Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் நியாயமானதே - நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

தான் செய்த தவறை ஒத்துக் கொள்ளும் போது மனிதன் உயர்ந்தவனாகின்றான்.

எல்லா வித விவாதங்களுக்கும் மேல் பரமேஸ்வரனின் முயற்சி பாராட்டப்படவேண்டும்.

பயன் தந்ததா, தரவில்லையா என்பது வேறு விடயம். பரமேஸ்வரன் செய்த முயற்சி எந்த பயனையும் தரவில்லை என்பதற்கு எந்த சான்றும் இல்லை.

எம்மைப் போல யாழ் களத்தில் வரையறுக்கப்பட்ட சிறு பயனை மட்டும் தரும் வகையில், தமிழில் எழுதிப் பொழுது போக்குவதைவிட அவரது முயற்சி, பெரும் பயனைத் தந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

நான் அறிந்த வரையில், உண்ணாவிரதத்துக்கு முன்னர் பரமேஸ்வரன் ஒரு அரசியல்வாதியோ, தமிழரின் பிரதிநிதியாகவோ இருந்ததில்லை. ஒரு புலம்பெயர் தமிழன். அந்தத் தமிழன் உண்ணாவிரதம் இருக்க முன்வந்ததே பெரிய விடயம். உண்ணாவிரதம் மூலம் பலரது கவனத்தை இழுத்தது மாபெரும் சாதனையாகவே கருதவேண்டும். கொலைஞர் கருணாநிதி போலவோ, விமல் வீரவன்ச போலவோ போலியான உண்ணாவிரதம் இருக்கவில்லை.

இந்த வகையில், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பரமேஸ்வரன் போன்ற சாதனையாளர்கள் மீது

அவதூறுகளை வீசுவதற்குக் கூட, எம்மிடம் சில அடிப்படைத் தகுதிகள் வேண்டும் என்பது எனது கருத்து. ஆகக் குறைந்தது, ஒன்றில் அவரைவிட பெரிய சாதனைகள் செய்திருக்கும் தகுதி வேண்டும், அல்லது அவரது செய்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசுகு அண்ணா நாசுக்காக சுட்டிக்காடியது போல, தமிழனின் பின்னடைவுகளுக்கு பரமேஸ்வரன் போன்றவர்கள் மீது கண் மூடித்தனமாக அவதூறுகளை வீசியது மட்டுமல்லாது, அது சரியென விதண்டாவாதம் செய்யும் போக்கும் ஒரு முக்கிய காரணம்.

நேரிய வழியில் போராடும் குணமுள்ள பரமேஸ்வரன் போன்ற 1000 பேர் இருந்தால், நிச்சயம் தமிழனின் எதிர்காலம் சிறக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

Edited by ஆராவமுதன்

  • Replies 81
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

எப்பவுமே எமக்காக ஏதாவது செய்பவர்களை

கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்துவிட்டு

அல்லது

பலிக்கடா ஆக்கி விட்டு

அல்லது

தெய்வம் ஆக்கி விட்டு

நாம் நமது வேலையை பார்க்க போய்விடுகின்றோம்

பங்காளிகளாவது எப்போது....???

நேரிய வழியில் போராடும் குணமுள்ள பரமேஸ்வரன் போன்ற 1000 பேர் இருந்தால், நிச்சயம் தமிழனின் எதிர்காலம் சிறக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

நாம் இவ்வளவு கேவலப்படுத்தியபின்பும்

எமக்காக தொடர்ந்து உழைக்க முடிவெடுத்திருக்கும் பரமேஸ்வரனை போற்றாமல் இருக்கமுடியவில்லை.

இலங்கை அரசாங்கம்,புலிகள் இரண்டுமே ஒருகாலமும் மாற்றுக் கருத்தை ஏற்காதவர்கள்.அதையே யாழும் செய்ய வேண்டுமென யாழில் பலர் விரும்புகின்றார்கள்.யாரையும் பற்றி தாங்கள் எவ்வளவும் சேறடிக்கலாம்,அவதூறு சொல்லலாம் தங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என நினைக்கின்றார்கள்.புலி அழிந்ததும் அதனால் தான் இலங்கை அரசு இப்போது உலகத்துடன் சிக்கல்படுவதும் அதனால் தான்.

தான் அழிந்தாலும் பரவாயில்லை எதிர்த்துகதைப்பவனை விடக்கூடாது அது மிக முக்கியம் அவர்களுக்கு.மூன்றாம் உலகில் இருந்த அவர்கள்தான் அப்படியென்றால் புலம் பெயர்ந்தும் நாங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட நினக்கின்றோம்.

பலர் இங்கு என்னவோ பரமேஸ்வரன் உண்ணாவிரதம் இருந்த நோக்கமே வெற்றியென்பதுபோல கருத்தெழுதி வருகின்றார்கள்.சும்மா அவதூறைச் சுமத்தியவர்களுக்கு இது ஒருபாடமே ஒழிய உண்ணாவிருந்த நோக்கதில் ஒரு வெற்றியுமில்லை.

எமது போராட்டத்தை மீளாய்வு செய்யாமல் நாம் அடுத்தநிலைக்கு போக முடியாது.இன்னமும் காசுப் பிரச்சனையில் அடிபட்டுக் கொண்டிருக்கும் உந்த கோஸ்டிகளை இப்பவும் நம்ப ஆட்கள் இருகின்றார்கள் என்பதைத்தான் நம்ப முடியாமல் இருக்கின்றது.

என்னமோ தெரியவில்லை "சிவ பூசையில் கரடி நுழைந்தது போல" என்ற ஒரு பழமொழி எனது ஞாபகத்துக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

இது பரமேஸ்வரனின் வழக்கு சம்பந்தமான திரி

அதில் ஒரு சக தமிழனுக்கு வெற்றி என்பதுதான் எமது நிலைப்பாடு

பொய் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்பட்டதோடு...

அவர் உண்மையாக தியாக அடிப்படையில் உண்ணாவிரதமிருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

அதை ஏற்கின்றீர்களா இல்லையா

அதுவே திரியின் கேள்வி

போற போக்கைப் பார்த்தால் பிக் மக் விளம்பரத்துக்கு ப்ர்மேஸ்வரன் படத்தைப் போட்டாலும் போடுவார்கள் போல், அவர் யாரோ தன்னை வருத்தி உண்ணாவிரதம் இருக்க இங்கே, நிர்வாணப் பெண்ணின் புகைப்படத்தையும், கேடு கெட்ட விடயங்களை போட்டு வெறும் 20 பெனி பேப்பரை ஒரு ஊடகமாகக் கருதி ????? இப் பேப்பரை கையில் வைத்திருந்தாலே வெள்ளை இனத்தவரே உங்களை நையாண்டியாகப் பார்ப்பார்கள், எதுக்கும் வாழ்த்துக்கள் சிங்களவர்களே பரமேசை பாராட்டுகிறார்கள் :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

victory for us truth never death Parameswaran Subramanyam

An article (9 October 2009), 'Hunger striker's £7m Big Mac', reported claims that Mr Subramanyam was caught secretly eating burgers while on hunger strike during the Tamil protest in London, wasting significant police costs. We now accept that there was no truth in these allegations and we and other media have agreed to pay him damages and have apologised to Mr Subramanyam for the distress and embarrassment caused.

Full Story:

http://www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.html

31 July 2010

www.dailymail.co.uk

I saw this article in The Sun, and I thought you might be interested - Mr Parameswaran Subramanyam - Apology .

victory for eelam and truth never death

http://www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.