Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி

காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள ராணுவம் பல அறைகளைக் கொண்ட உல்லாச விடுதியொன்றை அண்மையில் தனது யாழ் மாவட்டத் தளபதியின் மூலம் திறந்து வைத்துள்ளது. 9 அதிவிசேட ஆடம்பர அறைகளையும் 22 சாதாரண ஆடம்பர அறைகளையும் கொண்ட இந்த விடுதியில் தங்குவோர் நியாய கட்டணத்தில் இதன் வசதிகளை அனுபவிக்க முடியும் என்று இலங்கை ராணுவத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.

இதே பகுதியிலிருந்து அக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தாங்கள் மீளக்குடியேறுவதற்காக விடுத்த வேண்டுகோளை இரு தினங்களுக்கு முன்னர் பொய்க்காரணங்களைக் காட்டி தனது புறங்கையால் தட்டிவிட்ட சிங்கள ராணுவத் தளபதி இந்த ஆடம்பர விடுதியைத் திறந்து வைத்து தெற்குச் சிங்களவர்களை அழைத்திருப்பது இன்னும் விசேஷம்.

"தல் செவன" எனும் தனிச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சிங்களச் சொர்க்கத்தை அவசர அவசரமாகக் கட்டுவதற்கு சிங்கள அரசுக்கு மேலதிகமாகப் பணமிருக்கிறது, அதைவிடவும் அவர்களுக்குப் போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுப்பதற்கும் நாடுகளிருக்கிறது, ஆனால் வன்னிப் போரில் வீடு வாசல்களை இழந்து இன்றுவரை மர நிழல்களிலும், தகரக் கொட்டகைகளிலும் அல்லப்படும் எம் மக்களின் வாழ்வை மேம்படுத்தத்தான் பணமில்லை.சிங்களத்தின் இனவழிப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கும் இந்தியா , சீனா முதலான நாடுகள் சிங்களத்தின் இவ்வாறான "கவர்ச்சிகர முதலீடுகளுக்குத்தான்" ஆர்வம் காட்டுகின்றனவே ஒழிய தமிழர் நலனில் ஒரு துளியேனும் அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் கூட தாயகத் தமிழனின் வாழ்வு மேம்பட வேண்டுமென்றால் புலத்தில் உள்ளவர்கள் தான் அதைச் செய்ய வேண்டும், சிங்களத்திடம் பணமில்லை என்று வக்காலத்து வாங்குவதுடன், அவ்வாறு புலத்திலிருந்து கிடைக்கும் பணம் கூட சிங்களத்தினூடாகவே வரவேண்டும் என்கிற அன்புக் கட்டளையையும் இடுகின்றன.

kks1.jpg

kks2.jpg

kks3.jpg

செய்தியும், படங்களும் தமிழ்நெட்டிலிருந்து

Edited by ragunathan

  • Replies 62
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிகாமம் பகுதியில் மக்கள் குடியேறுவதை அனுமதிக்க முடியாதென சிங்கள ஆக்கிரமிப்புப் பேய்களின் தளபதி நேற்று விடுத்த அறிவிப்பு.....

Resettlement in Valikaamam North HSZ not possible – Jaffna SLA Commander

[TamilNet, Monday, 04 October 2010, 07:12 GMT]

Sri Lanka Army (SLA) Commander, Major Gen. Mahinda Kathurusinghe, who had earlier admitted the possibility of resettling uprooted families in Valikaamam North SLA High Security Zone, however, said that resettlement is not possible due to the danger of landmines. He told the representatives of the Committee for Peace and Goodwill so in a meeting held in Jaffna Bishop House Sunday, presided by Bishop Rt. Rev. Thomas Saundaranayagam. Meanwhile, the Coordinating Committee for De-mining in Jaffna Secretariat said that SLA had not permitted de-mining in its HSZ in Valikaamam North. Mahinda Kathursinghe’s announcement has caused shock and despair among the families uprooted by SLA from their properties in Valikaamam North, sources in Jaffna said.

Prof. Pon Balasundarampillai, former VC of Jaffna University and S. Paramanathan representing the Welfare Association for Uprooted Persons were among the participants in the meeting.

Meanwhile, responding to questions raised as to why only Sinhala pilgrims are permitted to use Tho’ndaimaanaa’ru-Chelvachchannithi road while local people are not allowed Mahinda Kathurusinghe said that he will soon make transport arrangements for the local people to travel along the said road.

Sinhala Buddhist pilgrims from South are allowed by SLA to use the road on their way to Keerimalai and Maathakal.

SLA had opened the road for a few days for public use during the Chelvachchanithi temple festival but had again blocked it for local people.

உங்கள் செய்தியை பார்த்தபின் defence.lk, army.lk ஆகிய தளங்களிற்கு சென்று மேற்கண்ட செய்திகளை பார்த்தேன்.

defence.lk இல் புனருத்தாரணம் செய்யப்பட்ட என்றுதான் கூறப்பட்டுள்ளது, புதிதாக அமைக்கப்பட்ட உல்லாசவிடுதி என்று எழுதப்படவில்லை:

The renovated Army Holiday Resort "Thal Sevana" at Kankasanthurai will be declared open by the Commander of the Army Lt. Gen Jagath Jayasuriya tomorrow, 02 October 2010.

