Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு

சி.சந்திரமௌலிசன்

இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும்

நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

“கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர்.

இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால்

இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

அதற்கான முதல் முயற்சி இது.

இது தொடர்பாக தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்கள் இரண்டாகும், அவை:

1) சிலி நாட்டு அதிபர் Pinochet பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார் அது போல் ராஜபக்சேயும் கைது செய்யப்படுவார்.

2) பான் கீ மூன் தலைமயில் ஐ.நா எடுக்கும் போர்க்குற்ற முன்னெடுப்பு.

சிலி அதிபரின் பிரித்தானிய கைது விவகாரம்

சிலி நாட்டு அதிபர் பிநோசெயை போர்குற்றம், இனப்படுகொலை, சித்திரவதை போன்ற குற்றங்களுக்காக பிரித்தானியாவில் கைது செய்து இஸ்பெயினுக்கு நாடுகடத்த எடுத்த முயற்சி தோல்வி என்பதுதான் உண்மையான கதை.

சிலி அதிபரின் கைது இஸ்பெயின் நீதிமன்ற பிடியாணைக்கு அமைய நடைபெற்ற விடயம். இஸ்பெயின் நீதியரசர் Baltasar Garzón விடுத்த பிடியாணைக்கு அமைய சர்வதேச போலீசார் சர்வதேச கைது உத்தரவை பிறப்பித்திருந்தனர். அதற்கு அமைய சிலி அதிபர் பினோச்சே பிரித்தானியாவில் அக்டோபர் 1998 இல் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பிரித்தானியாவின் மஜிஸ்ரேட் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், பிரபுக்கள் சபை வரை சென்ற இந்த வழக்கில் அவர் இறுதியாக தனது நாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப் பட்டர் என்பது தான் முக்கியமான விடயம். அதுவும் போதாது என்று ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடாக £350000 (மூன்றரை இலட்சம்) பவுன்கள் பிரித்தானிய நீதிமன்றம் வழங்கி இருந்தது.

பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அரச வழக்கறிஞர் தெரிவித்த பின்வரும் கருத்து மிக முக்கியமானது

அதனை அப்படியே தருகின்றேன் “The Crown Prosecution Service (which is conducting the proceedings on behalf of the Spanish Government) while accepting that a foreign Head of State would, during his tenure of office, be immune from arrest or trial in respect of the matters alleged”

அதாவது “பதவியில் இருக்கும் அரச அதிபர் ஒருவருக்கு கைதில் இருந்து விதிவிலக்கு உண்டு ….” (ஆதாரம் பிரித்தானிய பாராளுமன்ற பதிவுகள்)

பின்வரும் இணைப்பில் நான்காம் பந்தியை பார்க்க http://www.publications.parliament.uk/pa/ld199899/ldjudgmt/jd990115/pino01.htm

மேலும் பிரித்தானியாவில் வாழ்ந்த மூன்றுபேர் பிநோசெக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முயன்ற போது பிரித்தானிய சட்ட மா அதிபர் திணைக்களம் அதற்கு அனுமதி வழங்கவில்லை (ஆதாரம் http://news.bbc.co.uk/1/hi/uk/203239.stm) கீழிருந்து ஆறாவது பந்தியை பார்க்கவும்.

அண்மைக்காலங்களில் அரசியல் தலைவர்களின் கைதையும், தண்டனையையும் இலக்கு வைக்காது அரசியல் அவமானத்தையும், அரசியல் “சாகச” த்தையும் மையமாக கொண்டு பல அரசியல் தலைவர்களை கைது செய்வதாக மிரட்டல்கள் பிரித்தானியாவில் எழுந்தன. இதில் முக்கியமாக, இஸ்ரேலிய எதிர்க்கட்சி தலைவர் லிவினி, அமெரிக்க இராஜதந்திரி Henry Kissinger, சீன வர்த்தக அமைச்சர் Bo Xilai போன்றவர்களுக்கு எதிராக இத்தகைய சர்ச்சை எழுந்தது உண்மையே. இந்த சட்டத்தில் உள்ள இறுக்கமின்மை காரணமாக சாதாரண ஜே.பி தர மஜிஸ்ரேற்கூட இத்தகைய உத்தரவை பிறப்பிக்கும் உரிமை உண்டு. இது சரியான ஆதாரங்களை பின்னர் சமர்ப்பித்தல், ஜூரிகள் அதனை பின்னர் பரிசீலித்தல் என்ற அடிப்படையில் உண்டு.

