Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு.

Featured Replies

லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு.

குசனையலஇ 02 துரடல 2010 13:05

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான திருமதி.பி.லதிதசொரூபினி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

மாலை 7:10 ற்கு ஆரம்பமான இந்த நிகழ்வை நா.க.த.அ மக்கள் பிரதிநிதியான லலிதசொரூபினி ஆரம்பித்துவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தொடர்ந்து இடம்பெற்றது.

இந்த மக்கள் பொதுக் கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான லலிதசொரூபினி, பாலாம்பிகை, தயாபரன், மொறிஸ், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் குறைநிறைகளையும், தங்கள் வேலைத்திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசின் பதினொரு அம்ச செயற்பாட்டு திட்டத்தில் கல்வி, கலைபண்பாடு, சுகாதாரம், விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய குழுவிலும், வர்த்தகமும், நிதியும் எனும் குழுவிலும் அங்கம் வகிக்கும் லலிதசொரூபினி அவர்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வி, மற்றும் வர்த்தகமும் நிதியும் ஆகிய விடையங்களை மக்களுடன் ஆராய்ந்தார்.

சொரூபினி முன்வைத்த வேலைத்திட்டத்தினை வரவேற்ற மக்கள் அதர்கான தமது ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர். அத்தோடு அங்கு வருகை தந்திருந்த உறுப்பினர்களோடு தாம் இணைந்து வேலைசெய்யத் தயாராக இருப்பதாகவும் பல மக்கள் தங்கள் பெயர்களை அவர்களிடம் கையளித்தனர்.

அத்தோடு மக்களாலும் சில வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்ட வேளையில் அதை அங்கிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதோடு உடனடியாகவே அவற்றை தாம் செய்ய ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.

மக்களால் முன்வைக்கப்பட்ட திட்டங்களும், வேண்டுகோளும்;

1) தமிழ் மக்களின் அதியுயர் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளான உங்களுக்கென்றோர் அலுவலகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

2) அந்த அலுவலகத்தில் மக்கள் தமது பிரதிநிதிகளை சந்தித்து உரையாடக்கூடிய வகையில் சுழற்சி முறையிலாவது ஒவ்வொரு நாளும் அங்கு மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

3) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையானதாக இருக்க வேண்டும்.

4) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய கிழைக்கென தனியான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக மக்கள் தமது பங்களிப்பை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

5) மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் இருந்து மறைந்திருக்காது உங்களைப் போன்று மக்கள் முன் வந்து மக்களை சந்திக்க வேண்டும்.

6) சிதறிக்கிடக்கும் தமிழர் அமைப்புக்கள், குழுக்கள், சங்கங்கள், பாடசாலைகள் ஆகியவற்றை அணுகி அவற்றையும் உள்வாங்கி நீங்கள் ஓர் அரசாங்கமாக செயற்பட வேண்டும்.

7) லண்டன் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதிகளையும் விரைவில் தெரிவு செய்ய தேர்தல் ஆணையகத்திற்கு வலியுறுத்தி ஆவன செய்ய வேண்டும்.

இதனை தவிர மக்கள் பொதுவாக தமக்குள் இருந்த கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை தருமாறும் கேட்டுக் கொண்டனர். அதில் முக்கியமானதாக பலராலும் எழுப்பப்பட்ட கேள்வியாக...

ஏனைய பிரதிநிதிகள் எங்கே? ஏன் அவர்கள் இந்த கூட்டத்திற்கு வரவில்லை? என்பதேயாகும். அதிலும் குறிப்பாக வடமேற்கு லண்டன் பகுதியில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பில் வடமேற்கு லண்டன் பிரதிநிதிகளில் இருந்து மூவர் மட்டுமே வந்துள்ளீர்கள். ஏனைய இருவருமான திரு.ஜெயானந்தமூர்த்தி, செல்வி. ஜெயவாணி ஆகியோர் எங்கே? ஏன் வரவில்லை? என்ற கேள்வியே பலரும் கேட்டனர்.

இதற்கு சமாளித்து பதிலளித்த லலிதசொரூபினி குறுகிய காலத்தில் திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் என்பதால் அனைவரும் வருகைதர முடியவில்ல்லை எனக் கூறினார்.

