Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபமாவுடன் கூட்டமைப்பு நாளை கொழும்பில் பேச்சு!

Featured Replies

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை கொழும்பில் சந்தித்துப் பேச உள்ளார்கள்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இச்சந்திப்பு இடம்பெற உள்ளது. கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் எம்.பிகளான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள்.

தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள், படையினரின் கெடுபிடிகள் ஆகியன குறித்து இந்திய வெளியுறவுச் செயலருடன் பேசுவர் என சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9410:2010-08-31-07-54-17&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

கூட்டமைப்பினர் இந்திய இனப்படுகொலையாலர்களுடன் கதைப்பத சிங்கள இனப்படுகொலையாளர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

இந்திய இனப்படுகொலையாளர்கள் சிங்கள இனப்படுகொலையாளர்களின் தாளத்துக்கு ஆடுவார்களா என நாளை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அனைத்து முயற்சிகளிலும் இலங்கையிடம் இந்தியா தோல்வியைத் தழுவி உள்ளது – யாழில் நிரூபமாராவிடம் பேராசிரியர் க.சிற்றம்பலம் எடுத்துரைப்பு‐ GTN செய்தியாளர்

31 August 10 11:53 am (BST)

இந்தியாவே இலங்கையின் யுத்தத்தை முன்னின்று நடத்தியது. இந்தியாவே ஆயுதங்களை வழங்கியது. இறுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவாயினும் அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமாராவிடம் மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக சாடியுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இன்று யாழ் விஜயம் செய்த இந்திய வெளியுறவுச் செயலருடன் இரு கட்டங்களாக சந்திப்பு நடைபெற்றுள்ளது. முதலில் கச்சேரியில் இடம்பெற்ற சந்திப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

இரண்டாவதாக பொதுமக்கள் உள்ளிட்ட பொதுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளட்ட பல தரப்பினரும் இந்திய வெளியுறவுச் செயலரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் க.சிற்றம்பலம், அரசியல் பிரமுகரும் முன்னாள் மாநகர ஆணையாளருமான சீ.வீ.கே சிவஞானம், நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் முக்கயஸ்த்தர் சு.பரமநாதன், தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பல முக்கிய விடயங்களை இந்திய வெளியுறவுச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். எனினும் நேரப்பற்றாக் குறை எனச் சொல்லப்பட்டு வலிகாமம் வடக்கில் இருந்து குடிபெயர்க்கப்பட்டவர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு மக்களுக்கு சந்திப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை

இந்த நிலையில் கருத்து வெளியிட்ட சமூக பிரதிநிதிகள் இந்தியா ஒவ்வொரு தடவையும் விஜயம் செய்யும் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற போதிலும் இங்கு எதுவுமே நடைபெறுவதில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன் மீள் குடியேற்றம் என்ற வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடும்பங்களை சிதறடித்து கொட்டில்களிலும் தரப்பாள்களின் கீழும் கண்துடைப்பிற்கு மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும் கடுமையான அதிர்ப்த்திகளை வெளியிட்டு உள்ளனர் என ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யுத்தம் யுத்தத்தின் பின்னரான நிலமைகளை தெளிவாக சுட்டிக் காட்டிய பேராசிரியர் க.சிற்றம்பலம் இலங்கை அரசாங்கத்துடனான இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோல்வி அடைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். யுத்தம் முடிவுற்ற பின்னராவது இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் சிற்றம்பலம் அதில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்ஜீரீஎன.; அத்துடன் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இராணுவக் குடியிருப்புகளே ஏற்படுத்தப்படுவதாக கோடிட்டுக் காட்டிய அவர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதனையும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவிற்கு இருக்க வேண்டிய கடப்பாட்டை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வெண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட தென்னிந்திய திருச்சபையின் பேராயர் தியாகராஜா தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு சரியான தீர்வை முன்வைப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் எனத் வலியுறுத்தி உள்ளார். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கயிம் எனத் தெரிவித்த அவர் அதற்கான தார்மீகப் பொறுப்பும் இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆளும் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு உயர் மட்டத்தினரின் முகங்கள் கடுமையானதாகவும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறீ கடுமையான தொனியில் பதிலளிக்க முற்பட்ட வேளை இந்திய வெளியுறவுச் செயலர் அவரை அமைதிப்படுத்தி அமரச் செய்ததாகவும் ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று காலை வவுனியாவிலும் ஆளும் தரப்பின் ஏற்பாடுகள் தவிடுபொடியாகி மக்கள் பிரதிநிதிகள் தமது கருத்தை தெரிவித்த போது ஆளும் தரப்பினரும் ஆளும் அரச அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும் குழப்பம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நேரப்பிரச்சனைகளின் மத்தியில் வரவேற்புரையை நீட்டிச் சென்ற மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்தின் உரையை நிறுத்தி அவரை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா அமரச் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