கடந்த 2010 செப்டம்பரில், பாப்பரசர் பிரித்தானிய வந்த பொழுது கத்தோலிக்க மதகுமார் செய்த பாலியல் குற்றங்களுக்கு பாப்பரசர் பொறுப்பு என கைது முயற்சி இதே சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டபோது வத்திக்கான் “நாட்டின் தலைவர்” என்ற அடிப்படையில் அவரை கைது செய்ய முடியாது என பிரித்தானியா தெரிவித்திருந்தது . ஆதாரம் Telegraph news http://www.telegraph.co.uk/news/newstopics/religion/the-pope/7989636/Pope-wont-be-arrested-in-UK-protesters-admit.html

அந்த வரிகளை அப்படியே பிரதி செய்கின்றேன் “But leaders of the Protest the Pope coalition now admit that the Pontiff cannot be arrested as Britain acknowledges him as a head of state, granting him sovereign immunity from criminal prosecution”.

நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த மக்கள் வாழும் பிரித்தானியாவில் உள்ள இந்த நிலைமையால் உலகின் எந்த தலைவரும் பாதுகாப்பாக வருதல் மற்றும் பிரித்தானியாவின் இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இதனை பிரித்தானியா விரும்பவில்லை.

ஆதாரம் பிரித்தானிய நீதியமைச்சின் 17 மார்ச் 2010 மற்றும் 22 ஜூலை 2010 திகதியிட்ட அறிக்கைகள். இவற்றை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்:

New rules on universal jurisdiction

http://www.justice.gov.uk/news/newsrelease220710b.htm

Arrest warrants – universal jurisdiction. Note by the Ministry of Justice

http://www.justice.gov.uk/publications/docs/arrests-warrants.pdf

மேலும் இத்தகைய சட்டம், பின்வரும் நாடுகளிலும் உண்டு:

Autralia – section 13 of crimes Act 1914

New Zeland- section 13 of crimes Act 1914

France-constitution de partie civile tite principle article 689 and 55 of the constitution

Spain

Canada – section 507 criminal code

Ireland-section 11(1) petty seasons Act , section 3(5) prosecution of offenses act 1974

இவற்றை அமுலாக்க அந்ததந்த நாட்டு அரசுகளின் தமிழர்களுக்கு சார்பான அரசியல் நிலைப்பாடு (political commitment) முக்கியமான தேவை.

முள்ளிவாய்கால் நிலைமைக்கு சர்வதேச ஆதரவு இல்லாமற்போனது முக்கிய காரணியாகும். இந்த சர்வதேச ஆதரவை திரட்ட செயல்பட வேண்டியவர்கள் புலம் பெயர் தமிழர்கள் தான். இது சிறிதேனும் நடைபெறவில்லை இதுவும் தோல்வியின் முக்கிய காரணிகளில் ஒன்று. இது இராஜ தந்திர உறவுகளை வளர்ப்பதாலேயே சாத்தியம். அதனை செய்யாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி அளிக்காது.

யாரும் வழக்கை தொடரலாம். வழக்கு வைத்தல் வேறு வெற்றி அடைதல் வேறு. பினோச்சே பெற்ற நஷ்ட ஈட்டு தொகை மூன்றரை இலட்சம் பவுன்கள் மறக்க வேண்டாம்.

பான் கீ மூன் தலைமயில் ஐ.நா எடுக்கும் போர்குற்ற முன்னெடுப்பு.

ஈழத் தமிழர்கள் மீது போர் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த போர்க் குற்றங்களின் நோக்கம் இன அழிப்புத்தான் என்பதனை ஐ.நாவுக்கு அனுப்பும் ஒவ்வொரு கடிதங்களிலும் வலியுறுத்தவேண்டும்.

நடைமுறைச் சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணையை (இதனை முயற்சிப்பதில் ஒன்றும் பாதகமில்லை) மட்டும் முன்னிலைப் படுத்தாமல் இனப் படுகொலையையும் முன்னிலைப் படுத்துவதாக அனைத்து செயல்பாடுகளும் அமைய வேண்டும்.

“நடைமுறைச் சாத்தியமற்ற என்ற விடயம் போர்குற்ற விசாரணை ஈடுபாட்டை மழுங்கடிக்க செய்து விடும் என்ற அச்சம் காரணமாக இந்த கட்டுரையை மார்கழி 15 க்கு பின் வரையலாம் என முன்னர் கருதி இருந்தேன். எனினும் மனதை நோகடித்தாலும் பரவாயில்லை பொது நன்மை கருதி, அனைத்துக் கடிதங்களும் “இனப் படுகொலையையும்” வலியுறுத்துவதாக அமைய வேண்டும் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கும் தேவை இருப்பதால் உடனடியாக வரைய முடிவு செய்துள்ளேன்.

