Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2600 சிறுவர்களைப் பிக்குகள் ஆக்க அரசு திட்டம்! மனித உரிமைகள் அமைப்புக்கள் பலத்த எதிர்ப்பு

Featured Replies

அடுத்த மே மாதத்துக்குள் 2600 சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்கும் அரசின் திட்டத்துக்கு உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

புத்த சமயத்தைக் கட்டி எழுப்புதல், சிறுவர்களின் வறுமையைப் போக்குதல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது என்கின்றார் பிரதமரும், சமய விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ண.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

புத்தர் பெருமான் ஞானம் அடைந்து 2600 ஆண்டுகள் அடுத்த மே மாதத்துடன் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டே 2600 சிறுவர்கள் பிக்குகள் ஆக்கப்பட உள்ளார்கள். இவர்களின் வறுமை நிலை போக்கப்படும். பல்கலைக்கழக கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்படும். பொதுமக்களிடம் இருந்து தேவையான நிதி பெறப்படும். பற்றாக்குறை ஏற்படும் இடத்து அரசின் நிதியும் பயன்படுத்தப்படும்.

இப்பிக்குக்களின் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்க அரசு உத்தேசித்துள்ளது. ” ஆனால் அரசின் இத்திட்டத்தை உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இத்திட்டத்தின் கீழ் புத்த பிக்குகளாக மதம் மாற்றப்பட இருப்போர் மிகவும் வயது குறைந்தவர்கள் என்றும் இவர்கள் விகாரைகளில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என்று இவ்வமைப்புக்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

10 வயதுச் சிறுவர்களைக் கூட புத்த பிக்குகள் ஆக்க உள்ளார்கள். 18 வயது வரை பெற்றோர், சகோதரர்கள், நண்பர்களுடன் வாழும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு சர்வதேச சட்ட்ம் கூறுகின்றது. அரசின் திட்டம் சிறுவர் உரிமைகள் மீதான அப்பட்டமான மீறல்கள் ஆகும்.” இவ்வாறு உள்நாட்டு சிறுவர் உரிமைகள் ஆர்வலர்கள் சீறுகின்றார்கள்.

இலங்கையின் சர்வதேச புகழ் பெற்ற சிறுவர் உரிமைகள் ஆர்வலர் Dr Hiranthi Wijemanne. "அரசின் இத்திட்டத்தை எதிர்க்க வேண்டியது எமது கடமை.” இப்படிக் கூறுகின்றார் இவர். சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினர் என்கிற குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏராளமான புத்த பிக்குகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் அண்மைய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் ஹெரேந்திர டீ சில்வா. அவர் அரசின் இத்திட்டம் குறித்து இப்படிக் காட்டமாகக் கூறுகின்றார். ”கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதனால் போப்பாண்டவர் பகிரங்க மன்னிப்புக் கூட கேட்க வேண்டி ஏற்பட்டது.

இந்நிலைமை விகாரைகளில் ஏற்படக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர் போராளிகளைச் சேர்த்துக் கொண்டனர். ஒரு வகையில் அம்மாதிரியான நடவடிக்கைதான் இதுவும். இது எமது சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல் ஆகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சிறுவர்களை பலிக் கடாக்கள் ஆக்கும் நடவடிக்கையை விட்டு விட்டு நாட்டின் பொருளாதாரத்தை அரசு முன்னேற்ற வேண்டும்

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12256:-2600----------&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

  • கருத்துக்கள உறவுகள்

.

முதல்ல, டக்கிளசையும், சங்கரியையும் துறவி ஆக்கி...... மஞ்சள் பாவாடையோடை அலைய விடுங்கப்பா......

.

மேற்குலக நடுகல் இந்த மனித உரிமை - அக்கறை என்பது எல்லாம் தமது கால்களை பதிக்கவே. முன்பு தமிழ் சிறார்கள் மேல் அக்கறை காட்டுவது போல் காட்டினர். இப்பொழுது இந்த சிறுவர் துறவிகள். பாதைகள் வேறு, இலக்கு ஒன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்

http://meenakam.com/?p=11150

சிறீலங்காவில் அடுத்த வருடம் 2010 மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் பிரதமர் டி.எம். ஜெயரட்னவின் திட்டம் சிறுவர்களை படைக்கு சோக்க்கும் நடவடிக்கை போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புத்தசானத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத் திட்டம் உதவும் என பிரதமர் கருதுகிறார்.

