Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பள்சர்களில் பறக்கும் பன்னாடைகள்" ஸ்கூட்டிபப்புகளில் திரியும் குமரிகள்"

Featured Replies

2010-09-19 12:34:26 [views = 1112]

"அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை" அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது.

எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின் வீரப் போராட்டத்திற்கு உரம் போட்ட வெளிநாட்டு வாழ் தமிழச் சமூகம் தற்போது எமது இனத்தினை கலப்படப் பொருளாக்குவதற்கும் துணைபோக நிற்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

"பள்சர்களில் பறக்கும் பன்னாடைகள்" ஸ்கூட்டிபப்புகளில் திரியும் குமரிகள்" "கொழுத்தாடு பிடிக்கும் கோவில் நிர்வாகங்கள்" "பண்பை இழக்கும் பாடசாலைகள்" " குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையல் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது நிலை. இவற்றுக்கு எல்லாம் முக்கியமான காரணம் வெளிநாடு வாழ் உறவுகள். ஏன் எதற்கு என கேட்காது தனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் பணத்தினை தனது உறவும் உற்றாரும் ஊரும் நல்லா இருக்க அனுப்பும் பணம் இங்கே அவர்களை எவ்வாறு நாறடிக்கிறது என அவர்களுக்கு தெரியுமா?.

எடுத்திட்டாள் "ஸ்கூட்டிப்பப்" அடுத்தவீட்டு வம்மி, நீ உங்க இருந்து என்ன செய்யிறாய் தம்பி ,உன்ர தங்கச்சி அழுகிறாள் விம்மி, அதைச் சொல்லுறாள் ரெலிபோனில ஒரு கேடு கெட்ட மம்மி. தம்பி அங்க என்ன செய்யுறான் எவ்வளவு கஸ்டப்படுகிறான் என்று நினைக்காமல் தொடையிடுக்கினுள் வைச்சு ஓடுறதுக்கு அவளுக்கு வேணுமாம் ஒரு "ஸ்கூட்டி பப்" . ஏ.ஏல் ல பயோ படிச்சு மூன்று தடவையும் எடுத்து பெயலானவள் ஒரே தடவையில் "பாஸ் பண்ணி ஸ்கூட்டிபப்" ல "மெடிக்கல் பக்கல்டிக்கு" போற யுவதியைப் பார்த்து இப்படி கேக்குது. அண்ணனும் தன் பாசத்தை காட்ட அனுப்புகிறான் பணம். ஏறுகிறது அவளுக்கு தலைகனம்,மாறுகிறது அவளது குணம். அதற்கு பின் அவளுக்கு திருமணம் பார்பதென்றால் பள்சறில் பகட்டாய் திரிபவன்தான் வேணும் என்பாள். தனது தகுதிக்க மேல மாப்பிளை பார்க்க சொல்வாள். எல்லாவற்றக்கும் இருக்கிறார் ஒரு அண்ணா வெளிநாட்டில வெங்காயம் போல. என்ன கேட்டாலும் தலையாட்டி அனுப்புவதற்கு.

