Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள்

திகதி: 18.07.2010 // தமிழீழம்

தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.

இதன் கட்டமாகத்தான் அமெரிக்காவின் தரையிறங்கு போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதும், அமெரிக்கப்படையினர் திருமலை மண்ணில் கால்லூன்றி மக்களுக்கு உதவிசெய்வதுமான செயலானது, அருகில் உள்ள இந்திய வல்லரசை வியக்கவைத்துள்ளதுடன் சீனாவினை மூச்சடக்கவைத்துள்ளது.

51454378.jpg

அமெரிக்காவின் கிறின்பரேட் எனப்படும் படையணி அன்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியது என்பது வரலாறு. அதாவது, ஸ்ரீலங்கா அரசின் சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் படைத்துறைத் தளபதியாக இருந்த அனுருத்தரத்வத்த அமெரிக்கப்படையினை வரவழைத்து ஈழத்து வளங்களை தாரைவார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அதாவது ஜெயசிக்குறு படை நடவடிக்கையிலும் அமெரிக்காவின் கிறின்பரட் கொமாண்டோக்கள் மாங்குளத்தில் வைத்து விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. அன்று தொட்டு விடுதலைப்புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய அமெரிக்கா மறைமுக செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது என்பது உண்மை.

72319686.jpg

இறுதியில் தமிழ் மக்களின் பாரிய அழிவுகளுக்கு அமெரிக்காவின் பங்கும் உண்டு என்பதும் உண்மை. உண்மையில் வல்லரசுகளாக திகழும் இந்த நாடுகள் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இயங்கிய காலத்தில் ஈழத்து வளங்களை விலைக்கு வாங்க பேரம்பேசியும் உள்ளன.

ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதியான நம்பிக்கையும் அசைக்கமுடியாத தலைமையும் மண்பற்றும் கொண்ட தலைமைத்துவத்தை இந்த நாடுகளால் விலைமாற்று செய்யமுடியாமல் போனது என்பதும் கடந்த காலநிகழ்வுகள் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

90197754.jpg

அந்தவகையில் இந்தியா யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறையினை கையகப்படுத்தி பலாலி விமானத்தளத்தினையும் தன்வசம்கொள்ள வைத்துள்ளது. அத்துடன் மன்னாரின் எண்ணைவளத்தினையும் விலைக்கு வாங்கியுள்ளது. மறுபுறம் சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தினையும் அதனை அண்டி மகிந்தவால் அமைக்கப்பட்டுவருகின்ற விமான நிலையத்திலும் கால்லூன்றிக்கொண்டு வடக்கின் கச்சதீவு தொடக்கம் முள்ளிவாய்காலின் வட்டுவாகல் கடல்நீர்ரேரி, கிளிநொச்சியின் மேற்கின் நாச்சிக்குடா கடல்பகுதிகளை ஆழுகைசெய்ய முனைந்துகொண்டிருக்கின்றது.

96812483.jpg

இன்நிலையில் திருகோணமலையின் சம்பூரில் இந்தியா அனல் மின்நிலையம் அமைக்கும் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான மூன்று வல்லரசுகள் தமிழ் மக்களின் நிலங்களின் வளங்களை சுரண்டி கால்லூன்றிக்கொண்டிருக்கின்ற நிலையில்தான் அண்மையில் இந்தியாவின் போர்க்கப்பல் திருகோணமலை கடற்பரப்பிற்கு சென்று திரும்பியுள்ளது.

இன்னிலையில் அனைத்து வல்லரசுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமெரிக்காவின் போர்க்கப்பல் திருகோணமலையில் தரித்து நிக்கின்றது. இது தரித்து நிற்பதுமட்டுமல்ல அங்கு தரையிறங்கிய அமெரிக்கப்படையினர் தமிழர்களின் வளங்களை இனம்காணும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்கள்.

