உள்ள அத்தனை கேள்விகளும் அன்றே, இந்த யாழ்களத்தில் கேட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.

... சிறுகச் சிறுக கட்டிய கூடு, சில நாளிகைகளில் பிய்த்து எறிந்த ... வேதனை, கோபம், விரக்தி, வெறுப்பு வெளிவர ... இந்தா நான் இருக்கிறேன் அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை கொண்டு செல்ல என கேபி அறைகூவல் விட, இருள் சூழ்ந்த நிலையில் ஓர் ஒளியை கண்ட சந்தோசத்தில் ஆரவாரித்தவர்களில் நானும் ஒருவன்!!!

ஆனால் கேபி பிடிபட்டு/சரனடைந்த சில நாட்களிலேயே பல கேல்விகள் என்னையும் துளைத்தது ... கேபி தொடர்பாக ...

... கேபி தன்னை தலைவன் என்று அறிவித்தது முதல், இங்கு லண்டனிலேயே யாழ்கள பாண்டர், குணாளன், ஜெயபாலன், கொன்ஸன்ரைன், காணோன், கோணான், நிண்டவன், நடந்தவன், .. என்று ஆயிரத்துக்கு மேற்பட்டதுகளுக்கு மலேசியாவில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டபடியும், என்னை மலேசியா வந்து சந்தியுங்கள் என்றபடியும் இருக்க, இங்கிருந்தும் மலேசியாவுக்கு பலர் காலிடே அடிக்கவும் ... இன்ரபோலினால் மட்டுமல்ல அனைத்து வல்லரசுகளின் புலனாய்வுத்துறையினருக்கு வேண்டப்பட்ட கேபி, அவர்கள் கண்ணை மூடிபடியா இருக்கிறார்கள் என்று நினைத்தார்? இல்லை அவர்கள் வலது குறைந்தவர்கள் என்றா நினைத்தார்? புரியவில்லை????!!!!! தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் இவ்வுலகில், ஒருவருடைய தொலைபேசியை வைத்தே அவரின் இருப்பிடம் அச்சொட்டாக சொல்லக்கூடிய இக்காலத்தில் கேபி, அதனை உணராதவராகவா இருந்தார்? அப்படியான விடயங்கள் அவருக்கு தெரிந்திருக்கவில்லையாயின், அப்பேற்பட்டவர் எமக்கு தலைவராக தகுதி உடையவரா?

இல்லை தன்னை நல்லவர் என்று நிரூபிக்க வெளியில் வந்தார் என்பது நம்பக்கூடிய காரியமல்ல! அதுவும் இக்கட்டான காலகட்டத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுக்க தலைவர் பொறுப்பை ஏற்றவர், இவ்வாறு நடந்து கொண்டார் என்பற்கு வேறு விடை கிடைக்கவில்லை!!!!

சரி, மற்றப்பக்கத்தால் பார்ப்போமாயின் ...

... கேபி கைதுதான் செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, இன்று சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் தனது உயிரை காக்க இப்படியெல்லாம் செய்ய வேண்டியுள்ளது ... என்று பார்த்தாலும், கேபியை வைத்து அவன் நாடகம் ஆடும் போது, நாம் கேபியை தொடர்ந்து புகழ்ந்து, அவனது நாடகத்தில் நாங்களும் இணைய வேண்டுமா???? அவன் கேபியை வைத்து ஆட்டுவித்து, எமக்காப்படிக்க முயலும்போது, மறுத்தானுகள் போடத்தான் வேண்டும்! கேபி நல்லவனோ, வல்லவனோ, .. ஆனால் இன்று எதிரியின் கையில், இனி நாம் கேபியை கட்டிபிடிக்க முடியாது!!!

... சேரமான்கள் ... வேண்டாம் விடுவோம்!!! ... ஆனால் உந்த சேரமான்களுக்காக கேபி சிறிலங்காவில்/சிறிலங்காவால் கேபியை வைத்து ஆடப்படும் கூத்துக்கு, என்னை/உங்களைப் போன்றோர் பக்கப்பட்டு பாடுவதை நிறுத்துவோம்!

... சேரமான்கள் ... வேண்டாம் விடுவோம்!!! ... ஆனால் உந்த சேரமான்களுக்காக கேபி சிறிலங்காவில்ஃசிறிலங்காவால் கேபியை வைத்து ஆடப்படும் கூத்துக்குஇ என்னைஃஉங்களைப் போன்றோர் பக்கப்பட்டு பாடுவதை நிறுத்துவோம்!

இது ஒரு நோய் இந்த நோய்க்கு மருந்து இல்லை.

இந்த நோயின் தாக்கத்திற்கு உற்பட்டவர்களை இனங்கண்டு,

தமிழ்ச் சமூகத்தில் இருந்து ஒதிக்கி வைக்காத வரை, இந்தச் சிக்கல் தீராது.

2002 இற்கு முன்பு புலத்து அண்ணை கே.பி யின் அனுமதியுடன் சக்கரவர்திகளா ஆட்சி செய்தவர்கள்

மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பர்.

Edited by aathirai

இக்கட்டுரையை வடித்த கஜனுக்கு,

வணக்கம்! .. நானும் உங்களை போல் கேபியை ஆதரித்தவர்களில் ஒருவன்! உங்களுக்கு உள்ள அத்தனை கேள்விகளும் அன்றே, இந்த யாழ்களத்தில் கேட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்.

... சிறுகச் சிறுக கட்டிய கூடு, சில நாளிகைகளில் பிய்த்து எறிந்த ... வேதனை, கோபம், விரக்தி, வெறுப்பு வெளிவர ... இந்தா நான் இருக்கிறேன் அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை கொண்டு செல்ல என கேபி அறைகூவல் விட, இருள் சூழ்ந்த நிலையில் ஓர் ஒளியை கண்ட சந்தோசத்தில் ஆரவாரித்தவர்களில் நானும் ஒருவன்!!!

