Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐப்பசி 25 ஒன்ராறியோ மாநகரசபை தேர்தல்

Featured Replies

கடந்த ஒக்தோபர் 13 இல் நாம் (TCWA - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) விடுத்த ஊடக அறிக்கை வாயிலாக

-- ரொறன்ரோ மாநகர அவைக்கு வட்டாரம் 42 இல் போட்டியிடும் நீதன் சண் அவர்களுக்கும்;

-- ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடும் அஷ்வின் பாலமோகன் அவர்களுக்கும்;

வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டிருந்தோம்.

இப்போது மார்க்கம் நகரஅவைக்கும் ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கும் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்த அவர்களை வெற்றிவாகை சூட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தீபன் விக்னேஸ்வரன் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 21)

பார்த்தி கந்தவேள் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 18)

யுனிற்ரா நாதன் - யோர்க் மண்டலம் (மார்க்கம்) கல்வி அறங்காவல் வாரியம் அவை (வட்டாரம் 7,8)

லோகன் கணபதி - மார்க்கம் நகர அவை (வட்டாரம் 7)

யோசேப் ரெமிசியர் - மார்க்கம் நகர அவை (வட்டாரம் 8)

நீதன் சண் போலவே ரொறன்ரோ ஸ்ரார் நாளேடு பார்த்தி கந்தவேள் அவர்களை ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 18) க்கு தெரிவு செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளது. ( http://www.thestar.com/opinion/editorials/article/877754--star-s-choices-for-old-and-new-on-public-board)

இவர்கள் நீங்கலாக ரொறன்ரோ மாநகர அவை மேயர் பதவிக்கு முன்னாள் ஒன்ரேறியோ மாகாண நாடாளுமன்ற நல்வாழ்வு அமைச்சர் யோர்ஜ் ஸ்மித்தீர்மன் அவர்களும் ரொறன்ரோ மாநகர அவை உறுப்பினர் றொப் போட் அவர்களும் போட்டி போடுகிறார்கள். பலர் போட்டியிட்டாலும் இவர்கள் இருவருக்கும் இடையிலேயே கடுமையான போட்டி நிலவுகிறது. புதிய மக்களாட்சி கட்சி சார்பாகப் போட்டியிடும் யோ பற்ரலோனுக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லாத நிலை காணப்படுகிறது.

றொப் போட் அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடையவர். புதிய குடிவரவாளர்களுக்கு எதிரானவர். இனவாதம் பாராட்டுபவர். கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் "நாங்கள் இப்போது இந்த நகரத்தில் வாழும் 2.5 மில்லியன் மக்களையே கவனிக்க முடியாது இருக்கிறது. நான் நினைக்கிறேன் மேற்கொண்டு மக்களைக் கொண்டுவருவதற்கு முன்னர் இங்குள்ளவர்களை கவனிப்பது முக்கியம் ஆகும்" ("Right now we can't even deal with the 2.5 million people in the city. I think it is more important to take care of people now before we start bringing in more people" - National Post) என்று சொன்னவர்.

றொப் போட் போலல்லாது யோர்ஜ் ஸ்மித்தீர்மன் அவர்கள் கனடிய தமிழ்ச் சமூகத்தோடு மிகவும் நெருக்கமான உறவை வைத்திருப்பவர். முடிந்தளவு எமது சார்பாகக் குரல் எழுப்பியவர். எனவே மேயர் தேர்தலில் ஸ்மித்தீர்மன் அவர்களுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தலில் எமது வாக்குப் பலத்தை எண்பிக்கக் கனடிய தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. உங்கள் வாக்கு எங்கள் அரசியல் பலத்தை எண்பிக்கப் பயன்படும் ஒரு ஆயுதம் ஆகும்! அதனைத் தக்கவாறு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்!.

எதிர்வரும் திங்கட்கிழமை (ஒக்தோபர் 25,2010) மேற்கண்ட வேட்பாளர்களுக்குத் தவறாது வாக்களித்து எங்கள் பலத்தை எண்பியுங்கள்!

=========================================

தொடர்பு பட்ட செய்தி:

கனடிய தமிழருக்கு ஒரு வேண்டுகோள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76157

  • தொடங்கியவர்

இளைய பாரதியின் வானொலியான "கனேடிய தமிழர் ஒலிபரப்பு கூடுத்தாபனம்" இதனில் ஒளிபரப்பபட்ட ஒரு விளம்பரம் கடைசி நேரத்தில் ஓர் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

முன்னணியில் நிற்கும் டொராண்ரோ நகர பிதாவுக்கான வேட்பாளர்களில் இரு வேட்பாளரர்களுள் ஒருவர், ஸ்மிதமன், ஓரின திருமணம் செய்தவர், அதையே இந்த விளம்பரம் தாக்கியுள்ளது.