காங்கேசன்துறையில் Harbor View Hotel என்று ஓர் உல்லாச விடுதி காணப்பட்டது. நாம் அங்கு வாழ்ந்த காலத்தில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளேன். இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குறிப்பிட்ட விடுதி மிகக்கேவலமாக காணப்பட்டது. மலசலகூடங்களினுள் திரவங்கள் நிரப்பிய ஏதோ பழைய போத்தல்களையெல்லாம் சொருகி இருந்தார்கள். நாங்கள் குண்டாக இருக்குமோ என்கின்ற பயத்தில் அருகாக சென்று தொட்டுப்பார்க்க இல்லை. இந்த உல்லாசவிடுதி காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகாக உள்ளது. சேதம் அடைந்தது தவிர…விடுதியின் கட்டட அமைப்பு பிரமாண்டமாக மிக அழகாக காணப்பட்டது. அதன் அமைவிடமும் கடலிற்கருகாக அமைந்து அழகிய தோற்றத்தை தந்தது. விடுதியில் வெவ்வேறு கோணங்களில் அழகிய பார்வையை - Views பெறக்கூடியதாக இருந்தது. மேற்கண்ட விடுதியைத்தான் இங்கு மீள்வடிவாக்கம் செய்துள்ளார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது.

காங்கேசன்துறையில் மிக ஆரம்பத்திலேயே பிரச்சனைகள் தொடங்கிவிட்டதால் நாங்கள் சிறுவயதில் அங்கு வாழ்ந்திருந்தாலும்.. குறிப்பிட்ட விடுதி தவிர வேறு உல்லாசவிடுதிகள் அங்கு காணப்பட்டதாக தெரியவில்லை.

காங்கேசன்துறைக்கு ஊரவர்கள் தற்போது சென்று வாழமுடியாது என்று கூறப்படுகின்றது. ஆனால்… காணி உறுதியைக்காட்டினால் அங்கு சென்று வீடுகளை பார்வையிட அனுமதிப்பதாக சொல்கின்றார்கள். எமக்கு அறிந்தவர்கள் அங்கு சென்று வீட்டை பார்த்து வந்தார்கள். இடம், வலம் தெரியாதபடி எல்லாம் ஒரே பற்றைக்காடாக காணப்படுவதாய் சொன்னார்கள். தென்னைகள், பனைகள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். பெரும்பாலான வீடுகள் கூரையில் ஒன்றும் இல்லாமல் வெற்றுச்சுவர்களுடனும், கதவுகள், யன்னல்கள் இன்றி காணப்பட்டாலும் சில வீடுகள் எதுவித சேதமும் இன்றி அப்படியே உள்ளதாகவும் சொன்னார்கள். இன்னமும் சுமார் ஒன்று அரை வருடத்தினுள் அங்கு மீண்டும் அங்கு மக்களை குடியேற அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உல்லாசவிடுதி என்று பார்த்தால்… கிளிநொச்சியிலும் இவை முன்பு காணப்பட்டதாக சொன்னார்களே...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நல்லது கரும்பு. சிங்களவர்கள் தமிழர்கள் மேல் மிகவும் அக்கறையாக உள்ளார்கள், இப்போது திருப்திதானே??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாகக் கட்டப்பட்டதென்றுதான் இருக்கிறது, அது பழைய காபர் வியூ விடுதியென்று எங்கும் சொல்லப்படவில்லை. என்றாலும், உங்கள் ஆதங்கம் புரிகிறது. சிங்களவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை மிகவும் கஷ்ட்டப்பட்டு நிறுவ முற்படுகிறீர்கள், வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்காக நீங்கள் இணைத்த இணையத்தளத்திலிருந்து சில வரிகள்........

Commander of the Army Declares Open ‘Thalsevana’, the Luxurious Holiday Resort in Jaffna

[updated :: 2010-10-04 18:40:36 Hours || Home][Email to a Friend]

Hours after the Commander of the Army Lieutenant General Jagath Jayasuriya inaugurated the count down to the 10 day long commemoration ceremonies in connection with the Army’s 61st Anniversary and Army Day (10th October) at Anuradhapura Jaya Sri Maha Bodhi, the Commander of the Army declared open the newly constructed ‘Thal Sewana’ Holiday Resort at Kankasanthurai in Jaffna Saturday (2) evening..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

thalsevanajfn1.jpg

[

thalsevana3.jpg

thalsevanajfn2.jpg

thalsevanajfn6.jpg

thalsevanajfn1.jpg

[

thalsevana3.jpg

thalsevanajfn2.jpg

கரும்பு ,

இது உங்களுக்காக மட்டும்....

Commander of the Army Declares Open ‘Thalsevana’, the Luxurious Holiday Resort in Jaffna

[updated :: 2010-10-04 18:40:36 Hours || Home][Email to a Friend]

Hours after the Commander of the Army Lieutenant General Jagath Jayasuriya inaugurated the count down to the 10 day long commemoration ceremonies in connection with the Army’s 61st Anniversary and Army Day (10th October) at Anuradhapura Jaya Sri Maha Bodhi, the Commander of the Army declared open the newly constructed ‘Thal Sewana’ Holiday Resort at Kankasanthurai in Jaffna Saturday (2) evening.

Lieutenant General Jagath Jayasuriya received a drive past Guard Turnout as he enters the headquarters complex of the Security Forces Jaffna (SF HQ – J) a few minutes before he was received by the Commander Security Forces Jaffna Major General Mahinda Hathurusinghe. Later on he unveiled the plaque on the newly constructed Holiday Resort and declared it open for the public.

Minutes after the opening he planted a tree sapling in the complex as a token of memory to his visit to the place.