புத்தபெருமான் ஞானநிலையை அடைந்த 2600ஆவது வருட நினைவை அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இந்தத் திட்டத்தை பிரமதர் முன் வைத்துள்ளார். இளம் பௌத்த துறவிகள் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்க நிதி உதவி வழங்கவும் அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டி. எம. ஜேயரட்ண தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை 10 போன்ற மிகக் குறைந்த வயதில் துறவறம் பூநச் செய்யும் இந்த திட்டத்திற்கு சிறுவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளனர். 18 வயது அடையும் வரை சிறுவர்கள் அவர்களின் குழந்தைப் பருவத்தையும் இளமையின் குடும்பச் சூழலையும் எவரும் பறித்து விட முடியாது என்பது சிறார் நல ஆர்வலர்களின் வாதம்.

மூத்த பௌத்த துறவிகள் இந்த திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என ஐ.நாவின் சிறுவர் உரிமைக் குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டொக்கர் கிரந்தி விஜயமான சுட்டிக் காட்டியுள்ளார். பணக்கார குடும்பத்து சிறுவர்கள் மிக அரிதாகவே இளமையில் றுதவறம் பூநுவதாக தெரிவித்த டொக்டர் கிரந்தி சிறார்களை துறவறம் பூநச் செய்வது அவர்களின் உரிமைகளை மீறுவதற்கு சமம் என வாதிடுகின்றார்.

சிறார்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலைக்கு இப்படியான சிறுவர் துறவறங்கள் காரணங்களாக வழிவகுக்கின்றன என்பது சமூக ஆர்வலர்களின் வாதம். தமது பராமரிப்பில் உள்ள சிறுவர்களை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பௌத்த துறவிகள் பலர் இலங்கை தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசரை பகிரங்கமாக மன்னிப்புக் கோரம் நிலைக்குத் தள்ளிய கத்தோலிக்க பாதிரிமாரின் சிறுவர் துஷ்பிரயோகங்களைப்போன்ற சர்ச்சைகளை பௌத்த விகாரைகளில் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என சிறார் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னால் தலைவர் பேராசிரியர் கரேந்திரடி சில்வா சுட்டிக் காட்டினார்.

யார் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி. அரசியல் அவர் எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் பிரதமரோ எதிர்கட்சித் தரைவரோ அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை சரியான முடிவு என நான் கருதவில்லை. சிறுவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உள்ளது. ஏட்டு வயதில் அவர்கள் எவ்வாறு தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். டொக்டராகவோ எஞ்சினியராகவோ வரவேண்டும் என அவர்களால் எப்படி எட்டு வயதில் திர்மானிக்க முடியும்? அத்தோடு குடும்பச் சூழலை இளமையிலே இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாவார்கள். 18இற்கு பிறகு அதனை ஊக்கு விப்பதில் எந்த தவறும் இல்லை. புத்தசானத்தை வளர்ப்பதில் பிழையில்லை. ஆனால் அதனை 18 வயதிற்கு பிறகுதான் அவர்கள் அதனை தீர்மானிக்க முடியும். இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. புதிய அறிவுக்ள கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை துறவறம் பூநச் செய்யும் விடயத்தில் நாம் பழைய நடைமுறைகளில் தங்கியிருக்க முடியாது என்கிறார் பேராசிரியர் கரேந்திரடி சில்வா.

சிறார் துறவறத்தை சிறாரை படையில் சேர்க்கும் நடவடிக்கைக்கு முழுமையாக ஒப்பிடா விட்டாலும் அதனுடன் சில விடங்கள் ஒத்துப் போகின்றன எனவும் பேராசிரியர் கரேந்திரடி சில்வா கூறுகின்றார். சிறுவர்களின் வறுமையை போக்க அரசாங்கம் பொரளாதார முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர இவ்வாறு சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலையை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

பௌத்த மதத்தின் சிறப்பில் சிறீலங்காவுக்கு என்று ஒரு தனியிடம் உள்ளது. 2600ம் வருடம் பல வழிகளில் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றார்களை பௌத்த மத நம்பிக்கைகளுடன் தொடர்பு படுத்தும் பணி இந்த நாட்டில் 2500 வருடங்களாக நடந்திருக்கிறது. இதனால் 2600 பேரல்ல 26000 பேரை துறவறம் பூநச் செய்வது இன்னும் பொருத்தமானது என்பது எனது கருத்து. பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களை துறவறம் பூநச் செய்வது தவறு எனறு இன்று இவர்கள் கூறுவார்கள் ஆனால் அந்தக் காலத்தில் புத்தபகவானான சித்தார்த்தன், அவரது மகனான ராகுலவை பௌத்த துறவறத்திற்காக அர்பணித்தமையையும் குற்றம் எனக்கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் அவர்கள் முறையிட வேண்டும் என்கிறார் ஹெகலிய ரம்புக்வெல.

http://meenakam.com/?p=11150

1. சமயங்கள் அனைத்தும் அன்பையே போதிக் கின்றன. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் எமது நாட்டில் யுத்தம் தோன்றியிருக்க முடியாது.

