Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Posted by: on Oct 23, 2010

தென்னிலங்கை மக்களும், அரசியல் கட்சிகளும் சிறீலங்கா அரசுக்கு எதிராக போராடும் நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது.

1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் ஜே.வி.பியினர் மேற்கொண்ட புரட்சியை தொடர்ந்து பல பத்தாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். இந்திய இராணுவத்தின் துணையுடன் தான் சிறீமாவோ பண்டாரநாயக்கா அரசு அதனை நிறைவேற்றியிருந்தது.

அன்று இந்தியர்களை பகைவர்களாக தமது மனதில் பதித்துக் கொண்ட சிங்கள இனம் தற்போதும் இந்தியாவை நட்புடன் பார்ப்பது கிடையாது. அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு அதே இந்திய இராணுவம் சிறீலங்காவில் காலடியெடுத்து வைத்ததும், ஜே.வி.பிக்கான ஆதரவுகளை சிங்கள மக்கள் கண்மூடித்தனமாக வழங்கினர்.

மீண்டும் ஜே.வி.பியின் வன்முறைகள் உச்சத்தை தொட்டது. வடக்கு – கிழக்கை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்த சிறீலங்கா அரசு, தனது உச்ச பலத்தை பயன்படுத்தி ஜே.வி.பியை முறியடித்தது. இதன் போது 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜே.வி.பியின் தலைவர் றோகணா விஜயவீராவும் கைது செய்யப்பட்ட பின்னர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுடலை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். ஜே.வி.பி மீண்டும் அடங்கிப்போனது.

எனினும் சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் அரசியல் ஆசை பிரித்தானியாவில் அடைக்கலத் தஞ்சம் கோரியிருந்த சோமவன்சாவை சிறீலங்காவுக்கு அழைத்துச் சென்றது. மீண்டும் அரசியலில் ஜே.வி.பி புகுந்து கொண்டது.

தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் அரசியல் - ஆயுதப்போராட்டம் என பல முறை இரு வழிகளிலும் பயணித்த வரலாறு ஜே.வி.பிக்கு மட்டுமே உண்டு. 1980 களின் முற்பகுதியில் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட விஜயவீராவே பின்னர் 1988 களில் முழு வீச்சிலான ஆயுதப்போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்.

தற்போது தென்னிலங்கையில் சிங்களவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மீண்டும் ஜே.வி.பியை ஆயுதவழிக்கு இட்டுச் செல்லாம் என்ற கணிப்புக்கள் வலுவாகி வருகின்றன.

ஆனால் ஜே.வி.பியில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தலைவர்களில் யார் அதனை முன்னெடுக்கப் போகின்றனர் என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வி?

ஆனால் அதற்கான விடை சுலபமானது, அவ்வாறு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கும் வல்லமை தற்போதுள்ள ஜே.வி.பி தலைவர்கள் யாரிடமும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்கு மாற்றீடான வழிகளை தெரிவுசெய்ய முற்படுகின்றனர்.

இதனை தான் சிறீலங்கா அரசும் தெரிவித்துள்ளது. அதாவது மாணவர் பேராட்டங்களை தென்னிலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் மூலம், மாணவர்களின் ஊடாக ஒரு ஆயுதப்போராட்டத்தை உருவாக்க ஜே.வி.பி முயல்கின்றது என்பதே சிறீலங்கா அரசின் குற்றச்சாட்டு.

அதில் உண்மையும் உள்ளது. அதாவது அண்மைக்காலமாக தென்னிலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதனால் தென்னிலங்கையின் பல பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கையும் மெல்ல மெல்ல பாதிப்படைந்து வருகின்றது.

பெரதேசியா, களனி, கொழும்பு, ஜெயவர்த்தனபுர, மொரட்டுவ, றுகுனு ஆகிய பல்கலைக்கழகங்களில் சில பீடங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லக் கூடாது என 176 சிங்கள மாணவர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 14 ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 27 சிங்கள மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அரசாங்கம் பாரிய அடக்குமுறைகளை ஆரம்பித்து, நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்துறையில் அரசியல் சுதந்திரம் பாரியளவில் அடக்கப்பட்டு வருகிறது. விரிவுரையாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு இருந்த சுதந்திரம் அற்றுப் போயுள்ளதைக் காண முடிகிறது. ஸ்ரீஜயவர்தனப்புர பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாது, பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் மீதும் சிறீலங்கா அரசு மிக மோசமாக தாக்குதலகளை நடத்தியதை தொடர்ந்து அனைத்துலக ஊடக அமைப்புக்கள் மீண்டும் சிறீலங்காவின் வன்முறைகள் மீது தமது கவனத்தை செலுத்தியுள்ளன.

