Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

Artist's impression: Scientists described the death of SN 2006gy as a "truly monstrous explosion", suggesting the star may have been 150 times the size of our Sun.

சூரியனைப் போன்று 150 மடங்கு அதிகமான பருமனுள்ள SN2006gy என்று குறியிடப்பட்ட நட்சத்திரம் ஒன்று அதன் குறித்த ஆயுள் முடிவில் வெடித்துச் சிதறியதை நாசா கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த சுப்பர்நோவா (நட்சத்திர வெடிப்பு) பூமியில் இருந்து 240 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. குறித்த நட்சத்திரம் வெடிப்பதற்கு முன்னர் வெளித்தள்ளியது போன்று சூரியக் குடும்பத்துக்கு அருகில் உள்ள (7500 ஒளியாண்டுகள் தொலைவில்) பிறிதொரு நட்சத்திரமான Eta Carinae வும் வெளித்தள்ளி வருவதானது குறித்த நட்சத்திரமும் விரைவில் வெடித்துச் சிதறும் நிலையை எட்டும் என்றும்ம் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து தொடர்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது..! நமது சூரியனும் காலப்போக்கில் ஒரு நாள் வெடித்துச் சிதறலாம்.. அப்படிச் சிதறும் போது பூமியின் நிலை...???! :lol::lol:

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6633609.stm

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply

நமது சூரியனும் காலப்போக்கில் ஒரு நாள் வெடித்துச் சிதறலாம்.. அப்படிச் சிதறும் போது பூமியின் நிலை...???!

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol:

வசிசுதா வுக்கும் பயம், கவலை வந்துட்டுதாக்கும்

Edited by கறுப்பி

  • 1 month later...

ஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கோளம்

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் பார்ப்போர் நெஞ்சைக் கவர்ந்து கண் கொள்ளாக் காட்சியாய் வெண்ணிற ஒளியுடன் மிளிர்வது, சனிக்கோள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களுக்கே அறிமுகமானது, சனிக் கோள். தொலை நோக்கிக் கருவிகள் தோன்றாத காலத்திலே, அதன் ஆமை நகர்ச்சியை ஒழுங்காகத் தொடர்ந்து, வெறும் கண்கள் மூலமாகக் கண்டு பழங்குடி வானியல் ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். ரோமானியர் சனிக் கோளை வேளாண்மைக் கடவுளாய்ப் [God of Agriculture] போற்றினார்கள்.

கி.பி.1610 ஆண்டில் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, தனது பிற்போக்கான தொலை நோக்கிக் கருவியில், ஒளி மயமான சனிக் கோளை முதலில் பார்த்த போது, ஒளிப் பொட்டுக்கள் [bright Spots] சனியின் இருபுறமும் ஒட்டி இருப்பதாக எண்ணினார்! தெளிவாகத் தெரியாத வடிவத்தைக் கொண்டு, சனியின் தள அமைப்பு [Geometry] புரியாது, சனி இருபுறமும் குட்டி அண்டங்கள் ஒட்டி நடுவே உருண்டை வடிமுள்ள ஒரு முக்கோள் கிரகம் [Triplet Planet] என்று தவறாக அறிவித்தார்!

1655 இல் டச் வானியல் வல்லுநர் கிரிஸ்டியான் ஹூயூஜென்ஸ் செம்மையான தொலை நோக்கியில் சற்று கூர்ந்து பார்த்து, மெலிதான வட்ட வளையம் சனிக்கோளின் இடுப்பைச் சுற்றி உள்ளது என்று அறிவித்துக் காலிலியோவின் தவறைத் திருத்தினார். மேலும் சனியின் வட்டத் தட்டு, சனி சுற்றி வரும் சுழல்வீதியின் மட்டத்திலிருந்து [Orbital Plane] மிகவும் சாய்ந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார். சனியின் வளையம் திரட்சி [solid] யானது, என்று அவர் தவறாக நம்பினார்.

இத்தாலியில் பிறந்த பிரெஞ்ச் வானியல் நிபுணர், காஸ்ஸினி சில ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் வளையங்களில் இடைவெளி இருப்பதை முதன் முதல் கண்டு பிடித்து, வளையம் திரண்ட தட்டு [solid Disk] என்னும் கருத்தை மாற்றினார். 1789 இல் பிரான்ஸின் பியர் ஸைமன் லப்லாஸ் சனியின் வளையங்களில் எண்ணற்ற சிறு துணுக்குகள் [Components] நிறைந்துள்ளன என்னும் புதிய கருத்தை எடுத்துரைத்தார். சனிக்கோளின் வட்ட வளையங்களில் கோடான கோடிச் சிறு துகள்கள் [Particles] தங்கி இருப்பதால்தான், வளையங்களில் ஒழுங்கு நிலைப்பாடு [stability] நீடிக்கிறது என்னும் நியதியைக் கணித மூலம் 1857 இல் நிரூபித்தவர் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்.

சூரிய மண்டலத்தில் சனிப் பெயர்ச்சி

சூரிய மண்டலத்தில் பூத வடிவான வியாழக் [Giant Jupiter] கோளுக்கு அடுத்தபடி, மிகப் பெரிய கிரகம் சனிக் கோளம். சனிக் கிரகம் பூமியிலிருந்து குறைந்தது 720 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. கோள வடிவில் சனி, பூமியை விட சுமார் பத்து மடங்கு பெரியது. ஒரே மட்ட அமைப்பில் ஏகமைய வட்டங்களில் [Concentric Circles] பல வளையங்களை அணிந்து மிக்க எழிலுடன் இலங்கும் சனிக் கோளுக்கு ஈடு, இணை சூரிய மண்டலத்தில் எந்தக் கோளும் இல்லை.