சிறுகச் சிறுக தேனி போல சேர்த்து சேமிப்பின் மறு வடிவமாய் இருந்த யாழ்குடாநாட்டு மக்கள் தற்போது கட்டுடைந்த குளத்து நீராய் தமது சேமிப்பை கரைப்பதைப் பார்த்து மனம் கொதிக்கிறது. "யாரொரு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்" .குளித்துக் கொண்டு இருக்கும் போதும் குமரிட கையில கான்போன் கிடக்குது என்று ஒரு பெரியவர் மனம் நோவது யாருக்கு புரியும். பக்கத்து வீட்டு பரிமளா அக்காவை பருப்பு அவியிதில்லை என்ன செய்யலாம் என்று கான்போனிலேயே கருத்து பரிமாறுகிற அவலம் நடக்கிது குடாநாட்டில். "குமரன் சேர்ட வகுப்புக்கு வந்த அந்த பெடியன் இங்கேயும் வாறானடி" என்று வகுப்பு நடக்கும் போதே போனில பேசுற மாணவிகள். உன்ரை ஆள் அங்க போறாளடா என்று போனிலேயே போட்டு வைக்கும் மாணவ மணிகள், கண்ட கண்ட படங்களை எல்லாம் கான்போனில வைச்சு காட்டும் அவலம் தற்போது எல்லா பாடசாலை மட்டத்திலும் பரவியிருக்கிறது. ஓடுற பைக்ல கெல்மட்டுக்குள் சொருகிக்கொண்டு பெரிதாக தனியே சிரித்தபடி கதைத்துக் கொண்டுபோய் கால்வாய்க்குள் குப்பற விழுற சம்பவங்களும் ஏராளம். அவன் ஒரு புது மொடல் ஐபோன் வைச்சுருக்கிறான் எனக்கும் அப்படி அனுப்பு மாமா என்று வெளிநாட்டில் இருப்பவரிடம் கேட்டு வாங்கிய போனை பொம்பிளை பிள்ளைகள் வந்தால் நீட்டிக் காட்டியபடி கதைப்பது இன்னொரு புறம். பரதேசிபோல திரிஞ்சவன் எல்லாம் பல்சார் வைத்திருக்கிறாங்கள் எனக்கும் வேண்டித்தா என்று ஒற்றைக்காலில் நிற்கும் குறைமாத குஞ்சு. இப்படி இன்னும் சொல்ல முடியாத ஏராளமான சீர்கேடு விடயங்கள் குடாநாட்டில் நடந்தவண்ணம் இருக்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் அடிப்படை யார்?? கேட்பதை எல்லாம் கொடுத்து கெடுக்கும் புண்ணியவான்கள் யார்?? இவர்களிடம் புரளும் பணத்துக்கு காரணம் யார்?? கேள்விகள் எல்லாவற்றுக்கும் சுட்டிக்காட்டும் ஒரே பதில் வெளிநாட்டு தமிழ் உறவுகள்தான். தான் இன்பமாக வாழா விட்டாலும் தன் இனம், உறவுகள் எல்லாம் சந்தோசமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு செய்யும் இவ்வாறன உதவிகள் குடாநாட்டு மக்களை சோம்பேறிகளாகவும் சோத்து மாடுகளாகவும் ஆக்கியிருப்பதை அறிவீர்களா? உங்களிடம் உதவி கேட்கும் உங்கள் குடாநாட்டு உறவுகள் உங்களை வெங்காயமாக்கி இங்கு தாங்களும் வெங்காயமாக மாறுவதை நீங்கள் அறியாது இருப்பது மேலும் இந் நிலையை மோசமடையச் செய்யும். உதாரணமாக முதலில் உங்கள் உறவுகளில்ஒருவர் வாகனத்தை வாங்குவதற்காக உங்களிடம் உதவி கோரும் போது அவர்களுக்கு வாகனம் செலுத்தும் ஆற்றல் இருக்கிறதா, லைசன்ஸ் இருக்கிறதா, குடிப்பவரா என்பவற்றை எல்லாம் யோசியுங்கள். இல்லாவிடின் உங்களது உதவியே அவனையும் தெருவில் செல்வோரையும் பலிக்கடாவாக்கிவிடும். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தற்போது சீதனம் கூடுதலாக அதிகரித்து வெளிநாட்டு உதவி இல்லாத கன்னிகளின் கண்ணீருக்கு இலக்காகி இருப்பதும் நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். "சயன்ஸ் கோணர் போய் படிக்கிறன் என்று சயந்தனோடு திரிந்து சீரழிய நினைக்கும் உங்கள் சகோதர உறவுகளை சற்று உங்கிருந்தே உறுக்கி

வையுங்கள்.

இணையத்தளத்தில் எல்லாம் எங்களுக்கு தெரியவரும் என்றாவது சொல்லி பயப்படுத்தி வையுங்கள். அன்மையில் யாழ் சுப்பிரமணிய பூங்காவில் இரு மாணவர்கள் கொஞ்சிக்குலாவும் காட்சிகள் கொண்ட தொகுப்பு வீடியோ தற்போது மாணவர்களின் கையடக்க தொலைபேசிகளில் திரிவதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அந்த இருவரில் ஒருவர் உங்கள் சொந்த உறவாகவும் இருக்கலாம். அந்தக் காட்சிகள் எமது கைகளில் இருக்கிறது. ஆனால் எமது காலாச்சரச் சீரழிவை நாம் ஒருபோதும் காட்டமாடடோம். எம்மினத்தை தற்போது ஆதிக்கம் செய்யும் ஒரு இனத்தால் எங்களின் கலாச்சார விழுமியத்தை கொத்திக் குதறி ஏப்பமிட்டுவரும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கைக்கு நாம் ஆளாகாமல் இருப்பதற்கு உங்களின் உறவுகளை திருத்தும் இவ்வாறான உதவியை குடாநாட்டு சமூக ஆவலர்கள் உங்களிடம் இருந்து பெறுவதற்கு வேண்டுகின்றார்கள். மேலும் இவ்வாறன தகவல்கள் வளரும்.

