Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழி குடியேற்றம் மனதுள் இரத்தத்தைக் கசியப் பண்ணியிருக்கிறது வாழ் நிலத்திற்கு போராட அரசு நிர்பந்திக்கிறது – GTN இற்காக நவராஜ் பார்த்தீபன்

Featured Replies

13 November 10 03:08 am (BST)

மீண்டும் அரசு தமிழ் மக்களை போர் வழி முறைகளுக்குத் தள்ளுகிறது. போர்., அழிவைத் தந்தது. பிரிவுகளைத் தந்தது. இழப்பை தந்தது. இறுதியில் நாம் உலகத்தினால் அதன் சூழ்ச்சிகளால் தோற்றுப்போனோம் என்றாலும் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்ற மன உழசைசலை, விரக்தியை தமிழ் மக்கள் இன்று மீண்டும் உணருகிறார்கள். போர் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிற இன்றைய நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை. மறுமுனையில் தீர்வுக்கான சூழலை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீவில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்ற இனஅழிப்புத் திட்டத்தை கடுமையாக முன்னெடுக்கிறது. ஆயுதப் போர் முடிந்த பின்னர் நிலப்போர், அதிகாரப்போர், இனப்போர், கலாசாரப்போர், வணிகப்போர் என்று தமிழர்களினக் மனம் வெடித்து இரத்தம் கசிந்து வழிந்து கொட்டுமளவில் யுத்தத்தை தொடர்ச்சியாக அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

navatkuli02.jpg

இன்று (11.11.2010) தமிழ் பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் காலையாக விடிந்திருக்கிறது. தமிழ் மக்களின் தாயகத்தில் சிங்கள மக்கள் பங்கு கேட்டு புகையிரத நிலையத்தில் வந்து தங்கியிருந்து எத்தகைய நாடகத்தை தொடக்கினார்கள் என்று முன்னைய பதிவொன்றில் எழுதியிருந்தேன். அதன் வெளி அரங்க நாடகத்தின் அடுத்த கட்டமாக குறித்த சிங்களக் குடும்பங்கள் நேற்றிரவு (10.11.2010) நாவற்குழிப் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் காயங்களில் மேலும் காயத்தை ஏற்படுத்தி அதனை மேலும் கீறி சீண்டும் நடவடிக்கையாக இந்தக் குடியேற்ற நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இனரீதியாகவும் நில ரீதியாகவும் ஒடுக்கும் அரசின் இந்தச் திட்டமிட்ட குடியேற்றத் திட்டம் தமிழர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. இனக்குடி வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் இத்;தகைய நடவடிக்கைகள் அதிகாரத்தையும் இருப்பையும் சிதைக்கும் பயங்கரமானவை.

"..........

குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது

நிலம் அள்ள வரும் கைகள்

யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன

இந்த யாழ் உடைந்து போகட்டும்!

அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!!

என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன்

யார் யாரோ வந்திறங்கி

யாழெடுத்து எறிகிறார்கள்

வானத்தை பிளந்து எட்டி யாழ் முகங்களை மறைக்கும்

விளம்பரப்பலகைகளின் நிழலில்

அடுக்கிவிடப்பட்ட குளிரூட்டும் இருக்கைகளில்

அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள

கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன

யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டுள்ளனர்

யாழோடு நிலத்தை

யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத்

தின்று கொண்டிருக்கின்றனர்

நகரெங்கும் நிலமெங்கும்

உடைந்த யாழ்கள் கால்களுக்குள் மிதிக்கப்படுகின்றன

யாழ்நிலத்தில்

நரம்புகள் அறுந்தெழும் துடிப்போசையை

அன்றைய மாலைநேரம் அவர்கள் தின்றாடினர்

............"

(யாழ் நிலம்)

navatkuli04.jpg

ஈழத் தமிழர்கள் வாழ் நிலத்திற்காகவும், இனத்தின் அடையாளத்திற்காகவும், உரிமைக்காகவும் இருப்புக்காகவும்தான் போராடி இன்று உலகத்தினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்களின் தாய் நிலத்தை துண்டு துண்டாக பிரித்து அள்ளிச் செல்ல இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் குறித்தும் அன்றைய சூழல் குறித்தும் மீண்டும் அவசியப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் போரை உருவாக்கும் நிலமைக்கு வழி வகுக்கிறது. யாழ்ப்பாண அரசுகளுடன் பிரபாகரன் காலம் வரை தமிழர்கள் எத்தகைய அரசில் நிலமைகளுடன் வாழ்ந்தார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது. தமிழரசுகளின் தலை நகரங்களையும் இராஜதந்திர நகரங்களையும் குறி வைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் தமிழ் மக்களை வரலாற்றுப் பாடங்களை மீட்க வைக்கிறது.