சூரிய குடும்பத்தில் 858 மில்லியன் தூரத்தில் தொலை வரிசையில் ஆறாவது அண்டமாகச் சுழல்வீதியில் சுற்றி வருவது, சனிக் கோள். சனியின் மத்திம ரேகை விட்டம் [Equatorial Diameter] 75,000 மைல்; துருவ விட்டம் [Polar Diameter] 66,000 மைல். துருவங்களில் சப்பையான உருண்டை, சனிக் கோளம். ஒரு முறைச் சனிக்கோள் சூரியனைச் சுற்றி வர, 29 ஆண்டுகள் 167 நாட்கள் ஆகின்றன.

பூமியில் உள்ள நவீன பூதத் தொலை நோக்கி மூலம் பார்த்தாலும், சனி மண்டலத்தில் ஒரு சில ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளிக்கு மேல் ஆராய முடியாது. பூகோளச் சுழல்வீதியில் [Earth s Orbit] சுற்றி வரும் ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கியில் [Hubble Space Telescope] 1990 ஆம் ஆண்டு, முதன் முதலில் சனிக் கோளில் ஒரு மாபெரும் வெண்ணிறத் தளம் [White Spot] கண்டு பிடிக்கப் பட்டது. பல மில்லியன் மைல் தூரத்தில் சூரிய மண்டலத்தின் வெளிக்கோள்களில் ஒன்றாக, ஆமை வேகத்தில் சுற்றி வரும் சனிக்கோளை, விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [space Probes] மூலமாகத்தான் அறிய முடியும்.

சனிக்கோள் அருகே பறந்த அமெரிக்க விண்வெளிக் கப்பல்கள்

ரஷ்யா செவ்வாய், வெள்ளிக் கோள்களை மட்டும் ஆராய, பல விண்வெளி ஆய்வுச்சிமிழ்களை ஏவிக் கொண்டு, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ போன்ற மற்ற அண்ட கோளங்களை ஆய்வதில் எந்த வித ஆர்வமும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அப்பணியில் முழு முயற்சி எடுத்து, அமெரிக்கா நிதியையும், நேரத்தையும் செலவு செய்து மும்முரமாக முற்பட்டு பல அரிய விஞ்ஞானச் சாதனைகளை உலகுக்கு எடுத்துக் காட்டியது.

1972-1973 ஆண்டுகளில் முதன் முதல் ஏவப்பட்டுப் பயணம் செய்த மூன்று விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [space Probes] கண்டனுப்பிய சனி மண்டல விபரங்கள் மாபெரும் முற்போக்கான விஞ்ஞானச் சிறப்புக்கள் உடையவை. பயனீயர்-10,-11 [Pioneer-11,-12] ஆகிய இரண்டு விண்வெளிக் கப்பல்கள் வியாழக் [Jupiter] கோளைக் குறிவைத்து அனுப்பப் பட்டாலும், அதைத் தாண்டி அப்பால் பறந்து சென்று, அண்டவெளி விண்மீன் [interstellar] மந்தைகளைப் படமெடுக்கவும் உதவின.

பயனீயர்-11 [Also called Pioneer-Saturn] 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி ஏவப்பட்டு, வியாழனை நெருங்கி 1974 டிசம்பர் 2 ஆம் நாள் பயணம் செய்து, சனிக்கோளை 1979 செப்டம்பர் முதல் தேதி 12600 மைல் அருகி, வளையத்தை ஊடுருவிச் சென்று, பூமியிலிருந்து மனிதர் ஏவி முதலில் சனிக்கோளை அண்டிய விண்கப்பல் என்று விண்வெளிச் சரித்திரப் புகழ் பெற்றது. அத்துடன் பயனீயர்-11 சனியின் இரண்டு புதிய வளையங்களை முதன் முதல் கண்டு பிடித்தது. மேலும் சனியின் காந்தக் கூண்டுக்குள் [Magnetosphere] கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பரவி இருப்பதையும் படமெடுத்துப் பூமிக்குப் புள்ளி விபரங்களை அனுப்பியது.

அடுத்து 1977 இல் யாத்திரைக் கப்பல்கள் வாயேஜர்-1,-2 [Voyager-1,-2] சனிக் கோளைக் குறிவைத்து ஏவப்பட்டு விஞ்ஞான விளக்கங்களை அறிந்திடவும், வியாழக் கோளை ஆராய்ந்தபின் சனிக் கோளைச் சுழல்வீதியில் சுற்றி வந்து, அதன் இயற்கைச் சந்திரன்களைப் படமெடுக்கவும் அனுப்பப் பட்டன. 1977 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வாயேஜர்-1 ஏவப்பட்டு, சனிக் கோளை 1980 நவம்பர் 12 ஆம் நாள் அடைந்து சுற்ற ஆரம்பித்தது. அதற்கு முன்பே 1977 ஆகஸ்டு 20 இல் ஏவப்பட்ட வாயேஜர்-2 வியாழனைப் பற்றிய தகவல்களை அனுப்பி விட்டு, சனிக் கோளை 1981 ஆகஸ்டு 25 இல் அண்டிச் சுழல்வீதியில் சுற்ற ஆரம்பித்தது. இரண்டு விண்வெளி ஆய்வுச்சிமிழ்களும் சனி மண்டலக் கூட்டுறுப்புகள் [Composition], தளவியல் [Geology], சூழகத்தின் தட்ப, வெப்பநிலை [Meteorology], துணைக் கோள்கள் நகர்ச்சி [Dynamics of Regional Bodies] ஆகியவற்றை ஆராய்ந்து விபரங்களைப்பூமிக்கு அனுப்பின.

