Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி சலுகை நீக்கம் - ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்காவுக்கு இரண்டரை இலட்சம் டொலர் இழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி சலுகை நீக்கம் - ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்காவுக்கு இரண்டரை இலட்சம் டொலர் இழப்பு

திகதி:18.09.2010

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையை நீக்கிய பின்னர் சிறிலங்கா சுமார் 250,000 டொலர் பெறுமதியான ஏற்றுமதிக் கட்டளைகளை ஏற்கனவே இழந்து விட்டதாக சிறிலங்காவின் பிரபல ஏற்றுமதி நிறுவனமான தயா குழும நிறுவனங்களின் தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ கடந்த 15ம் திகதி வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி சலுகை மூலம் சிறிலங்காவில் இருந்து சுமார் 2000 பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு சுங்கவரிகள் ஏதுமின்றி ஏற்றுமதி செய்ய முடிந்தது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நீக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் 9.6 வீத வரியைச் செலுத்த வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் விவகாரத்தினால் இரண்டாவது கட்டமாக வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆடை தயாரிப்பு, மட்பாண்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதிக் கட்டளைகள் குறைவடைவதால் வேலையிழப்புகள் ஏற்படும்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 வீதமானவை ஆடை ஏற்றுமதியாகும். இதில் 60 வீதமானவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்டன.

பொருத்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்தால் மட்டுமே இந்த இழப்புகளை தவிர்க்கலாம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் இனி நாடுநாடாக இதுதான்...

ஆனாலும் தலைவர் காமெடி போல இவர்கள் நக்கல்..... அடங்க போவதில்லை... :mellow:

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிச் சந்தை சிறிது சிறிதாக மொறிசியஸ் தீவுக்கு மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றது. மொறிசியஸில் சில மாதங்கள் வரை புதிதாக உருவாக்கப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெருமளவில் சிங்களவர்கள் வேலைக்காக வரவழைக்கப்பட்டனர். இப்போது அதுவும் இல்லை. உயர்ந்த ரக ஆடைகள் பல அங்கிருந்துதான் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தருவிக்கப்படுகிறது.

வருடாந்தம் குறைந்தது இரண்டு இலட்சம் இலங்கையர்கள் (தமிழர்கள்??) இலங்கைக்கு வருவார்கள் அதன் மூலம் பெருமளவு அந்நியச் செலவாணி பெற முடியும் என சிறீலங்கா அரசு ஒரு கணக்கு போட்டுள்ளதாக அறிய முடிகின்றது :mellow: உந்தத் தொகை சிலவேளை ஆடை உற்பத்தி மூலம் கிடைக்கும் தொகையிலும் விட அதிகமாக இருக்கலாம். அதுபோக எனக்குத் தெரிந்தவகையில் பல தமிழர்கள் தங்கள் சொத்துக்களை / சேமிப்புக்களை சிறீலங்கா நோக்கி நகர்த்துகின்றார்கள்.

இந்த வருடம் போல் புலம் பெயர் தமிழர் அடுத்த வருடங்களும் பயணம் செல்லுவார்கள் எனஎதிர்வு கூறமுடியாது. மேலும் உலக பொருளாதாரமும் சரிந்து வருகின்றது, இதனால் புலம் பெயர் தமிழர் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

நாம் தொடர்ந்து எமது பொருளாதார பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உதால பாதிக்கபடப்போவது முதலில் வறிய மக்கள்தான்.அதிலும் ஏற்கனவே இழப்பதுக்கு எதுவுமே இல்லாமல் திறந்த வெளழயில் மீழ்குடியேறிய?மக்கள்தான்.அவங்களுக்கு குடுக்கிற 2 தகரமும் கட்.ஆனால்பணம் படைத்தவர்களம் வெளிநாட்டு உதவி உள்ளவர்களுக்கும் உரு பிரச்சனையும் இல்லை. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

உதால பாதிக்கபடப்போவது முதலில் வறிய மக்கள்தான்.அதிலும் ஏற்கனவே இழப்பதுக்கு எதுவுமே இல்லாமல் திறந்த வெளழயில் மீழ்குடியேறிய?மக்கள்தான்.அவங்களுக்கு குடுக்கிற 2 தகரமும் கட்.ஆனால்பணம் படைத்தவர்களம் வெளிநாட்டு உதவி உள்ளவர்களுக்கும் உரு பிரச்சனையும் இல்லை. :mellow:

சிங்களப்பொருட்களை வாங்கினாலும் அது சிங்களவனுக்குப் போய் மிச்சம் மீதி இருந்தால்தான் ரெண்டு தகரமாகத் தமிழனுக்குக் கிடைக்கும். இது கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிக்கிற கதைதான். உதுக்குப் பதிலா நேசக்கரத்தின்மூலம் ரெண்டு தகரம் வாங்கிக் குடுக்கலாம்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.