அரசாங்கம் ஏன் இத்தகைய வெளிப்படையாகவும் ஆக்கிரமிப்புத் தன்மையுடனும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது? மனிதாபிமானக் கேள்விகளை நிராகரித்து ஆக்கிரமிப்புக்களையும் அடாவடித்தனங்களையும் வன்முறைகளையும் ஒடுக்கு முறைகளையும் வெளிப்படையாக கட்டவிழ்த்து வெளிப்படையான தமிழ் இன ஒடுக்கலை செய்யும் அரசாங்கம் இன்று இந்த மக்களை வைத்து இன மற்றும் நில ஒடுக்குமுறைப் போரை வெளிப்படையாக கேட்பாரின்றி கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. உலகமெங்கிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நிலத்தை அள்ளும் சர்வதேச அரசியல் இதனைப் பார்த்து என்ன செய்யப் போகிறது?

reseidp1.jpg

இலங்கை அரசு நடத்திய கொடும் போரில் காயமுற்ற தமிழர்களின் கண்ணீர் இன்னும் காயவில்லை. இரத்தம் இன்னும் காயவில்லை. தமிழர்கள் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. அகதிகளாக தெருவெங்கும் உலகமெங்கும் அலைந்து கொண்டிருக்கையில் உறவுகளை பறிகொடுத்து உறவுச் சோகத்தில் துடித்துக் கிடையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல தமிழர்களின் இருப்பிடங்களை கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

யாழ் நிலம் தமிழர்களின் தனித்துவமான பகுதி. இலங்கையிலோ அல்லது ஈழத்திலோ மிகவும் முக்கியமான பகுதியான யாழ்ப்பாணம் தமிழர்களின் நிலம் என்று உலகெங்கிலும் அறியப்பட்டது. ஈழப்போரின் இறுதி நாட்களில் நில வெறி கொண்ட அரசு அதை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்த நடவடிக்கைகளும் ஈழப் போராளிகளை அழித்த விதத்தின் சாட்சியங்களும் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஈழத்து மக்களின் மனமோ ஆறாத காயத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. வன்னியை அதன் அதிகாரத்தை கைப்பற்றி யுத்தம் தின்ற சனங்களின் வாழ்வையும் உரிமையையும் நசித்து வரும் அரசு இப்பொழுது யாழ் நிலத்தை தூண்டாடுவதற்கான கைங்கரியங்களில் இறங்கியுள்ளது.

"...................

சிங்கங்கள் ஒரு நாள் இந்த நகரில் புகுந்தன

பிள்ளைகளையும் கணவன்களையும்

இழுத்துச் சென்றன

மண் தின்னும் சிங்கங்கள்

யாழ் அரசின் தொன்மங்களை கண்டலரின

தொல் சுவர்களின் கற்களை உடைத்துக் கொண்டு செல்கின்றன

சிங்கங்களே! நிலம் தின்று களித்து

எங்கள் துயரை பெருக்காதீர்கள்

வாழ் நிலமின்றி தவிக்கும் நமது குழந்தைகள்

உங்கள் கண்களுக்கும் பற்களுக்கும் அஞ்சிக் கிடக்கின்றனர்

......"

(யாழ் நிலம்)

ஈழத் தமிழ் மக்கள் எதற்காகப் போராடினார்களோ அதையே மீண்டும் அவசியப்படுத்தும் சூழலை இந்த நடவடிக்கைகள் உருவாக்குகின்றன. காயம் பட்டு விழுந்து போயுள்ள தமிழர்களை மீண்டும் அரசு வதைத்து போர்ச் சுழலுக்குள் தள்ளுகிறது. இவர்கள் இந்த நமது இனத்தை ஒரு பொழுதும் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை அன்று முதல் தெளிவாக தமிழ் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை தந்து அமைதியான வழிகளில் செயற்பட ஈழப் போராளிகள் அழைத்த பொழுதும் அரசு அழிவு யுத்தத்தை விரும்பி தமிழ் மக்களின் போராடும் சக்தியை அழித்தது. தமிழர்களைப் போராட முடியாத நிலைக்குத் தள்ளி நிலம் அள்ளும் நடவடிக்கையை விரிவாக்க நினைத்தது, ஆனால் வாழ் நிலம் பறிக்கப்படும் பொழுது அதன் விளைவுகள் தவிர்க்க முடியாது ஏற்படப் போகின்றன.

