Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே!

தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. கே.பி. தனது திட்டத்தை மேற்கொள்ளும் குழுவிற்கு 'பாரிசில் வாழும் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்துள்ளார். திரு. வே. மனோகரன் அவர்களே பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசின் அத்தனை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி வருகின்றார். தான் விரும்பியவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தால், பிரான்சில் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ததுடன், இன்றுவரை அது குறித்த எந்த முடிவுக்கும் வரவிடாமல் திரு. ருத்ரகுமாரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

திரு. கே.பி. நல்லவரா? கெட்டவரா? தியாகியா? துரோகியா? என்பதற்கும் அப்பால், கேபி. தற்போது சிங்கள அரசின் பிடியில் உள்ளார். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரால் ஈழத் தமிழர்களுக்கோ, தமிழீழ மண்ணுக்கோ எந்த நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் உள்ள குழப்பவாதிகள் கே.பி.யை மையப்படுத்திப் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதில் குறியாக உள்ளனர். இது, தங்கள் மீதான நம்பிக்கையை இழந்த காரணத்தால் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது திட்டமிட்ட சி-ங்கள நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட செயற்பாடா? என்பது புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

எது எவ்வாறு இருந்தாலும், கே.பி. மூலமான சிங்கள தேசத்துடனான சமரசம் என்ற இந்தக் குழப்பவாதிகளால் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக வழிப் போராட்ட வடிவம் சிதைக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. சிங்கள தேசத்தின் ஜனநாயக மறுப்பும், இன வன்முறைத் தொடர்ச்சியும் ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் பக்கம் மேற்குலகை நகர்த்தி வரும் இந்த வேளையில், அது சார்ந்த பேரெழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியவர்கள் கே.பி. சார் நிலையை எடுப்பது வேடிக்கையானதாகவே உள்ளது.

அடித்து நொருக்கித் துவைத்துப் போடப்பட்ட தமிழீழ மக்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும், சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களும் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கள நிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், தமிழீழ மக்களது சுதந்திர வாழ்வுக்கும், உயிர் உடமைப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமற்ற நிலையில் தமிழீழ மண்ணில் எந்த விதமான பாரிய அபிவிருத்தித் திட்டங்களையோ, மீள் கட்டுமானங்களையோ மேற்கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களில், தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ முடியாத, வாழ்வுரிமை ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் அந்த மக்களுக்கான அபிவிருத்தி என்பது சிங்கள அரசை ஏதோ ஒரு வகையில் காப்பாற்ற முற்படும் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.

கே.பி. அவர்களை வைத்து சிங்கள தேசம் நடாத்தும் நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்களாக புலம்பெயர் தேசங்களிலும் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார்கள். கே.பி. கைது செய்யப்பட்டார்... சிங்கள அரசால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்... அவர்மீது மிக மோசமான வன்முறைக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது... எனப் பல்வேறு செய்திகள் மூலம் புலம்பெயர் தமிழர்களது நாடித் துடிப்பை அறிந்து கொள்ள முற்பட்டுத் தோற்றுப்போன இவர்கள், தற்போது கே.பி. மூலமான மீட்பு, கே.பி. மூலமான அபிவிருத்தி, கே.பி. மூலமான விடுதலை என்ற புதிய வார்த்தைப் பிரயோகங்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பிளவு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

2009 மே 18 இற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போர்க் களம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் குழப்ப நிலைக்குள் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவே சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வசதியானதாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உருவான மக்கள் பேரவைகளும், நாடு கடந்த தமிழீழ அரசும் ஜனநாயக ரீதியாகப் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருந்தாலும் இன்று வரை அந்த அமைப்புக்களின் சாதனைகள் என்று குறிப்பிடும்படியாக எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், இந்த இரு அமைப்புக்களுக்கும் இடையே நட்புறவோ, இணக்கப்பாடோ இருப்தாகக் கூட உணர முடியவில்லை.

