Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அற்புத வார்த்தை ‘அம்மா’..

Featured Replies

வெறுமையாய் த‌னிமைக்குள்

சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்

அமைதிக்குள் தொலைந்துவிட‌

நினைக்கின்ற‌ ம‌ன‌ம்

இவைக‌ளை இய‌ல்பாய்

இணைக்கின்ற‌ கோடாய்

நின் புன்ன‌கையின் சாய‌ல்

நினைவுக‌ளில்-அன்னையே

வாழ்க்கைப் பாதையில்

வலிமிகும் பொழுதுகளில்

ஏக்கங்கள் எழுந்து

எரிக்கின்ற வேளைகளில்

உணர்வுகள் உடைந்து

உயிர்சுடும் கணங்களில்

தாங்க முடியாமல்

தவிக்கும் தருணங்களில்

உணர்வற்ற ஜடமாய்

வார்த்தைகள் வடிந்து

வலியோடு வருமொரு

முனகல் ’அம்ம்ம்மா’

மெல்ல வலிகுறைந்து

கண்ணில் நீர் நிறைந்து

ஏக்கப் பெருமூச்சொன்று

எழுந்து அடங்கிவிட

மீண்டும் முன்புபோல்

முட்டி மோதியேனும்

முன்னேற வைக்கும்

உன்னத உணர்வு-அம்மா..

post-6046-047916200 1284159675_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதைக்காக இந்தப் பாடலை இதில் இணைக்கிறேன் தமிழ்பிரியன்.நன்றி..நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கால கட்டத்தில அம்மாவாவது பாசமாவது...எல்லோரும் பிள்ளை பெறுகிறார்கள் என்பதால் தான் தாங்களும் பிள்ளை பெறுகிறார்கள் இல்லா விட்டால் இந்த சமுதாயம் அவர்களை மலடி எனச் சொல்லி விடும் என்ட காரணம் தான் மிக முக்கியம்...பிறகு ஏதோ தங்கட விருப்பப் படி வளர்க்கிறார்கள்...வளர்ந்த பிறகு பிள்ளை வேலை எடுத்தோ அல்லது கல்யாணம் முடிச்சோ போன பிறகு விட்டாக் காணும் என்டு நிம்மதியாய் இருக்கிறார்கள்...பிள்ளை பெறுவதும்,வளர்ப்பதும் இந்த் சமுதாயத்தின் சட்ட,திட்டங்களுக்கு ஏற்பவே நடக்கிறது...இதில விதி விலக்காய் கொஞ்சப் பேர்[அம்மாமார்]இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைப் பாதையில்

வலிமிகும் பொழுதுகளில்

ஏக்கங்கள் எழுந்து

எரிக்கின்ற வேளைகளில்

உணர்வுகள் உடைந்து

உயிர்சுடும் கணங்களில்

தாங்க முடியாமல்

தவிக்கும் தருணங்களில்

எனக்கு வலிக்க முன்னரே தனக்கு வலிப்பதாக உணர்பவள் தாய்

நன்றி தமிழ்பிரியன்

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்

உங்களின் கவிதைக்காக இந்தப் பாடலை இதில் இணைக்கிறேன் தமிழ்பிரியன்.நன்றி..நன்றி. :rolleyes:

இணைப்புக்கு மிகவும் நன்றி யாயினி..

  • தொடங்கியவர்

இந்த கால கட்டத்தில அம்மாவாவது பாசமாவது...எல்லோரும் பிள்ளை பெறுகிறார்கள் என்பதால் தான் தாங்களும் பிள்ளை பெறுகிறார்கள்.. இதில விதி விலக்காய் கொஞ்சப் பேர்[அம்மாமார்]இருக்கிறார்கள்.

ஏன் இந்த மனச்சோர்வு.. ஒருசிலர் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையோ அல்லது தாய்ப்பாசத்தையோ கேள்விக்குள்ளாக்க முடியாது, இல்லையா ரதி..

  • தொடங்கியவர்

எனக்கு வலிக்க முன்னரே தனக்கு வலிப்பதாக உணர்பவள் தாய்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி வாத்தியார்.. அம்மாவின் அன்புக்கு இணையில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.