Jump to content

எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? :o


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tim Hortonல் சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் என்னுடன் கறுப்பினப் பெண்கள் இருவர் சகபணியாளர்களாக இருந்தார்கள் ஒருத்தி யூனிவேர்சிற்றியில் படிப்பவள் எனக்கு மிகவும் நெருக்கமானவளாக இருந்தாள். வேலையில் கிடைக்கின்ற இடைவெளிகளில் எங்களின் வாழ்க்கைமுறைகளை நான் அவளுக்கும் அவர்களின் வாழ்க்கைமுறைகளை அவள் எனக்கும் பகிர்ந்து கொள்வதுண்டு. அவர்களுடைய....., அந்தப் பெண்சார்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் பெண்கள் மீதான ஒரு ஒடுக்குமுறையை கேட்டபொழுது நான் அதிர்ந்தே போனேன். எப்படி இவற்றை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? தன்னைச் சூழ்ந்த இன்னலை அனுபவித்த தாயே மகளை அத்தகைய நிலைக்கு தள்ளும்படி அந்தசமூகத்தால் ஆளப்படுகிறாள். என்ன கொடுமை இவற்றைப்பற்றிபேச நினைக்கும்போதே உடல், மனம் எல்லாம் நடுங்குகிறது. நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள் நண்பர்களே.

Link to comment
Share on other sites

சோமாலிய நண்பர் கூறினார் இதனைப்பற்றி.முஸ்லிம்களின் ஸெரியா சட்டப்படி பெண்களின் அறுவை சிகிச்சை மூலம் (pleasure point) எடுக்கப்படுவதாக கூறினார்.எல்லா இஸ்லாமியர்களும் இதனை பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஆண் அடக்கு முறையின் உச்சக்கட்டம் என்பது மட்டும் திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பாவப்பட்ட பெண்களின் முடக்கப்பட்ட உணர்வுகளைப் புரியாமல் மற்றவர்கள் கதைக்கும் விமர்சனங்கள் கொடியவை. என் காதுபட கேட்ட விமர்சனம்

ஆண்களின் வாயிலிருந்து வெளிப்படும் விமர்சனம்

இந்தச் சோமாலியாக்காரிகள் கல்லு மாதிரி ஸ்ரோங்கா நிற்பார்கள். எவ்வளவு கடினமான நீண்ட கலவி செய்தாலும் அவர்கள் களைப்பதில்லை.

பெண்களின் வாயிலிருந்து வெளிப்படும் விமர்சனம்

இவர்களில் அனேகமானவர்கள் கணவனுடன் சேர்ந்து வாழ்வதில்லை அநேகமாக சிங்கிள் மதராகத்தான் இருக்கிறார்கள். ஆண்களுடன் வாழ்வதில் பிடிப்பில்லாத பெண்கள் என்பதாகும்.

எவ்வளவு கொடிய சோகம் அவர்களின் இயல்பான வாழ்க்கையை மறுத்துத் திணிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த விமர்சன வாய்களுக்குத் தெரிய நியாயமில்லை.

Link to comment
Share on other sites

இது என்ன கொடுமை. காட்டுமிராண்டிக் கூட்டம்.

ஊரிலும் முஸ்லிம் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்வதாக சொல்வார்கள். அங்கேயும் இதேபோல pleasure point ஐத்தான் எடுக்கிறார்களோ தெரியாது. இது பெண்கள் மீதான அடக்குமுறை மாத்திரமல்ல இவ்வின ஆண்களின் தாழ்வுமனப்பான்மையையும் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

ஆண்களுக்கு சுன்னத்து பெண்களுக்கு இது என்ன கொடுமையடா சாமி.....பெண்கள் சுழிச்சுப்போட்டு போயிடுவார்கள் என்ற பயம்தான் போல.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு வலிக்கவில்லை.

லட்சம் பேர் ஊர்வலம் போய் சாட்சியுடன் எடுத்துக்கூறியும்

லட்சம் கமராக்கள் படம் பிடித்துக்காட்டியும்

கதற கதற உயிருடன் போட்டு 50ஆயிரம் மக்களை புதைக்க அனுமதித்த உலகிடம் நீங்கள் நீதியை எதிர்பார்க்கின்றீர்கள்

ஆனால் இது எனக்கு வலிக்கவில்லை.

இதைவிட நான்என் இனத்தில் கண்டவை கேட்டவை கொடுமையானவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

மூக்கிலை,காதிலை, தொண்டையிலை....... சின்ன ஒரு அறுவைச் சிகிச்சை செய்யவே, நாலு தரம் யோசித்து..... நாலு கையெழுத்து வாங்கித் தான் செய்வார்கள். இந்த அறுவைச் சிகிச்சை செய்ய வற்புறுத்தப் படும் மக்களை, உலகம் கவனிக்காமல் விட்டது கவலைக்குரியது.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.