உங்கள் உறவுகளில் ஒருவன்

http://www.newjaffna.com/fullview.php?id=NDQ0&ref=nf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னால் நம்பமாட்டியள்.....

இண்டைக்கு விடியப்பறமும் ஒரு ரெலிபோன் ஊரிலையிருந்து வந்தது....

அது என்னவெண்டால்.....

அவசரமாய் பத்துலச்சம் வேணுமாம் ஏனெண்டு கேட்டால்??????

அதை வெளியிலை சொன்னால் என்ரை பல்லைகுத்தி நானே மணக்கிறதாய் முடியும்.

பத்துலச்சத்தை பத்துரூபாய் மாதிரி அங்கை இருக்கிறசனம் கணக்குபண்ணிக்கொண்டு திரியுதுகள்.

நாங்கள் இஞ்சை படுறபாடு கடவுளுக்குத்தான் தெரியும்.

இருட்டுக்குள்ளை ஆசையாய் மனிசியின்ரை கன்னத்திலை கையை வைக்க.....

இதென்ன கையோ இல்லை கருக்குமட்டையோ எண்டு கேக்கிற அளவுக்கு எங்கடை வாழ்க்கை போகுது. :lol:

யாழ் சென்று வரும் புலம் பெயர்ந்தவர்கள் இதை பார்த்துத்தான் வந்து அங்கே எல்லாம் நல்லாகவிருக்கிறது என்கிறார்கள்.புரிகிறது.இங்கே எங்கள் பிள்ளைகள் தறிகெட்டு திரிகிறது.இதோடு ஒப்பிடுகையில் எல்லாம் ஒரேமாதிரித்தான் தெரியும் தப்பில்லை!

சொன்னால் நம்பமாட்டியள்.....

இண்டைக்கு விடியப்பறமும் ஒரு ரெலிபோன் ஊரிலையிருந்து வந்தது....

...

நான் நம்புவன் கு.சா.அண்ணை. இஞ்சையும் அடிக்கடி வாறது. நித்திரைத் தூக்கத்தில் கண்ணைத் திறக்காமலே சரி என்று சொல்லிப் போட்டு வைசிகிறது, பிறகு வேலைக்குப் போகும் போது தான் ஊரில இருக்கிறவையளோட கதைச்சது கனவா நினைவா என்று யோசிக்கும் போது தன் வெளிச்சமாகும். அங்க இருக்கிறவையளும் நல்ல உசார்... கைத் தொலைபேசிக்கு எடுக்க மாட்டினம்.. வீட்டுத்தொலைபேசிக்குத் தான் எடுப்பினம். அதுவும் நாலாம் சாமத்தில... :D புத்திமதி சொல்ல வெளிக்கிட்டால், உறவு முறையை விட்டு பேர் சொல்லிக் கதைக்கிறார்கள்... என்னத்தை சொல்ல...??

ஒரு சதம் என்றாலும் அதை உழைச்சவனுக்குத் தான் பணத்தின் அருமை தெரியும்.

குடாநாடுமட்டும் மாறவில்லை உலகமே மாறிக் கொண்டுதான் இருக்கு.இருக்கும்.இதை அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத கட்டுரை.

கனடாவில் என்ன 10 வருடத்திற்கு முன் என்ன எல்லோரும் செல் போனோடையா திரிஞ்சவை இங்கும் இப்ப 9,10 படிக்கிறது பெடி,பெட்டைகள் முழுக்க போனும் ,தொங்கும் ஒரு பான்ஸ்சும் கடுக்கனுடனும் தான் திரிகின்றார்கள்.இது உலகம் முழுக்க வந்த மாற்றம்,குடாநாடு மட்டும் சதாமின் ஆட்சியில் இருக்க வேணும் என்று நினைக்கின்ற அந்த புண்ணியவான் யார்

கனடாவில் கூட பார்த்தேன். சம்மரில் அந்த மாதிரி குட்டையாக .உடை அணிந்து கொண்டுதான் பெரும்பான்மையான இளம் பெண்கள் திரிவார்கள் .இங்கு அது பொருட்டேயில்லை.எங்கட நிறத்தில் அப்படியாரும் உடையணிந்து சென்றால் எம்மவர் சிலருக்கு பொறுக்காது.பல வீடுகளில் இதனால் ஒரே சண்டை.