உண்மையை தெளிவாக உரைத்த பேராசிரியர் சிற்றம்பலத்துக்கு நன்றிகள்.

யாழ் தமிழர் பார்வையில் இந்திய பயங்கரவாதிகளின் அரசியல் தோற்றது போன்றிருந்தாலும், வட இந்திய பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களின் படியே தமிழின அழிப்பு நடைபெற்றது. ஆனால் சிங்கள இனப்படுகொலையாளர்களிடம் தொடர்ந்து கையேந்தியே, கெஞ்சிக் கூத்தாடியே இந்தப் படுகொலைகளை நேரடியாக நிறைவேற்றினர்.

பெருந்தொகையான தமிழின அழிப்பை வட இந்திய பயங்கரவாதிகள் கொண்டாடியதாகவும் கேள்வி.

ஆனால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் உரை இராஜதந்திர ரீதியில் அமைந்திருந்தது.

... கூட்டமைப்பு வரும் சந்தர்ப்பங்களை சரியாக/கெட்டித்தனமாக பயன்படுத்த வேண்டும்! இந்தியாவின் காலில் வீழ்ந்தால்தான் எம்மக்களுக்கு வாழ்வாயின் ... அதைச் செய்யவும் தயங்கக்கூடாது!!! கடந்த கால கசப்பான நடவடிக்கைகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதால், நாம் ஒன்றும் குறைந்து போய் விடப்போவதில்லை/குறையவும் ஒன்றும் மிச்சமில்லை! ... அங்கு வாழும் எம்மக்களுக்கு ஓர் உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்பான வாழ்வும், நீதியான தீர்வுமே அம்மக்களை மீட்சி பெற செய்யும், மாறாக அரசியல் தீர்வுக்கு முன்னதான அபிவிருத்தி எனும் பெயரில் நடைபெறும் பித்தலாட்டங்கள், அவர்களை அழித்தொழிப்பதற்கான செயற்திட்டங்களே!

... கூட்டமைப்பு எடுக்கும் முடிபுகளை உறுதியாக எடுக்க வேண்டும்! ...

பேராசிரியர் சிற்றம்பலம் ஐயாவுக்கு நன்றிகள்.

தமது ஈனத்தனம், இரட்டைவேடம் யாழ் தமிழருக்கு தெரியாது என்ற இந்தியப் பயங்கரவாதிகளின் நினைப்பை பேராசிரியர் தகர்த்தெறிந்துள்ளார்.

அவரது துணிச்சலைப் பார்த்து அங்கு கூடியிருந்த கோழைகள் வியந்தார்களாம். மிகக் கேவலமாக உள்ளது.

இந்திய தமிழினப் படுகொலையாளர்கள் அழியும் போதுதான் ஈழத்தமிழரின் வாழ்வு சிறப்பதற்கான வழிகள் பிறக்கும்.

அதுவரை ஒருசில இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் கைகூலிகள் அவர்கள் புராணம் பாடிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைவிட்டால் கதியில்லை என்று உளறுவார்கள். இந்தக் கைகூலிகள் அவிழ்த்துவிடும் பொய்களை ஈழத் தமிழர் நம்பப் போவதில்லை.

