Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை

ஹாய் வித்தி அண்ணா,

நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என ஒரு வசைபாடலை பல ஊடகங்கள் பிரசுரம் செய்திருந்தன. அதில் வேடிக்கை என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி நீங்கள் வாய்க்கு வந்தபடி ஆற்றிய உரையை (வாய்க்கு ஏதும் ஆகிவிடாதோ) சில புலம்பெயர் ஊடகங்கள் பிரசுரம் செய்தது தான்.

இதனை நடிகர் சத்தியராஜ் இன் பாணியில் சொல்வதானால், மல்லாக்க படுத்திருந்து காறித் துப்பியிருக்கின்றன இந்த ஊடகங்கள். எனது ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், உங்களை பற்றி வசைபாடிய உரையை ஏன்டா பிரசுரம் செய்திருக்கிறீர்கள் என்று, அப்படியா? என அவன் திருப்பி கேட்டபோது தான் எனக்கு விளங்கியது அந்த செய்தியை வாசிக்காது பதிவேற்றியிருக்கிறார்கள் என்று.

எமது ஊடகச்சூழல் இவ்வாறு தான் உள்ளது. சரி அது கிடக்கட்டும், நல்லூர் திருவிழாவுக்கு 50,000 பேர் வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும், அவர்கள் ஏன் தமது கிரமத்தை பார்வையிட்டு அபிவிருத்தி செய்ய வரவில்லை எனவும் கேட்டிருக்கிறீர்கள்.

நல்லது அண்ணா, நல்லூருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 5,000 பேரை அரசியல் பிரச்சாரத்துக்காக 50,000 ஆக்கினீர்களோ அல்லது கொழும்பில் இருந்து வருபவர்களையும் வெளிநாட்டுகாரர் ஆக்கிவிட்டீர்களோ தெரியாது.

ஆனால் வடபகுதியை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவர் வெளிநாட்டில் உள்ளனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் அங்கு உறவுகள் வசிக்கின்றன. அது தான் உண்மை. வவுனியா தடை முகாமில் இருந்த தமது உறவுகளை வெளியில் எடுப்பதற்காக இங்கு வீடுகளை அடைமானம் வைத்த உறவுகளும் உள்ளனர்.

நல்லூருக்கு வந்த உறவுகளின் கணக்கை தெரிவித்த நீங்கள், போர் முடிந்த பின்னர் தமது உறவுகளையும், ஏற்பட்ட அழிவுகளையும் பார்க்க வந்த புலம்பெயர் உறவுகளின் எண்ணிக்கையை கூறுவீர்களா? கூறமாட்டீர்கள் அது அரசியல்வாதிகளுக்கு அழகில்லையே…

போர் நிறைவுபெற்றுள்ள போதும், சிறீலங்காவின் தற்போதைய நிலை உங்களுக்கு தெரியாதா? ஊடகத்துறையில் இருந்து வெளியேறியுள்ளதாக நீங்கள் தெரிவிக்கிறீர்கள், ஆனால் அவ்வாறு வெளியேறினால் பத்திரிகையையும் படிக்கக்கூடாது என யார் கூறியது??

உங்களின் ஒரு நாள் பணிகளில் சில நிமிடங்களை ஒதுக்கி பத்திரிகையை கொஞ்சம் படியுங்கள், நாட்டு நடப்பு புரியும், கோட்டா சீனிவாசன் கூறியதுபோல, அரசியல் என்பது சுலபமானது அல்ல, அதிகாலையில் எழுந்ததும் 40 பேப்பர்களையாவது படிக்கவேண்டும். அப்பதான் அரசியல் ஞானம் வருகுதோ இல்லையோ, மேடைகளில் பேசி அவமானப்படுவதையவது தடுக்க முடியும்.

வன்னியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியவில்லை, ஐ.நாவும், அனைத்துலக அமைப்புக்களும் வடக்கு செல்ல தவம் கிடக்கின்றன. வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் வருபவர்கள் ஏ-9 வீதியால் செல்ல முடியாது, வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன. சிறீலங்கா அரசின் காலடியில் பணத்தை கொட்டி கும்மியடிப்பவர்கள் மட்டுமே வடக்கில் இயங்கமுடியும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது சுயாதீன குழுக்களாகவோ வடபகுதியின் அபிவிருத்திக்கு பணத்தை முதலிட்டால் அது விடுதலைப்புலிகளின் பணமாக மறுநாள் அரச ஊடகங்களில் செய்தியாகிவிடும்.