மேலும் இதற்கு பின்னால் யார் இருந்தவர்கள் என தெரியவில்லை. இந்த வானொலியின் பொறுப்பாளர் சிறிலங்காவில் விடுமுறையில். இந்த விளம்பரத்துக்கு பின்னால் இருந்தது என சொல்லப்பட்ட தேவாலய பொறுப்பாளர் தமக்மும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.

இந்த விளம்பரம் ஒலிபரப்புவதை நிறுவனம் நிற்பாட்டிவிட்டது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக பின்னோட்டங்களை உருவாக்கிவிடுள்ளது

http://www.theglobeandmail.com/news/national/toronto/city-votes/city-votes-news/rob-ford-shuns-support-from-homophobic-tamil-radio-ad/article1770805/comments/

http://www.youtube.com/watch?v=8-4Q-gdDwCo&feature=player_embedded

http://www.xtra.ca/blog/national/post/2010/10/24/Toronto-mayoral-race-who-is-behind-Tamil-radio-ads.aspx

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லோகன் கணபதி முன்னாள் புளொட் உறுப்பினர். பணமே இவர்களது குறிக்கோள்

  • தொடங்கியவர்

லோகன் கணபதி முன்னாள் புளொட் உறுப்பினர். பணமே இவர்களது குறிக்கோள்

லோகன் கணபதி அவர்கள் மீண்டும் மார்க்கம் நகரசபைக்கு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்.

-- இவர் முள்ளிவாய்க்கால் நினைவாக நிலம் தந்து மரம் நட உதவியவர்.

-- நகரசபை ஊடக சிறிலங்கா இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்தவர்.

15 வருடங்களாக வானொலி நடத்தி வரும் இந்த எருமை மாடுகளிற்கு ஒரு நாகரிகமே தெரியாது இப்படி ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியிருக்குதுகள்.

லொகன் கணபதி புளொட்டும் இல்லை,தமிழனுக்கும் ஒன்றும் செய்யவும் இல்லை.இன்சுரன்ஸ் முகவராக இருந்து பல தமிழர்களின் பணத்தை ஏப்பம் விட்டவர்.இதனால் லைசன்சையும் இழந்தவர். இது உலகமறிந்த உண்மை.கடைசிக் காலங்களில் புலிகளுக்கு வால் பிடித்து இப்போது இப்படி இருக்கின்றார்.

புலிகளுக்கு யாரென்று இல்லை தங்களுக்கு கொடிபிடிதால் காணும்.இபோ நடக்கும் குத்துவெட்டுக்கள் அதற்கு சாட்சி.(சு.ப.த வின் தங்கை இவர்களுடன் தான் வேலை பார்க்கின்றார்)

  • தொடங்கியவர்

லோகன் கணபதி - மார்க்கம் நகர அவை (வட்டாரம் 7) ;

யுனிற்ரா நாதன் - யோர்க் மண்டலம் (மார்க்கம்) கல்வி அறங்காவல் வாரியம் அவை (வட்டாரம் 7,8) ;

http://election2010unofficialresults.markham.ca/results_ward7.asp

ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ரொரன்ரோ மாநாகர சபை, மற்றும் கல்விச் சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தமிழ் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். எனினும் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் 2வது இடத்தை அடைந்திருக்கின்றனர்.

15 வருடங்களாக வானொலி நடத்தி வரும் இந்த எருமை மாடுகளிற்கு ஒரு நாகரிகமே தெரியாது இப்படி ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியிருக்குதுகள்.

பானையில் உள்ளதுதானே அகப்பையில் வரும். இங்கு யாழ் களத்தில் சொல்லாத கருத்தையா சொல்லி இருக்கின்றார்கள். ஓர் மருத்துவர் கூறினர்: அசிங்கம் எங்கள் உள்ளேதான் இருக்கின்றது வெளியில் இல்லை என்று.