ஆனால் கேபி பிடிபட்டு/சரனடைந்த சில நாட்களிலேயே பல கேல்விகள் என்னையும் துளைத்தது ... கேபி தொடர்பாக ...

... கேபி தன்னை தலைவன் என்று அறிவித்தது முதல், இங்கு லண்டனிலேயே யாழ்கள பாண்டர், குணாளன், ஜெயபாலன், கொன்ஸன்ரைன், காணோன், கோணான், நிண்டவன், நடந்தவன், .. என்று ஆயிரத்துக்கு மேற்பட்டதுகளுக்கு மலேசியாவில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டபடியும், என்னை மலேசியா வந்து சந்தியுங்கள் என்றபடியும் இருக்க, இங்கிருந்தும் மலேசியாவுக்கு பலர் காலிடே அடிக்கவும் ... இன்ரபோலினால் மட்டுமல்ல அனைத்து வல்லரசுகளின் புலனாய்வுத்துறையினருக்கு வேண்டப்பட்ட கேபி, அவர்கள் கண்ணை மூடிபடியா இருக்கிறார்கள் என்று நினைத்தார்? இல்லை அவர்கள் வலது குறைந்தவர்கள் என்றா நினைத்தார்? புரியவில்லை????!!!!! தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் இவ்வுலகில், ஒருவருடைய தொலைபேசியை வைத்தே அவரின் இருப்பிடம் அச்சொட்டாக சொல்லக்கூடிய இக்காலத்தில் கேபி, அதனை உணராதவராகவா இருந்தார்? அப்படியான விடயங்கள் அவருக்கு தெரிந்திருக்கவில்லையாயின், அப்பேற்பட்டவர் எமக்கு தலைவராக தகுதி உடையவரா?

இல்லை தன்னை நல்லவர் என்று நிரூபிக்க வெளியில் வந்தார் என்பது நம்பக்கூடிய காரியமல்ல! அதுவும் இக்கட்டான காலகட்டத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு உயிர் கொடுக்க தலைவர் பொறுப்பை ஏற்றவர், இவ்வாறு நடந்து கொண்டார் என்பற்கு வேறு விடை கிடைக்கவில்லை!!!!

சரி, மற்றப்பக்கத்தால் பார்ப்போமாயின் ...

... கேபி கைதுதான் செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, இன்று சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் தனது உயிரை காக்க இப்படியெல்லாம் செய்ய வேண்டியுள்ளது ... என்று பார்த்தாலும், கேபியை வைத்து அவன் நாடகம் ஆடும் போது, நாம் கேபியை தொடர்ந்து புகழ்ந்து, அவனது நாடகத்தில் நாங்களும் இணைய வேண்டுமா???? அவன் கேபியை வைத்து ஆட்டுவித்து, எமக்காப்படிக்க முயலும்போது, மறுத்தானுகள் போடத்தான் வேண்டும்! கேபி நல்லவனோ, வல்லவனோ, .. ஆனால் இன்று எதிரியின் கையில், இனி நாம் கேபியை கட்டிபிடிக்க முடியாது!!!

... சேரமான்கள் ... வேண்டாம் விடுவோம்!!! ... ஆனால் உந்த சேரமான்களுக்காக கேபி சிறிலங்காவில்/சிறிலங்காவால் கேபியை வைத்து ஆடப்படும் கூத்துக்கு, என்னை/உங்களைப் போன்றோர் பக்கப்பட்டு பாடுவதை நிறுத்துவோம்!

நல்ல கருத்து அண்ணை. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா, சதா சர்வகாலமும் யாழ். இணையத்தளத்தில் ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்கின்ற அதேவேளை தன் கற்பனா சக்தியை அதிகமாக்கி ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு கேள்விகளை எழுப்பிக்கொண்டும் புனை கதைகளையும். எழுதி வருகின்றார். அவருக்கு வாழ்த்துக்கள். ஏனெனில் அவரளவில் எமக்கு இதில் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்க முடியாது. எமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கப்பு.

யோகி, புதுவை, பாலகுமாரன், பேபி போன்றவர்களைப் பற்றி சிந்திக்கின்றவர்கள் கடைநிலைப் போராளிகளைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்களுக்கு இவர்களின் பெயர்கள்தான் தெரியுமெனில் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த தளபதிகள் உயிரோடு பிடிபட்டும் சரணடைந்தும் உள்ளனரே அவர்களைப்பற்றியும் ஒரு கணம் சிந்தியுங்களேன். அவர்களின் பெயர் விபரங்கள் தரலாம். அவர்கள் மட்டும் எப்படி உயிரோடு இருக்கின்றனர்?

நான் எழுதுறதுகளை மினக்கெட்டு படிக்கிற அளவுக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதிலை சந்தோசம்...! நீங்கள் பந்தி பந்தியா எழுதும் உண்மைகளுக்கு எல்லாம் இன்ரபோல் ஆதாரம் வைத்து இருக்கு எண்டதும் அறிஞ்சு கொண்டம்...

போராளிகள் எண்டால் கடை நிலை முன் நிலை எண்டு இல்லை... எல்லாம் போராளிகள் தான் எல்லாரும் மக்களுக்காக போராட போனவைதான்... உங்கட வசதிக்கு பெரியவையை கொல்ல குடுத்து கடை நிலை போராளிகளை விடுவிக்கலாம் எண்டுறீயள்... ! ஆக உங்களுக்கு எல்லாம் விடுதலை எண்டது இல்லை பிரச்சினை.... KP யை எதிர்க்கிறதுதான்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.