Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா -ரொரன்ரோவில்...கறுப்பு யூலை நினைவு நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், யூலை 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.

27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல. விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது. இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிக்கொணருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து இலங்கை மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும். போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை இலங்கை மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டுள்ன.

இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள், எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Black_July_canada.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்களின் இந்த நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்நிகழ்வின் வெற்றி என்பது வேறுபாடுகளை களைந்தும் சோர்வுகைள நீக்கியும்... விடுமுறைக்கழியாட்டங்களை நிறுத்தியும் மக்கள் இவ் உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொள்வதே!

இந்நிகழ்வின் வெற்றி என்பது வேறுபாடுகளை களைந்தும் சோர்வுகைள நீக்கியும்... விடுமுறைக்கழியாட்டங்களை நிறுத்தியும் மக்கள் இவ் உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொள்வதே!

ஒன்றுபட்டால் வாழ்வு,

கனடியத் தமிழர் தேசிய அவையும், நாடு கடந்த தமிழீழ அரசும் ஒன்றுபட்டு

முன்னெடுக்கும் இந்நிகழ்வை சிறப்புற மனமார வாழ்த்தி,

எத்தனை இடர் வரினும், இந்த ஒற்றுமை நிலைக்க தேசியத் தலைவரை மனதில் கொள்கிறேன்.

நன்றி.

பின் குறிப்பு :

கனேடிய பிரித்தானிய புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒரு படைப்பு " டைகர் டைகர் "

இதை தரை இறக்கம் செய்ய : http://www.sendspace.com/file/n1zx5w

then click "regular download "

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல. விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலையை நினைவு கூருவோம்

வாத்தியார்

தமிழரின் உரிமைகளை தரக்கூடிய தமிழருக்கு தாம் செய்த அவலங்களை ஏற்கும் சிங்களவரிடம் நாமும் தந்திரமாக பழகி எமது உரிமையை வெல்லவேண்டும்.

http://humanityashore.com/ha/archives/1057

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.