Thalsevana Holiday Resort the second resort type hotel to be owned and managed by the Army is the first of its kind in the whole Jaffna peninsular. Newly opened 31 roomed beach resort located along the picturesque northern coastline offers its visitors the opportunity of experiencing the luxurious comforts at very reasonable rates and caters to the general public as well. Any visitor to Jaffna will also have the privilege of having a prior reservation of its 9 luxury rooms and 22 semi-luxury rooms through the telephone numbers 021-2225245 (Staff Officer SF HQ – J) or 021-3219777 (Thalsevana).

ரகுநாதன் நீங்கள் என்னை கோபித்து என்ன பயன்? நீங்கள் இப்படியொரு செய்தியை இணைத்தபின்னர் அதுபற்றி நானும் தேடல் செய்து எனக்கு தெரிந்தவற்றை கூறினேன். defence.lk இல் புனருத்தாரணம் செய்யப்பட்ட உல்லாசவிடுதியென்றே எழுதப்பட்டுள்ளது. army.lk இல் புதிய விடுதி என்று எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு இது புனருத்தாரணம் செய்ததாக இருக்கக்கூடாது புதியதாக இருக்கவேண்டும் அப்போதுதான் போட்டுத்தாக்கலாம் என்று நினைத்தால் army.lk இன் தகவலையே துல்லியமானதாக கொள்ளலாம்.

இங்கு நகைச்சுவை என்ன என்றால் தமிநெட்காரர் army.lk இனுள் படுத்துகிடந்து செய்தி பொறுக்குவதுதான். நீங்கள் எனக்கு எழுதும் பதில் கருத்தை பார்த்தால்... தமிழ்நெட் கூறும் எவற்றுக்கும் நாம் பொத்திக்கொண்டு தலையாட்டவேண்டும் என்பதுபோல் உள்ளது. இதற்கு ஓர் வழி உள்ளது... யாழில் மோகனிடம் கேட்டு... தமிழ்நெட் செய்திகளிற்கு பதில் கருத்து எழுதமுடியாதபடி குறிப்பிட்ட திரிகளை பூட்டுபோட்டு மூடுமாறு பிரேரணை செய்யுங்கள்.

Harbor View Hotel இன் மீள்வடிவாக்கமே குறிப்பிட்ட புதிய விடுதி என்பது எனது ஊகமே. இது தவறான ஊகமாக இருக்கலாம். ஏன் என்றால்... காங்கேசன்துறையில் காலங்காலமாக குறிப்பிட்ட விடுதி இராணுவ முகாமாக காணப்பட்டது. எனவே, தொடர்ந்தும் இது இராணுவ முகாமாக விளங்க சாத்தியம் உள்ளது. தவிர, புகைப்படத்தை பார்த்தபோது... Harbor View Hotelஇன் தோற்றமாக மட்டுக்கட்ட முடியவில்லை.

இங்கு குறிப்பிட்ட இந்தவிடுதி புதியதாகவோ பழையதாகவோ இருப்பதில் எனக்கு ஏதும் பிரச்சனை இல்லை. நீங்கள் கூறுவதுபோல் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. இங்கு கருத்துக்களை விவாதம் செய்கின்றோம்.. அவற்றின் உண்மைத்தன்மையினை ஆராய்கின்றோம். அவ்வளவுதான். இங்கு நாங்கள் தமிழ்நெட் போல் அரசியல் நடாத்தவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ இல்லை.

Edited by கரும்பு

ஆமா கரும்பாரே, இந்த உல்லாசவிடுதி யாழ் மக்களுக்காகவா மீள் புனரமைக்கப்பட்டுள்ளது??????????? ... சிலவேளை உங்கள் தேடலில் ... ஆண்டாண்டு காலமாக அப்பகுதிகளிலேயே வாழ்ந்த மக்கள், விரட்டி அடித்து துரத்தப்பட்டுசிங்கள பாதுகாப்புவலயமாக மாற்றப்பட்டதனால். உண்டான உளைச்சல்களுக்கு, சிங்கள இராணுவம் சொகுசு உல்லாச விடுதியை புணரமைத்து, அங்கு வாழ விடப்போகிறது ... என்ற விடை கிடைக்கக்கூடும்!!!!!????????

Edited by Nellaiyan

உங்கள் ஒவ்வொருத்தரின் கடுப்புக்கு என்னிடம் பதில் இல்லை. ஒருவர் என்னடா என்று பார்த்தால் நான் சிங்களவரை நல்லவர்கள் என்று சொல்கிறனாம். மற்றவர் என்னடா என்று பார்த்தால் எனது தேடல்களுக்கு உல்லாசவிடுதியில் ஏதோ விடைக்கப்போகிதாம் என்று சொல்லுறார். என்னுடன் முட்டுப்படுவதை விட்டு வந்துள்ள செய்திக்கு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். கருத்துக்களிற்கு பதில் கூறமுடியாத உங்கள் இயலாமைகளிற்கு நம்முடன் வந்து முட்டிக்கொள்ள வேண்டாம்.

மக்கள் விரட்டியடித்து துரத்தப்பட்டார்கள்? நான் 1990களில் காங்கேசன்துறையில் இருந்து இடம்பெயர்ந்தவன். நடந்த சம்பவங்கள் எவை என்பதை நாம் நேரில் பார்த்தவர்கள். நீங்கள் எமக்கு வரலாறு சொல்லித்தர தேவையில்லை.

வன்னியில் த.வி.புவின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட உல்லாசவிடுதிகளில் அகதிகளையா தங்கவைத்திருந்தார்கள்?

Edited by கரும்பு

வன்னியில் த.வி.புவின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட உல்லாசவிடுதிகளில் அகதிகளையா தங்கவைத்திருந்தார்கள்?