சனி மண்டலம் வாயுப் பாறை உறைந்த ஒரு பனிக்கோளம்!

சனித் தளத்தின் திணிவு [Density] பூமியின் திணிவில் எட்டில் ஒரு பங்கு! காரணம் சனிக் கோளில் பெரும்பான்மையாக இருப்பது, ஹைடிரன் [Hydrogen] வாயு. மிக்க பளு உடைய சனியின் சூழ்நிலை, சூழக அழுத்தத்தைச் [Atmospheric Pressure] சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாக்கி ஹைடிரஜன் வாயு திரவமாய்த் தணிவடைகிறது [Condenses into a Liquid]. உட்கருவில் திரவ ஹைடிரஜன் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக ஹைடிரஜன் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தி யாக [Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக [Magnetic Field] இருப்பதற்கு இதுவே காரணம்.

சனியின் நடுவே ஒரு வேளை கடும் பனிக்கரு[icy Nucleus] உறைந்துபோய் இருக்கலாம்! அல்லது கன மூலகங்கள் [Heavy Elemets] பேரழுத்தத்தில் பாறையாகி சுமார் 15,000 டிகிரி C உஷ்ணம் உண்டாகி யிருக்கலாம்! 4.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய சூரிய குடும்பத்தில் பிறந்த வியாழன், சனிக் கோள்கள் ஈர்ப்பியல் கொந்தளிப்பு [Gravitational Settlement] அடங்கி இன்னும் நிலைப்பாடு [stability] பெறவில்லை. அதனால் அண்டத்தின் கருச் சுருக்கம் [Contraction] உஷ்ணத்தை மிகுந்து வெளிப்படுத்தி, சனிக்கோள் தான் சூரியனிட மிருந்து பெறும் வெப்பத்தைவிட மூன்று மடங்கு மிகையாக விண்வெளியில் அனுப்புகிறது!

சனியின் வாயு மண்டலத்தில் இருப்பது, ஹைடிரஜன் 88%, ஹீலியம் 11%. மேகக் கூட்டங்களின் வெளித் தோல் உஷ்ணம் -176 டிகிரி C. சனி தன்னைத் தானே சுற்றும் காலம் சுமார் பத்தரை மணி நேரம். மத்திம ரேகைக் காற்று [Equatorial Winds] அடிக்கும் வேகம் மணிக்கு 1060 மைல்!

சனிக்கோள் அணிந்துள்ள ஒளிவீசும் எழில் வளையங்கள்!

சனி மண்டலத்தின் ஒளிமயமான வளையங்கள் மிகவும் பிரம்மாண்டமான பரிமாணம் உடையவை! சனியின் வளையங்களை பெண்ணின் கை வளையல் என்றோ, கால் சிலம்பாகவோ, அன்றி இடை அணியாகவோ எப்படி வேண்டு மானாலும் ஒப்பிடலாம்! சனிக் கோளின் விட்டம் சுமார் 75,000 என்றால், அதற்கு அப்பால் பரவிய வெளி வளையத்தின் விட்டம் 170,000 மைல்! உள்ளே முதல் வளையத்தின் விட்டம் 79,000 மைல்! E,G,F,A,B,C,D, என்னும் பெயர் கொண்ட ஏழு வளையங்கள், சனியின் இடையை ஒட்டியாண அணிகளாய் எழிலூட்டுகின்றன! E என்னும் வளையம் அனைத்துக்கும் வெளிப்பட்டது. D என்னும் வளையம் அனைத்துக்கும் முற்பட்டது. A வளையத்துக்கும் B வளையத்துக்கும் இடைவெளி மட்டும் சுமார் 3000 மைல்! காலில் அணியும் சிலம்புக்குள்ளே இருக்கும் முத்துக்களைப் போல் ஒவ்வொரு வளையத்தின் உள்ளே கோடான கோடித் தனித்தனித் துணுக்குகள் [individual Ringlets] பரவலாகி, சனிக் கோளை வட்டவீதிகளில் [Circular Orbits] சுற்றி வருகின்றன. வாயேஜர்-2 தனிக்கருவி மூலம் எண்ணியதில் சனியின் வளையங்களில் 100,000 மேற்பட்ட கற்களையும், பாறைகளையும் காட்டி யுள்ளது!