போர்குற்ற விசாரணை என்பது குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்பதுடன் இருந்துவிடுகின்றது. போர்குற்ற விசாரணை பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் நடவடிக்கை அல்ல. அது குற்றவாளிக்கு தண்டனை என்பதனை முதல் நோக்கமாக கொண்ட வடிவமைப்பு.

இதற்கு முற்றிலும் எதிராக இனப்படுகொலை விசாரணை பாதிக்கப்பட்ட இனத்தை, இனப் படுகொலையில் இருந்து பாதுகாக்கும் (தனி நாடாக பிரிந்து செல்லுதலை முன்னிலைப் படுத்தும்) அதே நேரம் குற்றவாளிகளை தண்டிக்கும் நோக்கத்தையும் கொண்டது

போர்க் குற்ற விசாரணை எங்கே நடாத்தபடலாம்?

போர்குற்ற விசாரணை என்பது சர்வதேச போர்குற்ற நீதிமன்றில்தான் நடத்த முடியும். அதனை ஆங்கிலத்தில் ICC அல்லது International Criminal court என அழைப்பார்கள்.

ஐ. சீ .சி இனுடைய இணையத்தளம்: http://www.icccpi.int/Menus/ICC/About+the+Court/ICC+at+a+glance/Jurisdiction+and+Admissibility.htm என்ற முகவரியில் உண்டு .

போர்குற்ற விசாரணை என்ற விடயத்தில் ஈடுபாடு கொள்ளமுன் அந்த நீதிமன்ற விதிகள் அனைத்தையும் நாம் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து இருக்க வேண்டும்.

எம்மில் அனைவருக்கும் இந்த அறிவுத்திறன் இருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதனை தமிழின உணர்வு மிக்க அனைவரும் செய்திருப்பார்கள் என நம்புகின்றேன்.

இதில் முக்கியமான இரு அங்கங்களை நாம் நுணுக்கமாக ஆராய வேண்டும்.

அவையாவன,

1) சர்வதேச போர்குற்ற விசாரணை வழக்கு யாருக்கு எதிராக வைக்கலாம்?

2) அத்தகைய வழக்கை யார் பதிவு செய்யலாம்?

என்பனவாகும், இதனை ஆராய்ந்து அதற்கேற்ப நாம் செயற்படவேண்டும்.

இதனடிப்படையில் எனது அறிவுக்கு எட்டிய வரையில் போர்க்குற்ற விசாரணை நடைமுறையில் மிகச் சாத்தியம் அற்றதாகவே காணப்படுகின்றது. இதனை முயற்சிப்பதில் ஒன்றும் பாதகமில்லை.

ஆனால் பிரிந்து சென்று தன்னாட்சி அமைக்க வழி ஏற்படுத்தும் சுயநிர்ணய உரிமைக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய இனப்படுகொலை தொடர்பான வழக்கு மிக நடைமுறைச் சாத்தியமானதாகவே காணப்படுகின்றது. அனால் அந்த முயற்சி நடப்பதாக தெரியவில்லை.

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் வழக்கு யாருக்கு எதிராக வைக்கலாம்

சிறிலங்கா அரசு தலைவருக்கும், அதன் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்வதே எமது நோக்கம் என்பதை மனதில் வைத்து அது சத்தியமா? எனப் பார்ப்போம்.

இந்த கேள்விக்கான பதிலை தேடினேன்

அதற்கான பதில் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் பின்வரும் முகவரியில் இருக்கின்றது.

http://www.icc-cpi.int/Menus/ICC/About+the+Court/ICC+at+a+glance/Jurisdiction+and+Admissibility.htm

அந்த பதிலை அப்படியே இங்கே பிரதி செய்து விரிவாக ஆராய்வோம்

The Court does not have universal jurisdiction. The Court may only exercise jurisdiction if:

The accused is a national of a State Party or a State otherwise accepting the jurisdiction of the Court;

The crime took place on the territory of a State Party or a State otherwise accepting the jurisdiction of the Court; or

The United Nations Security Council has referred the situation to the Prosecutor, irrespective of the nationality of the accused or the location of the crime.

இந்த நீதி மன்றுக்கு உலகளாவிய அதிகாரம் இல்லை, பின்வரும் ஏதாவது ஒரு நிபந்தனைகளுக்கு உட்படவே நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்

குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்ற உறுப்பினரான அரசின் (State Party) பிரஜையாக அல்லது அந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசின் பிரஜையாக இருக்க வேண்டும். அல்லது

நீதிமன்ற உறுப்பினரான அரசின் (State Party) பிரதேசத்தில் அல்லது அந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசின் பிரதேசத்தில் குற்றம் நடந்து இருக்க வேண்டும். அல்லது

ஐ.நா பாதுகாப்புச் சபை போர்குற்ற விசாரணையை கோரி இருந்தால், பிரஜா உரிமை, குற்றம் நடந்த இடம் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை.