தற்போது சிறீலங்கா அரச தலைவர் மகிந்தாவின் நிம்மதியை குலைக்கும் மாணவர் அமைப்புக்களை வழிநடத்துவது யார்? ஜே.வி.பியினால் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பே இதனை முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

இந்த அமைப்புடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் அமைப்பும் இணைந்த செயற்பாட்டில் உள்ளது. வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த தென்னிலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

பெரதேனியா, களனி, சிறீஜெயவர்த்தனபுர, றுகுனு ஆகிய பல்கலைக்கழகங்கள் அதில் முதன்மையானவை. இந்த அமைப்பை ஆரம்பித்த சந்தா பண்டார (பெரதேனியா பல்கலைக்கழகத்தின் மாணவர்) 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.வி.பியின் ஆயுதப்போரில் முக்கிய பங்கு வகித்ததுடன், அதன் தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டவர். எனினும் அவர் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

அடுத்த வாரம் முற்றுப்பெறும்.

நன்றி;ஈழமுரசு

அண்ணை ஆய்வுக்கட்டுரைகள் எழுத முன்னம் மே 19 க்கு முன்பு அவர் எழுதியவற்றை கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தப்புலி

தங்களிடம் ஒரு கேள்வி

மே 19க்கு முன் இவர்வேறு மாதிரி எழுதியிருந்தால்

தாங்கள் வேறு மாதிரி செயற்பட்டிருப்பீர்களா...?

தப்புலி

தங்களிடம் ஒரு கேள்வி

மே 19க்கு முன் இவர்வேறு மாதிரி எழுதியிருந்தால்

தாங்கள் வேறு மாதிரி செயற்பட்டிருப்பீர்களா...?

ஆம் விசுகு. எல்லோரையும் ஒரு ஒருவித மனமயக்கத்தில் வைத்திருந்தார்கள். போராட்டத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. உண்மை நிலை வேறாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் விசுகு. எல்லோரையும் ஒரு ஒருவித மனமயக்கத்தில் வைத்திருந்தார்கள். போராட்டத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. உண்மை நிலை வேறாக இருந்தது.

நான் அப்படி நினைக்கவில்லை

தோற்றது எமது பலயீனத்தாலோ அல்லது இவர்களது அறிக்கைகளாலோ அல்ல

இவர்கள் தங்களால் முடிந்தவரை

மக்களை சோர்ந்துவிடாது வைத்திருப்பதையே செய்தார்கள்.

அதற்கான சிக்னல்கள் எங்கிருந்தோ இவர்களுக்கு கிடைத்தன என்பது எனது கருத்து.

அதை அவர்கள் செய்தார்கள்.

எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்து என்ன பயன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்?

இனம் இனத்தினை சேரும்... அவர்கள் ஒற்றுமையாக கூடிவிடுவார்கள்...மற்றும் படி ஈழ தோழர்கள் ரொம்ப தூரநோக்கு இருந்தால் சிங்களவரிடையே பிளவுகளை உண்டாக்கலாம்...

Sinhalese system

Kandyan Castes

* Ahinkuntaya - Gypsies

* Badahäla (Kumbal) - Potters

* Bathgama - Traditionally cultivators. Called Palanquin bearers during the British period

* Berava - Tom-tom beaters

* Govigama - Traditional cultivators, farmers and herdsmen

* Hannali - Tailors

* Hunu - Lime burners

* Kinnaraya - Outcastes

* Navandanna - Artisans (many subcategories)

* Pamunu - Tenant farmers

* Panna - Grass cutters

* Pannikki - Barbers

* Patti- Herdsmen

* Porowakara - Wood cutters

* Radala - Nobility of the Kandyan Kingdom

* Rajaka - Dhobies, Washermen

* Rodiya - Outcastes

* Wahumpura - Jaggery makers

Southern Castes

* Ahinkuntaya – Gypsies

* Badahäla (Kumbal) - Potters

* Berava - Tom-tom beaters

* Demala Gattara - Tamil Outcastes

* Durava - Traditional Soldiers

* Gattara - Cultivators

* Govigama - Traditional cultivators, landworkers and herdsmen

* Hannali - Tailors

* Hinna - Washers to the Salagama, according to a legend when ancestors of the Salagama community who were Brahmins arrived for the coronation ceremony of Prince Wathhimi the youngest amongst them was always addressed as "Sinna" (in Malayali Sinna = younger or small) & he was given the responsibility of washing the clothes of the older Brahmins, the malayali word became sinhalised & became Hinna, after several generations, they became a separate caste.

* Karava - Traditional fishermen, but were originally from a south indian Ksatriya caste & arrived in Sri Lanka in many waves,as soldiers,notably when the Sinhala King engaged them to chase the Mukkuvars, "Mukkura Satana" (The Mukkura battle) is a classic example.