இது இவ்வாறு இருக்க பங்காளதேசத்தின் போர்கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்நிலையில் மீண்டும் இந்தியாவின் போர்க்கப்பல் ஒன்று ஸ்ரீலங்காவிற்கு வந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம் இந்த வல்லாதிக்க சக்திகளால் முடக்கப்பட்டுள்ள நிலையில்தான் இவர்களின் வருகைகள் நடைபெற்றுள்ளன. மீண்டும் வல்லாதிக்கங்கள் தமிழர்களின் வளங்களை கைகளில் எடுத்துக்கொள்ள ஆயுதப்படை ஒன்று தேவை என்பதையும் உணர்ந்துகொண்டு, அதன் ஆழத்தினை அறிவதற்கா ஈழத்தைநோக்கி படையெடுக்கின்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்டு பன்நாடுகளில் அரசியல்போரினை முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் இன்னும் விழிப்பாக செயற்படவேண்டிய காலகட்டத்தை இது என உணரவேண்டும்.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வளமா? அப்படி என்னதான் இருக்கு? மன்னார் வளைகுடாவில் எண்ணை எண்டாங்கள்.. அது என்ன வளைகுடா எண்ணையைவிடக் கூடுதலோ?? :lol:

உந்த வல்லரசுகள் தாங்கள் வந்து நிக்கிறதுக்கும், தங்கள் சொல்லைக் கேக்கிற ஒரு ஆட்சி அமையிறதுக்கும் அடிபோடுகினமே தவிர வளங்கள் எண்டு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் வளமா? அப்படி என்னதான் இருக்கு? மன்னார் வளைகுடாவில் எண்ணை எண்டாங்கள்.. அது என்ன வளைகுடா எண்ணையைவிடக் கூடுதலோ?? :lol:

உந்த வல்லரசுகள் தாங்கள் வந்து நிக்கிறதுக்கும், தங்கள் சொல்லைக் கேக்கிற ஒரு ஆட்சி அமையிறதுக்கும் அடிபோடுகினமே தவிர வளங்கள் எண்டு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :lol:

இப்படித்தான் சொல்லிக் கொண்டது ஆப்கானிஸ்தானையும். அங்க என்ன கிடக்கு பொப்பியை தவிர என்று.

ஆனால் அண்மையில் சி ஐ ஏ (கவனிக்கவும் சி ஐ ஏ) கசிய விட்ட (அமெரிக்கா ரகசியமா பாதுகாத்தது.. சீனாவுக்கு எப்படியோ எட்டி அது டீலும் போட்டுவிட்டதால்... விடயம் கசிய விடப்பட்டது.) தரவுகளின் படி ஒரு ரில்லியன் ( 1000 பில்லியன்) டொலர் பெறுமதியான இயற்கை வளங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அவை பெரிதும் கணணித்துறைக்கு மற்றும் இலத்திரனியல் துறைக்கு அவசியமான வளங்களாக உள்ளன. :D:lol:

Edited by nedukkalapoovan

அப்படியானால் நாம் போர் குற்ற விசாரணையையும் மறக்க வேண்டிய்து தான், எது எப்படியோ மகிந்தவுக்கு கிடைக்கப் போகும் சமாதானதிற்கான நோபல் பரிசிற்கான இந்த தமிழனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :lol::lol::lol:

வடமராட்சி கரையோரம்களில் காணப்படும் சிலிக்கா சார்ந்த மணல் இவர்கள் ஒருவரின் கண்ணிலும் படவில்லையோ...இன்னும்..இல்லாவிட்டால் அதற்கும் விலை பேசி இருப்பார்கள் அந்த இடம்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ன நடக்குதோ யாருக்கு தெரியும்... :lol:

இப்படித்தான் சொல்லிக் கொண்டது ஆப்கானிஸ்தானையும். அங்க என்ன கிடக்கு பொப்பியை தவிர என்று.