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தை முன்மொழிந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது சிறிலங்கா அரவின் விருந்தாளியாக உள்ளார். கே.பி. கைதியாகவே உள்ளார் என்று வைத்துக்கொண்டாலும், அவரால் தற்போது அவரது எஜமானர்களை மீறி எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால், தற்போது சிங்கள தேசத்தால் உருவாக்கிவிடப்படும் கே.பி. குறித்த பரபரப்பு செய்திகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைவதற்கு எதுவுமே இல்லை. அந்தச் செய்திகளைப் புறம் தள்ளிவிட்டு, மேற்குலகின் மனமாற்றங்களை வலுப்படுத்தி, அதனைத் தமிழீழ விடுதலைக்கான போர்க்களமாகத் தொடர்ந்து பயணிப்பதே எமது மக்களையும், மண்ணையும் விடுவிப்பதற்கான ஒருவழிப் பாதையாக உள்ளது.

இந்தக் குழப்பமான சூழ்நிலைகளை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய பாரிய கடமை நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், மக்கள் பேரவைகளுக்கும் உண்டு. குறிப்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிர்வாகப் பணிப்பாளர் திரு. ருத்ரகுமாரனுக்கு உள்ளது. 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தியலை முன்மொழிந்தவர் திரு. கே.பி. அவர்கள் என்பதாலும், அதனை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர் திரு. ருத்ரகுமாரன் என்பதாலும், நாடு கடந்த தமிழீழம் சார்ந்து திரு. கே.பி. அவர்கள் குறித்த தமது நிலையை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் அரங்கேற்றி முடித்த சிங்கள அரசுக்கு இப்போது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரே போர்க் களமாக புலம்பெயர் தமிழர் பலமே எஞ்சியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கும், அவர்களது போர்க் களத்தை முறியடிப்பதற்கும் சிங்கள அரசு தனது அனைத்து வளங்களையும், பலங்களையும் திசை திருப்பி விட்டுள்ளது. மேற்குலகின் பல துதரகங்களுக்குத் தனது படைத் தளபதிகளையே துதுவர்களாக நியமித்து வருகின்றது. அத்துடன், தமிழ் மக்கள் மத்தியில் ஏராளமான புலனாய்வாளர்களையும், கொடூரமான ஒட்டுக் குழுவினரையும் ஊடுருவ விட்டுள்ளது. அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் சிறிலங்கா துதராலயங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைத் தளத்தில் முன்நின்று போராடும் அமைப்புக்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கி, அவர்களிடையே மோதல்களைத் தோற்றுவித்து, இடை நுழைந்து சிலரை இல்லாமல் ஆக்கும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் சிங்கள ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில், சிங்கள அரச வன்முறை புலம்பெயர் தேசங்களிலும் குழு மோதல் என்ற போர்வையில் அரங்கேற்றப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு வசதியாகவே, புலம்பெயர் தேசங்களில் கள நிலமை மாற்றம் பெற்று வருகின்றது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்பங்களுக்கும், பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் திறந்த பேச்சுக்களை நடாத்திப் பொது இணக்கத்திற்கு வரவேண்டும். அந்த இணக்கப்பாட்டுடன் மக்கள் மத்தியில் தமது விடுதலைப் பயணம் குறித்த நிலையைத் தெளிவு படுத்த வேண்டும். எல்லாக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே. அதைப் படிக்கல்லாக மாற்றும் வித்தை தற்போது யாருக்கும் இல்லை என்பதை, சிங்கள தேசத்தைப் புரிந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

- அகத்தியன்

கடந்த வாரம் நடந்த நாடு கடந்த அரசாங்க நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் மேற்கூறப்பட்டது போன்று கே.பி. பத்மனாதன் தொடர்பாக நாடு கடந்த அரசாங்கம் ஓர் தெளிவு வழங்கவேண்டும் என கேட்கப்பட்டபோது. அப்படி எதுவும் செய்ய முடியாது அது அரசியல் சிக்கலை தோற்றுவிக்கும் என இடைக்கால தலைவர் அறிவுரை கூறியுள்ளாராம்.

அடுத்ததாக நாடுகடந்த அரசாங்கத்தின் பிரித்தானிய அமைப்பாளர்களில் ஓர் முக்கியஸ்தர் இப்போ கொழும்பிற்கு சென்றுள்ளாராம்.

மேற்கூறபப்ட்டவர்களின் பெயர்கள், சம்பவம்கள் தெரிந்தும் இங்கு குறிப்பிட முடியாமைக்கு காரணம் தனி நபர்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று வாசகர்கள் போட்டு தள்ளிவிடுவாங்கள்.