ஜனாயக வேடம் போட்டு, இனப்படுகொலைகளை நிகழ்த்தி 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்த, வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் அழிந்து, உலகில் மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க நேர்மையான மனிதர்களின் தொடர்ச்சியான முயற்சி அவசியம்.

அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவிற்கு இருக்க வேண்டிய கடப்பாட்டை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வெண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பேராசிரியர், பேராயரின் உரைகள், இந்தியா கடந்த காலங்களில் விட்ட தவறை, இனி வரும் காலங்களீல் விடக்கூடாது!! எமக்கு உதவ வேண்டும் என்பதாகவே இருக்கின்றன ... அதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம்!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இவன் கருநா எழுதிய கடிதம்... இன்னும் உணர்வாளர்கள் தீக்குளிக்கும் போதும் எழாதா உணர்வுகள்.. இவர்கள் பேசுவதால் எழுந்து விட போவதில்லை... இந்தியத்தின் ராஜ தந்திரம் என்பதுமுன்பே பல முறை கூறி இருப்பினும்... ஆகட்டும் பேச்சுவார்த்தை என காலத்தினை இழுத்தடிப்பது...இது காசுமீர் சிக்கல் உட்பட அருணாச்சலம் அன்ன காவடி என அனைத்திற்கும் பொருந்தும்... இவ்வாறான சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா என கேட்டு கொண்டே...

இருக்கும் மட்டும் இந்தியன்கள் உங்க்ளுக்காக படையெடுக்க வந்து கிழித்துவிடுவார்கள் என எண்ண வேண்டாம்...தன் இன அடையாளங்களை ஈழத்தோழர்கள் இழந்துவிட கூடாது என்பதே நம் வேண்டுகோள்... இவர்கள் வாயால் ரயில் ஓட்டும் நடவடிக்கைகளுக்காக இருக்கும் கோவணத்தினையும் இழந்துவிடகூடாது... சிங்களவன் அதி புத்திசாலி.... காசுமீர் சிக்கல் போல தீர்வு வருவதற்குள்...... தமிழர்கள் என ஈழத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் ... எல்லாம் சிங்களவரக்ளாக மாற்றிவிடுவான்... இன்னும் வெளிப்படையாக் பேச வேண்டும் என்றால் கிராஸ் விட்டு... அதற்குமேலும் சொல்ல விரும்பவில்லை....நன்றி..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த அனைத்து முயற்சிகளிலும் இலங்கையிடம் இந்தியா தோல்வியைத் தழுவி உள்ளது – யாழில் நிரூபமாராவிடம் பேராசிரியர் க.சிற்றம்பலம் எடுத்துரைப்பு‐ GTN செய்தியாளர்

31 August 10 11:53 am (BST)

இந்த நிலையில் கருத்து வெளியிட்ட சமூக பிரதிநிதிகள் இந்தியா ஒவ்வொரு தடவையும் விஜயம் செய்யும் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற போதிலும் இங்கு எதுவுமே நடைபெறுவதில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அத்துடன் மீள் குடியேற்றம் என்ற வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடும்பங்களை சிதறடித்து கொட்டில்களிலும் தரப்பாள்களின் கீழும் கண்துடைப்பிற்கு மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும் கடுமையான அதிர்ப்த்திகளை வெளியிட்டு உள்ளனர் என ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யுத்தம் யுத்தத்தின் பின்னரான நிலமைகளை தெளிவாக சுட்டிக் காட்டிய பேராசிரியர் க.சிற்றம்பலம் இலங்கை அரசாங்கத்துடனான இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தோல்வி அடைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். யுத்தம் முடிவுற்ற பின்னராவது இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் பேசி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் எனக் கூறிய பேராசிரியர் சிற்றம்பலம் அதில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்ஜீரீஎன.; அத்துடன் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இராணுவக் குடியிருப்புகளே ஏற்படுத்தப்படுவதாக கோடிட்டுக் காட்டிய அவர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதனையும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக இந்தியாவிற்கு இருக்க வேண்டிய கடப்பாட்டை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வெண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட தென்னிந்திய திருச்சபையின் பேராயர் தியாகராஜா தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு சரியான தீர்வை முன்வைப்பதன் மூலமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் எனத் வலியுறுத்தி உள்ளார். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கயிம் எனத் தெரிவித்த அவர் அதற்கான தார்மீகப் பொறுப்பும் இந்தியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