2. இலங்கையைப் பொறுத்த வரையில், சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில், இங்கு வாழும் மூன்று இனங் களிடையேயும் பிளவுகளையும் வேற்றுமைகளையும் வளர்ப்பதில் வணக்கத்திற்குரிய பௌத்த குருமா ருக்கு பெரும் பங்குண்டு என்பது வரலாற்றுப் பதிவுகள்.

3. தமிழருக்கு சிங்களம் தர முனைந்த ஒரு சிறு அரசியல் தீர்வையும் ஒரு பிக்குவின் கொலையால் மறுக்கப்பட்டது.

1. சமயங்கள் அனைத்தும் அன்பையே போதிக் கின்றன. இந்த அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் எமது நாட்டில் யுத்தம் தோன்றியிருக்க முடியாது.

2. இலங்கையைப் பொறுத்த வரையில், சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில், இங்கு வாழும் மூன்று இனங் களிடையேயும் பிளவுகளையும் வேற்றுமைகளையும் வளர்ப்பதில் வணக்கத்திற்குரிய பௌத்த குருமா ருக்கு பெரும் பங்குண்டு என்பது வரலாற்றுப் பதிவுகள்.

3. தமிழருக்கு சிங்களம் தர முனைந்த ஒரு சிறு அரசியல் தீர்வையும் ஒரு பிக்குவின் கொலையால் மறுக்கப்பட்டது.

இலங்கையில் குழந்தை பிக்குகளின் சிறு நீரக விற்பனை அமோகமாக நடக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2600 சிறுவர்களைப் பிக்குகள் ஆக்க அரசு திட்டம்!

பிக்குகளை உருவாக்கிற பாணியிலையும் தார்மீகத்தை உருவாக்கிற பாணியிலையும் இனியில்லையெண்ட இனதுவேசத்தை கட்டியெழுப்புறான் சிங்களவன்.

அதுதான் வடலி வளர்த்து கள்ளு குடிக்கப்போறான் சிங்களவன்

நாங்கள் என்னடாவெண்டால் மயிலாடமானாடாவுக்கு என்னெண்டு அப்பிளிக்கேசன் அனுப்பலாமெண்டு நாலுபேரிட்டை விசாரிச்சுக்கொண்டு திரியுறம்

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

1990 களின் பிற்பகுதியில் யுனிசெப்பின் ஒலரா ஒட்டுண்ணு வன்னிக்கு வந்து சிறுவர் போராளிகள் பற்றி கதைத்த போது சிங்கள தேசத்தில் அரச ஆதரவோடு நடக்கும் சிறுவர் பாலியல் வியாபாரம் உட்பட பல விடயங்களை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. பலர் இவற்றை சுட்டிக்காட்டினர்.

ஏன் எம்மவர்கள் இவை பற்றி கதைப்பதே இல்லை. அவ்வளவு சிங்கள விசுவாசம். ஆனால் சிங்களவன் சிறுவர் போராளிகளை வைத்தே எமக்கு எதிரான பயங்கரவாத பட்டத்தை வலுப்படுத்தியும் கொண்டான். நாங்களோ வாழாது கிடந்தம்.

விடுதலைப்புலிகளில் யோகி அண்ணன் இந்த குழந்தை பிக்குகள் விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் பேசியது கேட்டிருக்கிறேன். எனக்குள் இது தொடர்பாக பலமான ஆதங்கம் இருந்தது. சிறுவர் போராளிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஏன் இவர்களுக்கு அளிக்கவில்லை என்று.

எனியாவது எம்மவர்கள் இவ்வாறான விவகாரங்களுக்கு தாங்களும் கொஞ்சம் முக்கியம் கொடுத்து சிறீலங்கா அரசு சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்று காட்ட முனையலாம்.

மன்னிப்புச்சபை சிறீலங்காவிற்கு எதிராக மனித உரிமைகள் தொடர்பில் தொடர் பிரச்சாரம் செய்யும் அதேவேளை பாதிக்கப்பட்ட நம்மவர்களோ.. இணக்க அரசியல் மூலம் மனித உரிமை மீறல்களை சரிக்கட்டி விட கங்கணம் கட்டி நிற்கும் கொடுமையை காண்கிறோம்.

இதுகள் எல்லாம் நமக்கு தலைவர்கள்...???! கொடுமைடா சாமி..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.