reseidp3.jpg

வன்னியில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் இராணுவக் குடியிருப்புக்கள் என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மல்லாவி போன்ற முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில் பெரும் இராணுவ முகாங்களை நிறுவி அவற்றை பொது மக்களிடம் கையளிக்க மறுக்கப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இருந்த இடங்கள் எல்லாம் இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் என்று முத்திரையிடப்பட்டு அவை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் கோயில்கள், மக்கள் அலுவலகங்கள், மக்களின் வீடுகள் போன்றன அடங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் உயர் இராணுவ பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வளம் மிக்க பகுதிகளை அரச படைகள் கையகப்படுத்தி வைத்திருக்கின்றன. அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும், ஒவ்வொரு அமைச்சர்களும், ஜனாதிபதியும் வரும் பொழுது இந்த விடயத்தை காட்டி மக்களை சந்தித்து அரசியல் செய்து விட்டுப் போகிறார்கள். இன்றுவரை வலிகாமம் வடக்குப் போன்ற உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக புகையிரதப் பாதைகளிலும் உறவினர் வீடுகளிலும் என்று தெருக்களில் அலைகின்றனர்.

நிலத்திற்குரிய மக்களுக்கு அவலத்தை வழங்கி விட்டு தெற்கு மக்களை கொண்டு வந்து குடியமர்த்தி தமிழ் மக்களின் புண்ணை மேலும் காயப்படுத்தப்படுகிறது. அந்த மக்களை விசேட பாதுகாப்புடன் கொண்டு வந்து தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பளிக்கப்பட்டு வசதிகளை செய்து கொடுத்து "இங்கு வாழுங்கள்" என்று அதன் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது. போலி அகதிகளாக வந்த இந்த மக்கள் சிங்கள பேரினவாத புத்தியால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். தமிழ் இனத்தின் துயரை புரிந்து கொள்ளாதவர்கள்.

இந்த மண்ணைப் பிரிந்த முஸ்லீம் மக்கள் இன்றளவில் திரும்பவில்லை. அவர்களை குடியேற்றுவதற்கான காலம் கணியவில்லை என்று தள்ளிச் செல்லப்படுகிறது. யுத்தம் வன்முறை அச்சுறுத்தல் என்று இந்த நாட்டை விட்டு வெளியேறச் செய்த லட்சக் கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இன்றளவில் தாயகம் திரும்பவில்லை. தாயகத்தை வந்து பார்த்துச் செல்லக் கூட முடியாத நிலமை. இந்த நிலத்து மக்களின் துயரம் இப்படி எத்தனை விதத்தில் வழிந்தோடுகிறது? ஆனால் யாழ்ப்பாணத்தில் முன்பொரு காலத்தில் வந்து தொழில் செய்த சிங்;களவர்கள் இன்று குடும்பம் குடும்பமாக வந்து காணி கேட்டு அடம்பிடித்து தங்கள் அரசைக் கொண்டு குடியேற்றம் செய்யும் வரை இன்றைய நிலமை தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செல்கிறது.

நாவற்குழிப் பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் 1995இல் நடந்த சந்திரிகா அரசின் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்கள். அவர்கள் இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நியைலில் குறித்த மக்கள் இன்று அந்தப் பகுதியில் மீளக் குடியேறச் சென்றிருக்கிறார்கள். இராணுவ ரீதியாக அந்த மக்களின் மீள்குடியேற்றம் முறியடிக்கப்பட்டு அந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். தமிழ் மக்களை இலங்கை இராணுவம் காலம் காலமாக எப்படி முறியடித்து அழித்து வந்ததோ அதேபோல இன்றும் இலங்கை இராணுவம் வென்று தங்கள் மக்களை குறித்த இடத்தில் குடியேற்றம் செய்திருக்கிறது.

இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகளை சிங்கள இனவாதக் கட்சிகள் அனைத்தும் ஆமோதிப்பதுபோல பார்த்துக் கொண்டிருக்கின்றன. இன்று 32 குடும்பற்களை இவ்வளவு வெளிப்படையாக குடியேற்றி சாகசம் நிகழ்த்தும் இந்த அரசு தமிழ் மக்களின் இருப்பை ஆபத்தாக்கும் என்னென்ன நடவடிக்கைளில் இறங்கப் போகிறது என்பது தமிழர்களின் மனங்களில் பெரும் துயராகவும் அச்சமாகவும் கோபமாகவும் விரிந்துள்ளது. தமிழர்கள் யாருடைய நிலத்தையும் கேட்கவில்லை. அவர்கள் யாருடைய உரிமைகளையும் பறிக்கவில்லை. ஆனால் அறுபது ஆண்டுகளாக சிங்கள அரசுகளும் அந்த அரசுகளால் வழி நடத்தப்படும் மக்களும் தமிழரின் உரிமையை வாழ் நிலத்தை பறிக்கும் கனவோடிருப்பது ஏன்?

"..............