ஆனால் அண்மையில் சி ஐ ஏ (கவனிக்கவும் சி ஐ ஏ) கசிய விட்ட (அமெரிக்கா ரகசியமா பாதுகாத்தது.. சீனாவுக்கு எப்படியோ எட்டி அது டீலும் போட்டுவிட்டதால்... விடயம் கசிய விடப்பட்டது.) தரவுகளின் படி ஒரு ரில்லியன் ( 1000 பில்லியன்) டொலர் பெறுமதியான இயற்கை வளங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அவை பெரிதும் கணணித்துறைக்கு மற்றும் இலத்திரனியல் துறைக்கு அவசியமான வளங்களாக உள்ளன. :lol: :lol:

இதனால் தான் ஆபிரிக்கக் கண்டம் முழுக்க போர் விரிந்து கிடக்குது சைரே,அங்கோலா இங்கெல்லாம் செல்லிடப் பேசிக்கான முக்கியமான் கணியப் பொருள் ஒன்று உள்ளதாம், அதற்காத் தான் உள்னாட்டு யுத்தங்கள் ஊக்குவிக்கப்படுவதாக மாமனிதர் சிவராம் எழுதியதை வாசித்த ஒரு ஞாபகம்

தமிழர்களின் வளமா? அப்படி என்னதான் இருக்கு? மன்னார் வளைகுடாவில் எண்ணை எண்டாங்கள்.. அது என்ன வளைகுடா எண்ணையைவிடக் கூடுதலோ?? :lol:

உந்த வல்லரசுகள் தாங்கள் வந்து நிக்கிறதுக்கும், தங்கள் சொல்லைக் கேக்கிற ஒரு ஆட்சி அமையிறதுக்கும் அடிபோடுகினமே தவிர வளங்கள் எண்டு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை..! :lol:

தமிழனுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பதற்கு உமது கருத்தே உதாரணம், எண்ணெய் என்று தான் சொன்னவங்கள் ஆனால் என்ன எண்ணெய் என்று சொன்னவங்களா, வளைகுடாவில் மசகு எண்ணெய் அதிகம் உள்ளது, ஆனால் தேங்காய் எண்ணேயும், நல்லெண்ண்ய்யும் நம்மிடம் தான் அதிகம், ஒருவேளை அமெரிக்காக்காரன் தலையில் வைக்க அதை சுரண்ட முற்படல்லாம் அல்லவா, எதுக்கும் உம்மிடம் காசு இருந்தால் ஊரில 10 தென்னதோப்பு, 10 செக்கு மாடு வேண்டி வையும் அதில் வரும் வருமானத்தில கேதில மோர்ட்கேஜை கட்டி முடிக்காலாம் :D:D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சொல்லிக் கொண்டது ஆப்கானிஸ்தானையும். அங்க என்ன கிடக்கு பொப்பியை தவிர என்று.

ஆனால் அண்மையில் சி ஐ ஏ (கவனிக்கவும் சி ஐ ஏ) கசிய விட்ட (அமெரிக்கா ரகசியமா பாதுகாத்தது.. சீனாவுக்கு எப்படியோ எட்டி அது டீலும் போட்டுவிட்டதால்... விடயம் கசிய விடப்பட்டது.) தரவுகளின் படி ஒரு ரில்லியன் ( 1000 பில்லியன்) டொலர் பெறுமதியான இயற்கை வளங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அவை பெரிதும் கணணித்துறைக்கு மற்றும் இலத்திரனியல் துறைக்கு அவசியமான வளங்களாக உள்ளன. :D:lol:

