Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் முதுகில் குத்திய பிரபாவை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குகிறேன்: மனோ கணேசன்

Featured Replies

பிரபா கணேசன் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்புடன் இன்று இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் நடவடிக்கை தொடர்பில் மனோ கணேசன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார்.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்துவரும் நேர்மையான அரசியல் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்துகொண்டதன் மூலம் அவர் என் முதுகில் குத்தியுள்ளார்.

எமது கட்சியின் அடிப்படைச் சட்டம், கட்சித் தலைவர் என்ற முறையிலே எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் உடன்பாட்டுடன் பிரபா கணேசன் எம்பியை கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம் செய்கிறேன்.

உத்தேச உள்ளுராட்சி தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான எமது கட்சியின் ஆலோசனைகளை அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் வழங்குவதற்கு அலரி மாளிகைக்கு செல்லவிருப்பதாக பிரபா கணேசன் நேற்று காலை தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார்.

எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதியையோ அல்லது வேறு எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரையோ சந்திப்பதற்கு எமக்கு இருக்கின்ற உரிமை அடிப்படையில் இதற்கான ஒப்புதலை நான் அவருக்கு வழங்கியிருந்தேன்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னுமொரு மலையக பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, பாராளுமன்றத்திலே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசனின் செயற்பாடு எமது கட்சி கொள்கைக்கு திட்டவட்டமாக முரணானதாகும்.

இதன் மூலம் பிரபா கணேசன் எம்பி, கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார். கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போன நிலையிலும் நான் மனம் வருந்தவில்லை.

ஆனால் இன்று நான் நாட்டில் இல்லாதவேளையில் அரசுடன் இணைந்து கொண்டு எனது முதுகில் குத்தியதன் மூலம் என் மனதை பிரபா கணேசன் எம்பி மிகவும் மோசமான முறையிலே வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்.

பெரும்பான்மை கட்சிகளுடனான முரண்பாட்டிற்கு ஒரே தீர்வு தமிழ் பேசும் கட்சிகளும், முற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்வதாகும்.

இதுவே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது கட்சிக்கு கடந்த தேர்தலுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைக் காரணமாக வைத்துக்கொண்டு அரசுடன் இணைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது சுயநலவாத துரோகமாகும். தமிழ் மக்களை வரலாறு காணாத துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கக்கூடிய இந்த அரசாங்கத்துடன் பிரபா கணேசன் இணைந்து கொண்டுள்ளார் என்ற செய்தி எனது நெஞ்சில் இடியாக விழுந்துள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலிருந்தும் பிரபா கணேசனின் அங்கத்துவம் உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது.

அவருடன் எந்தவித தொடர்புகளை பேணவேண்டாம் என எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், அலுவலர்களையும் கோருகின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26084

  • கருத்துக்கள உறவுகள்

.

மனோ கணேசனும், பிரபா கணேசனும் சகோதரர்கள் என்று எங்கேயோ.... வாசித்த ஞாபகம்.

தனது சகோதரருக்காக தான் வென்ற கொழும்பு தொகுதியை விட்டு, கண்டியில் போட்டியிட்ட மனோகணேசன் தோல்வியுற...

கொழும்பில் வென்ற பிரபா கணேசன் கட்சி தாவல்...

ஹ்ம்ம்.... அரசியல்ல எத்தனை பாடம் படிக்க வேண்டியிருக்கு.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

மனோ கணேசனும், பிரபா கணேசனும் சகோதரர்கள் என்று எங்கேயோ.... வாசித்த ஞாபகம்.

தனது சகோதரருக்காக தான் வென்ற கொழும்பு தொகுதியை விட்டு, கண்டியில் போட்டியிட்ட மனோகணேசன் தோல்வியுற...

கொழும்பில் வென்ற பிரபா கணேசன் கட்சி தாவல்...

ஹ்ம்ம்.... அரசியல்ல எத்தனை பாடம் படிக்க வேண்டியிருக்கு.

.

அண்ணண் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

கவலையான ஓர் உண்மை.

கடந்த 50 வருடங்களாக ஊழல் - ஏமாற்றுப் பேர்வழிகளும், சுயநலத்திற்காக கட்சி தவித்தாவிப் பிழைப்பு நடத்தும் குரங்குத் தனமான மலையாக அரசியல் தலைவர்களையும் (அரசியல்வாதிகளையும்), தொழில் சங்கவாதிகளையும் மட்டுமே கண்ட மலையாக மக்களின் இரத்தத்தில், ஏமாற்றி - ஊழல் செய்து - கட்சி தாவி பிழைப்பு நடத்துவது சாதாரணமான குணமாக ஓடுகிறது.

இந்திய பயங்கரவாதிகளின் (தூதரக அதிகாரிகள், அரச பயங்கரவாத முகவர்கள்...) தொடர்புகள் மலையாக மக்களை மென்மேலும் கீழ்நிலைக்கு இட்டு வருகிறது.

தொண்டமான்கள், மனோ கணேஷன்கள் மலையாக பெண்களை விளையாட்டுப் பொருட்களாக பயன்படுத்தியது அவ்வப்போது பத்திரிகைகளிலும் வெளியான செய்திகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.