* Navandanna - Artisans (Many subcategories)

* Pamunu - Tenant farmers

* Pannikki - Barbers

* Porowakara - Wood cutters

* Rajaka (Hena) - Washermen

* Rodiya - Outcastes

* Salagama - Cinnamon tapers,Soldiers,& Weavers(Their main ancestors originally arrived in Sri Lanka as Nambudiri Brahmins from Kerala, & also as mercenary soldiers from the south indian Kshatriya Agampadi caste, which is also some times called as RajaKula Agamudaiyar caste, a section of them were downgraded in 1406 by the King of Kotte, as Cinnamon workers, they are currently divided in to 4 subdivisions, which are Panividakara, Hewapanne, Kurundukara, & Uliyakkara.

* Wahumpura - Jaggery makers நன்றி ...வீக்கிலிபீடியா...

சிலர் மானுடம் பேசிகொண்டு இங்கு வருவீனம்... சுருக்கமாக சொன்னால் "வாழ விடு.... இல்லையெல் வாழ விடாதவனை உறவாடி கெடு" போல புதிய பழமொழிகளை கைக்கொண்டு ஈழ தோழர்கள் செயல்பட வேண்டும்.. :rolleyes:

டிஸ்கி:

bus_catch_fire.jpeg

அந்தா தமிழ்நாட்டு சாதி கலவரத்தினை போல அங்கும் சிங்களவர் சாதி சிக்கல் எதாவது இருந்தால் அதை ஊதி பெரிதாக்கி பல பஸ்களை கொளுத்த வேணும்.. ^_^

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சிங்களவர் எதிர் சிங்களவர் - இந்த முறை ஆயுதம் தூக்கப்போவது யார்? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Posted by: on Oct 23, 2010

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் அதிகாரம் தற்போது சிங்கள மக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியதன் விளைவு தான் இது.

நன்றி;ஈழமுரசு

ராஜபக்சாவின் அதிகாரம் எவ்வாறு பெரும்பான்மை மக்களை எது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது என்பது தெளிவாக சொல்லப்படவில்லை இந்த ஆய்வில். ஆனால் எங்கும் மகிந்தர் எதிலும் மகிந்தர் என்பதும் இந்த குடும்ப அரசியல் மக்களை விசப்படுத்தலாம்.

இருந்தாலும் முழு இராணுவத்தையும் தன கைப்பிடிக்குள் வைத்திருப்பது ஒரு பெரிய பலமே ஆனால் அதற்குள் ஒரு பிளவு வரும்போது அதுவே பெரிய பலவீனமாக மகிந்தருக்கு மாறலாம்.

பொருளாதார வளர்ச்சியும் மிகைப்படுத்தி மகிந்தரால் சொல்லப்படலாம். வருடத்துக்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸை தனது பெயரை சரிசெய்யவும் ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.பி. தடையை நீக்கவும் பாடுபடுவது இதற்கு உரம் சேர்க்கின்றது.

40 வருட போராட்டத்தில நாம் ஒரு பாடத்தை கற்ருக் கொள்ள வேண்டும், என்ன தான் புலிகள் எத்தனை இராணுவ வெற்றியைப் பெற்றாலும் அவர்களால் சிங்கள தேசத்தை உடைக்க முடியவில்லை, எப்போது தோல்வி ஏற்பட்டலும் சிங்களம் தனது தேசத்துக்குள் பின்வாங்கி மீண்டும் தன்னை பலப்படுத்தி 2009ல் வெற்றி கொண்டது, எனவே சிங்கள தேசத்தில் ஏற்படும் ஒரு பிளவு தான் எம்க்கு விடிவைத் தேடித் தரும். ஏன் உலக உதாரணங்களைப் பார்க்கலாம், 1998இல் இந்தோனேஷியாவில் தோன்றிய உள் நாட்டு நெருக்கடி தான் ஈஸ்ட் டீமோர் உருவாக வழி வகுத்தது, சோவியத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தான் கிழக்கு ஜரோப்பவில் பல நாடுகள் ஏற்பட கார்ணம் ஆகியது, அதே போல் யூகோஸ்லாவியாவில் ஏற்பட்ட குழப்பம் தான் குரேஸியா,மொன்டனீக்ரோ,மஸிடோனியா,பொஸ்னியா,ஸ்லோவினியா,கொசோவோ என பல நாடுகள் ஏற்பட காரணம் ஆனது

bus_catch_fire.jpeg

புஸ்கி..

சிங்களவர்கள் இந்திய தமிழர்களை விட பலமடங்கு சிறிய ஜனத்தொகையை கொண்டவர்களாயினும்.. தமிழ்நாட்டவரை விட பல பல மடங்கு சமூகவியல்/வாழ்வியல் முன்னேறமடைந்தவர்கள்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.