கரும்பாரே, வன்னியில் எங்கு/எத்தனை உல்லாச விடுதிகல் கட்டப்பட்டது? ஆமா, அப்படி கட்டப்பட்டிருந்தாலும், சனங்களை வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டி விட்ட கட்டினார்கள்?

சனங்கள் விரட்டப்பட்டார்கள்? த.வி.பு காங்கேசன் துறை, பலாலி முகாம் என்று சுற்றிவளைத்து இராணுவத்தை பூண்டோடு கைலாயம் அனுப்ப முயற்சி செய்தார்கள். இராணுவம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக த.வி.புவின் முற்றுகையை முறியடித்துக்கொண்டு வெளியேறியது. முதலில் மாவிட்டபுரம், கீரிமலை வரை முன்னேறியது. பின்னர் தெல்லிப்பளை விழுந்தது. போரை தெரிவு செய்தது யார்? குண்டுகள், துப்பாக்கிச்சூடுகள் இவற்றின் மத்தியில் வாழமுடியாத பட்சத்திலேயே நாம் காங்கேசன்துறையை விட்டு வெளியேறினோம். இங்கு சனங்களை உண்மையில் விரட்டியவர் யார்?

அண்ணை கரும்பாரே, இறுதிக்காலங்களில் புலி பிழைகளை விட்டு விட்டது என்பதை வைத்து, இன்று ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் செய்யும் பிரச்சாரங்கள் போலுள்ளது உங்கள் கருத்துக்களும்!!! புலியோ பூனையோ ஆயுதம் தூக்கியது 80களின் ஆரம்பங்களில்!! அதற்கு முன்னுள்ள நிலவரங்களை நாமெல்லாம் மறந்து விட்டோம்!!!!!???? அது கிடக்க.....

ஆரம்பங்களில் உந்த முகாம் முற்றுகையை தொடக்கியது, எல்லா இயக்கங்களுமே!! அது சிங்கள இராணுவத்தை பூண்டோடு அனுப்பவல்ல, அந்நாளில் இராணுவம் இலகுவாக வெளிக்கிட்டு செய்த அட்டூளியங்களினதும், படுகொலைகளினதும் ... (விபரங்கள் முழுமையாக வேண்டுமா???) ... வெளிப்பாடே!! ... அந்நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் ஒருபகுதியை பார்த்த புளொட் இயக்கத்திடம் இருந்த ஆயுதம் இரு துவக்கும், சில குண்டுகளுமே, இது அவனை முற்றாக அழிக்க போதுமா??? ஆனால் அப்போது பலர் சென்றிகளில் மடிந்ததினால், நாம் நிம்மதியாக இடம்பெயர்ந்தும் உயிரோடு இருக்கிறோம்!!!

நான் படித்த பாடசாலையே கொழுத்தப்பட்டு, பின் அப்பகுதிகள் மயானமானது நான் பார்த்து வந்தவையே! முகாமருகே, ஒரு சில போராளிகள் நிற்க, அவர்களை தாக்குவதற்கு பதில் பல மைல்களுக்கு அப்பால் பொது மக்களின் குடியிருப்புகளை நோக்கி இரவு/பகல்களாக செல் தாக்குதல்கள் நடந்ததையும் பார்த்து வந்தவந்தான் நான்!!! பயணங்கள் செய்வோம், உயிரோடு திரும்புவோமோ தெரியாதென்ற நிலையையும் கண்டே வந்தவன்!!!!... உம்மை போல் பல பல எனக்குக்கும் தெரியும்!!!

... மல்லக்காய் படுத்து துப்புப்புவதை நிறுத்தும் ....

Edited by Nellaiyan

எனது கருத்திற்கு முடியுமானால் உமது கருத்தை - எதிர் வாதத்தை வையும். மல்லாக்கா படுத்திருந்து துப்புவது, மாற்றுக்கருத்து மாணிக்கம் போன்ற பதங்கள் உமது கருத்தியலின் இயலாமையின் வெளிப்பாடே.

சனங்கள் விரட்டப்பட்டார்கள்? த.வி.பு காங்கேசன் துறை, பலாலி முகாம் என்று சுற்றிவளைத்து இராணுவத்தை பூண்டோடு கைலாயம் அனுப்ப முயற்சி செய்தார்கள். இராணுவம் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக த.வி.புவின் முற்றுகையை முறியடித்துக்கொண்டு வெளியேறியது. முதலில் மாவிட்டபுரம், கீரிமலை வரை முன்னேறியது. பின்னர் தெல்லிப்பளை விழுந்தது. போரை தெரிவு செய்தது யார்? குண்டுகள், துப்பாக்கிச்சூடுகள் இவற்றின் மத்தியில் வாழமுடியாத பட்சத்திலேயே நாம் காங்கேசன்துறையை விட்டு வெளியேறினோம். இங்கு சனங்களை உண்மையில் விரட்டியவர் யார்?

ஆக உங்களின் பிரச்சினையாக இருந்த புலி இல்லையே இப்ப போய் காங்கேசன் துறையிலை நல்லா பிரளலாமே...??

என்னை கேட்டியள் எண்டால் அப்பாவி பொது மக்களாகிய நீங்கள் நல்லா இருக்க கூடாது ஆமி மாமாக்கள் உங்கட வீட்டை வந்து மிட்டாய் தரக்கூடாது எண்ட அழலிலை புலியள் செய்த வேலை உது....!