Edited by கரும்பு

நான் Rob Ford அவர்களிற்கே வாக்கு அளித்தேன். இதன் முக்கிய காரணம் குறிப்பிட்ட இந்தப்பதவிக்கு சிமித்தைவிட இவரே சிறந்தவர் என்று நினைத்தேன். வாக்களிப்பு முடிவடையும்வரை இதுபற்றி கருத்தாடல் செய்வதில்லை என்று இருந்தேன். ஊர்பாணியில் அரசியல் செய்து வெற்றிபெற முடியாது என்பதை நம்மவர்கள் உணர்ந்துகொள்ளும்வரை ஓர் தமிழர் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவது கனடாவில் சாத்தியம் இல்லை. ஷான் அவர்கள்கூட சீ.பீ.சிக்கு வழங்கிய பேட்டியில் - தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சண்டித்தனம் போல் கதைத்து அதாவது.. நாங்கள் அதிக தமிழர் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ளோம். எனவே நாம் ஒரு பிரதிநிதியை அனுப்பவேண்டும் என்று கூறி தனது உண்மை முகத்தை வெளிப்படையாக காட்டினார். ஒருவர் தமிழராக இருந்தாலும்... முதலில் தன்னை கனேடியராக உளப்பூர்வமாக உணர்ந்து இயங்காதவரை.. எங்களுக்குள் நாங்கள் பலம் காட்டுவது எமது வீரியம் பற்றி எமக்குள் பேசி மகிழலாம். ஆனால் வெற்றி அடைந்து நிலைத்திருக்க முடியாது.

லொகன் கணபதி புளொட்டும் இல்லை,தமிழனுக்கும் ஒன்றும் செய்யவும் இல்லை.இன்சுரன்ஸ் முகவராக இருந்து பல தமிழர்களின் பணத்தை ஏப்பம் விட்டவர்.இதனால் லைசன்சையும் இழந்தவர். இது உலகமறிந்த உண்மை.கடைசிக் காலங்களில் புலிகளுக்கு வால் பிடித்து இப்போது இப்படி இருக்கின்றார்.

புலிகளுக்கு யாரென்று இல்லை தங்களுக்கு கொடிபிடிதால் காணும்.இபோ நடக்கும் குத்துவெட்டுக்கள் அதற்கு சாட்சி.(சு.ப.த வின் தங்கை இவர்களுடன் தான் வேலை பார்க்கின்றார்)

த.வி.புவின் பெயரால், தாயகம், போராட்டத்தின் பெயரால் வெளிநாடுகளில் ஒவ்வொருவரும் தனித்தனியே தம்மை வளப்படுத்திக்கொள்வது வழமையான நிகழ்வுதானே. எனது நண்பன் ஒருவன் மாவீரனாகி இருந்தான். அவன் மாவீரனாகுவதற்கு முன்னர் குறிப்பிட்ட ஓர் தாக்குதலையே தனது இறுதித்தாக்குதலாக நினைத்து களமாடச்சென்றான். இவ்வளவு காலமும் தப்பி வந்தாயிற்று, இதையும் ஓர் கண்டமாக நினைத்து தப்பிவிடலாம் என்று நினைத்தானோ தெரியாது. அவன் இயக்கத்திற்கு விலகுவதாக கடிதம் கொடுப்பதற்கு முன்பாகவே நண்பர்களிடம் தொடர்ந்து தனது கல்வியை வெற்றிகரமாக தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டான். ஆனால்.. மிகவும் கவலைக்கிடமாக... குறிப்பிட்ட தாக்குதலில் அவன் வீரமரணம். நாங்கள் நண்பர்கள் எல்லோரும் மிகவும் ஆழ்ந்த அதிர்ச்சியுடன், இழப்பை தாங்கமுடியாது மூளை விறைச்சுப்போய் ஓர் ஓரமாக அவனது வீட்டிற்கு வெளியில் ஆளையாய் பார்த்து முளுசிக்கொண்டு இடையிடையே அவன் பற்றிய நினைவுகளை கதைத்துக்கொண்டு இருந்தோம். உள்ளே வீட்டில் அவனது வித்துடல் வைக்கப்பட்டிருந்தது. அவனது தாய் எனது நண்பனின் தாய்க்கு அவன் இயக்கத்தை விடுவதாக இருந்த கதைகளை எல்லாம் சொல்லி அழுதாள். எனது இன்னோர் நண்பன் பல்லை நெறுமிக்கொண்டு ஆத்திரத்துடன் சொன்னான். இவனை தேசத்துக்கு பெரிய சேவை செய்வதுபோல் துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று இயக்கத்தில் சேர்த்துவிட்டவன் தற்போது அவுஸ்திரேலியாவில் ஜாலியாக வாழ்கின்றான். ஆனால் படிப்பில் மிகவும் கெட்டிக்காரனான இவன் இயக்கத்திற்கு சென்று இளம்வயதிலேயே மாண்டுபோனான் என்று. உலகம் இப்படித்தான்... கொஞ்சம் உணர்வு உள்ளவர்களை ஏணியாக பாவித்து - உங்கள் முதுகில் ஏறி தான் முன்னேறிக்கொள்ளும். ஆனால்.. ஏணி இறுதியில் கைவிடப்பட்டு ஓர் நாளில் ஒன்றுக்கும் உதவாதது என்று உடைத்தெறியப்படவேண்டியதுதான். எல்லோரும் போராட்டம், தாயகம் என்று சேர்ந்துதான் நிற்பார்கள். ஆனால்.. ஓர் சந்தர்ப்பத்தில் யதார்த்தத்தில் வரட்டு கெளரவம் வந்ததும்... கல்வித்தகுதி, பணம், பதவி இவற்றையே பார்த்து இவற்றுக்கே மதிப்பு கொடுப்பார்கள். ஓடாக தேய்ந்து உண்மையாக போராடி இவர்களுக்காக தமது வாழ்க்கையை வீணாக்கியவர்கள் கல்வியும் இன்றி, பணமும் இன்றி, பதவியும் இன்றி, வாழ்க்கையை தொலைத்துவிட்டு பயங்கரவாதி என்கின்ற பெயருடன் மாண்டு போகவேண்டியதுதான். கடைசியில் கொடுப்பதற்கு மட்டும் அவர்களிற்கு மாவீரர் என்று நல்லதோர் பட்டம் வைத்து உள்ளார்கள். இறுதியில் மாண்டபின்னரும் இந்த சுயநலப்பேய்களுக்காக அந்த புனித ஆத்மன்கள் சேவகம் செய்கின்றார்கள்.