வளையங்கள் யாவும் சனியின் மத்திம ரேகை மட்டத்தில் [Equator Plane] சுற்றும், வட்டவீதிக்கு 27 டிகிரி சாய்ந்து அமைந்துள்ளன. சுடர்வீசும் வளையங்கள் எல்லாம் திரட்சியான தட்டுக்கள் [solid Disks] அல்ல! சில இடத்தில் வளையம் 16 அடியாக நலிந்தும், சில பகுதியில் 3 மைல் தடிமன் பெருத்தும் உள்ளன. வளையங்களில் பல்லாயிரக் கணக்கான பனித்தோல் போர்த்திய கூழாம் கற்கள் [Pebbles], பாறைகள், பனிக் கட்டிகள், தட்ப வாயுக் கட்டிகள் [Frozen Gases] தொடர்ந்து விரைவாக ஓடிச் சனியைச் சுற்றித் தொழுது வருகின்றன! வளையங்கள் சூரிய ஒளியில் மிளிர்வதற்குப், பனி மூடிய கற்களும், பனிக் கட்டிகளுமே காரணம். சனிக்கோளை நெருங்கிய உள் வட்ட வளையத்தின் துணுக்குகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெகு வேகமாகச் சுற்றி வரும் போது, வெளி வட்ட வளையத் துணுக்குகள் சிறிது மெதுவாக 15 மணி நேரத்தில் ஒரு தரம் சுற்றுகின்றன. வளையத் துணுக்குகளின் பரிமாணம் தூசியாய் இம்மி அளவிலிருந்து, பாறைகளாய் 33 அடி விட்டமுள்ள வடிவில், வட்டவீதியில் உலா வருகின்றன.

சனிக் கிரகத்தைச் சுற்றி வரும் சந்திரன்கள்

சனிக் கோளின் உறுதி செய்யப் பட்ட 18 சந்திரன்களில் எல்லாவற்றிலும் மிகப் பெரியது, டிடான் [Titan]. அதன் விட்டம் 3200 மைல் என்று அனுமானிக்கப் பட்டுள்ளது. நைட்ரஜன் வாயு மண்டலத்தைக் கொண்டு, ஆரஞ்சு நிறத்தில் மந்தார நிலையில் இருப்பதால், டிடான் கோளின் விட்டத்தைக் கணிப்பது, கடினம். புதன் கோளை [Planet Mercury] விடச் சற்று பெரியது, டிடான். 1655 இல் டச் வானியல் வல்லுநர் கிரிஸ்டியான் ஹூயூஜென்ஸ் டிடான் சந்திரனை முதன் முதலில் கண்டு பிடித்தார். சனியின் மிகச் சிறிய சந்திரன் 12 மைல் விட்டம் கொண்டது.

ஒரு காலத்தில் சனிக் கோளின் சந்திரனாகச் சுற்றி வந்த அண்ட கோளங்கள், சனியின் ஈர்ப்பு ரோச் எல்லைக்குள் [Roche Limit] சிக்கிக் கொண்ட போது, அதிர்வலை விசையால் [Tidal Force] உடைக்கப் பட்டுத் தூள் தூளாகி, வட்ட வளையங்களாய் மாறி விட்டன என்று கருதப் படுகிறது.

சனிக்கோளை நோக்கி அடுத்த மாபெரும் படையெடுப்பு

2004 ஆம் ஆண்டு சனியை நோக்கி ஏவப்பட இருக்கும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் [Cassini Space Ship] மூலம் சனியைப் பற்றியும், அதன் பெரிய சந்திரன் டிடானைப் பற்றியும் நிறைய விஞ்ஞான ஆராய்ச்சி விளக்கங்கள் அறியப்படும். இதற்கு முன் பயணம் செய்த பயனீயர், வாயேஜர் விண்வெளிக் கப்பல்கள் சனிக்கோளை வெறும் ஒளிப்படங்கள் மட்டுமே எடுத்தன. ஆனால் காஸ்ஸினி

விண்கப்பல் சனிக்கோளை பற்றி ஒரு முழு நீளத் திரைப்படமே எடுக்கப் போகிறது. நாசா [NASA] காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி, டென்னிஸ் வாட்ஸன், சனிக் கோளின் காந்தக் கூண்டு [Magnetosphere], அதன் மாபெரும் சந்திரன் டிடான், பனி மூடிய குட்டித் துணைக் கோள்கள் [smaller Icy Satellites], பிரமாண்டமான வளையங்களின் அமைப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சிறப்பான விஞ்ஞானக் கருத்துகளைச் சேகரிக்கப் போகின்றது, காஸ்ஸினி ஆய்வுச்சிமிழ் என்று கூறினார். வளையங்களில் உலாவிடும் அண்டத் தூசியும் துகள்களும், பனி பூசிய கூழாம் கற்களும் ஒரே உடைப்பு நிகழ்ச்சியில் உண்டானவையா ? அல்லது அடுத்தடுத்து நிகழ்ந்த உடைப்புகளினால் உதயமானவையா ? சனியின் சந்திரனை மோதி நொறுக்கியது வால் விண்மீன்களா [Comets] ? அல்லது அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் பெருத்த சந்திரன், சிறுத்த சந்திரனைத் தாக்கி உடைத்து வட்டவீதியில் வளையமாகச் சுற்ற வைத்து விட்டதா ? போன்ற புதிர் வினாக் களுக்குப் பதில் விடை அளிக்கும், காஸ்ஸினியின் விண்வெளிப் பயணம்!