பின் குறிப்பு :- தமிழீழ போராட்டம் ஆரம்பித்த காரணமும், சிங்கள இனவெறியாளர்களின் கொலைகளும்/ அத்துமீறல்களும் உங்களுக்கு எல்லாம் தெரியவே தெரியாது... அப்படி ஏதாவது நடந்தால் தானே நீங்கள் அறிந்து கொள்ள... ஆனால் உங்களுக்காக போராடின எண்டு கதை விட்ட புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணம்... உங்கட வீட்டை ஆமி மாமாக்கள் வந்து இருந்தது உட்பட...

Edited by தயா

எனக்கு ஆண்டு சரியாக தெரியவில்லை. சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அப்படியும் இப்படியுமாக இருதரப்பிடையே முறுகல் நடந்துகொண்ட காலகட்டம்… 2006 சொச்சமாய் காணப்படலாம். அப்போது நவம்பர் 26 வந்தது. நம்மவர்கள் என்னமாய் துடித்துக்கொண்டார்கள் தெரியுமா? ஆய்வாளர்கள் தமது தலைகளை பிய்த்துக்கொண்டார்கள். தலைவரே தலைவரே இந்தமுறை மாவீரர் தினத்தில் போர் என்று அறிவியுங்கள் எமக்கு போர் வேண்டும் போரிடவேண்டும்… இவ்வாறு துடியாய்த் துடித்தார்கள். த.வி.பு தலைமைக்கு போர் வேண்டும் போர் வேண்டும் என உசுப்பேத்தியதில் வெளிநாடுகளில் வாழ்கின்ற விசுவாசிகளின் பங்களிப்பும் பெரிதளவில் உண்டு. அதாவது இவர்கள் போரையே அதிகமாக விரும்பினார்கள். அதையே த.வி.பு தலைமை செய்யவேண்டும் என ஆசைப்பட்டார்கள், போரும் நடந்து முடிந்தது.

இப்போது... அகதிகள் தொடக்கம் அங்கவீனர்கள் வரை… போரின் வடுக்கள் அனைத்திற்கும் சிறீ லங்கா அரசாங்கமே – சிறீ லங்கா இராணுவமே காரணம் என்று கூறுகின்றார்கள்.

நல்லது தலை, உங்களுடன் நானும் கும்பலில் கோவிந்தா போடுகின்றேன். பிணந்தின்னிகள், சிங்கள இனவாதப்பேய்களே சகலவற்றுக்கும் காரணம். நாங்கள் மிகவும் நல்லவர்கள்.

இப்போது... அகதிகள் தொடக்கம் அங்கவீனர்கள் வரை… போரின் வடுக்கள் அனைத்திற்கும் சிறீ லங்கா அரசாங்கமே – சிறீ லங்கா இராணுவமே காரணம் என்று கூறுகின்றார்கள்.

நல்லது தலை, உங்களுடன் நானும் கும்பலில் கோவிந்தா போடுகின்றேன். பிணந்தின்னிகள், சிங்கள இனவாதப்பேய்களே சகலவற்றுக்கும் காரணம். நாங்கள் மிகவும் நல்லவர்கள்.

போர் நடந்தது எங்களுக்காக ... அப்படி எங்களுக்காக போர் நடந்து இருந்தால் நான் அதில் பங்காளி எண்று சொல்லிக்கொள்ளவே ஆசைப்படுவேன்... அப்படி நான் பங்காளியாக இருந்தால் அது எனது போர்.... தோத்துபோனது நான்.... என்னை நான் விமர்ச்சிகும் முறை நீங்கள் மேலை எழுதிய முறை அல்ல...

இல்லை எனக்கும் போருக்கும் சம்பந்தம் இல்லை சும்மா விண்ணாணம் பாத்தனான்... வெற்றி பெற்று இருந்தால் கூட சேந்து கும்மாளம் அடிச்சு இருப்பன், தோத்து போச்சினம் ( நான் இப்ப தோத்து போனதாக சொல்ல எனக்கு வெக்கமா கிடக்கு ) எண்டு ஆகவே எனக்கும் போருக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி காட்ட போர் செய்தவையை விமர்சனம் செய்யிறவையோடை சேந்து நானும் நிக்கிறன் எண்டு சொல்லுங்கோ சரியா இருக்கும்... !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) ஓ.., இப்ப கதை இப்படிப் போகுதோ??

எங்களிட்டைக் கருத்துப் பஞ்சம் கண்டியளோ, உங்கட அதிபுத்திசாலித்தனமான கருத்துக்களுக்கு எங்களால ஈடு குடுக்க ஏலாமத்தான் கிடக்குது. என்ன செய்வம், எங்களுக்கு இடமும் தெரியாது, வலமும் தெரியாது.

நாங்களும் ஏதோ சிங்களவன் எங்கட தாயகத்தில தங்கட ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்கத்தான் இந்தமாதிரியான கட்டிடங்களையும் கோட்டை கொத்தளங்களையும் கட்டி வருகிறான் எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறம், இப்பத்தானே தெரியுது, அது இடம்பெயர்ந்த சனத்தை மீளக் குடியமர்த்தவெண்டு, அதுமட்டுமில்லாம, யாழத்தளபதி கூடச் சொன்னவராம் இன்னும் ஒன்Dஉ அல்லது ஒண்டரை வர்சுஷத்தில எல்லாச் சனத்தையும் அவயளின்ர வீடுகளில மீண்டும் குடியேற அனுமதிப்பம் எண்டு. இனியென்ன எல்லாம் சரியாய்ப் போடும், எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். அண்ணை, ஒரு சந்தேகம், அப்ப சனத்தையெல்லாம் இடம்பெயரப் பண்ணினது புலிப்பயங்கரவாதிகளோ, அவங்கள் இல்லாம் இருந்தால் சனமெல்லாம் தங்கட தங்கட் வீடுகளில சந்தோசம இருந்திருக்கலாம் என்ன அண்ணை?/ நீங்கள் சொல்லுறது கந்தளாய், அம்பாறை, பதவியா, மணலாறு, திரியாய், வவுனியா எண்ட இடமெல்லாம் சேர்த்துத்தானோ?? ஏன் கேக்கிறன் எண்டால், உந்த இடமெல்லாம் புலிப்பயங்கரவாதிகள் நிண்டு நொட்டினவையோ எண்டு எனக்குச் சரியாத் தெரியேல்லைக் கண்டியளோ??