ஆப்கானில், உள்ளதாகச் சொல்லப்படும் வளங்கள் ஏற்கனவே ஆழ்துளை முயற்சிகள் மூலம் அறியப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் போர்தொடுக்கப்பட்டிருக்கலாம். ஆள்துளை வேலைகள் செய்யாவிட்டால், கனிம வளங்கள் இருக்கலாம் என்று ஊகம் செய்யலாமே தவிர அறுதியிட்டுக் கூறமுடியாது. ஊகத்தின் அடிப்படையில் இவர்கள் போருக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்கர்கள் போர் நடைபெற்ருக்கொண்டிருந்த சமயத்திலே இத்தகைய கனிம அளவீட்டு முயற்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடித்திருக்க வாய்ப்புள்ளது. அல்லது முன்னர் இருந்த ஆக்கிரமிப்புப் படைகளின் காலத்தில் நடைபெற்றதாக இருக்கலாம். ஆழ்துளை ஆராய்ச்சி வேலை என்பது சிக்கலான விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதும், பல மில்லியன் டொலர்கள் செலவீனத்தைக் கொண்டதும் ஆகும். இதை ஆப்கன் அரசு செய்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை. பல ட்ரில்லியன் அளவுக்கு கனிமங்கள் இருப்பதாக இப்போது உறுதியாக (?) தெரிவிக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு வலுவான கரங்களின் பங்கு இருந்திருக்க வேண்டும்.

அதேபோல, இலங்கையில் எங்கே, யாரால் பல மில்லியன் டொலர்கள் செலவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன? மன்னாரில் எண்ணை வள ஆராய்ச்சிகள் நடைபெறப்போவதாகப் படித்த ஞாபகம். அதில் ஏதாவது கிடைத்திருக்கலாம். மற்றும்படி, ஏற்கனவே தெரிந்த இல்மனைட், சிலிக்கா, நிலக்கரி இவற்றைத்தவிர என்ன இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்?

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள் என்பது சிறிது அதிகமாகத் தெரிகிறது. :lol:

.

மன்னார் எண்ணெய் வள ஆய்வு நோர்வேயால் மேற்கொள்ளப்பட்டது. மன்னார்க் குடா பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சில பகுதிகள் நோர்வேயிடம் ஆய்விற்காக கையளிக்கப்பட்டன. நோர்வே செய்மதிகளைக் கொண்டு ஆய்வு செய்தது.

இலங்கையில் நிறைய ஆறுகள் பல மில்லியன் வருடங்களாக தாவர்ப்பகுதிகளைக் அடித்துக்கொண்டுவந்து கடலில் கரையை அண்டிய பகுதிகளில் தாட்டு வந்ததிருக்கின்றன. இந்த தாவர்ப்பகுதிகள் தற்போது பெற்றோலிய வாயுக்களாக வடகிழக்கு கடலினுள் கரையை அண்டிய பகுதிகளில் பெருமளவில் படிவுகளாக உள்ளனன.

புல்மோட்டை கனியப்படிவு உலகிலேயே மிகச்செறிவான கனியப்படிவு. இப்படிவில் இருந்து விமானம், செய்மதி, றொக்கட் செய்யப் பயன்படும் றைற்றேனியம் என்னும் உலோகம் எடுக்கப்படுகின்றது.

எம்முடைய மிகப்பெரியவளம் சீமேந்து செய்யப் பயன்படும் சுண்ணாம்புக்கல்.

புலிகளை அமெரிக்கா தடைசெய்ய, முக்கிய காரணிகளில் ஒன்று புல்மோட்டை கனியத்தை ஏற்றி செல்லவிருந்த கப்பலை கடற்புலிகள் தாக்கி தாளவைத்த சம்பவம் என்று கேள்வி (சந்திரிக்கா காலத்தில் நடந்தது). இதிலிருந்து எதற்கு வல்ல‌ரசுகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று அறியலாம்.

http://www.satimagingcorp.com/svc/exploration.html

http://www.lankasites.com/news/sri-lanka/294-nano-titanium-dioxide-from-pulmoddai-mineral-sands-.html

http://www.tamilcanadian.com/page.php?cat=501&id=5672

http://www.imageafrica.com/applications/IAK_MinEx.pdf

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. அப்படியானால் ஏற்கனவே அறியப்பட்ட வளங்களில்தான் கவனமாக இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.