லங்காசிறீ

இந்த அசையும் படத்தைப் பாருங்கள். இருவர் ஆடும் அண்ட நடனத்தை. இருவரில் இடது பக்கம் உள்ளவர் வியாழன், வலது பக்கம் உள்ளவர் சனி. இருவரும் ஒரு நிதானத்தில் இல்லாமல் ஒரு வட்டத்தில் இல்லாமல் ஆடுவது போல் இருக்கிறது அல்லவா. இதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை. நம் பூமி நிதானத்தில் இல்லை. அவ்வளவு தான்! பூமி சூரியனுக்கு அருகில் இருந்து கொண்டு வேகமாக, சிறிய சுற்றுப் பாதையில் சுற்றி வருவதால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதால் வியாழனும், சனியும் இவ்வாறு நடனம் ஆடுவது போல் தோன்றுகிறது. இது இரண்டு வார இடைவெளி விட்டு 23 முறைகளில் எடுத்து பின்னப்பட்ட GIF படம்.

JuSa2000_tezel_c.gif

இதோ சூரியக் கிரகங்களின் சுற்றுப் பாதையை விளக்கும் அற்புதப்படம்

16_orbitsside.jpg

:blink::unsure::unsure:

ஹீ ஹீ வசி கவலைப்படாதீங்ககாதுக்கு என்னும் 700கோடி வருஷம் இருக்கு அதுக்கு முதல் மனிதனே அழிச்சிடுவாம் உலகத்தை

நாம் தனித்தன்மை வாய்ந்தவர்களா அல்லது நம்மைப் போல் ஏதேனும் சூரியக் குடும்பங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

நம்மைப் பொருத்தவரை ஒரு உயிரினம் வாழ ஐம்பூதங்கள் வேண்டும். பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம். இந்த ஐந்தும் நமக்கு மிகச் சௌகரியமான நிலையில் இருப்பதாலேயே நம்மால் இந்த பூமியில் வாழ முடிகிறது.

மற்றொரு சூரியக் குடும்பம் இதே போல் இருக்க வேண்டுமானால் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. நடுவில் ஒரு நட்சத்திரம் தனக்கேயுள்ள ஈர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும்.

2. அதைச் சுற்றி கிரகமும் தனக்கேயுரிய ஈர்ப்பு சக்தியுடன் அந்த நட்சத்திரத்தையும் வலம் வர வேண்டும்.

3. கிரகத்தில் நீர் இருந்தாக வேண்டும்.

4, காற்று மண்டலமும், காற்றழுத்தமும் சீராக இருக்க வேண்டும்.

5. பாறைகளின்/மணலின் மூலக்கூறுகள் உயிர் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும்.

6. உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேண்டும்.

7. அது சுற்றி வரும் நட்சத்திரம் சரியான தொலைவில் இருக்க வேண்டும். அதிக தொலைவில் இருந்தால் பனி அதிகமிருக்கும். பக்கத்தில் இருந்தால் வெப்பத்தில் உயிர்கள் பொசுங்கி விடும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதனால் இன்னொரு பூமியும், அதில் உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். இல்லையில்லை, நம் எப்படி இருக்கிறோமோ அதே போல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் சிலரோ, இந்த ஐம்பூதங்கள் இல்லாமல் வாழும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பும் இருக்கும் அல்லவா என்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், நமது சூரியக் குடும்பம் போலவே இருக்கும் பல குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமக்குத் தோதாக, அருகிலேயே இருக்கும் இது போன்ற குடும்பங்களில் 156ஐத் தேர்ந்தெடுத்து இந்தப் படத்தில் பட்டியல் இட்டுள்ளனர். 1 AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!

exoplanets.jpg

வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா. பூமிக்கு வெளியே விரிந்து பரந்து கிடக்கும் கற்பனைகெட்டாத தூரம் வரை விரிந்துள்ள பிரபஞ்சத்தை உணர்ந்தால் பூமியில் அல்ப விஷயத்திற்கெல்லாம் சண்டையிடும் எண்ணம் குறையும். மனம் விரிவடையும்.

இதற்கு தொலைநோக்கியில் தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. நம் வீட்டு மொட்டைமாடியில், இரவில் நின்று கவனித்தாலே போதும். முதலில் மிகவும் பிரகாசமான நமது அண்டைக்கிரகங்களையும், மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிகளுக்கான நட்சத்திரக் கூட்டங்களையும் எளிதாக அடையாளம் காணலாம். அதிலிருந்து பிற நட்சத்திரங்கள், அண்டங்கள் என மனதளவில் விரிந்து கொண்டே போகலாம்.

அண்டைக் கிரகங்கள்:

நிலாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக தற்போது சூரிய அஸ்தமனத்திற்கு பின் இரவு 7.30 மணி வரை மேற்கு வானில் தெரியும் வெள்ளியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். நம்மை விட சூரியனுக்கு அருகிலிருக்கும் வெள்ளி (Venus) இருப்பதிலேயே அதிக உஷ்ணமான கிரகம். கிட்டத்தட்ட பூமியின் சைஸ். ஆனால் குறைந்தபட்ச வெப்பமே +446 டிகிரி செண்டிகிரேட் என்பதாலும், நச்சு வாயுக்கள் நிறைந்திருப்பதாலும் வெள்ளியில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இல்லை.

சூரியனுக்கு மிக அருகிலிருக்கும் புதன், சூரியனின் அருகிலிருப்பதாலேயே நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. தற்போது மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனம் ஆனவுடன் சற்று நேரம் வரை மேற்கில் தொடுவானத்தில் (horizon) தெரியும்.