அண்ணை, தமிழ்நேட்டில இப்ப எழுதிறதெல்லாம் பொய்யெண்டு எப்ப கண்டு பிடிச்சனீங்கள்?? மோகன் அண்ணாவிட்ட நான் கேடத் தேவையில்லை, தேவையெண்டால், புதினப்பலகைக்கு குடுத்த மாதிரி டிரெக்ட் கணெக்ஷன் குடுத்தாலும் குடுப்பார், அது அவற்றை பிரச்சனை. ஓமண்ணை நீங்கள் ஆமி டொட்கொம்மையும், டிபென்ஸ் டொட் கொம்மையும் நம்புங்கோ, நான் தமிழ்நெட்டை நம்புறன். வேனுமெண்டால் ஆமி டொட் கொம்முக்கும் டிபென்ஸ் டொட் கொம்முக்கும் மோகன் அண்ணாட்டை டிரெக்ட் கணெக்ஷன் கேட்டுப் பாருங்கோவன்.

அண்ணை நீங்கள் கேட்டதால சொல்லுறன், நானும் தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்தவந்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டுவனுக்காளையும், தைய்யிட்டிக்காளையும் ஆமி மூவ் பண்ணிச் செய்த அநியாயங்களும், அதுக்குப் பொடியள் கஷ்ட்டப்பட்டு மூதேவிகலை அடிச்சு அனுப்பினதையும் பாத்திருக்கிறன் அண்ணை. எனக்கு பொடியள் நொட்டித்தான் ஆமி உள்ளுக்கை வந்தத்ண்ட உங்கட வாதம் பிழையாத்தான் தெரியுது. எதுக்கும் வேணுமென்Dஆல், இலங்கையில் தமிழர் போராட்டம் ஏன் தொடங்கினதெண்டதை வெள்ளைக்காரர் நிரையப் பேர் எழுதி வச்சிருக்கினம், உங்களுக்குத்தான் தமிழ்நெட்டும், புதினமும் பிடிக்காதே அண்ணை, அதனால் வெள்ளைக்காரன் என்ன சொல்லுறான் எண்டதை ஒருக்க் வாசிச்சுப் பாருங்கோ, சிலவேளை புரிஞ்சாலும் புரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) கரும்பு,

இரண்டு வரியில்.

சிங்களம் தமிழர் தாயகத்தில் தனது ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்கிக்கொண்டிருக்கிறது. அது புதிய கட்டிடமாகட்டும், பழையதை புதுப்பிப்பதாகட்டும், நிலமை ஒன்றுதான்.அவர்கள் அங்கிருந்து அகலப்போவதில்லை, இதுதான் உண்மை.

ஓவ்வொரு மாவட்டத்திற்கும் நிரந்தர படைத் தலமையகமும், அதிரடிப்படையின் தலமையகமும் கட்டப்பட்டு வருகிறது. இது போர் முடிந்த காலம், அப்படியானால், இந்த நிரந்தர ராணுவ முகாம்கள், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்கள், வன்னியில் 400,000 ராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தவருக்குமான வதிவிடங்கள்...இவை எல்லாம் ஏன்??

உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?? இவையெல்லாம் இன்று கட்டப்பட்டு, நாளையே இடிக்கப்படும் கட்டிடங்கள் என்று நினைக்கிறீர்களா??

தூங்குவது போல பாசாங்கு செய்யவேண்டாம். இவையெல்லாம் ஏன் நடக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும்.

முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசின் நாடகங்கள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76123

தலை, உங்கள் கைவண்ணத்திற்கு எழுதுவதற்கு, வழமைபோல் கிழங்கு இழுப்பது உங்களுக்கு புளுகமாய்த்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது… கீழ்க்கண்ட திரியைப்பாருங்கள். எனது சிந்தனை போர் நடைபெற்ற, வெற்றி பெற்ற காலத்தில் எப்படி காணப்பட்டது என்று தெரியும். இந்தக்கருத்தை நான் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின் பின்னர் எழுதினேன்.

Posted 23 October 2007 - 06:03 AM

வணக்கம்,

எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன்.

இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல.

நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள்.

எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி.

ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின்றோமா? அவர்களின் தனிப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு பேரதிர்ச்சியில், கவலையில் இப்போது இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கின்றோமா?

கன காலமாக சண்டை இல்லை, புலி பதுங்கி இருக்கிது பாயப்போகிது எண்டு சிலர் ஒருபக்கத்தால கொம்ண்ட அடிக்க, இன்னொரு சிலர் அவங்களால இனி ஒண்டும் ஏலாது அதான் பேசாமல் இருக்கிறாங்கள் எண்டு இன்னொரு பக்கத்தால கொமண்ட் அடிக்க இப்படி நிலமை இருந்தது.

