Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோரை சுட்டுக்கொன்ற சவேந்திரா டி சில்வா ஐக்கிய நாடுகளின் தூதுவரா?

Featured Replies

shavendra.jpg

வன்னி போரில் சரணடைந்தோர்களை சுட்டுக்கொன்ற இராணுவ தளபதி ஐக்கிய நாடுகளின் தூதுவராக செல்கின்றார். போரின் இறுதிப்பகுதியில் வெள்ளைக்கொடியுடன் சரணடந்த போராளிகளான நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரை சுட்டுக்கொன்ற 58 வது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் கெனெரல் சவேந்திர சில்வாவே இவ்வாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர துணைத்தூதராக நியமிக்கப்படவுள்ளார்.

shavendra002.jpg

ஐக்கிய நாடுகளின் தற்போதைய இலங்கைக்கான பிரதி தூதுவரை மீழ அழைக்கும் இலங்கை அரசு சவேந்திர சில்வாவை அனுப்புகின்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை முறியடிக்க இவரே சரியான ஆழ் என இலங்கை படைத்துறை விளக்கம் வேறு அளித்துள்ளது. தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இது மட்டுமல்ல கடற்படைத்தளபதி பிரித்தானியாவிற்கு தூதராக வருகின்றார். முன் நாள் தமிழர் படுகொலை சூத்திரதாரி ரத்வத்தை மலேசியா செல்கின்ரார். இவ்வாறு சிங்களம் ஒருபக்கம் சர்வதேசத்தின் முதுகின் மேல் ஏறி சவாரி செல்கின்ரனர்.

ஆனால் புலம்பெயர் தமிழர்களோ தம்மில் தாமே ஏறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு வீதிகளில் பொம்மல் ஆட்டம் ஆடுகின்றனர். மீண்டும் செல்வநாயகம் ஐயா சொன்னது போல கடவுள்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறலாமா?

Eelanatham.net

யார் எங்கே எப்படி போனால்தான் எமக்கென்ன.... எமக்குத் தான் இருக்கே காஸ்ட்ரோ Vs கே.பி பிரச்சனை.... அதில் இருக்குற சுவாரசியம் இதில் எல்லாம் இருக்கா. எம் தலையில் யார் மண்ணைப் போட்டாலும் எம்மக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. முதலில் எமக்குள் யார் அடுத்த தலைவர் என்ற பிரச்னைக்கு தீர்வு கண்ட பின்தான் இந்தக் கோதாரியை எல்லாம் கவனிப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நிழலி அண்ணா,

முதலில் நாங்கள் எங்களைத் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர் தானே மற்றவன் ஊத்தை என்று குறை சொல்லலாம். :(

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

உண்மைதான் நிழலி அண்ணா,

முதலில் நாங்கள் எங்களைத் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.

அதற்குப் பின்னர் தானே மற்றவன் ஊத்தை என்று குறை சொல்லலாம். :)

வாத்தியார்

*********

சொன்னது சரி ஆனால் யார் துப்பரவாக்குவது? இதனை யார் தைரியமாக வந்து சொல்வது? ஒற்றுமை, சுதந்திரம், உரிமை, மனிதாபிமானம் ஆகியவை பற்றி எழுதுவோர்கள் எம் இனத்தில் அதிகம் மிக நேர்த்தியாக எழுதுவார்கள். ஆனால் செயல் ரீதியாக விடுதலைபுலிகளும் அதன் தலைவரும் ஏன் மக்களும் பல தசாப்தங்களாக செய்து காட்டினர். எம்மிடையே உள் பூசல்களும், பொறாமைகளும், போட்டிகளும், ஒற்றுமையீனங்களாலும் பேரிழப்பை விடுதலைப்போர் சந்தித்தது.

இந்த படிப்பினைகளையும் வலிகளையும் மக்கள் மறப்பதற்கு இல்லை மறக்க கூடாது என்பதே சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் தமிழர்களுக்கான தண்டனை. தற்போது மீண்டும் ஒழிந்திருந்து சூ காட்டுவோர்கள் அதிகரித்துள்ளனர். இவர்களுக்கு அது மட்டுமே தெரியும். யாராவது செயற்படும் தருணத்தில் வரும் போதும் எதிர்த்து பார்ப்பார்கள் அதனையும் மீறி நடந்தால் பண்டைக்கால அவைப்புலவர்கள் போல புகழ்ந்து அதன் மூலம் குளிர்காய்வார்கள். செயற்படுவோர்கலது கதை முடிந்தால் நாம் சொல்வதனை எங்கே கேட்டார்கள் கேட்டிருந்தால் இப்படி ஆயிருக்காதே என்று கூறி மீண்டும் மக்களிடம் தம்மை நல்லவர்கள் அறிவாழிகள் என காட்டிக்கொள்வார்கள்.

இந்த சித்துவத்தில .... ம் கடவுள் தான் காப்பாற்றவேணும் என்று கூறியது சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறள்... அமைச்சியல்... தூது...

681 - அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

682 - அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்

கின்றி யமையாத மூன்று.

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

683 - நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

684 - அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

685 - தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாந் தூது.

சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

686 - கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்க தறிவதாந் தூது.

கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

687 - கடனறிந்து காலங் கருதி இடனறிந்

தெண்ணி உரைப்பான் தலை.

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

688 - தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.

துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

689 - விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.

ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

690 - இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாம் தூது.

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

....நன்றி திருவள்ளுவருக்கு

எனக்கென்னவோ சிங்கள கைதடிகள் தூதுக்காண் முழுமையான இலக்கணங்களை மேற்பகுதியில் உள்ள திருக்குறள் வரிகளை... அர்த்த சாஸ்திர வரிகளை... தற்காலத்தில்.. உலகத்தில்..தேவைபடுகின்ற அளவுக்கு படித்துவிட்டே களம் இறங்கி இருப்பார்கள் என தோன்றுகிறது... அதாவது ராஜதந்திரத்தின் உச்ச கட்டத்தில் நிற்கிறார்கள்...

ஈழத்தோழர்கள் அதனையும் முறியடியடிக்கும் வண்ணம்... அங்குள்ள நாடுகள் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை... வரி உட்பட செலுத்த மாட்டோம் என களமிறங்கவேண்டும்... சொறீலங்காவால் 5 பைசா கூட மேற்கத்திய நாடுகளுக்கு வருமானம் இல்லை என்பதில் கவனத்தில் கொள்ளுக...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஐ. நா. சபையும், சர்வதேச ராஜதந்திர உலகமும் ஊழல் பேர்வழிகள், இனப்படுகொலையாளர்கள், காட்டுமிராண்டிகள், போர்க்குற்றவாளிகள், மனிதாபிமானம் அற்றவர்கள் கைகளில் சிக்கித் தவிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.