இவர்களெல்லாம் மாட்டுவண்டியில் இன்னமும் திரியவேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுக்குள்ளை ஆசையாய் மனிசியின்ரை கன்னத்திலை கையை வைக்க.....

இதென்ன கையோ இல்லை கருக்குமட்டையோ எண்டு கேக்கிற அளவுக்கு எங்கடை வாழ்க்கை போகுது. :D

நன்றி

நானும் இதற்குள் அடக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பமாட்டியள்.....

இண்டைக்கு விடியப்பறமும் ஒரு ரெலிபோன் ஊரிலையிருந்து வந்தது....

அது என்னவெண்டால்.....

அவசரமாய் பத்துலச்சம் வேணுமாம் ஏனெண்டு கேட்டால்??????

அதை வெளியிலை சொன்னால் என்ரை பல்லைகுத்தி நானே மணக்கிறதாய் முடியும்.

பத்துலச்சத்தை பத்துரூபாய் மாதிரி அங்கை இருக்கிறசனம் கணக்குபண்ணிக்கொண்டு திரியுதுகள்.

நாங்கள் இஞ்சை படுறபாடு கடவுளுக்குத்தான் தெரியும்.

இருட்டுக்குள்ளை ஆசையாய் மனிசியின்ரை கன்னத்திலை கையை வைக்க.....

இதென்ன கையோ இல்லை கருக்குமட்டையோ எண்டு கேக்கிற அளவுக்கு எங்கடை வாழ்க்கை போகுது. :D

கு.சா அண்ணா வீட்டுக்குவீடு வாசற்படி.... உண்மையில் வாழ்வு தொலைந்து போனவர்களில் புலம் பெயர்ந்த சமூகமும் அடங்கும். புலம் பெயர்ந்தவர்களில் அரைவாசிக்குமேல் சுதாகரித்து வாழத் தொடங்கியிருந்தாலும் மிகுதிப்பகுதியினர் தொலைந்த வாழ்வை எண்ணி, பிரிந்த உறவுகளையெண்ணி, மிக இளம் வயதிலேயே மன அழுத்தத்திற்கு உள்ளாகி பற்பல நிரந்தர நோய்களுக்கு உள்ளாகி மீள முடியாமல் தவிப்பது கணக்கெடுப்புகளுக்குள் வராது. :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடாநாடுமட்டும் மாறவில்லை உலகமே மாறிக் கொண்டுதான் இருக்கு.இருக்கும்.இதை அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத கட்டுரை.

கனடாவில் என்ன 10 வருடத்திற்கு முன் என்ன எல்லோரும் செல் போனோடையா திரிஞ்சவை இங்கும் இப்ப 9,10 படிக்கிறது பெடி,பெட்டைகள் முழுக்க போனும் ,தொங்கும் ஒரு பான்ஸ்சும் கடுக்கனுடனும் தான் திரிகின்றார்கள்.இது உலகம் முழுக்க வந்த மாற்றம்,குடாநாடு மட்டும் சதாமின் ஆட்சியில் இருக்க வேணும் என்று நினைக்கின்ற அந்த புண்ணியவான் யார்

கனடாவில் கூட பார்த்தேன். சம்மரில் அந்த மாதிரி குட்டையாக .உடை அணிந்து கொண்டுதான் பெரும்பான்மையான இளம் பெண்கள் திரிவார்கள் .இங்கு அது பொருட்டேயில்லை.எங்கட நிறத்தில் அப்படியாரும் உடையணிந்து சென்றால் எம்மவர் சிலருக்கு பொறுக்காது.பல வீடுகளில் இதனால் ஒரே சண்டை.

இவர்களெல்லாம் மாட்டுவண்டியில் இன்னமும் திரியவேண்டியவர்கள்.

அர்ஜுன் அண்ணா,

எழுந்தமானத்தில் கருத்துக்களை எழுதாமல் கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள் பிளீஸ். யாரும் யாழ்குடாநாடு அபிவிருத்தி அடையவேணும்,அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் என்று தான் எண்ணுகிறார்களே தவிர சீரழிந்து போவதையல்ல. இங்கு யாழ்ப்பாணத்து இளைஞர்,யுவதிகள் அரைகுறை ஆடைஅணியவேண்டாம்,சொல்போன் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை பாவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே! இவற்றின் மூலம் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காக சொல்கிறார்களே தவிர கெட்டு குட்டிச்சுவராகவல்ல.