ஆனால் அதனை மறுத்த சிலர் நீங்கள் (லலிதசொரூபினி) கடந்த செவ்வாய்கிழமை ஜி.ரி.வி யில் வெளிச்சம் நிகழ்ச்சியூடாக இந்த மக்கள் பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தீர்கள். அதனை விட புதன் கிழமை இணையத்தள செய்திகளிலும் இக்கூட்டம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இத்னை பார்த்தும் கேள்வியுற்றும் நாம் இங்கு வந்துள்ளோம். ஆனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு நேரம் கிடைக்கவில்லை, குறுகிய கால அவகாசம் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது வாக்குகள் மூலமே அவர்கள் தெரிவானார்கள். எனவே அவர்கள் மக்கள் முன் வரவேண்டும். மக்களுடன் கலந்துரையாடி மக்களுக்கான சேவையை செய்யவேண்டும். சும்மா இருப்பதற்காக அவர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. என காட்டமான வார்த்தைகளில் மக்கள் தமது உள்ளக்கொதிப்பை வெளிப்படுத்தினர்.

இரவு 10:15 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்று மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிய போது தமக்கென்றோர் அரசாங்கம் அமைந்து விட்டது, அது தனக்கான செயற்பாட்டில் இறங்கியுள்ளது. இனி நாம் அதனூடாக எமது உரிமைகளை வென்றெடுக்கமுடியும் எனவும், பொருளாதாரம் மற்றும் கலை, பண்பாடு, கல்வி போன்றவற்றை கட்டியெழுப்ப முடியும் எனவும், மனநிறைவு கொண்ட மக்களாக வெளியேறியதை அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் பலரின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது.

http://www.varudal.com

Edited by aathirai

3) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையானதாக இருக்க வேண்டும்.

Why is Transparency Better for Tamil Diaspora Organizations?

-- An organization gets credibility from the people it represents based on how accountable and transparent it has been in its operations.

-- When a need arises, the organization can use its reputation and credibility to make a point to the public. Mostly, the organization statement can carry much more weight than those of the lobby groups.

http://www.sangam.org/2010/03/Transparency_Organizations.php?uid=3892

லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு.

4) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய கிழைக்கென தனியான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக மக்கள் தமது பங்களிப்பை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

தமிழனின் ரத்தத்தில் உருவான இது உருப்படியான யோசனையாக தெரியவில்லை.

1) தமிழ் மக்களின் அதியுயர் சக்தியான நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளான உங்களுக்கென்றோர் அலுவலகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

அதியுயர் சக்தியாக நாடுகடந்த அரசு எனும் நிறுவனம் செயற்படுகின்றதா?

செயற்படுமா?

கே.பி நாடுகடந்த தமிழீழ அரசை அறிவிற்கும் போது அவருக்கும், அவருக்குப்பின், நின்றவர்களுக்கும் இருந்த நோக்கம், நாடுகடந்த தமிழீழ அரசு எனும் கோசம், புலம்பெயர் தமிழரையும், தமிழர் அமைப்புகளையும் தமது கட்டுடப்பாட்டுக்குள் கொண்டுவருவம் என்பதே.

அரசு அமைப்பதற்கு முன்னர், நாடுகடந்த அரசு தொடர்பாக செய்திகளை வெளியிட்டு பிரமாண்டம் காட்டியவர்கள். அரசு அமைத்ததன் பின்னர் அடக்கிவாசிக்கின்றணர்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தேர்தலிலே நிண்டு தோத்தனீங்களோ.? :lol: எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரி குரைக்கிறீங்கள்.

எதையாது செய்ய விடுங்கவன் முதல்ல. செய்யமுதலே.. :D

இதை தான் சொல்லுவாங்கள் ஆடறுக்க முதல்ல ............... அறுக்கிற கூட்டம் என்று. :D :D

நீங்கள் என்ன தேர்தலிலே நிண்டு தோத்தனீங்களோ.? எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரி குரைக்கிறீங்கள்.

நன்றி

முதல்வன்,

நான் தேர்தலில் நிற்கவும் இல்லை, எனது வாக்கை யாருக்கும் போடவும் இல்லை.

கே.பி, கேபி இன் நாடுகடந்த தமிழீழ அரசு, தொடர்பான என கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாது இருக்கின்றது.