இன்றபோலால் தேடப்படுபர் மற்றும் ராஜீவ் வழக்கின் சந்தேக நபர் - இவரை இந்தியவும் "பிடித்து தரும்படி" கேட்டால் இந்த நாடுகளுக்கு இடையில் "விரிசல்" ஏற்பட்டுவிட்டது என கொள்ளலாம். அந்த "விரிசலை" விரிவாக்க தமிழர் தரப்பும் செயல்பட வேண்டும்.

Wanted in Rajiv case, KP now heading NGO in Lanka

http://www.hindustantimes.com/world-news/srilanka/Wanted-in-Rajiv-case-KP-now-heading-NGO-in-Lanka/Article1-581670.aspx

எமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதை திருப்பி குடு !!

Edited by akootha

நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பயன்பாட்டுக்கென நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட படகான "உதயதாரகை' பாவனைக்கு உதவாத பழைய படகே என்று நெடுந்தீவு மக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள் ளது.

யாழ். செயலகத்தின் அனுமதிக் கடிதம் மூலம் நீர்கொழும்பு வி.ஜே.யாட்டில் இருந்து இந்தப் படகு நெடுந்தீவு ப.நோ. கூ. சங்கத்துக்குக் கிடைத்தது.

பயணிகள் சேவைக்காக இந்தப் படகு பெறப்பட்டபோதும் அந்தச் சேவைக்கு உகந்ததாக அது இருக்கவில்லை. பொருள்களை ஏற்றி இறக்கவும் அது பொருத்தமாக இல்லை. இந்நிலையில் பொருள்களை ஏற்றி இறக்கும் சேவை யில் அது ஈடுபடுத்தப்பட்டது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி சிமெந்துப் பைகளை ஏற்றியபடி துறைமுகத்தில் தரித்து நின்ற படகின் அடித்தளம் உடைந்து நீரில் மூழ்கியது. இதனால் 237 சிமெந்துப் பைகள் நீரில் நனைந்து பாவனைக்கு உதவாதவையாகின.

78 லட்சம் ரூபா செலவில் கொள் வனவு செய்யப்பட்ட இந்தப் படகு புதிய படகல்லவென்றும், இப்படகு வி.ஜே. யாட்டில் நீண்டகாலமாக மீன்பிடிப் பட காக சேவையாற்றியதாகவும் தெரிவிக்கப் பட்டது.

இந்தப் பழைய படகு புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு வழங்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. படகு பெறப்பட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் அடித்தளத்தில் "கலாட்டி' கள் பிடித்திருப்பதாகவும் புதிய படகு களில் இது காணப்படாது என்றும் தெரி விக்கப்பட்டது. நீரில் மூழ்கி சேதமடைந்த இந்தப் படகினை தற்போது வி.ஜே.நிறுவனப் பிரதி நிதிகளும் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3668&Uthayan1280828378

... இந்த புலத்து காஸ்ரோவாத கட்டுரையாளர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள் ....

அன்புடையீர்,

எமது இனமோ சிறிய இனம். ஆதரவற்ற இனம். கேட்பாரில்லாமல் அழிக்கப்பட்ட இனம்/அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனம்! சிதைந்து கிடக்கும் இனம்! சிறப்பட்டுக் கொண்டிருக்கும் இனம்!

மீதியாக இருப்பவர்களோ சிதறுண்டு கிடக்கிறோம். எதிரியோ இலகுவாக சிதைக்கிறான் எம்மை! ... அதற்கு நீங்கள் விலை போகாதீர்கள்/அவனின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படாதீர்கள்! ... கருத்து வேற்றுமைகளில் இருப்போரை கடந்த காலங்களில் நீங்கள் செய்தவை போல் எதிரிகளின் கைகளில் கொண்டு சென்று சேர்க்காதீர்கள்!!

போதும் ... நீங்கள் இதுவரை செய்ததும் ஒன்றுமில்லை! இனியும் செய்யப்போவதும் ஒன்றுமில்லை!!

உங்களால் ஒற்றுமையாக செயற்படவோ/ஒன்றுபடவோ முடியாதெனில் ஒதுங்கி இருங்கள்! அதுதான் இன்றையா காலத்தில் நீங்கள் மக்கள் மீது பற்றிருந்தால் செய்ய வேண்டியது!

நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.