வியாழனும் சனியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இரவில் தெளிவாகத் தெரியும். கடந்த 20 வருடங்களில் சனிக்கிரகம் இப்போது தான் பிரகாசமாக தெரிவதாக கூறப்படுகிறது. மாலையில் கிழக்கு வானில் மற்ற நட்சத்திரங்களை விட பிரகாசமாக தற்போது தெரிவது வியாழன், அதன் அருகிலேயே அதைவிட சற்று குறைந்த ஒளியுடன் ஆனால் மற்ற நட்சத்திரங்களை விடத் தெளிவாக தெரிவது சனி.

12 இராசிகள்:

வியாழனை ஒட்டி அருகில் ரிஷப நட்சத்திரக் கூட்டம் தென்படுகிறது. அதற்கு சற்று மேலாக கிட்டத்தட்ட நடுவானில் மேஷக் கூட்டத்தைக் காணலாம். இவையனைத்தும் இரவு 7.00 மணி முதல் 8.30 வரை தமிழ்நாட்டில் காணக்கூடியனவாகும்.

புதிய நட்சத்திரம்:

கிழக்கு வானில் தொடுவானிற்கருகில் மிகவும் பிரகாசமான ஒரு புதிய நட்சத்திரத்தை மாலை வேளைகளில் தற்போது காணலாம். இது மனிதனால் உருவாக்கப்பட்டது! வானில் உள்ள ஆராய்ச்சிக் கேந்திரமான 'பன்னாட்டு வான்வெளி நிலையத்திற்கு' (International Space Station சுருக்கமாக ISS), டிசம் பர் 2000 முதல் வாரத்தில் அமெரிக்க விண்கலம் மூலம் கொண்டு சென்று பொருத்தப்பட்ட வெயில் (Solar) பானல்கள் பெரிய பரப்பளவைக் கொண்டிருப்பதால், நமக்கு அஸ்தமனத்திற்குப் பின் அதில் படும் வெயிலின் பிரகாசம் பூமியிலிந்து பார்க்கக்கூடிய அளவில் இருக்கிறது

நமது சந்திரனுடன், வியாழன் தனது நான்கு பெரிய நிலாக்களுடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சி

bluemoon_icstars_big.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நமது சந்திரனுடன், வியாழன் தனது நான்கு பெரிய நிலாக்களுடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சி

bluemoon_icstars_big.jpg

செத்துப் போன இந்தப் பகுதியை வானவில் துளிர்க்க வைச்சிருக்கீங்க. உங்கள் முயற்சிகள் எம்மை ரசிக்க வைத்தன...! விடயங்களை படிக்க வைத்தன.! :P

சூப்பர் நோவா

சூப்பர் நோவா என்பது விண்மீன் வெடித்து சிதறும் நிகழ்வு. மிகவும் ஒளியுள்ள ப்ளாஸ்மா எனும் அயனிய பொருண்மை நிலைக்கு (ionized state of matter) விண்மீன் வெடித்து

செல்லும் நிகழ்வையே சூப்பர் நோவாவாக வெடித்தல் என நாம் கூறுகிறோம். இவ்வெடிப்பு நிகழ்ந்திடும் இச்சிறிய தருணத்தில் வெளிப்படும் ஆற்றலானது நம் சூரியன் 10 பில்லியன்

ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் ஆகும். எல்லா விண்மீன்களும் சூப்பர் நோவாவாகிடும் என கூறமுடியாது. சூரியனின் நிறைக்கு 8 மடங்கும் அதிகமாகவும் இருக்கும்

விண்மீன்களே சூப்பர்நோவா ஆகின்றன. நமது சூரியன் சூப்பர் நோவா ஆகாது.

Keplers_supernova.jpg

தற்போது சந்திரா-எக்ஸ்-ரே விண்மீன் கண்காணிப்பு நிலையம் (விண்ணில் அமைந்துள்ளது இது) SN2006gy என்கிற சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்துள்ளது. இதுவரை அறியப்பட்ட

சூப்பர் நோவாக்களிலேயே இந்த சூப்பர்நோவா வெடிப்பின் பிரகாசமும் அது நிகழ எடுத்துக்கொண்ட காலமும் அபரிமிதமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

f_galaxym_8c3d996.gif

250 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் NGC1260

SN2006gy எங்கே உள்ளது? அது NGC1260 எனும் விண்மீன்கள் மண்டலத்தில் (galaxy) உள்ளது. இது பூமியிலிருந்து 240மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு

ஒளிவருடம் என்பது ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தூரம்.) 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் மனிதன் உருவாகவே இல்லை. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் 90 விழுக்காடு அழிந்துவிட்டன. அந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வினை நாம் இப்போது காண்கிறோம். பூமியில் உள்ள கண்காணிப்பு நிலையமும் இந்த சூப்பர் நோவாவை கண்டுபிடித்துள்ளது. அகச்சிவப்பு புகைப்படமாக எடுத்துள்ளது

f_sn2006gylicm_5ccb3f1.gifஇதில் மேலே இருக்கும் பிரகாசமையமே சூப்பர்நோவா வெடிப்பு மங்கலான ஒளி மையம் விண்மீன் மண்டலத்தின் மையம்.