நேற்று மீண்டும் போர், தாக்குதல். இந்தமுறை வெற்றி. ஆனால், இப்படி ஒவ்வொரு தடவையும் வெற்றி வரும் என்று இல்லை. மீண்டும் வெற்றி வரலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம்.

ஆனால், நாங்கள் இந்தப் போரினால் வரும் அழிவுகளை, துயரங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றோமா? பெரிய அளவில் உயிர் இழப்புக்கள் வரும்போது உங்களில் எத்தனை பேரால் வெற்றியைப் பார்த்து சந்தோசப் படமுடியும்?

போர் மூலமே தீர்வு என்று விரும்புபவர்கள், போரின் போது வரும் அழிவுகளை, துன்பங்களை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னொருவன் தனது குருதியை சிந்தி உருவாக்கும் வெற்றி மூலம் நான் எப்படி வெளிநாட்டில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு கொண்டாடி மகிழ முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

நேற்று பத்து விமானங்கள் அழிந்து போனால், நாளைக்கு இருபது விமானங்களை சிறீ லங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கி தமது பலத்தை மீண்டும் இரட்டிப்பு செய்யப் போகின்றார்கள். சிறீ லங்கா அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு தற்காலிக மந்தநிலையே.

போரை நான் விரும்புபவனாக இருந்தால் அல்லது ஆதரிப்பவனாக இருந்தால் போரில் எனது தனிப்பட்ட வாழ்வை அல்லது சுகத்தை நான் இழக்க தயாராக இருக்கின்றேனா? இல்லை என்றால், எப்படி நான் என்னைப் போன்ற இன்னொருவர் தனது வாழ்வை போரில் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள அல்லது ஆதரிக்க முடியும்? எனக்கு மட்டும் ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயமா?

எனக்குள் ஆயிரம் கேள்விகள்... பதில் தெரியவில்லை. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். அவ்வளவுதான். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி!

ரகுநாதன், நான் ஏன் ஆமி டொட்கொம்மையும், டிபென்ஸ் டொட் கொம்மையும் நம்பவேணும்? உங்கள் தமிழ்நெட் தான் அவர்கள் பதிந்த செய்தி தகவலை நம்பி கட்டுரை வரைந்து உள்ளார்கள். நீங்கள் மேற்கண்ட தகவல்களை யாழில் இணைத்தபின்னரே நானும் குறிப்பிட்ட தளத்திற்கு சென்றேன். ஆக மொத்தத்தில் நீங்கள் நொந்துகொள்ளவேண்டியது என்னையல்ல.

என்ன செய்வது த.வி.பு போர் செய்தது அடியை மட்டுமே வாங்கத்தெரிந்த அப்பாவிகளுடன் அல்ல… மிகக்கொடுமையான ஓர் எதிரியுடன். இதனால்.. தனக்கு இழப்புக்கள் ஏற்படும்போது ஒவ்வொரு தடவையும் எதிரி அடிவாங்கிக்கொண்டு பொத்திக்கொண்டு அமைதியாக இருக்காமல் ஆக்கிரோசமாக அழிவுகளை ஏற்படுத்தியது எங்கள் துரதிட்டம்தான்.

இரண்டு வரியில். சிங்களம் தமிழர் தாயகத்தில் தனது ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்கிக்கொண்டிருக்கிறது. அது புதிய கட்டிடமாகட்டும், பழையதை புதுப்பிப்பதாகட்டும், நிலமை ஒன்றுதான்.அவர்கள் அங்கிருந்து அகலப்போவதில்லை, இதுதான் உண்மை.

அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று தொடர்ந்து நிரூபித்து இருக்கின்றார்கள். ஆனால்.. நாங்கள் இன்னமும் பலசாலிகள் இனித்தான் இவையளுக்கு நல்ல பாடம் ஒன்று படிபிக்கப்போகின்றோம் என்று பலர் மல்லுக்கட்டிக்கொண்டு உள்ளார்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு, இண்டைக்கு எழுதிறது முடியிறமாதிரித் தெரியவில்லை. தமிழ்நெட் எனது இணையமா?? உங்களுக்கு அதைப் பிடிக்கவில்லை என்றவுடன், உடனே எனதாக்கி விட்டீர்கள். சரி, பரவாயில்லை.

உங்களுக்கு நான் போராட்டம்பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை, உங்களுக்கும் அது சலிப்பாக இருக்கும்.

இந்தத் திரியின் நோக்கம் ஒன்றுதான். சிங்கள ஆக்கிரமிப்பு எமது தாயகத்தில் நிரந்தரமாக்கப்படுகிறது. அதற்கான வேலைகள் மும்முரமாக அங்கே நடைபெற்றுவருகின்றன. அதை வெளியுலகிற்குக் கொண்டுவந்து அதைத் தடுத்து நிறுத்தும் (இது எம்மால் முடியுமா முடியாதா என்பது வேறுவிடயம்) செயற்பாடுகளிலோ அல்லது சிங்கள பயங்கரவாதத்தின் முகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலோ எமது செயற்பாடுகள் அமையவேண்டும்.

புலிகளை தேவையற்று விமர்சிக்கவும், மக்கள் அல்லல்படுவது அவர்களினால்த்தான் என்று சிலர் வாதிடவும் இந்தத் திரி உடந்தையாகியதையிட்டு வருந்துகிறேன்.