அவசரகாலச்சட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது நண்பரே, நூறு அடிக்கு ஒரு காவலரனும் உள்ளது. இந்த நிலையில் கிராமத்தை பார்த்து அபிவிருத்தி செய்யவரும் தமிழ் மக்கள் எங்கு செல்வது என கூறமுடியுமா? அல்லது தற்போது தமது குடும்பங்களுக்கு நேரிடையாக பணத்தை அனுப்பி, அவர்களை பாதுகாத்துவரும் புலம்பெயர் உறவுகள் வருங்காலத்தில் கோத்தபாயா அல்லது பசில் ராஜபக்சா ஊடாக பணத்தை அனுப்ப வேண்டும் என கூறவருகிறீர்களா?

ஏனெனில் தற்போது வடக்கில் பருவமழைக்காலம், பருவமழை என்றால் நெல்செய்கை முக்கியமானது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் விவசாயத் தேவைகளுக்கு வெளிநாடுகள் கொடுத்த பணத்தில் தொண்டர் நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்த விதைநெல்லை கூட தொழில்நுட்ப பிரச்சனைகள் என தெரிவித்து உரிய காலத்தில் அதனை வழங்கவிடாது தடுத்துள்ளார் பசில் ராஜபக்சா.

விதை நெல்லில் என்ன தொழில்நுட்ப பிரச்சனை இருக்கமுடியும் பங்காளி???

எமது தளத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகள் தெரிவித்த கருத்து ஒன்றை இங்கு நினைவுபடுத்துவது நல்லது. அதாவது எமது இனத்தை அழித்தவன் ராஜபச்சா அவன் தான் அதனை கட்டியெழுப்ப வேண்டும்.

ஆனால் தமிழர்களை கடத்தி அவர்களின் பணத்தில் போரிட்ட மகிந்தா, தற்போது அழிவுக்குள்ளான மக்களின் அபிவிருத்திக்கு வெளிநாடுகள் வழங்கும் பணத்தை போர்வெறிகொண்ட சிங்களவர்களின் வடபகுதி குடியேற்றத்திற்கும், வடபகுதி சுற்றுலாக்களுக்கும் செலவிட்டுக்கொண்டு, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பணத்தில் அழிவுகளை ஈடுகட்டிவிட முயன்றுவருகிறான் என்பது தான் உண்மை.

தாயகத்தில் போர் நிறைவுபெற்றதும், அடுத்த போர் புலம்பெயர் தமிழ் சமூகத்தை நோக்கியது என மகிந்தா நேரிடையாக தெரிவித்த பின்னர் நீங்களும் புலம்பெயர் தமிழ் சமூக்தின் மீது வசைபாடல்களை ஆரம்பித்துள்ளது எம்மை சந்தேகத்திற்குள் தள்ளியுள்ளது.

மேலும், புலம்பெயர் நாடுகளில் இளைஞர் அணிகளை உருவாக்கப்போகிறீர்களாம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளைகளை ஆரம்பிக்கப்போகிறீர்களாம்??

1970 களில் நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலில் விஜயதசமிப்பூசைக்கு வழை வெட்ட வைத்திருந்த வளை எடுத்துச் சுழற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் என கூவி தமிழ் இளைஞர்களை ஏமாற்றியதை நாம் இன்றுவரை மறக்கவில்லை.

இதனை ஏன் நான் இங்கு கூறுகிறேன் என்றால் அன்றும், இன்றும் தமிழ் அரசியல்வாதிகளின் செல்லும், செயலும் வேறுபட்டதே என்பதற்காகவே. அதனைத் தான் கடந்த 8 ஆம் நாளும் நாம் மீண்டும் கண்டோம்.

ஈழத்தமிழ் இனத்தின் இனப்பரம்பலில், 20 தொடக்கம் 25 இலட்சம் பேர் தாயகத்திலும், 10 தொடக்கம் 15 இலட்சம்பேர் தாயகத்திற்கு வெளியிலும் உள்ளனர். மேலும் அவர்கள் தாயத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புக்களில் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் வல்லமையுடன் தான் உள்ளனர்.

ஆனால் அதனை முறியடிப்பதற்கு நீங்கள் அரும்பாடுபடுவதாகவே நாம் சந்தேகப்படுகிறோம். அண்மையில் தினக்குரல் என்ற ஊடகத்தில் கூட புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. காசு அனுப்பாத புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தாயகத்து அரசியலில் ஈடுபடும் உரிமைகள் கிடையாதாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் உரிமைகள், செயற்பாடுகள் குறித்து சட்டம் வகுக்க நீங்கள் யார்?? இது தான் தற்போதைய முக்கிய கேள்வி இதற்கான பதில் விரைவில் தெரியத்தான் போகின்றது.