... இதற்கு யாராவது பொழிப்பு எழுது விடுங்கள், சிலருக்கு விழங்குதில்லை!!! :o

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி இந்தியம் ... ஈழ தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ....அதற்கான நடவடிக்கை .....என்றால் ராட்சச பக்செ உன் முதுகை முதலில் பார் என....... முதலில் அதை கவனி என ....காசுமீரையும் ஏனைய வடக்கு கிழக்கு மாநிலங்களையும் கைகாட்டுவான் என்பது L.K.G பசங்களுக்கு கூட தெரியும்.......

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆற அமர வந்து நிலைமைகளை மக்களின் கருத்துக்களை கேட்க முடியாதவர்களை எதற்கு ஆனுப்ப வேண்டும். சும்மா 2 படம் எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றவதற்கா?இப்படித்தான் பாலு என்றவரும் வந்து நேரமில்;லை என்று சொல்லுவிட்டு ராஜபக்சவுடன் ஆற அமர விருந்துண்டு பொன்னாடையும் போர்த்தி விட்டுப் போனவர்.கருணாநிதி நான் கடிதம் எழுதித்தான் சிறப்புத்தூதர் அங்க போய் வந்தவர் என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு மக்களுக்கு அல்வா குடுப்பார்.இந்தியாவில் வேலை வெட்டி இல்லாமல் கனபேர் இருக்கிறதா செய்திகள் சொல்லுது.அவர்களில் யாராவது ஒருத்தனைப் பிடிச்சு சிறப்புத் தூதர் என்று அனுப்பியிருந்தால் ஆற அமர வந்து பொழுதைப் போக்கி விட்டுப் போயிருப்பார்.அட அசினையாவது அனுப்பியிருக்கலாமே.

செய்யிறவன் பெருசாய் படம் காட்ட மாட்டான். பெருசாய் படம் காட்டுறவன் ஒன்றுமே செய்ய மாட்டான்.

இதுதான் இன்றைய பொன்மொழி.

அட ஏமாளித் தமிழா! இன்னுமா இந்தியாவை நம்புகிறாய்! உனக்கு விடிவு கிடைச்ச மாதிரித்தான்??????????????

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் புலவர் ஆனாலும் எதற்கு வருகிறார்கள் என்பதனினை சுட்டி காட்டாமைக்கு தங்களை மிக வன்மையாக கண்டிக்கிறேன் ஆமா....

Hyderabadi%20Biryani.jpg..

PICT1105.JPG

:o:wub: :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்திய தமிழினப் படுகொலையாளர்களின் பிரதிநிதியின் மூன்று நாள் விஜயம், வடபகுதியில் தம்மால் அழிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமான நடவடிக்கைகளை பார்வையிட என்று சொல்லப்பட்டது.

ஆனால் அவர் வடபகுதியில் செலவிட்ட நேரம் வெறும் 5 மணித்தியாலங்கள் தான். அதாவது தனது பயணத்தின் 6 % த்தை விடக் குறைவான நேரத்தை மட்டும் தான்.

மிகுதி நேரம், சிங்கள இனப்படுகொலை அரசின் உல்லாசங்களை அனுபவித்துவிட்டு, தமிழக மக்களையும், ஏனையவர்களையும் கொலைஞருடன் சேர்ந்து ஏமாற்றும் திட்டம் என்பது வெளிப்படை.

