Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் இந்தியா இப்போது முழு அளவில் தந்திரோபாயம் வகுப்பது அவசியம்

Featured Replies

ராஜபக்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் 27 பத்திரிகை தெரிவித்திருக்கிறது."ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

ஜனாதிபதியின் இரு தடவை பதவிக்கால வரையறையை அகற்றும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றி மற்றும் முன்னாள்

இராணுவத் தளபதியும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவருமான சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் குற்றவாளியென்ற தீர்ப்பு ஆகியவை இலங்கையானது எதேச்சதிகார ஆட்சியின் சில வடிவத்துக்கு மெதுவாக நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற மிகவும் குழப்பகரமான விடயமாக காணப்படுகிறது.

பழிவாங்குதல் குற்றச்சாட்டுகள் பொன்சேகாவின் விசாரணையின் வெளிப்படைத்தன்மையற்ற தன்மையும் இலங்கையிலுள்ள பொதுவான நிலைவரமும் உண்மையில் விடயங்களில் மிகவும் கருமையான நிழல்களை கொண்டுள்ளவையாகவுள்ளன. பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக தற்போது காத்திருக்கிறது. தேசத்தின் தலைவர் என்ற ரீதியில் ராஜபக்ஷ தீர்மானிப்பதும் மன்னிப்பு வழங்குவதும் இப்போதும் சாத்தியமான விடயமாகும்.

ஆனால், ராஜபக்ஷவும் அவரின் குடும்பமும் இப்போது கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகாரத்தை பிரயோகிக்கின்றது என்ற உண்மையை மறைக்க முடியாது. அவர் விரும்பினால் பல தடவைகள் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு ராஜபக்ஷவுக்கு 18 ஆவது திருத்தம் இடமளிக்கிறது. முக்கியமான பதவிகளில் அவர் எவரை விரும்புகிறாரோ அவரை நியமிக்கும் அதிகாரத்தையும் வழங்குவதாக 18 ஆவது திருத்தம் உள்ளது.

ஜனாதிபதி ஏற்கனவே படைகளின் பிரதம தளபதியாக பாதுகாப்பு,நிதி,திட்டமிடல்,துறைமுக,விமானசேவை அமைச்சராக இருக்கிறார். 8090 நிறுவனங்களுக்கு நேரடியான பொறுப்புகளைக் கொண்டவராகவும் உள்ளார். கரையோரக் காவல்படை,பொலிஸ்,புலனாய்வு, குடிவரவு,வனபரிபாலனம், பாராளுமன்ற சபாநாயகர் பதவி ஆகிய சகலவற்றினதும் கட்டுப்பாடு ஜனாதிபதியின் மூன்று சகோதரர்களிடம் உள்ளது. அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் இந்தளவிலான கட்டுப்பாட்டை ஒரு குடும்பம் கொண்டிருப்பது பீதியுணர்வை ஏற்படுத்துவதாகும். இந்தச் சகல அதிகாரங்களையும் ஒன்று சேர்க்கும் சிறப்புரிமைகளை ராஜபக்ஷ வைத்திருப்பதாகத் தென்படுவது நிலைமையை மோசமானதாக உருவாக்குகிறது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்குத் தேவைப்படுகின்ற முக்கியமான மறுசீரமைப்புகள் தொடர்பான நடவடிக்கை விடயத்தில் இந்தச் சகல அதிகாரங்களையும் ஒன்று சேர்க்கும் சிறப்புரிமையை ராஜபக்ஷ கொண்டிருப்பது நிலைமையை மோசமானதாக உருவாக்குகிறதாகத் தென்படுகிறது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின்போதும் அதனைத் தொடர்ந்தும் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான உறுதிமொழி திரும்பத் திரும்ப வழங்கப்பட்டது.எதிரணி பிளவுபடுத்தப்பட்டதாகவும் குழம்பிப்போயிருப்பதும் அவசரகாலநிலை தொடர்வதும் பத்திரிகைகளை கருத்துத் தெரிவிக்கவிடாமல் தடுப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளும் சர்வாதிகார ஆட்சியென்ற அச்சம் மறக்கப்பட்டுவிடக் கூடியதல்லவென்று தென்படுகிறது.

ராஜபக்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களைக் கையாள்வதற்கு இந்தியா இப்போது முழுஅளவிலான தந்திரோபாயத்øத் வகுத்துக்கொள்வது அவசியமாகும். தமிழர்களுக்கான அரசியல்தீர்வுப் பொதி உட்பட அடிப்படையான ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நோக்கங்களை மனதில் கொண்டதான தந்திரோபாயத்தை தனது பங்கிற்கு இந்தியா இப்போது வகுத்துக்கொள்வது அவசியம்.