குடாநாட்டில் அதிகரித்து வரும் சைபர்க்ரைம் தொடர்பான ஒரு பதிவாகவே பார்க்க வேண்டும். http://www.newjaffna.com/fullview.php?id=NDUy (இந்த இணைப்பை பார்க்கவும்)

கனடா,ஜரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டும் நீங்கள் அத்தகைய வளர்ந்த நாடுகளை விட ஆசிய நாடுகளில் தான் இணையம்,செல்போன் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பதும் அதிக ஆசிய நாட்டினர் தான் ஆபாசதளங்களை தேடுவது அதிகம் என்றும் புள்ளி விவரம் சொல்லுதே??

அடுத்து இப்படியான செயற்பாடுகள் மூலம் எமது அடுத்த சந்ததி ஆதரவற்றவர்களாகவும்,மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் உருவாகப்போகிறார்களே அது பற்றி யாரும் சிந்தித்தீர்களா????ஏற்கனவே போரின் காரண்மாக கணவன் தந்தையரை இழந்து பெண்களே குடும்ப பாரத்தை சுமக்கும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வு தேவையில்லையா??

கனடா,ஜரோப்பிய நாடுகளில் வேலை செய்யாதிருந்தும் அரசசெலவில் வாழமுடியும் ஆனால் எமது தாயகத்து நிலை என்ன?????

இல்லை இப்படியான சில சீர்கேடுகளை தடுக்க என்ன செய்யலாம் என்கிறீர்கள்?? ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவதை விடுத்து என்ன செய்யலாம் என்ற தீர்வையும் சொன்னால் ஆரோக்கியமாக இருக்கும்.

இது பற்றி எழுதவேண்டும் ஏனெனில் இங்கு சில பச்சைகள் குத்தப்பட்டள்ளன

இங்கு திரியின் நோக்கமென்ன...?

யாழில் நடப்பதை கிண்டலடிப்பதோ அல்லது எமக்கென்ன வெளியில் சுத்தமாக இருக்கின்றோம் என்றோ இத்திரி கொண்டுவரப்பட்டதா...???

இல்லை எம்மால் ஏதாவது செய்ய முடியுமா அல்லது நாமும் இதற்கு ஏதாவது ஒருவிதத்தில் காரணமா அதைத்தடுக்க எம்மால் ஏதாவது செய்யமுடியுமா என்று இத்திரி ஆரம்பிக்கப்பட்டதா...?

அப்படி கிண்டலடிப்பதாக அல்லது எம்மை சுத்தமானவர்கள் என்று சொல்லப்பட்டாலே தங்களது கருத்து சரி

மாறாக இரண்டாவது காரணமெனில் தங்கள் கருத்து தப்பு

தவறைத்திருத்த அல்லது குறையை நிவர்த்தி செய்ய முனைபவனிடம் நீ சுத்தமா என்று கேட்பது எப்படி நியாயமாகும்..???

நீங்கள் சுமத்திய அதே அசுத்தங்கள் ஊரிலும் நடந்துள்ளன என்று சொல்ல என்னிடமும் ஆதாரம் உண்டு

ஆனால் அது என்னுடைய நோக்கத்தை கெடுத்துவிடும்.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=40&t=75178&qpid=609440

  • தொடங்கியவர்

அர்ஜுன், தான் உழைத்த காசைத் தானே செலவழிப்பது வேறு, அடுத்தவன் இரவு எது பகல் எது என்று தெரியாமல் ஓடி ஒடி உழைத்ததை வாங்கி மனச் சாட்சி இல்லாமல் 'விசிறித்' திரிவது வேறு.

நீ உழைத்த காசில் நீயே 'helicopter " வாங்கி ஓடினால் நான் கேட்க முடியாது!

(இங்கு நான் நீ என்று குறிப்பிடுது ஒரு பொதுக்குறி)

Edited by கறுவல்

79 பேருடன் கப்பலில் வந்தவர் என்னுடன் பேசும் போது உதைத்தான் சொன்னார் தான் அண்ணாமார் அனுப்பிய காசில் சுத்தியடிச்சாராம் இப்ப இங்கு வந்து இன்னமும் பேப்பர் கிடைக்கவில்லை இரு தமிழ் கடைகளில் விடாது வேலை.அண்ணைமாருக்கு கட்டிய காசு கொடுக்க வேணுமாம்..

ஸ்கூட்டியில் சும்மா பொறுப்பில்லாமல் சுத்தியடிக்கும் அவர்களும் நாளை இங்கு வந்தால் தும்புதான்.

இந்துமதியின்" தரையில் இறங்கும் விமானங்கள்" வாசிக்கவும். இவைகளுக்கு பதில் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.