Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 4, 2010 / பகுதி: செய்தி / ஈழவன்

உலகளாவிய ரீதியில் கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொத்துக் குண்டுகளை (கிளஸ்ரர்) தடைசெய்யும் புதிய சர்வதேச உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொத்துக்குண்டுகளை களஞ்சியப்படுத்தல், அவற்றை பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே உலகளவிலுள்ள கொத்துக்குண்டுகள் அழிக்கப்படவேண்டுமெனவும் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற மாநாடொன்றிலேயே கொத்து குண்டுகளை தடைசெய்வதற்குரிய அங்கீகாரம் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட 108 நாடுகள் கொத்து குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களிததிருந்த நிலையில் அதில் 38 நாடுகள் கொத்துக் குண்டுகளை அழிக்க உறுதிதெரிவித்திருந்தன.

கொத்துக்குண்டுகளை தடைசெய்யும் உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டிருப்பதானது மிகமுக்கியமான ஆயுதக் களைவு எனவும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் எட்டப்பட்டுள்ள மிக முக்கியமான மனிதாபிமான உடன்படிக்கை இதுஎனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீதிக்குப் புறம்பானதும் கொடூரமானதுமான ஆயுதம் ஒன்றிற்கு எதிராக மனிதநேயத்திற்கு கிடைத்துள்ள பாரியவெற்றி இது என கொத்துக் குண்டுகள் கூட்டமைப்பின் இணைப்பாளர் தோமஸ் நாஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோதல்களின்போது பொதுமக்களின் இறப்புக் குறித்து அக்கறை செலுத்துவது ஒரு செய்தியாகும். ஆனால் இந்த உடன்படிக்கை அமுல் படுத்தப்பட்டிருப்பதானது, எந்தந்த அரசாங்கங்கள் பொதுமக்களை கட்டாயம் பாதுகாக்கவேண்டுமென்பதற்கும் கொத்துக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்பதற்கும் சிறந்த உதாரணமெனவும் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த உடன்படிக்கை அமுல்படுத்தல் பட்டிருப்பதானது உலகளாவிய ஆயுதக் களைவிலும் மனித நேய, நிகழ்ச்சிநிரலிலும் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றமென ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பற்ற நிலைமையை ஒழிப்பதற்கும் இக்கொத்துக் குண்டுகளால் பாதிப்புக்குள்ளாகும் குறிப்பாக பொதுமக்களையும் சிறுவர்களையும் பாதுகாக்கவும் உதவுமெனவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த உடன்படிக்கையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

pathivu

எல்லாம் முடிந்த பிறகு அமுலுக்கு வருகுதாம்! உலகில் உள்ள மற்ற அப்பாவிகளையாவது காப்பாற்றட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த உடன்படிக்கையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றின் அருமை,பெருமைகளை தெரிந்த நாடுகள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த உடன்படிக்கையில் உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி செய்த கொத்துக் குண்டுகள் அதிகளவில் களஞ்சியப்படுத்த்ப் பட்டிருப்பதால் அவை விற்றுத் தீர்ந்த பின்னரே கைச்சாத்திடுவதைப் பற்றி யோசிப்பார்களோ?

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

சாவு வர சொன்னா கருமாதி வராங்கள்... போகட்டும் இது எனைய விடுதலை போராட்டதிற்காவது உறுதுணையாக இருக்கட்டும்....

காட்டுமிராண்டிகள் இவற்றில் கையெழுத்திடமாட்டார்கள்.

காட்டுமிராண்டிகளின் நாயகர்களாகிய இந்தியா போன்ற போலி ஜனநாயகவாதிகள் கையெழுத்து இட்டுவிட்டு, கொத்தனிக் குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் இருந்து பலர் பாடம் கற்றிருப்பார்கள்.எதிர்காலத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டியது தான் புத்திசாலிதனம். ஏனெனில் இக்குண்டுகளை தயாரிக்கும் நாடுகள் ஒரு போதும் தமது உற்பத்தியை நிறுத்த போவதில்லை.புதிது புதிதாக கண்டு பிடித்து எம்மை போன்ற அப்பாவிகளிடம் தான் பரிசோதிக்கிறார்கள்.

உ+மாக அணுகுண்டுகளை வறிய நாடான வடகொரியா பல எதிர்ப்புக்கு மத்தியில் தயாரித்து தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரே வழி அது தான்.எம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.