The Court’s jurisdiction is further limited to events taking place since 1 July 2002.

1 ஜூலை 2002 உருவாகப்பட்ட இந்த நீதிமன்று அதற்குப் பிந்திய குற்றங்களையே ஆராய முடியும்.

இப்பொழுது எம்மிடம் எழும் முக்கியமான கேள்வி, அது என்ன நீதி மன்ற உறுப்பினரான அரசு அல்லது “State Party” என்பதாகும். இதற்கான பதிலை தேடுவோம்.

அந்த பதில் நீதிமன்ற இணையத்தில் பின்வரும் முகவரியில் உண்டு. The States Parties to the Rome Statute என்ற தலைப்பில் உண்டு

http://www.icc-cpi.int/Menus/ASP/states+parties/

அந்த பதில், அப்படியே பிரதி செய்து பார்த்தால் அதில் உறுப்பு நாடாக அதாவது State Party ஆக சிறிலங்கா இல்லை.

As of 12 October 2010, 114 countries are States Parties to the Rome Statute of the International Criminal Court. Out of them 31 are African States, 15 are Asian States, 18 are from Eastern Europe, 25 are from Latin American and Caribbean States, and 25 are from Western European and other States.

அப்படியானால் நாம் மூன்றாவது தெரிவான ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில்தான் தங்கியுள்ளோம்.

உலகமெலாம் இருந்த தமிழ் மக்கள் ஐ.நா தலையீடு கோரி 2009 முற்பகுதியில் தெருக்களில் அலைந்ததும், அது நிறைவேறாமல் போனதும் எமக்கு மறக்க முடியாதவை.

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் சீனாவும், ரஷ்சியாவும் இருப்பது எமக்கு எலோருக்கும் தெரியும். தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் பாதுகாப்புக் கவுன்சில் எடுப்பதை சீனாவும், ரஷ்சியாவும் தடுக்கும்.

எனவே சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் போர்குற்ற விசாரணை என்பது மிக மிக நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயம்.

இதே கருத்தை ஐ.நா வின் அதிகாரி Philip Aston மிக பவ்வியமாக பின்வருமாறு தெரிவிக்கின்றார். “war crimes investigation is most unlikely “

இலங்கை தொடர்பாக அவர் வழங்கிய ஒளிப்பதிவுப் பேட்டியை பின்வரும் முகவரியில் பார்க்கலாம். அதில் 16 ஆவது நிமிடம் முதல் 18 ஆவது நிமிடத்தில் இந்த விடயம் தெளிவாக சொல்லப்படுகின்றது.

http://webcast.un.org/ramgen/ondemand/pressconference/2010/pc100107am.rm

ஆனால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்தல் சாத்தியம் என சொன்ன முக்கியமான நபர்களில் ஜி.எல்.பீரிசும் ஒருவர். அந்த செய்தியை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம் செய்தித் தலைப்பு “சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட விவகாரம்: கோத்தபாய மற்றும் தளபதி சவேந்திர சில்வா விசாரிக்கப்படும் ஆபத்து உண்டு – பீரிஸ்”

இணைப்பு http://tamilwin.com/view.php?22SWnp200jj0g2eeGG7L3bb99EY4dd22h2cccppY3d44QQH3b02VLS3e

எனவே சிறிலங்கா போர்க்குற்ற நீதிமன்ற உறுப்பு நாடாக இல்லாததாலும், குற்றம் சுமத்தப்படும் எவரும் நீதி மன்ற உறுப்பு நாட்டு பிரஜை ஆக இல்லாததாலும், குற்றம் உறுப்பு நாட்டு பிரதேசத்தில் நிகழாததாலும் ஐ.நா தீர்மானம் நடை முறைச் சாத்தியம் இல்லாததாலும், சர்வதேச போர்குற்ற நீதிமன்றில் போர்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீராகும்.

அத்தகைய வழக்கை யார் பதிவு செய்யலாம்?

போர்குற்ற வழக்கை பதிவு செய்ய முடியாது என மேலே பார்த்தோம்.

