Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழ்த் தூதரையே நியமிக்க வேண்டும் : வீரமணி

Featured Replies

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய வீரமணி, ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,

"திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பேரணியும் நடைபெறும்.

இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சியிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை இன்றும் தொடர்கிறது.

ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசு நேரடியாக தலையிட்டு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தனி அமைப்பு உள்ளது.

தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். தமிழக சட்டப் பேரவையிலும் இது குறித்துத் தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி, அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். பிற்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதே தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் பட்டதாரிகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் தமிழில் தேர்வுகளை எழுதும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28083

யாரை நியமித்தாலும் என்ன நடக்கப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கருநாயிற்குக் கு.. கழுவும் வீரமணி போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு கருநாய், சிதம்பரம் போன்றவர்கள் தமிழர்கள் என்பது தெரியாதோ என்னவோ??!! ஏனென்றால் இந்தத் தமிழர்கள் சேர்ந்துதானே எம்மை அழித்தார்கள்? இனிமேல்த்தான் தமிழர் ஒருவரை தூதுவராக அமைத்து அழிக்க வேண்டுமா?? மடப்பயல் !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

தானைத்தலைவரின் கொள்ளுப்பேரன் பேத்திகளுக்கு வேலை தேடுறாரோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

zJJ%20Give%20a%20dog%20a%20bone.jpg

தேர்தல் நெருங்குது இல்லை ... தலீவர் சொல்லிவிட்டு இருப்பார் :lol:

இந்த கேடு கெட்ட வீரமணி, மே18இற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னம் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் நடந்தேறி, இலங்கை யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, 40000 மக்கள் பலி எடுக்கப்பட்டதில் .... இவனுக்கும் பங்கிருக்கிறது!!! ... இவனும் கருணாநிதியுடன் தான் நின்றான்! ஏன் இப்போ திருமாவும் கதைக்கிறார்!!!!!!!!! எங்கிருந்தவர்கள் இவர்கள் எல்லாம்? 40000 உயிர்கள் ஓரிரு தினங்களில் காவு கொள்ளப்பட்டபோது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேடு கெட்ட வீரமணி, மே18இற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னம் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் நடந்தேறி, இலங்கை யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு, 40000 மக்கள் பலி எடுக்கப்பட்டதில் .... இவனுக்கும் பங்கிருக்கிறது!!! ... இவனும் கருணாநிதியுடன் தான் நின்றான்! ஏன் இப்போ திருமாவும் கதைக்கிறார்!!!!!!!!! எங்கிருந்தவர்கள் இவர்கள் எல்லாம்? 40000 உயிர்கள் ஓரிரு தினங்களில் காவு கொள்ளப்பட்டபோது!

இப்ப திருமாவும் காங்கிரசுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றது. தங்கபாலு திருமா துரோகம் செய்துவிட்டதாக அறிக்கைவிட்டிருக்கிறார். காங்கிரசுக் கூட்டணியை விட்டு விலகும் சந்தர்ப்பம் வந்தால் திருமா காங்கிரஸ் தான் தமிழர்களை அழித்தது என்று சொல்வார். இல்லாவிட்டால் காங்கிரசுக்கு எதிராகக் கருத்துக் கூற மாட்டார். அதே மாதிரி வீரமணி அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுகவுக்கு பிறகு ஆதரவு தருவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.