f_howm_761b4b6.gif

மேலே உள்ள படம் சூப்பர்நோவா எவ்வாறு வெடித்தது என்பதனை குறித்து அறிவியலாளர்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். மிக அதிக பொருண்மை நிறை கொண்ட ஒரு விண்மீனின் மையம் அதீதமாக காமா கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிரின் ஆற்றலில் துகள்-எதிர்துகள் (particle anti-particle) ஜோடிகள் உருவாகின்றன. இந்த ஆற்றல் இழப்புடன் அதிகமான நிறை-ஈர்ப்பும் இணைய விண்மீனை வெடிக்க வைக்கிறது.

f_xraym_7574c17.gif

அகப்பயணம்

உடுமண்டலங்கள்:

விண்வெளியில் விரவி இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பே உடுமண்டலங்கள் அல்லது கேலக்ஸிகள். நட்சத்திரங்கள் என்றால், ஒன்றல்ல இரண்டல்ல, மில்லியன் நட்சத்திரங்களிலிருந்து டிரில்லியன் நட்சத்திரங்கள் வரை கொண்ட தொகுப்பே உடுமண்டலங்கள். நமது உடுமண்டலம் ஆகாய கங்கை அல்லது பால்வெளி வீதி என்று அழைக்கப்படுகிறது.

இவற்றின் பரப்பு சில ஆயிரங்களிலிருந்து சில லட்ச ஒளி ஆண்டுகள் வரை இருக்கலாம். இவற்றின் நிறை பல மில்லியன்/பல டிரில்லியன் சூரியன்களின்/சூரியக் குடும்பங்களின் நிறை அளவுக்கு இருக்கும்! ஒரு உடுமண்டலத்துக்கும் அடுத்த உடுமண்டலத்துக்கும் இடையில் பல மில்லியன் ஒளியாண்டுகள் தூரம் இருக்கும்! இல்லாவிட்டால் அது ஒரே உடுமண்டலம் ஆகி விடும்.

நாம் இருப்பது ஒரு மாபெரும் சுருள் உடுமண்டலத்தில் (Spiral Galaxy). இதன் விட்டம் ஒரு லட்சம் ஒளியாண்டுகள் இருக்கக் கூடும். ஆனால் நம்மருகே உள்ள அண்டிரோமிடா உடுமண்டலம் 2/3 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது.

உடுமண்டலங்களை அதன் அமைப்பைப் பொருத்து நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்:

1. சுருள் வடிவ உடுமண்டலங்கள் (Spiral Galaxies)

m51.jpg

இது M51 எனப்படும் Whirlpool உடுமண்டலம். சுருள் வடிவம் எதனால் உண்டாகிறது தெரியுமா? பக்கத்தில் இருக்கும் அடுத்த உடுமண்டலம் இதை ஈர்ப்பதால் தான். அவ்வாறு ஈர்க்காவிடில் கீழே சொல்லும் லெண்டிகுலர் உடுமண்டலமாக மாறி விடும்!

2. லெண்டிகுலர் உடுமண்டலங்கள் (Lenticular Galaxies) இதுவும் சுருள் உடுமண்டலம் தான். ஆனால் சுருளை உருவாக்கும் நடுப்பகுதி வேகமிழந்து எரிபொருள் தீர்ந்து விட்டதால் இப்படி அழைக்கிறார்கள். இவை காலத்தால் பழையவை. மேலும் இவற்றின் அருகில் ஈர்ப்பு சக்தி அதிகமுடைய மற்றொரு உடுமண்டலம் இல்லாதிருக்கக் கூடும்.

ngc5866.jpg

3. நீள்வடிவ உடுமண்டலங்கள் ( Elliptical) இம்மண்டலங்கள் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளாததால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இருந்த போதும் இவற்றில் உள்ள கோள்கள்/நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டு தான் இருக்கும். மொத்த உடுமண்டலமும் சுழலுவதில்லை.

m32.jpg

4. வடிவற்ற உடுமண்டலங்கள் (Irregular Galaxies) எந்த வடிவமும் இல்லாதவை. விநோதமான வடிவம் கொண்டவை.

1138_xray_opt.jpg

ஆயிரக் கணக்கான விநோத வடிவம் கொண்ட உடுமண்டலங்கள் இருக்கின்றன.

செத்துப் போன இந்தப் பகுதியை வானவில் துளிர்க்க வைச்சிருக்கீங்க. உங்கள் முயற்சிகள் எம்மை ரசிக்க வைத்தன...! விடயங்களை படிக்க வைத்தன.! :P

நன்றி நெடுக்ஸ் தாத்தா என் பணி தொடரும்

அழகிய படங்களுடன் ஆச்சரியமான பயனுள்ள தகவல்களைத் தமிழில் தொடர்ந்து தருவதற்கு நன்றிகள், வானவில்.

ngc2787_hst.jpg

NGC 2787 லெண்டிகுலர் உடுமண்டலம் (Lenticular GalaxY)

ngc2787_hst_big.jpg

NGC1365.jpg

NGC1365 சுருள் உடு மண்டலம். அறுபது மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. இரண்டு இலட்சம் ஒளியாண்டு அகலம் உடையது. பால் வீதியைப்போல் இரண்டு மடங்கு பெரியது.

sombrero_vlt.jpg

M104 உடுமண்டலம். கன்னிராசி உடுத்தொகுதியில் இருந்து 30மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது.