இது தான் நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என பதிவாகிய உரையில் சொல்ல மறந்த கதைகள்.

பின்குறிப்பு: நீங்கள் ஊடகவியலாளரா அல்லது அரசியல்வாதியா என்பது தொடர்பில் எமக்கு தற்போதும் பெரும் குழப்பமே உள்ளது எனவே தான் ஊடக – அரசியல்வாதி என பொதுவாக தெரிவித்துள்ளோம். குறை இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.

நன்றி: ஈழம் ஈ நியூஸ்

இலங்கை அரசு சகல வெளி நாடுகளுக்கும் கட்டுனாயக்கா விமான நிலயத்தில் பெற்ற தரவுகளின் பிரதியை வழங்கி இலங்கை தமிழருக்கு நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை அவர்களுக்கு அகதியுரிமை வழங்கத்தேவையில்லை என்கிறதே?அவர்களின் தரவின் படி 35,000 பேர் கட்டுனாயக்கா ஊடாக பயணித்ததாக கூறுகிறது.இதன் பிரதியை கனடாவுக்கான இலங்கைத்தூதுவர் கனடியபாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதோடு அங்கு சென்றவர்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பிவிட்டதாகவும் அறிக்கை சமர்பித்துள்ளார்.இதன் எதிரொலியாகத்தான்கப்பல் அகதிகள் விடயத்தில் நீதிமன்ற உத்தரவுடன் கூடிய தேக்க நிலையை கனடிய அரசு ஏற்படுத்தியுள்ளதோடு இலங்கைக்கான பயணத்தடையையும் நீக்கியுள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பட்டம்

இவருக்கு ஏன் இரண்டில் ஒன்று.

சரி சும்மா கிடைப்பதுதானே

அள்ளிக்கொடுத்தா போச்சு...

நேற்று திரு. வித்தியாதரன் அவர்களை நான் பாரீசில் சந்தித்திருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப்பாத்தால் புலத்தில் உள்ளவர்க்ள் உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமாலாவது விடலாம்.என்ன வலை விரித்து தேடுறீங்களா யாருக்கு பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று.நல்ல காலம் சிறையில் இருக்கும் போராளிகளையாவது இது வரை விட்டு வைத்திருக்கிறூர்களே.உங்கள் பார்வையில் சயனைட் அடடிக்காமல் விட்டதால் அவர்களும்?????????? :lol:

அது சரி ஈழம் இலையான் இல்லை ஈ நியூஸ்காரர் ஊடகக்காரரோ அரசியல்வாதிகளோ இல்லாட்டிக்கு வால்பிடிகளோ..? கொஞ்சக்காலத்துக்கு முன்னம் வழக்குகள் போடப்போவதாய் எச்சரிக்கைகள் விட்டார்கள். இப்போது வித்தியாதரனுக்கு ஊடகவியலும், அரசியலும் கற்பிக்க முயற்சிக்கின்றார்கள். இதுகளின் செய்திகளை மினக்கட்டு வாசிச்சுக்கொண்டு கொஞ்ச சனம் வேற... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஈழம் இலையான் இல்லை ஈ நியூஸ்காரர் ஊடகக்காரரோ அரசியல்வாதிகளோ இல்லாட்டிக்கு வால்பிடிகளோ..? கொஞ்சக்காலத்துக்கு முன்னம் வழக்குகள் போடப்போவதாய் எச்சரிக்கைகள் விட்டார்கள். இப்போது வித்தியாதரனுக்கு ஊடகவியலும், அரசியலும் கற்பிக்க முயற்சிக்கின்றார்கள். இதுகளின் செய்திகளை மினக்கட்டு வாசிச்சுக்கொண்டு கொஞ்ச சனம் வேற... :D

ம், இன்று எல்லோராலும் அதாவது அரசியல் வாதிகளாகட்டும் அல்லது ஊடகக்காரர்களாகட்டும் அல்லது புதிதாக உருவாகும் அமைப்புகளாகட்டும் தாங்கள் செல்லும் பாதையை நியாயப் படுத்துவதிற்காக பாவிக்கப்படும் தந்திரம் அல்லது கொள்கை என்னவென்றால் " தங்களது தற்போதைய தேவை, அல்லது அவசியம் சிறையில் இருக்கும் போராளிகளை விடுவித்தல், இடம்பெயர்ந்து இருக்கும் மக்களை மீளக்கூடியமர்த்துதல்" ஆகா என்ன கரிசனை!!! .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.