Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான்: செசன்சு கோர்ட்டு நீதிபதி ஐகோர்ட்டில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை நீதிபதி அக்பர்அலி வாசித்தார்.

அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் கடந்த 1994ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு டக்ளஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வஜ்ரவேலு எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட உத்தரவானது பத்திரிகைகள் பொது அறிவிப்பாக முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. இந்த தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தெரியவந்தது.

எனவே விசாரணை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து கோர்ட்டு விசாரணை நாளைய தினத்துக்கு தள்ளி வைத்தார். அன்றையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.http://www.tharavu.com/2010/10/blog-post_4792.html

  • கருத்துக்கள உறவுகள்

http://www.seithy.com/admin/upload/Douglas,mahinda,Manmohan.jpg

மேற்கூறிய இணைப்பில் ஒரு படம் இருக்கின்றது எப்படி இணைப்பது எனத்தெரியவில்லை முடியுமாகில் யாராவது இணைத்துவிடவும்.

நீதிமன்றத்தால் தேடப்படும் ஒரு குற்றச் சந்தேகநபரை இந்திய நடுவன் அரசின் பிரதமர் சந்தித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.seithy.com/admin/upload/Douglas,mahinda,Manmohan.jpg

மேற்கூறிய இணைப்பில் ஒரு படம் இருக்கின்றது எப்படி இணைப்பது எனத்தெரியவில்லை முடியுமாகில் யாராவது இணைத்துவிடவும்.

நீதிமன்றத்தால் தேடப்படும் ஒரு குற்றச் சந்தேகநபரை இந்திய நடுவன் அரசின் பிரதமர் சந்தித்திருக்கிறார்.

Douglas,mahinda,Manmohan.jpg

வணக்கம் தோழர் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான் : சென்னை அமர்வு நீதிமன்றம் தாக்கல்

சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழகத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிதான் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழகத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி ஆகிய இரு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சில மாதங்களுக்கு முன்பு அரசு முறைப் பயணமாக டெல்லி வந்திருந்த போது கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததுடன், அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டது. இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா தாமே முன்வந்து உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தம்மை தேடப்படும் குற்றவாளியாக சென்னை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனை பத்திரிக்கை வாயிலாக தெரிவிக்க நீதிமன்றம் தவறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதனிடையே இது தொடர்பாக அமர்வு நீதிமன்றம் அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி ஆகிய வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிதான் என்று அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

- குமுதம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் தேவானந்தா இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் அறிக்கை

சிறீலங்கா அமைச்சரும் அரசின் துணை ஆயுதக்குழுத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளிதான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் அறிக்கை அளித்துள்ளது.

உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன் மீதான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராக உள்ளார். அதனால் அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவிவரம்: குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற உத்தரவு ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ் நாளிதழ்களில் பத்திரிகை வெளியீடாக வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அது பத்திரிகைச் செய்தியாகத்தான் வந்தது. தவிர, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டார் (எக்ஸ்பேட்ரியேட்). எனவே, அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்ற உத்தரவு பொருத்தமற்றது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளிதானா என்பதை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அந்த வழக்கு நீதிபதி அக்பர்அலி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நீதிமன்றத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

செல்வநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 30-1-87-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் தலைமறைவானவர்களாக கருதப்பட்டு, அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவித்து நீதிமன்றம் கடந்த 30-6-94-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக்டோபர் 21) நீதிபதி தள்ளிவைத்தார்.

http://meenakam.com/2010/10/21/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.