அவர் அருகில், இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் கொலைக் குற்றவாளியும், இலங்கையில் கடத்தல், கப்பம், கொலை மன்னனுமான டக்லஸ்

இருப்பதும், தமிழ் மக்களை சொந்த வீடுகளுக்கு செல்ல விடாது தொடர்ந்து பல வருடங்களாக தடுத்து வரும் சிங்கள பயங்கரவாதி சந்திரசிறியும் இருப்பது மேலும் பலத்த சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் புலவர் ஆனாலும் எதற்கு வருகிறார்கள் என்பதனினை சுட்டி காட்டாமைக்கு தங்களை மிக வன்மையாக கண்டிக்கிறேன் ஆமா....

Hyderabadi%20Biryani.jpg..

PICT1105.JPG

:o:wub: :wub:

AND 46890074sexworkerssap22.jpg

நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி

யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது.

கடந்த முறை டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் யாழப்பாணம் வந்தபோது டி.ஆர் பாலுவை சனீஸ்வரன் எனக்குறிப்பிட்ட வலம்புரி நாளேடு நிருபமா ராவின் யாழ் வருகை திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என இன்று வெளியிட்ட தனது பதிப்பின் ஆசிரியர் தலையங்கத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பில் சபையோர் கருத்து இடம் பெற்ற வேளை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள்

“இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியா எங்களை கைவிட்டு விட்டது. இந்தியா நினைத்திருந்தால் எங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். இப்போதும் எங்கள் பிரச்சினைக்கு இந்தியாவே தீர்வுகாண வேண்டும்.” என்ற கருத்தை முன் வைத்தபோது அவரது கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பது போன்ற பாவனையுடனும் நிருபமா ராவ் ஏற்றுக்கொண்டார்.

இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது எனவும், நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன்நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதைப் பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தடவை இலங்கையின் நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணம் வந்தபோது யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், டி.ஆர் பாலு கடும்போக்காளராக நடந்துகொண்டதாகவும் அவர் சீறிச் சினந்ததாகவும் பேராசிரியர்கள் முதற்டகொண்டு அவர் எவரையும் மதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு அவரை சனீஸ்வரன் என குறிப்பிட்டு ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

இது இந்திய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டதால் இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நிருபமா ராவின் யாழ் விஜயம் இந்திய நிலைப்பாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinamnews.com/?p=14842

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா வின் அறிக்கை இது போலத்தான் இருக்கும் ...

02-nirupama-rao1-200.jpg

மறு குடியேற்றம் தொடர்பான பணிகள் திருப்திகரமாக உள்ளது-நிரூபமா ராவ்

கொழும்பு: மறு குடியேற்றம், மறுசீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்ற நிரூபமா ராவ், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய தமிழர் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். முள் வேலி முகாமைப் பார்வையிட்டார், பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழர் பிரதிநிதிகளிடம் குறைகள் கேட்டார்.

பின்னர் இறுதியாக நேற்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது மறுகுடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் ராஜபக்சேவிடம் தெரிவித்தார்.

தமிழர்களை வேலை வாங்குங்கள்:

இதுகுறித்து இலங்கை தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசு இலங்கைக்கு செய்துள்ள உதவிகள் குறித்து அதிபர் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய அரசு மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் தமிழர்களையும் ஈடுபடுத்தலாம். இதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அதிபர் ராஜபக்சேவிடம் நிரூபமா கூறுகையில், மறு சீரமைப்பு, மறுகுடியேற்றம் தொடர்பான இலங்கை அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் ராஜபக்சே பேசுகையில், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள்,இலங்கையில் தொழில் முதலீடுகளைச் செய்ய ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டித் தரவுள்ளது. இப்பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 20 ஆயிரம் பேரை வேலை செய்யக் கூட்டி வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனா தனது திட்டங்களுக்காக சீனாவிலிருந்து கைதிகளை பெருமளவில் கொண்டு வந்து குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்தவரிசையில் இந்தியாவும் இந்தியர்களைக் கூட்டி வந்து இலங்கையில் பணியில் அமர்த்தப் போவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை நிரூபமா மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி. அப்படி ஒரு திட்டம் இந்தியாவிடம் இல்லை. ஒரு வேளை தேவைப்பட்டால் அது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

இதற்கிடையே பிபிசிக்கு நிரூபமா ராவ் அளித்த பேட்டியில், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்தியா சார்பில் 10 ஆயிரம் வீடுகள் தமிழர்களுக்காக கட்டித் தரப்படும். இதில் இடம் பெயர்ந்தோருக்காக 1500 வீடுகள் கட்டித் தரப்படும். இந்த மாகாணத்தில், இந்தியா சார்பில் 500 மெகாவாட் மின் நிலையம் அமைத்துத் தரப்படும் என்றார்.