கருத்துப்பகிர்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

தலை, உங்கள் கைவண்ணத்திற்கு எழுதுவதற்கு, வழமைபோல் கிழங்கு இழுப்பது உங்களுக்கு புளுகமாய்த்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது… கீழ்க்கண்ட திரியைப்பாருங்கள். எனது சிந்தனை போர் நடைபெற்ற, வெற்றி பெற்ற காலத்தில் எப்படி காணப்பட்டது என்று தெரியும். இந்தக்கருத்தை நான் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின் பின்னர் எழுதினேன்.

உங்களை மனிதாபிமானியாய் காட்ட கடுமையாக கஸ்ரப்படுகிறீயள்... இப்ப உதுதான் fashion போல... ! அந்த 21 பேரும் கூட எதுக்காக உயிரை வெறுத்து தாங்கள் நேசித்த உறவுகளை விட்டு சாவை நோக்கி போனார்கள் என்பதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை... அதிகமாக உங்களால் என்ன புரிந்து கொள்ளப்போகிறீர்கள் போனவர்கள் புலிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்கள் எண்ட அளவில் தான் இருக்கும்...

போர் எங்கள் மீது திணிக்க பட்டதா அல்லது போரை நாங்கள் வரவளைச்சமா எண்ட விபரங்கள் இல்லாமல் ஒரு அரை குறையான அறிவோடை போராட்டத்தை முழுமையாக தெரிஞ்ச மாதிரி கதைக்க நிக்கிறீயள்....

வெள்ளைக்காறரும் சிங்களவரும் சொல்லுறது மாதிரி 1983ம் ஆண்டு தின்னவேலியிலை புலிகள் இராணுவ வாகனத்தை தகர்த்த படியால் தான் போர் ஆரம்பிச்சு இவ்வளவு அழிவும் எனும் அளவிலை தான் உங்கட அறிந்து கொண்ட அளவு இருக்கும் போது இதுக்கும் மேலை உங்களுவிளங்கப்படுத்துறது எனக்கு நேர விரையம்...

முள்ளிவாய்க்காலிலை 40 000 சனம் சாக முன்னம் ஒரு கிட்டத்தட்ட லட்ச்சம் தமிழரை சிங்களம் கொலை செய்து இருக்கிறது... அதன் அரைப்பகுதியானவை முடமாக்கப்பட்டு இருக்கிறார்கள்...

நான் போர் விரும்பி என்பது போல எழுத முனைந்து இருக்கிறீர்... போரை என்னை விட அதிகமாக நீங்கள் ஒண்டும் அனுபவித்து விட்டு இருக்க போவதில்லை... அதன் கடினங்கள் உங்களை விட எனக்கு தெரியும்... இதே போரால் நான் பல முறை காயம்( விழுப்புண்) அடைந்து இருக்கிறேன்...

Edited by தயா

தலை, நான் மேற்கண்ட திரியை இணைத்ததன் காரணமே இதற்குமுன் நீங்கள் முன் எழுதிய கருத்துத்தான். உங்களால் அதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. இதற்கு முன்னதாக கடைசியாக நீங்கள் எழுதிய கருத்தை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள். ஆனால், இப்போது அதை வைத்து மனிதாபிமானியாய் காட்டிக்கொள்வதற்கு நான் கஸ்டப்படுவதாக கூறுகின்றீர்கள். பின்னர் உங்கள் பாட்டிலேயே தொடர்ந்து உழுதுகொண்டு செல்கின்றீர்கள்.

இங்கு செய்தியில் கூறப்பட்ட விடயம்… இராணுவம் காங்கேசன் துறையில் ஓர் புதிய அல்லது மீள்வடிவாக்கம் செய்யப்பட்ட உல்லாசவிடுதியை இயங்கவைத்துள்ளது என்பது. இதற்கு நான் ஆரம்பத்தில் எழுதிய முதலாவது கருத்தையே ரகுநாதனினால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடனடியாகவே நான் சிங்களவர்களை நல்லவர்கள் என்று கூறுவதாக தனது பாணியில் தொடங்கினார்.

ரகுநாதன் பாணியிலேயே நெல்லையன் வந்து ஏதோ நான்தான் மேற்கண்ட உல்லாசவிடுதியை கட்டியதுபோல் கருத்துக்கூறினார். பின்னர் அதேபாணியில் நீங்கள் அவர்களுடன் இணைந்துகொண்டீர்கள்.

இங்கு நான் கூறக்கூடியது உங்களினால்.. கருத்துக்களிற்கு சரியான எதிர்வாதத்தை வைக்கமுடியவில்லை. கருத்து எழுதுபவரை கேவலப்படுத்தமட்டுமே உங்களினால் முடிகின்றது. இப்படியான நிலையில் எனக்கு போராட்டத்தை பற்றி விளங்கப்படுத்த போகின்றீர்களா? நகைப்பாக உள்ளது.

எவர் பக்கமும் சாய்ந்து நில்லாது… ஓர் விடயத்தை நடுவுநிலமையுடன் ஆராய்வதற்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா? அப்படியெனில்… போர், போரின் வடுக்கள் பற்றி வேறொரு திரியில் ஆராயலாம்.

Edited by கலைஞன்

புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் “ஜுமெரா பாம்” எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் – எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4,00,000 கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது.

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

அடிப்படையில் ஒரு பலமான பொருளாதாரத்தை கட்டி எழுப்பாமல் எதையும் ஆடம்பரத்துக்கு கட்டி எழுப்புவது ஆரோக்கியமானது அல்ல என்பதை துபாய் கதை சொல்லி நிற்கிறது.

http://www.theglobeandmail.com/report-on-business/real-estate-collapse-creates-havoc-in-dubai/article1747327/

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.