போர்குற்ற வழக்கை பதிவு செய்ய முடியாது என்றாகிய பின் வழக்கை யார் பதிவு செய்யலாம்? என்ற கேள்வி அர்த்தமற்றதுதான். எனினும் சில ஆர்வலர்கள் தாம் வழக்கை பதிவு செய்து விட்டதாக அறிக்கை விட்டிருப்பதால் அது பற்றியும் பேச வேண்டி இருக்கின்றது. DTF எனப்படும் டென்மார்க் உறுப்பினர்கள் இவ்வாறு அறிக்கை விட்டிருக்கின்றார்கள். அவர்கள் சட்டம் தெரியாமல் ஏமாறுகின்றார்களோ தெரியவில்லை. இவர்கள் தவிர ஏனைய சிலரும் இவ்வாறாக ஏமாற்றப்படக் கூடாது என்பதால் இதனை ஆராய்வது அவசிமாகின்றது

சட்டத்தரணிகள் பிழைப்புக்காக வழக்குகளை பதிவார்கள். உருவாக்குவார்கள். அமெரிக்க முன்னைநாள் சட்ட மா அதிபர் புரூஸ் பேயினும் இப்படித்தான் கோத்தபாயவுக்கும், பொன்சேகாவுக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்வதாக 2009 முற்பகுதியில் TAG யினால் பிரச்சாரம் செய்யப்பட்டு பணம் திரட்டப்பட்டது நினைவு இருக்கலாம். அவர் பிரித்தானியா வந்திருந்த பொழுது அவர் நடத்திய கூட்டங்கள் மூன்றுக்கும் நுழைவுப் பணம் செலுத்தி சென்றிருந்தேன்.

அப்பொழுது “அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் தனி நபருக்கோ அல்லது தன்னார்வ நிறுவனங்களுக்கோ இல்லை. அந்த அதிகாரம் அமெரிக்க சட்ட மா அதிபருக்கு மட்டும் தான் உண்டு” என்று அவரிடம் கேட்டேன். அவருக்கு அது நன்றாகவே தெரிந்திருந்தது. ஏன் இனப்படுகொலை விசாரணையை நாம் முன் நிறுத்தாமல், போர்க்குற்ற விசாரணையை முன்னெடுகின்றோம் எனக் கேட்டதற்கு, இலங்கை மேலும் குற்றம் இழைகட்டும் பின்னர் செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.

போர்குற்ற வழக்கை யார் பதிவு செய்யலாம் என்பதற்கான பதிலை தேட நாம் மீண்டும் சர்வதேச போர்குற்ற நீதிமன்றின் இணையத்தில் பின்வரும் பகுதிக்குச் செல்வோம்.

அதில் யார் வழக்கு பதிவு செய்யலாம் என்ற பகுதி உண்டு. அதனை அப்படியே ஆங்கிலத்தில் முதலில் பார்ப்போம்.

Who can initiate proceedings? Proceedings before the ICC may be initiated by a State Party, the Prosecutor or the United Nations Security Council. இதற்கான இணைய முகவரி

http://www.icc-cpi.int/NetApp/App/MCMSTemplates/Index.aspx?NRMODE=Published&NRNODEGUID={D788E44D-E292-46A1-89CC-D03637A52766}&NRORIGINALURL=/Menus/ICC/About+the+Court/Frequently+asked+Questions/&NRCACHEHINT=Guest#id_4

ஒரு விளக்கத்துக்காக இதனை தமிழில் தருகின்றேன்

சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் விசாரணைகளை, உறுப்பு நாடு ஒன்றோ அல்லது சட்ட மா அதிபரோ அல்லது ஐ. நா பாதுகாப்புக் கவுன்ஸிலோ ஆரம்பிக்க முடியும்.

எனவே தனி நபர்களும், மற்றும் நிறுவனங்களும் வழக்குத் தாக்கல் செய்தோம் என்பது பொய் அல்லது அறியாமை ஆகும்.

இனப்படுகொலை விசாரணை ஏன் சாத்தியம்? எப்படிச் சாத்தியம்?

இனப்படுகொலை விசாரணை என்பது ஐ.நா சட்டங்களுக்கு அமைய ஏதாவது ஒரு உறுப்பு நாட்டினால் ஆரம்பிக்கக் கூடிய விடயம்.

இனப்படுகொலை வழக்கு, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் 260(iii) இற்கு அமைய தொடரக் கூடியதாகும்.

260 Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.

இந்த தீர்மானத்தில் இலங்கையும் கையெழுத்து இட்டு உறுப்பு நாடாக உள்ளது. ஆனால் சர்வதேச குற்ற நீதிமன்றில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை என்பதை மேலே பார்த்தோம். இனப்படுகொலைக்கு எதிரான இந்த சட்டம் 02.10.1950 இல் இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது

இந்த விபரத்தை கீழ் காணும் இணைப்புகளில் பார்க்கலாம்.

http://www.hrweb.org/legal/genocide.html

http://www.icrc.org/ihl.nsf/WebSign?ReadForm&id=357&ps=ப

]இனப்படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம்?

இனப்படுகொலை என்றால் என்ன?

இந்த இரண்டு விடயங்களையும் பாப்போம்

முதலில்,

இனப்படுகொலை தொடர்பான வழக்கை யார் பதிவு செய்யலாம்?