துப்பாக்கிகளாலும் அதிகாரச் சீருடைகளாலும்

நாங்கள் துரத்தபப்பட்ட பகுதியில்

யாரோ வந்தமர்கிறார்கள்

எங்களிடம் உள்ள இடர் நிரூபங்கள்

கொடுங் கைகளால் கிழித்தழிந்து போயிருக்கின்றன

அவர்கள் கொணர்த்திருக்கிற குளிர்ந்த நிரூபங்கள்

இந்த நிலம் உங்களுக்குச் நமக்குச் சொந்தமில்லை என்கிறது.

தங்கள் பெரும் மலைகள் போதாது என்று

எங்கள் நிலத்தில் பங்கு கேட்கின்றனர்

மண்ணுக்கடியில் இருக்கும் தொண்மைப்பொருட்களில்

புத்தரின் அரசமரக் கதைகள் எழுத முற்படுகின்றனர்.

கண் திறாதக்காது உறங்கும் புத்தரே

எங்கள் நகரமும் நாங்களும் எரியூட்டப்படுகையிலாவது

கண் திறந்திருக்கலாம்

அகலக்கால் வைத்திருக்கிற புத்தர் சிலைகளும்

இராணுவ சீருடையணிந்த புத்தர்சிலைகளும்

கண்களை இறுக மூடியிருக்கபடி நகர்கின்றன

கண்களற்ற புத்தரே

யாழெடுத்த தெருவில் எல்லாம்

உமது புதல்வர்கள் துவக்கெடுத்திருக்கின்றனர்

வாழ் நிலத்திற்காக சதாகாலமும் போராடும்

எங்களின் நிலத்தை துண்டாடிச் செல்லவும்

துகள்களை அள்ளித் தின்னவும் கொடும் கைகள் நீள்கின்றன

..................."

(யாழ் நிலம்)

தமிழ் மக்களின் நிலமும் வாழ்க்கையும் உரிமையும் பறிப்பதையே கனவாக்கிக் கொண்டிருக்கிற இலங்கைக்கு அரசு இதே வெறித்தனத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டி அந்த மக்களை தமிழர் தாயகத்தை நோக்கி அனுப்புகிறது. இலங்கை இராணுவ சீருடை தரித்த சிங்கள மக்கள் தமிழர் தாயகத்தில் அழிவுகளையும் அட்டகாசங்களையும் நிகழ்தினர். இப்பொழுது சீருடை தரிக்காத மக்கள் அழிவுகளையும் அட்டகாசங்களையும் நிகழ்த்துகின்றனர். தமிழ் மக்கள் வாழவே ஆசைப்படுகிறார்கள். அதுவும் தங்கள் சொந்த நிலத்தில் அச்சறுத்தலின்றி, ஆக்கிரமிப்பின்றி தங்கள் வாழ் உரிமைகளுடன் வாழ விரும்புகிறார்கள். வாழ்வுக்க்கான ஆசையும் வாழ வேண்டிய குழந்தைகளும் நமக்கு முன்னால் உள்ளவரை இத்தகைய குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நமது வாழ் நிலத்திற்காக போராடியே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோசத்தை.... தட்டிப் பறித்து, சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்த... பெருமை எல்லாம்....

ஒட்டுக்குழுக்களில் இருந்து, காட்டிக் கொடுத்தவர்களையே... சாரும்.

இன்னும் இவர்கள், அரசியல் கதைத்துக் கொண்டிருப்பது தான்..... வேடிக்கை.

"ஈழத் தமிழனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோசத்தை.... தட்டிப் பறித்து, சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்த... பெருமை எல்லாம்....

ஒட்டுக்குழுக்களில் இருந்து, காட்டிக் கொடுத்தவர்களையே... சாரும்.

இன்னும் இவர்கள், அரசியல் கதைத்துக் கொண்டிருப்பது தான்..... வேடிக்கை."

உண்மை. அவர்களை எமக்கு நன்றாக தெரிகின்றது. ஆனால், நாம் இதையும் மீறி தாண்டி வர வேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம்?, அந்த வழிகளை தேடியும், பலம் அடையவும் வைக்கவேண்டும்.

"ஆயுதப் போர் முடிந்த பின்னர் நிலப்போர், அதிகாரப்போர், இனப்போர், கலாசாரப்போர், வணிகப்போர் என்று தமிழர்களினக் மனம் வெடித்து இரத்தம் கசிந்து வழிந்து கொட்டுமளவில் யுத்தத்தை தொடர்ச்சியாக அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது."

புலம் பெயர் தமிழர் தமது பொருளாதார அரசியல் பலன்களை பலப்படுத்தி அதன் மூலம் ஒரு வலுவான உண்மை பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.