[ தினக்குரல் ] - [ Sep 22, 2010 04:00 GMT ]

http://economictimes.indiatimes.com/opinion/editorial/Island-of-Rajapaksas/articleshow/6596577.cms

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத் திட்டம் தொடர்பாக ஆராய இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர்

யாழ்ப்பாணம், செப்.22

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளனர்.

கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள், ஐ.ஒ.எம். நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரே வருகைதரவுள்ளனர். மேலும் உலக வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப் பட்ட வீட்டுத்திட்டத் தில் பங்கேற்ற அனு பவம் வாய்ந்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இக்கலந்துரையாடலின்போது இந்திய அரசின் வீட்டுத்திட்டம் தொடர்பாக திரட்டப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் அவர்களிடம் கையளிக்கப்படும். மேலும் வீடுகள் நிர்மாணிக்கத் தேவையான வளங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும்.

இந்தியக்குழுவினர் காரைநகர், யாழ்ப் பாணம், மருதங்கேணி ஆகிய இடங்களுக் குச் சென்று நேரடியாகக் களநிலைமைகளை நாளை ஆராயவுள்ளனர். அதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட் டத்துக்கும்அவர்கள் செல்வார்கள் என்றும் தெரியவருகின்றது.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3962&Uthayan1285153438

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ.. வாங்கோ... ஏற்கனெவெ கட்டிய வீட்டுக்கு முத்து காளை போன்று... குதிரைய காட்ட போறான் சிங்களன்...

http://www.youtube.com/watch?v=_nuMthWzmk4

சார்லி போன்று சிங்களனிடம் உதை வாங்காமல்... சமர்த்தா பிரியாணியை சாப்பிட்டமா...

MGR%201703%20Old%20Cask%20Selection%202.jpg

fried-Chicken-Kebab-kabab.jpg

கட்டிங்கு சரக்கை அடிச்சமா... அனைத்தும் நன்றாக உள்ளது என அறிக்கை விட்டு ஊரான் வீட்டு காசை மேலும் இனாமா குடுத்தமா ....வீடு வந்து சேர்ந்தமா ...என்று இருக்கணும் :)

  • கருத்துக்கள உறவுகள்

தந்ரோபாயாமா????

அந்த ஆசை வேற இருக்கா? ரொம்ப புதுசா இருக்கு....

இந்திராகாந்தியின் கடின போக்கிற்கு அடிகொடுப்பதற்கு முன்பே சிங்கு போட்டுதள்ளிட்டான் என்று சிங்களவன் யோசிச்சு கொண்டிருக்க...

அமைதி தீர்வு என்று மகன் ராஜீவு வந்து இறங்கினார் தாயின் கோபத்தை மகனில் காட்ட உச்சி மண்டையில் போட்டே ஒன்றும் புதிதாக சிந்திக்க தெரியவில்லை.

இப்போ சீனாவும் பாகிஸ்தானும் காவல் நாய்கள்போல வாசலில் நிற்கும்போது தந்திரோபாய சிந்தனை?

ஏதோ நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும். எதையாவது எழுதி ஒரு அறிக்கையை விடுறதுதானே...

தந்ரோபாயாமா????

அந்த ஆசை வேற இருக்கா? ரொம்ப புதுசா இருக்கு....

எமக்கு சாவென்ன? வாழ்வும்? ... அது இந்திய தேசத்தின் கைகளிலேயே!!!! ... அந்த மாற்றம் வரும் என்ற கனவு! ... அது இந்த சோனியா குடும்ப ஆட்சியில் ஏற்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு கிந்தி புரியாது என்பதால் டிரெண்டு மாற்றபட்டு..... தமிழில் இந்த பாடல் ஒலிக்கவிடபடுது ...

காலை மாலை தினசரி மூன்று வேளை ...இந்த பாடல்கேட்கும் இந்திய கூட்டமைப்பு விசுவாசிகள் ... முழு இந்தியனாக மாறி போடலாம்...

bharath-matha.jpg

பாரத மாதாவின் அருள் கிடைக்க வாய்ப்புள்ளது...

0002031F.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சிலருக்கு கிந்தி புரியாது என்பதால் டிரெண்டு மாற்றபட்டு..... தமிழில் இந்த பாடல் ஒலிக்கவிடபடுது ...

காலை மாலை தினசரி மூன்று வேளை ...இந்த பாடல்கேட்கும் இந்திய கூட்டமைப்பு விசுவாசிகள் ... முழு இந்தியனாக மாறி போடலாம்...

bharath-matha.jpg

பாரத மாதாவின் அருள் கிடைக்க வாய்ப்புள்ளது...

0002031F.gif

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.