Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயோத்தி....அயோத்தி.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி....அயோத்தி.....

அயோத்தி பிரச்சனை என்பது பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம்.

ஏன்னென்றால் இவ் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு முதல் இடம் பெற்ற ஒன்றாகும்.இவ் பிரச்சனை எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்

அயோத்தி சிக்கல் என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சனையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில்உள்ளது. இந்த இடம் இந்து மத கடவுளான இராமர் பிறந்த இடமென்றும் இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் இந்துத்வ அமைப்புகள் நம்புகிறார்கள்.

இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. 1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின.

இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தப்பட்டது. 1989ல் அலஹாபாத் நீதி மன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின.

மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்வ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன.

இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993 ல் இந்திய அரசு சர்ச்சைக்குறிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக உத்தர் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.அதன் தீர்ப்பு இன்று மாலை வெளியீடப்பட்டது. அதன் விபரம் கீழே.....

இந்த வழக்கில் 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். மேலும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பில் நிலம் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு!

அயோத்தி நில விவகாரத்தில் நீதிபதிகள் 3 பேரும் தனித்தனியே தீர்ப்பு வழங்கினர். நிலத்தை பிரித்து இரு தரப்புக்கும் வழங்க 2 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நிலத்தில் கோவில் கட்ட அனுமதிக்க 1 நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு நிலம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும்- என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி மத்திய வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாரா அமைப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், மீதமுள்ள இடத்தை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும்.

தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யலாம்

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்படும். மூன்றில் மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி இந்து மகா சபைக்கு தரப்பட வேண்டும்.

தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு பலத்த பாதுகாப்பு:

தீர்ப்பு அளித்த 3 நீதிபதிகள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று அயோத்தி தீர்ப்பை அளித்தது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், செய்தி சேகரிக்க குவியும் பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தி தீர்ப்பை வழங்கும் நீதிபதி டி.வி.சர்மா இன்றுடன் ஓய்வு:

அயோத்தி நில விவகார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையி்ன் 3 நீதிபதிகள்(டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான்) அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. நீதிபதி டி.வி.சர்மா பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில் நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

http://dilleepworld.blogspot.com/2010/09/blog-post_1519.html#more

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரமடைந்து..... பாகிஸ்தானும் முஸ்லீம் நாடு என்று பிரிந்தவுடன், இந்தியாவை இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டும்.

அதனை செய்யத் தவறியாதால் இப்போ பொந்து நாடாய்ப் போச்சுது. வாறவன் போறவன் எல்லாம் வழக்கு வைச்சுக் கொண்டிருக்கிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒசாமா பின்லாடன் அமெரிக்காவுக்கு பதிலாய் இந்தியாவிலை கைவைச்சிருந்தால் கனவிசயம் கனபேருக்கு சுகமாய் முடிஞ்சிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரமடைந்து..... பாகிஸ்தானும் முஸ்லீம் நாடு என்று பிரிந்தவுடன், இந்தியாவை இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டும்.

அதனை செய்யத் தவறியாதால் இப்போ பொந்து நாடாய்ப் போச்சுது. வாறவன் போறவன் எல்லாம் வழக்கு வைச்சுக் கொண்டிருக்கிறான்.

இத்தனை சொறிகள் இருந்தும் இத்தனை திமிர் எடுத்து அலையும் இந்தி யர்கள் எந்த பிடுங்கலும் இல்லையென்றால்.............???

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.