Edited by கரும்பு

நாட்டில் கூட யாழ்ப்பாணம்,,மட்டக்கிளப்பு,திருகோண்மலை என முக்கிய பிரதேசங்களில் தமிழர்களை ஓரளவிற்கு நிம்மதியாக வாழவிட்டு வன்னியில் இருந்த மக்களையே அரசு போட்டு வாட்டி எடுக்கின்றது.தமிழர்களுக்குள்ளேயே இவர்களை ஒதுக்கி வைக்கும் ஒரு நிலை காணப் படுகின்றது,எல்லா வழியிலும் தமிழனை பிளவுபடுத்தி தலை நிமித்தமுடியாமல் பண்ண அரசு முயலுகின்றது .இங்கே என்னடா என்றால் சும்மா போராட்டம்,தேசியம் என்று முழங்கிக்கொண்டிருந்தவர்கள் இந்தியனுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் திளைத்திருக்கின்றார்கள்..

வேசம் போடுவதே தமிழனுக்கு வேலையாகிவிட்டது.போட்ட வேசத்திற்கு ஏதோ ஒரு மேடையில் (வானொலியாகட்டும்,பத்திரிகையாகட்டும்,இணையமாகட்டும்) வந்து ஆடித்தானே ஆக வேண்டும்..

இந்த ------------களை விட அரசுடன் சேர்ந்து ஒரு கொஞ்ச தமிழனுக்காவது உதவுகின்றவர்கள் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

Rob Ford is defending comments he made last night at a televised debate after mayoral candidates were asked how Toronto should welcome Tamil migrants.

“Right now we can’t even deal with the 2.5 million people in this city. I think it is more important to take care of people now before we start bringing in more people,” Mr. Ford said during the debate.

“There’s going to be a million more people, according to the official plan (which I did not support) over the next ten years coming into the city. We can’t even deal with the 2.5 million people. How are we going to welcome another million people in? It is going to be chaotic. We can’t even deal with the chaos we have now. I think we have to say enough’s enough.”

His opponents pounced on the remarks and painted the Etobicoke councillor as anti-immigration, which Mr. Ford flatly denies.

“Of course I support immigration,” he said in a statement today. “All I said last night was that I think we need to get our own house in order, and before we add a million people over 10 years to our city, we should ask ourselves if our infrastructure can handle that.”

He refused to get into the issue with Rocco Rossi, however, who confronted him after the two had completed interviews with reporters in Nathan Phillips Square.

Mr. Ford dismissed the accusations as “political” and walked away.

“The real Rob Ford believes that more immigration means more taxes, as opposed to more economic growth for the city,” said Mr. Rossi. “I am offended, I am appalled and I believe this man is unfit to be mayor.”

George Smitherman called him a “serial divider”, while Joe Pantalone demanded that he apologize.

“We all get the point that people in Toronto have been nickled and dimed and that this is a source of anger,” said Mr. Smitherman, addressing the issue that has apparently propelled Mr. Ford to the top of the polls. “But if people are looking to choose a mayor simply on the basis of one person’s willingness to buy his own paper clips, and discard the responsibilities that a mayor has to actually bring us together, then I think that will be a problem for Toronto,” said Mr. Smitherman.

