Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசபக்சேயின் குரலில் பேசும் கிருஷ்ணா: நெடுமாறன்

Featured Replies

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், அதற்காக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கை கடற்பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேசக் கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சிங்கள மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதேயில்லை.

1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடலுறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. இராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி நட்டஈட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத்தர இதுவரை எந்த முயற்சியும் இந்திய அரசு செய்ததில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ராசபக்சேயின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.

சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.

http://namvaergall.blogspot.com/2010/08/blog-post_9215.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் தொண்டை கிழிய கத்தி என்ன பயன்? தேர்ந்தெடுத்து அனுப்பிய நாற்பது பெட்டைகள் என்ன செய்தார்கள் பாராளுமன்ற விவாதத்தில்? அவர்களுக்கு சூடு, சொரணை கொஞ்சமாவது இருந்தால் தானே? ஆந்திரத்தில் பாருங்கள்...தெலுங்கானாவிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி துறந்தவர்களை அப்பகுதி மக்கள் அவர்களையே மீண்டும் அமோக வெற்றி பெறச்செய்து காங்கிரஸ் மூஞ்சியில் காறித் துப்பியுள்ளார்கள்...அந்த வெறி, இன உணர்வு இங்கே வரவேண்டும். கன்னடியன் கிருஸ்ணா பேசும்போது வாளாவிருந்த அத்தனை எம்பிகளையும் கட்டுப்பணம் பெற இயலாமல் தோற்கடிக்கவேண்டும். சொந்த மாநிலத்தில், சொந்த மக்களை காக்க வாதாட திராணியற்றவர்கள் தமிழகத்தில் நுழைவதே வெட்கக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பெரிய கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இதனை சேர்ந்து கண்டிக்காதது தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவே பார்க்க வேண்டும்.

இப்படியான விடயங்களை கூட இவர்கள் சேர்ந்து எதிர்க்காவிட்டால், தமிழக கட்சி என்று சொல்லிக் கொண்டு அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை.

இவர்களின் செய்கையால் மீனவர்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்கப் போகின்றார்கள். அதே... போல் காவிரி நீரை கொடுக்காமல் கர்நாடகாவும். முல்லைப்பெரியாறு நீரை கொடுக்காமல் கேரளாவும் இன்னும் அதிக அணைகள் கட்டி தமிழக விவசாயிகளை துன்பப்படுத்தவே வழிசெய்யும்.

அரசியல் செய்வதில் கொள்ளை அடித்தாலும், தனது மக்களை காப்பதில் இவ்விரு கட்சிகளும் ஒற்றுமையாக முன்வரவேண்டும்.

இலங்கை கடற்பகுதிக்கு எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மன்னார் முதல் மாதகல் வரையிலுள்ள ஈழ மீனவர்களிடம் கதைத்துப் பாருங்கள் - இதன் மறுபக்கம் விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.