இந்தியா கட்டித் தரவுள்ள இந்த மின் நிலையம் சம்பூர் பகுதியில் வரவுள்ளது. இதற்காக இப்பகுதியை விட்டு தமிழர்களை விரட்டி விட்டு விட்டனர். அப்பகுதி முழுவதும் உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு மாற்றி ராணுவத்தை குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் என்கிற சந்திரகாந்தனையும் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார்.

இருப்பினும் தமிழர்களின் முக்கியப் பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நிரூபமா ராவ் பேச்சுவார்த்தை எதையும் மேற்கொள்ளவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2010/09/02/srilanka-tamil-resettlement-rehabilitation-nirupam.html

டெல்லி திரும்பினார் நிருபமாராவ்: பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றப்பணிகள் குறித்தும், இந்தியாவின் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும் அறிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தமிழர்களின் மீள்குடியேற்றப்பணி, நிவாரணப்பணி குறித்து நேரில் கண்டு அறிக்கை தயாரிக்க இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமாராவை 3 நாள் பயணமாக இலங்கை அனுப்பி வைத்தார்.

வவுனியா முகாம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்பட பல இடங்களை நிருபமா பார்வையிட்டார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டார்.

நேற்று அவர் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இலங்கை தமிழர்களின் நிலைகளை நேரில் கண்டு அறிந்தவற்றை அறிக்கை தயாரித்துள்ளார். அவர் இன்று கொழும்பில் இருந்து சென்னை வந்து இங்கிருந்து டெல்லி சென்றார்.

இந்தியா திரும்பிவிட்ட நிருபமாராவ் நாளை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=38735

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதுவதை சிலர் விமர்சிக்கக்கூடும்

ஆனால்

எனது பார்வை வேறானது

இறுதியாக நடந்த பரந்து பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலே தலைவர் சொன்னது அல்லது கேட்டுக்கொண்டது

பழையவற்றை மறப்போம்

புதிய உறவுகளை தொடர்வோம் என்று.

அது இன்று பலவாறு சென்று

இழப்புக்களுக்கு தமிழினம் சென்ற பின்

அவரது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்று தமிழினம் எடுத்துக்கொண்டு

10 வருடங்கள் பின் தள்ளப்பட்டிருந்தாலும்

தலைவர் விட்ட இடத்திலிருந்து

அடுத்த கட்டத்தை ராஜதந்திரமாக நகர்த்துவதே சாலச்சிறந்தது

இல்லையெனில் தலைவரின் அந்த கோரிக்கையையும் கேலி செய்து அவரது அடுத்த கட்டத்தையும் நாம்புரிந்து கொள்ளவில்லை என்று எனக்கு தோன்றுகிறது

வீண் வீராப்புகளை நிறுத்தி தமிழரது போராட்டம் அடுத்தகட்டத்துக்கு நகர என்ன வழி என்று சிந்தித்தால்

நிருபராவின் காய் நகர்த்துதலுக்குள் நாம் எம்மை ஒரு படி நிமிர்த்திவிடலாம் என்றுதான் எனக்கு படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ப காமெடி.. தமிழர்களை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என செயல்பட்டவரக்ளுடன் இன்னும் செயல் பட்டு கொண்டிருப்பவர்களுடன் ராஜதந்திரம் செய்கிறார்களாம்..... அய்யோ அய்யோ... இந்திய ஆயுதங்களால் இறந்து போன மாவீரர்களின் ஆத்மா கூட மன்னிக்காது.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ப காமெடி.. தமிழர்களை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என செயல்பட்டவரக்ளுடன் இன்னும் செயல் பட்டு கொண்டிருப்பவர்களுடன் ராஜதந்திரம் செய்கிறார்களாம்..... அய்யோ அய்யோ... இந்திய ஆயுதங்களால் இறந்து போன மாவீரர்களின் ஆத்மா கூட மன்னிக்காது.... :lol:

தங்களிடமிருக்கும் இத்தனை ஆவேசமும் இன்னும் 100 மடங்காக எனக்குள் உண்டு

ஆனால் அதற்காக சதையும் எலும்பும் ரத்துமுமாய்....... நாம் கொடுத்தவிலை அறிவேன்

தற்போதும் இதேநிலையிலிருந்து கொடுக்க தயாராகினும் பலன் பூச்சியமே என்றானபோது......

ஆயுதங்களை மௌனிக்கின்றோம்

சரணடையாது குப்பி அடித்து தன் ரகசியம் காத்தபோராளிகளை

எதிரியிடம் சரணடையுங்கள்

மிஞ்சுவது மிஞ்சட்டும் என்ற முடிவின் பொறுப்பை நாம்உணரவேண்டும்

அந்த மிஞ்சியதில் எத்தனையை நாம் பொறுப்பெடுத்தோம் என்பதையும் நாம் கணக்கெடுக்கவேண்டும்

சும்மா மலையுடன் தலையை முட்டுவது என்பது எதைக்குறிக்கும்

நாம் கூப்பிட்டபோது அவர்கள் சம்மதிக்கவில்லை

எனவே அவர்கள் கூப்பிடும்போது நாம் போகக்கூடாது என்பதும் எதைக்குறிக்கிறது

அதைவிட சில வருடங்கள் கழிந்தாவது நாம் கேட்டது கிடைத்திருக்கிறது என்றநிலையெடுத்து....

அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் தோழரே விசுகு நானும்சொல்ல வந்தேன் நேரடியாக அடிவாங்கியவர்களின் வீரத்திற்க்கும் ஓர்மத்திற்கும் நாம் ராஜதந்திரம் அது இது என்று குறுக்கே போக கூடாது ... அடிப்பட்ட புலிகள் தங்களுக்கு ஏற்ப்பட்ட வலியினை தீர்த்து கொள்ள எந்த வழியையும் மேற்கொள்ளலாம் ... அவர்களுடைய கோட்பாட்டினை ஆதரிக்க வேண்டியது நமது கடமை... இதில் இந்தியா அழிவதும் இருக்கலாம் அல்லது ஒட்டு மொத்த இலங்கையும் அழிவதாகவும் இருக்கலாம்... வலியை உணர்ந்தவர்கள் அவர்களே... எனக்கு தெரிந்தவரை தமிழீழம் கூட இரண்டாம் படசம் தான் இந்த கைத்தடிகளை போட்டு தள்ளினால் நாளையே தமிழீழம் கைகளில்....babyhaha.gif

தங்களிடமிருக்கும் இத்தனை ஆவேசமும் இன்னும் 100 மடங்காக எனக்குள் உண்டு

ஆனால் அதற்காக சதையும் எலும்பும் ரத்துமுமாய்....... நாம் கொடுத்தவிலை அறிவேன்

தற்போதும் இதேநிலையிலிருந்து கொடுக்க தயாராகினும் பலன் பூச்சியமே என்றானபோது......

ஆயுதங்களை மௌனிக்கின்றோம்

சரணடையாது குப்பி அடித்து தன் ரகசியம் காத்தபோராளிகளை

எதிரியிடம் சரணடையுங்கள்

மிஞ்சுவது மிஞ்சட்டும் என்ற முடிவின் பொறுப்பை நாம்உணரவேண்டும்

அந்த மிஞ்சியதில் எத்தனையை நாம் பொறுப்பெடுத்தோம் என்பதையும் நாம் கணக்கெடுக்கவேண்டும்

சும்மா மலையுடன் தலையை முட்டுவது என்பது எதைக்குறிக்கும்

நாம் கூப்பிட்டபோது அவர்கள் சம்மதிக்கவில்லை

எனவே அவர்கள் கூப்பிடும்போது நாம் போகக்கூடாது என்பதும் எதைக்குறிக்கிறது

அதைவிட சில வருடங்கள் கழிந்தாவது நாம் கேட்டது கிடைத்திருக்கிறது என்றநிலையெடுத்து....

அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் தோழரே விசுகு நானும்சொல்ல வந்தேன் நேரடியாக அடிவாங்கியவர்களின் வீரத்திற்க்கும் ஓர்மத்திற்கும் நாம் ராஜதந்திரம் அது இது என்று குறுக்கே போக கூடாது ... அடிப்பட்ட புலிகள் தங்களுக்கு ஏற்ப்பட்ட வலியினை தீர்த்து கொள்ள எந்த வழியையும் மேற்கொள்ளலாம் ... அவர்களுடைய கோட்பாட்டினை ஆதரிக்க வேண்டியது நமது கடமை... இதில் இந்தியா அழிவதும் இருக்கலாம் அல்லது ஒட்டு மொத்த இலங்கையும் அழிவதாகவும் இருக்கலாம்... வலியை உணர்ந்தவர்கள் அவர்களே... எனக்கு தெரிந்தவரை தமிழீழம் கூட இரண்டாம் படசம் தான் இந்த கைத்தடிகளை போட்டு தள்ளினால் நாளையே தமிழீழம் கைகளில்....babyhaha.gif

டிஸ்கி: அடுத்தவர் கை வைக்கும் முன்

வாஷிங்டன்: அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தில் தனக்கு அடங்க மறுக்கும் வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது அமெரிக்கா.

வட கொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜோங், சீனா சென்று திரும்பிய அடுத்த நாளே இந்தத் தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் முடக்கும் நோக்கிலேயே மீண்டும் இந்தப் பொருளாதாரத் தடையை விதித்துள்ளதாக அமெரிக்கா விளக்கம் தெரிவித்துள்ளது.

"வட கொரியாவின் ரகசிய அணு ஆயுதத் திட்டத்துக்கு உடந்தையாகவுள்ள நிறுவனங்கள், தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியும், அவர்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பு முறையினை பயன்படுத்த முடியாத வகையிலும் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவிதத்தில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்காக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாட்டின் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டின் ரகசிய பிரிவுக்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள கிரீன் பைன் அசோசியேட் கார்ப்பரேஷன் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொரியாவின் நிறுவனங்களான தேசோங், கொரியா ஹியூங்ஜின் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றுக்கும் இந்த புதிய பொருளாதாரத் தடை பொருந்தும். இந்த இரு நிறுவனங்களும் ஈரான், சிரியாவுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன," என்று அமெரிக்கா தனது நீண்ட விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

பேசலாம்...

அதேநேரம், வட கொரியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் உபயோகமான வகையில் பேச்சு இருக்கும் என்றால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருவதால், இந்தத் தடை பற்றி வட கொரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2010/09/01/us-implements-sanctions-north-korea.html

டிஸ்குக்கு டிஸ்கி:

உள்ளுக்குள் சிங்களவன் மீது கைவைக்கும் அதே நேரம் அவர்களுக்கு உதவி ஒத்தாசை செய்பவன் எவன் மீதாவது கைவைத்திருந்தால் தான் எவனுக்கும் கொஞ்சம் பயம் நம் மீது வந்திருக்கும்... இனியாவது ஈழதோழர்கள் தங்களது அறிவியல் அறிவினை வளர்த்து கொள்ளுதல் வேணும்... :lol:

இன்னும் ஒரு சிலருக்கு அடுத்தவனிடம் கெஞ்சுதல்.. கூத்தாடுத்தாடுதல்... மட்டும் தான் அறிவியல் வளர்ச்சியாக இன்னும் தெரிகிறது...babyhaha.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.