“It’s not a question of economics, even though economics come into it. This city is a city of immigrants… And immigrants to us are what drive this economy,” said Mr. Pantalone.

Added Sarah Thomson: “When you cut off the refugees and say we don’t want them in Toronto, you’re not for immigration.”

Read more: http://news.nationalpost.com/2010/08/18/mayoral-candidate-rob-ford-defends-controversial-immigration-comments/#ixzz13TSTTHqX

  • தொடங்கியவர்

டொராண்ரோ நகரசபை எல்லைக்குள் போட்டியிட்ட பல தமிழர்கள் இரண்டாவது இடத்தில் வந்திருந்தார்கள், பலரும் அதிகளவில் தமிழரல்லாத கனேடியர்களின் வாக்குக்களையும் பெற்றிருந்தார்கள். இது ஒரு ஆரோக்கியமான அரசியல் வளர்ச்சி.

அனைவரும் இளையவர்கள் என்பதால் வரும் காலங்களில் இவர்கள் போட்டியிட்டால் வெல்லும் சந்தர்ப்பங்கள் உண்டு.

லோகன் கணபதி முன்னாள் புளொட் உறுப்பினர். பணமே இவர்களது குறிக்கோள்

முன்னாள் புளட் உறுப்பினர் என்பதால் இப்படி கூறுகின்றீர்களோ? அப்படியென்றால் மிகுதி ஆக்கள் எல்லாம் குணக்குன்றுகளோ? இவருக்கு மட்டும் பணம் குறிக்கோள் மற்றவர்களுக்கு எல்லாம் குணமே குறிக்கோளா? அடிப்படையில் எல்லாருமே சுரண்டல்தானுங்கோ.

கரும்பு, இப்போ உங்கள் பிரட்சனை என்ன???? .... இங்கு நீங்கள் ஒப்பாரி பாடிய ஒருவருக்கு, சேர்ந்து எல்லோரும் கட்டிப்பிடித்து அழவில்லை என்பதாலேயா, இந்த எழுர்த்தெல்லாம்????????? ... எழுத வேண்டாம் என்று விட்டால் .... உங்கள் எல்லை மீறிப்போகிறது!!! .... நீங்கள் வேண்டின், கள நிர்வாகம் அனுமதிப்பின் ஒப்பாரி பாடப்பட்டவரின் மறுபக்கங்களை இங்கு கொண்ர்கிறேன்! விருப்பமா???? ... நம்புங்கள் என்னிடம் பல தரவுகள் உள்ளன!

கரும்பு, இப்போ உங்கள் பிரட்சனை என்ன???? .... இங்கு நீங்கள் ஒப்பாரி பாடிய ஒருவருக்கு, சேர்ந்து எல்லோரும் கட்டிப்பிடித்து அழவில்லை என்பதாலேயா, இந்த எழுர்த்தெல்லாம்????????? ... எழுத வேண்டாம் என்று விட்டால் .... உங்கள் எல்லை மீறிப்போகிறது!!! .... நீங்கள் வேண்டின், கள நிர்வாகம் அனுமதிப்பின் ஒப்பாரி பாடப்பட்டவரின் மறுபக்கங்களை இங்கு கொண்ர்கிறேன்! விருப்பமா???? ... நம்புங்கள் என்னிடம் பல தரவுகள் உள்ளன!

புரியவில்லை. மேலுள்ள செய்தி சம்பந்தமாக கருத்து கூறினேன். தாங்கள் ஏதோ சம்பந்தமில்லாமல் கூறுகின்றீர்கள். தங்களுக்குத்தான் ஏதோ பிரச்சனை போல் உள்ளது. அது என்ன எல்லை? நீங்கள் என்ன யாழ் கருத்துக்களத்தில் எல்லைக்காவல்படையில் பணியாற்றுகின்றீர்களா?

சில வருடங்களுக்கு முன்னுக்கு .... உந்த கனடிய தேர்தலில் பங்கு கொள்ளும், எம்மினத்தில் பிறந்ததாம்(?) ஒரு மிருகம், அதன் பெயர் நமு பொன்னம்பலமாம்!! .... அதனை ஒருவர் சந்தித்த போது நேரே சொன்னாராம், "நீ செய்யும் இத்தகைய கேவலம் கெட்ட செயல்களை விட, உன் உடைகளை ஒரு நாளுக்கு சில மணி நேரமாவது களைந்து, உன் உடலை விற்றுப்பிழைத்தாலும், அது மேலானது" என்று! ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.