இனப் படுகொலை வழக்கை யார் பதிவு செய்யலாம் என்ற கேள்விக்குப் பதில் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா தீர்மானம் 260 இல் எட்டாவது அங்கத்தில் உள்ளது. அதனை கீழே பிரதி செய்கின்றேன்.

Article 8

Any Contracting Party may call upon the competent organs of the United Nations to take such action under the Charter of the United Nations as they consider appropriate for the prevention and suppression of acts of genocide or any of the other acts enumerated in Article 3.

ஒப்பந்தத்தில் உறுப்புநாடாக உள்ள ஏதாவது ஒரு நாடு அங்கம் எட்டாவதில் குறிக்கப்பட்டது உட்பட இனப் படுகொலை தொடர்பானதும், தடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா வின் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட ஐ.நாவின் அதிகாரம் அளிக்கப்பட்ட நீதி நிறுவனம் என்பது என்ன?

இப்போது எம்மிடம், ஐ.நா வின் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனம் எது என்பது தொடர்பான கேள்வி உள்ளது.

அதற்கான பதில், சர்வதேச நீதிமன்றம் எனப்படும் International Court of Justice (ICJ) என்பதாகும். சர்வதேச நீதிமன்றத்தின் கீழே உள்ள இணைய முகவரியில் பார்த்தால்,

http://www.icj-cij.org/court/index.php?p1=1

இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். அந்தப் பதிலை அப்படியே கீழே பிரதி செய்கின்றேன்.

The International Court of Justice (ICJ) is the principal judicial organ of the United Nations (UN). It was established in June 1945 by the Charter of the United Nations and began work in April 1946.

சர்வதேச நீதிமன்றம் ஐ.நா வின் பிரதான நீதித்துறை நிறுவனமாகும் என இது தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இனி சர்வதேச நீதிமன்ற விதிகளின்படி யார் வழக்கை பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம் இது நீதிமன்ற இணையத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை பாருங்கள்:

http://www.icj-cij.org/court/index.php?p1=1&p2=௬

இதில் பின்வருமாறு உள்ளது

Proceedings may be instituted in one of two ways:

by means of an application: the application, which is of a unilateral nature, is submitted by an applicant State against a respondent State.

ஒரு அரசினால் இன்னொரு அரசுக்கு எதிராக தனியாக விண்ணப்பிப்பதன் மூலம் வழக்கை பதிவு செய்யலாம்.

இனப்படுகொலை என்றால் என்ன என்பது தொடர்பான வரையறை எங்கே உள்ளது?

இனப்படுகொலை தொடர்பான வரையறை ஐ.நா வின் இருவேறு சட்டங்களில் காணப்படுகின்றது முதலாவது 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம். இரண்டாவது 2007 இல் உருவாகப்பட்ட தொன்முதற்குடி மக்கள் பாதுகாப்பதற்கான சட்டம்.

முதலாவதாக 1948 ஆம் ஆண்டு இயற்றபட்ட இனப்படுகொலைக்கு எதிரான சட்டம் என்ன சொல்கின்றது எனப் பார்ப்போம்.

கீழே உள்ள இணைப்பில் இரண்டாவது சரத்தை பாருங்கள்:

http://www.hrweb.org/legal/genocide.html

Article 2

1) In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:

(a) Killing members of the group – ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல்

(b) Causing serious bodily or mental harm to members of the group: ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துதல்.

© Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part: ஒருகுழுவின் வாழ்வாதாரங்களில் திட்டமிட்ட சூழ்நிலைகளை உருவாக்கி அதனை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல்

(d) Imposing measures intended to prevent births within the group: ஒரு குழுவின் இனப் பெருக்கத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தல்,

(e) Forcibly transferring children of the group to another group: ஒரு குழுவில் இருந்து மற்ற குழுவுக்கு சிறுவர்களை பலவந்தமாக இடம் மாற்றுதல்.

இரண்டாவதாக 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொன்முதற்குடி மக்களை பாதுகாக்கும் சட்டம் என்ன சொல்கிறது எனப் பாப்போம்

அது பின் வருமாறு தெரிவிக்கின்றது

Adopted by General Assembly Resolution 61/295 on 13 September 2007

http://www.un.org/esa/socdev/unpfii/en/drip.html

Indigenous peoples and individuals have the right not to be subjected to forced assimilation or destruction of their culture.

நிலத்துக்குரிய தொன்முதற்குடி மக்களை பலவந்தமாக மற்ற இனத்துடன் இணைக்கப்படுதல், பலவந்தமாக கலாச்சாரம் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் உரிமையை இது உறுதிப் படுத்துகின்றது.

