Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் தமிழர்க்கு எதனையுமே தரமாட்டாது; சர்வதேசம் உணரதொடங்குகின்றதா?

Featured Replies

வியாழக்கிழமை, செப்டம்பர் 30, 2010

தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், இனப் பிரச்சினைக்கான தீர்வைச் சாத்தியமற்றதாக்கி வருகின்றன என அரசியல் அவதானிகளும் கல்வியியலாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்டதை அடுத்து சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தேவையற்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட கருத்துக் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கவலை வெளியிட்டனர்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு கட்சி எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் மற்றைய கட்சி எதிர்ப்பதே வழமையானது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதியை ஐ.தே.கவினர் நாடாளுமன்றத்தில் எரித்தனர். பின்னர் ரணில் புலிகள் சமாதான உடன்படிக்கையை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரத்துச் செய்தார்.

தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து தப்பிக் கொள்வதற்கும், சிங்கள மக்களின் உணர்வுகளைத் தமிழர்களுக்கு எதிராகக் கிளறிவிட்டு அதில் தமக்கு ஆதாயம் தேடிக் கொள்வதற்கும் கடந்த காலங்களில் சிங்களக் கட்சிகள் இதேபோக்கையே தொடர்ந்து கடைப்பிடித்தன என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உறுதியான, கவர்ச்சிகரமான தலைமை ஒன்று இல்லாது திண்டாடும் ஐ.தே.க. இப்போது தனது பழைய உத்தியை மீண்டும் கையில் எடுத்துள்ளது. உலக நாடுகள் அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி மகிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் இந்தச் வேளையில் அதற்கு எதிரான முடிவை எடுத்து ஜனாதிபதிக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலம் கடும்போக்குச் சிங்களவர்களின் ஆதரவைத் தமது பக்கம் திருப்பிக்கொள்ள நினைக்கிறது ஐக்கிய தேசிய கட்சி.

உலக நாடுகளின் நெருக்கடி இருந்த போதும் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய அரசு நாட்டம் காட்டவில்லை. இதனாலேயே 18ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டிய அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இழுத்தடித்து வருகின்றது'' என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டினர்.

பிரதான சிங்களக் கட்சிகளின் இந்தப் போக்கால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் மிக மிக அருகி வருகின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பயங்கரவாதமும் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாததும்தான் காரணங்கள் என்று இலங்கை அரசுகள் கூறி வந்தன.

இப்போது அந்த இரண்டு காரணங்களும் களையப்பட்டிருப்பதால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதைவிட வேறு சரியான சந்தர்ப்பம் கிடைக்காது ஆனால் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் இப்போ தமிழர்களுக்கு தீர்வு வழங்குதல் பற்றி எதுவும் சிந்திப்பதில்லை.

தமிழர்களின் பலம் அளிக்கப்பட்டால் சிங்களம் இதனைத்தான் செய்யும் என்பது விடுதலைப்புலிகளுக்கும் ஏன் தமிழர்களுக்கும் தெரியும் அதனால்தான் ஆயுதப்போராட்டத்திற்கு அதியுச்ச விலைகளை தமிழர்கள் கொடுத்து வந்தனர்.

My link

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அரசியல் அவதானிகளும், கல்வியாளர்களும்? :lol: பெயர்களைச் சொன்னால் நாங்களும் தெரிஞ்சுகொள்வம் அல்லோ..! :o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தமிழர்க்கு எதனையுமே தரமாட்டாது; சர்வதேசம் உணரதொடங்குகின்றதா?

கள்ளப்பயலுகள் உணர்ந்து என்ன பலன்???

எம்மவரே சிங்களவன் ஏதாவது தருவான் என போய் மண்டியிட்டு கிடக்கிறார்கள்?.இதற்குள் சர்வதேசம் உணர்கிறதாம்.பாங்கி மூனும் மகிந்தவும் விளையாடும் கீச்சு மாச்சு தம்பலம் எல்லோருக்கும் தெரியுமே?

சிங்களம் தமிழர்க்கு, எதையும் கொடுக்காது என்பது சர்வதேசத்திற்கு தெரியும்.

சிங்களம் தமிழர்க்கு எதையுமே தராது என, புதிய தமிழர் தலைமைகள்தான் உணரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.