உண்மையில் எந்த நட்சத்திரமும் மின்னுவதில்லை. எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவிலான ஒளியை தான் வெளியிடுகின்றன. பூமியைச் சுற்றிலும் உள்ள வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது ஒரிடத்தில் நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் தொலை தூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் பூமி வளிமண்டலத்திற்குள் வந்ததும், அங்குள்ள காற்று வழியாக ஊடுருவும். அப்போது சில ஒளிக்கற்றைகள் சற்று வளைந்தும், எஞ்சியவை நேராகவும் நம் கண்களை வந்து நேரும். இதனால் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி இடைவெளி விட்டு நம் கண்ணுக்கு தெரிகிறது. இதனால் நட்சத்திரங்கள் மட்டும் மின்னுவது போல தெரிகிறது

பூமியில் பசுபிக் சமுத்திரத்தில் சூரியன் மறைவுக்கு வரும் காட்சி.

2003இல் சர்வதேச விண்வெளி ஓடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

f_settingsunfm_b72dc63.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் பசுபிக் சமுத்திரத்தில் சூரியன் மறைவுக்கு வரும் காட்சி.

2003இல் சர்வதேச விண்வெளி ஓடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

f_settingsunfm_b72dc63.jpg

திகட்டாத திட்டாத அழகை.. இயற்கையில் ரசிக்கலாம்..! அதற்கு விஞ்ஞானம் உதவி புரியுது..! :)

சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 28 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் ஏற்கனவே 9 கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் வான்வெளி நிபுணர்கள் நடத்திய ஆய்வில் சூரிய குடும்பத்துக்கு வெளியே மேலும் ஏராளமான கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது. சமீபத்தில் பூமியை போலவே உள்ள `சூப்பர் பூமி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

இப்போது அமெரிக்க நிபுணர்கள் மேலும் 28 புதிய கிரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இந்த கிரகங்கள் நட்சத்திர கூட்டங் களை மையமாக வைத்து சுற்றி வருகின்றன.

இந்த 28 புதிய கிரகங்களையும் சேர்த்து மொத்தம் 236 சிறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவைகளில் சில பூமியை போலவே உள்ளன. உயிரினங் கள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அபூர்வ வாயுக்கள், விலங்கினங்கள் ஆகிய வையும் இவற்றில் உள்ளன.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

ஹுஸ்டன், ஜுலை. 12-

அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள இன்னொரு சூரியனின் (நட்சத்திரம்) துணை கோளை கண்டுபிடித்து உள்ளனர். அந்த கோளை `ஸ்பிச்சர் ஸ்பேஷ் டெலஸ்கோப்' என்ற அதிக சக்தி கொண்ட தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்தனர்.

அந்த கோளின் வான் பகுதியில் தண்ணீர் ஆவியாக நின்றது தெரியவந்தது. எனவே அந்த கோளில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

இந்த கோளுக்கு பெயர் வைக்கவில்லை. `எச்.டி.189733 பி' என்ற குறியீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 64 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. ஒளி ஆண்டு என்பது ஒளி ஒரு வருடம் முழுவதும் பயணம் செய்வதை குறிப்பிடுவது ஆகும்.

மாலைமலர்

அட இன்றைக்கு தான் வாசித்தேன் மிகவும் நல்லா இருக்கு எல்லாருக்கும் வாழ்த்துகள்.முடிந்தால் இன்றிலிருந்து நாமளும் இதுகுள்ள டிரை பண்ணுகிறோம்.............. :P

  • 2 weeks later...

விண்வெளியில் லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் வெடிப்புகள் சக்தி பற்றி ஆராய அமெரிக்காவின் நாசா நிறுவனம் சந்திரா என்ற விண்வெளி டெலஸ் கோப்பை அனுப்பி வைத்தது.

இந்த டெலஸ்கோப் என்.என்.2006 என்ற நட்சத் திரங்களில் ஏற்பட்ட வெடிப்புகளை படம் எடுத்து அனுப்பியது. அந்த படங்களை நாசா நிறுவனம் வெளி யிட்டுள்ளது.

நட்சத்திர வெடிப்பு (சூப்பர் நோவா) ஏற்பட்டபோது அதில் இருந்து சூரியனை விட 1 லட்சம் மடங்கு பிரகாசமான ஒளி ஏற்பட்டது. சாதாரண நட்சத்திரங்கள் வெடிப்பு ஏற்படும் போது வெளிப்படும் சக்தியை விட 100 மடங்கு அதிக சக்தி வெளிபட்டது. அதில் இருந்து காமா கதிர்கள் மற்றும் ஏராளமான வாயுக்களும் வெளிப்பட்டன. வெடித்து சிதறிய நட்சத்திர துகள்கள் சில அழிந்து விட்டன. சில பாகங்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரியன் 450 கோடி ஆண்டு களுக்கு மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நட்சத்திரங்கள் குறுகிய காலத்தில், 10லட்சம் ஆண்டுகளில் எரிந்து அழிந்து வருகின்றன

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

_44039051_launch_tv203index.jpg

அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு புதிய விண்கலம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளது. Phoenix என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கலம் செவ்வாயில் உயிரின இருப்புக்கான சாத்தியம் பற்றிய ஆய்வில் பிரதானமாக ஈடுபட உள்ளதாம்.

_44036994_phoenixlander_416.gif

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6926880.stm

தகவல்களுக்கு நன்றி குறுக்ஸ் தாத்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.