2) States shall provide effective mechanisms for prevention of, and redress for:

அரசுகள் பின்வரும் விடயங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(a) Any action which has the aim or effect of depriving them of their integrity as distinct peoples, or of their cultural values or ethnic identities: தனித்துவமான இனம், தனித்துவமான கலாச்சாரம், இன அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க அரசு கடப்பாடு உடையது.

(b) Any action which has the aim or effect of dispossessing them of their lands, territories or resources: அவர்களின் நிலங்கள், பிரதேசங்கள், மூல வளங்கள் பாதுகாக்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

© Any form of forced population transfer which has the aim or effect of violating or undermining any of their rights: இனக்குழுவை பலவந்தமாக இடம் மாற்றி அவர்களது உரிமைகள் மீறுதல், குறைத்தல்

(d) Any form of forced assimilation or integration: பலவந்தமான இணைப்பு, கலத்தல்

(e) Any form of propaganda designed to promote or incite racial or ethnic discrimination directed against them: இன அடக்குமுறையை தூண்டும் பிரச்சாரம்.

எனவே இனப்படுகொலை சட்டங்கள இரண்டிலும் குறிக்கப்பட்ட இன அழிப்பு விடயங்கள் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றன. டி.எஸ் செனநாயக்காவின் கால சிங்கள குடியேற்றம் இன்றும் தொடர்கின்றன. மே 18 இன் பின் நடைபெறும் வடக்கு கிழக்கு பவுத்த விகாரை அமைத்தல், சிங்கள குடியேற்றம் அத்தனையும் இன அழிப்பு நடவடிக்கை தான்.

தமிழர்கள் செய்ய வேண்டியது,

ஐ.நா வின் இன அழிப்புக்கு எதிராக கையெழுத்திட்ட நாடுகளை (http://www.icrc.org/ihl.nsf/WebSign?ReadForm&id=357&ps=P) அணுகி. இனழிப்புக்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படு கொலையை தடுக்க கோரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அத்துடன் அந்தந்த நாடுகள் சிறிலங்காவை பகிஸ்கரிக்க வைக்க வேண்டும்.

நடைமுறைச் சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணையில் மட்டும் நம்பி இருக்க கூடாது. அதனை முயற்சிப்பதில் தவறில்லை. அந்த விசாரணைக் கடிதங்களில் மறக்காமல் இன அழிப்பு நடைபெறுகின்றது அதை தடுக்குமாறு ஐ.நா வை கோரவேண்டும்.

ஐ.நா தீர்மானம் 260 ஐ யும் 2007 தீர்மானம் 61/295 ஐயும் குறிக்க வேண்டும்.

ஈழத் தமிழர் விடயத்தில் ஐ.நா எடுக்கப் போகும் எந்த எதிர்கால நடவடிக்கையும் இந்த அறிக்கையில் இருந்து தான் ஆரம்பிக்க உள்ளது.

எனவே குற்றவாளிக்கு தண்டனை மட்டும் போதுமா? எமது இனம் பாதுகாக்கப்படவும் வேண்டுமா? என்ற கேள்விகளை மனதில் எழுப்பி ,

தண்டனை என்பதை விட எமது இனம் பாதுகாக்கப்பட்டு நாம் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வழி வகுக்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டையும் நாம் முன்னிறுத்த தவறக் கூடாது .

“சிறிலங்காவில் இனப்படுகொலையின் ஒரு அங்கம் தான் போர்குற்றம்“

இந்த சட்ட ஆய்வில் எனது கருத்தை தெரிவித்துள்ளேன்.

உணர்ச்சிவசப்பட்டு திட்டித் தீர்க்காமல் அறிவு கொண்டு ஆய்ந்து ஆதாரத்துடன் வரும் பதில்களை ஆர்வத்துடன் எதிர்பார்கின்றேன்.

http://www.ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={9B159E78-94A8-4187-9348-E4B54339067C}

எதையுமே செய்யாமல் இருந்து தோற்பதை விட எதையாவது செய்யலாம்... வெல்ல சிறு பங்கேனும் சந்தர்ப்பம் இருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான நேரம் இந்த கட்டுரை அவசியம் தானா?

யாரோ முயற்சி செய்கிறவர்களுக்கும் முட்டுக்கட்டையாக, முளையிலையே கிள்ளி எறியுறீங்களேயப்பா. :)

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை பல விடயங்களைக் கூறி இருக்கிறது.இதனைக் கருத்திற்கெடுத்து போர்க்குற்ற விசாரணைகளில் எங்கள் தரப்பு நியாயத்தை வாதிட வேண்டும்.அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒத்துழைத்தால் எல்லா விடயத்தையம் வெற்றிகரமாக முடிக்கலாம்.அவர்களை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது.ஈராக் மீதான போர் அதற்கு உதாரணம். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இவற்றிற்கு பிடிக்காத நிலையில் நாம் அமெரிக்க பிரித்தானிய அரசுகளை மிகவும் நெருங்கி நின்று எமது பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதையுமே செய்யாமல் இருந்து தோற்பதை விட எதையாவது செய்யலாம்... வெல்ல சிறு பங்கேனும் சந்தர்ப்பம் இருக்கிறது...