நீங்கள் கே.பி அணியா?

Edited by kalaivani

ஒரு கதைக்கு தனிப்பட்ட மனிதர்களான அ.ஆ. அல்லது இ.ஈ. நாடு கடந்ததமிமீழ அரசினை உருவாக்கியிருந்தாலும் அதன் செயல்பாடுகளை வைத்து அதை மக்கள் முடிவு செய்வார்கள்.

-- மக்களை அடிக்கடி சந்திப்பது மிகவும் வரவேற்கக்கூடியது

-- கணக்கு வரவுகள் செலவுகளை பகிரங்கப்படுதுவதன் மூலம் தேவையில்லாத தலையிடிகள் தவிர்க்கப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கி விட்டதா...எனக்குத் தெரியவில்லையே!!!!

வங்கிக் கணக்கை ஆரம்பியுங்கள்..அலுவலகத்தை திறவுங்கள் என்பதுதானா மக்களின் கோரிக்கை.

நன்றாக காதில் பூச்சுத்துகிறார்கள்.

எதையாவது செய்துவிட்டு மக்கள் முன் வாருங்கள். ஜெயானந்தமூர்த்தியும், ஜெயவானியும் வராததுதானா மக்கள் பிரச்சனை?

இவர்கள் திருந்த மாட்டார்கள்.

4) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய கிழைக்கென தனியான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக மக்கள் தமது பங்களிப்பை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

"வடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான்கான் முன்வந்துள்ளார்.

இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்."

அவனுக்கிருக்கிற அரைவாசி மனிதாபிமானம் கூட இந்த ...... கிடையாது!

எங்கட ஆட்கள் தானும் ஒன்றும் செய்யமாட்டான் செய்பவனையும் விட மாட்டான்.எல்லோருக்கும் ஒரு பட்டம் வைத்திருக்கின்றான் .இந்த வருத்தம் இப்ப தமிழ் நாட்டில இருக்கின்ற சில வெங்காயங்களுக்கும் தொத்தி நிண்டவன் போனவனுக்கெல்லாம் இப்போ அங்கும் அலுப்பு.

ஆரையாவது முதல் அரவணைச்சு நடக்க பழகுங்கோ.அல்லது அடித்த முள்ளிவாய்க்காலுக்கும் உலகம் சத்தம் போடாமல் பார்த்துக் கொண்டுதான் நிற்கும்.

ஒருவரையும் அரவணைக்க தெரியாத தமிழனை அரவணைக்க வேண்டிய அம்புட்டு அக்கறை சல்மான்கானுக்கு ஏன் வந்ததென்று எமக்கும் தெரியும் பல சல்மான்கான்களை பாhத்த மக்களுக்கும் தெரியும். ஆனால் சால்மானை வைத்து நாடகம் அரங்கேற்ற துடித்தவர்களுக்கு அரங்கேற்த்திற்கு முன்பே நாடகம் பற்றிய அனைத்தையும் மற்றவர்கள் அறிந்த ஆவேசம் கொஞ்சம் இருக்கதானே செய்யும்.

உங்களுக்கு ஆத்திரம் வருதிலும் இந்த மாதிரி கருத்துகளை எழுதுவதிலும் நியாயம் உண்டுதான்.

அதாவது என்னால் காமத்தை கட்டுபடுத்த முடியவில்லை அதனால் அவளை கற்பழித்தேன் என்பதைபோல.....

எங்கட ஆட்கள் தானும் ஒன்றும் செய்யமாட்டான் செய்பவனையும் விட மாட்டான்.எல்லோருக்கும் ஒரு பட்டம் வைத்திருக்கின்றான் .இந்த வருத்தம் இப்ப தமிழ் நாட்டில இருக்கின்ற சில வெங்காயங்களுக்கும் தொத்தி நிண்டவன் போனவனுக்கெல்லாம் இப்போ அங்கும் அலுப்பு.

ஆரையாவது முதல் அரவணைச்சு நடக்க பழகுங்கோ.அல்லது அடித்த முள்ளிவாய்க்காலுக்கும் உலகம் சத்தம் போடாமல் பார்த்துக் கொண்டுதான் நிற்கும்.

அதுக்கு நீரே நல்ல ஒரு உதாரணம்... !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.