இப்படியான நேரம் இந்த கட்டுரை அவசியம் தானா?

யாரோ முயற்சி செய்கிறவர்களுக்கும் முட்டுக்கட்டையாக, முளையிலையே கிள்ளி எறியுறீங்களேயப்பா. :)

இந்த ஆக்கம் பலருக்கும் புரிந்து கொள்வதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால், இந்த ஆக்கத்தில் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்றோ, அல்லது செய்யப்படும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கத்துடன் ஆக்கம் எழுதப்பட்டதாகவோ தெரியவில்லை. மாறாக, இந்த ஆக்கம், செய்யப்படும் முயற்சிகள் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று வழி காட்டுகிறது. குறிப்பாக, பிரித்தானிய சட்டங்களும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க எவ்வகைளில் தடையாக உள்ளன என்பதை விபரித்து, சர்வதேச நீதிமன்றத்தில் இன அழிப்பு குற்றச்சாட்டு வெற்றி பெறும் சாத்தியம் மிக அதிகமாக இருப்பதையும் ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாததையும் இந்த ஆக்கம் விபரிக்கின்றது. தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த ஆக்கத்தை படிக்க வேண்டியது முக்கியமானது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

எழுந்தமானத்தில் நாம் அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் என்ற பப்படா கதைகள் மூலம் காலமோட்டும் பேர்வழிகள், மக்களுடன் கலந்துரையாடுபவர்கள் ஒலி வாங்கிகளை தம்வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் இவற்றைத் தெளிவாக புரிந்திருப்பதோடு இச்சட்டமூலங்களைத் தெரியாத மக்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம். சட்டமூலங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு செயற்படாவிட்டால் எந்த வகையிலும் எம்மினத்திற்கு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பற்றுப்போகும். நீண்ட காலப் போராட்டங்களில் எம்முடைய இழப்புக்கள் அதிகம். தொடர்ந்தும் தவறுகளையும், தெரிந்தே சோர்வடைய வைக்கக்கூடிய தப்பான அணுகுமுறைகளையும் கைக் கொள்வதில் அதிக அவதானம் எடுத்தல் முக்கியம்.

ஒரு சோற்று பானைக்கு ஒரு சோறு பதம்.

"சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு" என்ற தலைப்பில் ஒருமுறை எழுதி தோற்றுப்போனவர் இந்த திறமையான எழுத்தாளர்.

http://ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={3ED16321-0C3E-4B5B-91A6-9178262E8075}&commPageNo=2

ஜூட் அவர்கள் சொன்னமாதிரி, இதில் உள்ளவற்றை உள்வாங்கி, எவ்வாறு நாம் போர்க்குற்றங்களை சமர்ப்பித்தால் எமக்கு விடுதலை கிடைக்கும் என ஆராய்ந்து, ஐ. நா. கேட்டதிற்கு இணங்க முன்னெடுப்போம். ஜி.எஸ். பி. யில் கிடைத்த வெற்றியை நினைவு கொள்வோம். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம்.

Edited by akootha

இந்த ஆக்கம் பலருக்கும் புரிந்து கொள்வதற்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால், இந்த ஆக்கத்தில் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்றோ, அல்லது செய்யப்படும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறியும் நோக்கத்துடன் ஆக்கம் எழுதப்பட்டதாகவோ தெரியவில்லை. மாறாக, இந்த ஆக்கம், செய்யப்படும் முயற்சிகள் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று வழி காட்டுகிறது. குறிப்பாக, பிரித்தானிய சட்டங்களும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க எவ்வகைளில் தடையாக உள்ளன என்பதை விபரித்து, சர்வதேச நீதிமன்றத்தில் இன அழிப்பு குற்றச்சாட்டு வெற்றி பெறும் சாத்தியம் மிக அதிகமாக இருப்பதையும் ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாததையும் இந்த ஆக்கம் விபரிக்கின்றது. தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த ஆக்கத்தை படிக்க வேண்டியது முக்கியமானது.

நான் சொன்ன விசயமும் அதேதான் செய்யுங்கோ பேசி போட்டும் கட்டுரை எழுதிப்போட்டும் சும்மா இருக்காதேங்கோ என்பதுதான்....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.